- எஸ். விஜயலக்ஷ்மிகாஞ்சியில் காமாட்சி அம்மன் கோயில் அமைந்திருக்கும் தெருக்கோடியிலுள்ள விநாயகரின் திருப்பெயர் ஏலேலோ விநாயகர். காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தை எழுப்பும் முன்னர் இவரை வழிபட்டு, ‘ஏலேலோ ஏலேலோ’ என்றவாறு சாரத்தின்மீது கோபுர உச்சிக்கு கற்களை இழுத்துச் சென்றதால் இப்பெயர் வந்தது..இசை விநாயகர் கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள விநாயகரின் கை, கால், தும்பிக்கை போன்றவற்றைத் தட்டினால் வித்தியாசமான ஒலி எழும்பும். அதனால் இவருக்கு ‘இசை விநாயகர்’ என்று பெயர். வியாக்ர பாத விநாயகர் யானை முகமும், புலிக் கால்களும் கொண்ட விநாயகரை ‘வியாக்ர பாத விநாயகர்’ என அழைக்கின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவகிரக மண்டபத்தூண், நாகர்கோவில் அழகம்மன் கோயிலிலுள்ள தூண் ஆகியவற்றில் இந்த விநாயகரைக் காணலாம். அம்மையப்ப விநாயகர் விநாயகர் அம்மையப்பனாகக் காட்சிதரும் இடம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில். இங்கு சிவனும், பார்வதி தேவியும் சேர்ந்து விநாயகப் பெருமானாக நீலகண்ட விநாயகராகக் காட்சி தருகிறார்கள். இங்கே வித்தியாசமாக விநாயகரை கடைசியில் வழிபடுமாறு அமைத்துள்ளார்கள்..சிம்ம வாகன விநாயகர் நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோயிலின் அர்த்த மண்டபத்தில் பஞ்சமுக விநாயகர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளியுள்ளார். திருவாரூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் போன்ற சில இடங்களிலும் இந்த அபூர்வ கோலத்தில் விநாயகரை தரிசிக்கலாம். வியர்வை விநாயகர் பேரளம் அருகிலுள்ள கீழமாங்குடியில் அருள்பாலிக்கும் மங்கள சித்தி விநாயகரின் வயிற்றுப் பகுதி வயதானவர்களுக்கு இருப்பதைப் போன்று சதை மடிப்புடன் காணப்படுகிறது. அபிஷேக வேளையில் இவர் முதியவராகவும், முழு அலங்காரத்தில் இளமையாகவும் காட்சி தருகிறார். இவருக்கு முழு அலங்காரம் செய்து முடித்ததும் இவரது திருமேனியில் வியர்வைத் துளிகள் அரும்புவது அதிசயமாகும்..கலங்காத கண்ட விநாயகர் சிவகங்கை மாவட்டம், மாத்தூரிலுள்ள ஐந்நூற்றீஸ்வரர் கோயில் பிராகாரத்தில் கலங்காத கண்ட விநாயகர் தனி சன்னதியில் காட்சி தருகிறார். இவர் கண்டங்களால் ஏற்படும் தோஷங்களை தீர்ப்பதாலும், தன்னை வேண்டும் பக்தர்களின் பிரச்னைகளைத் தீர்த்து அவர்களைக் கலங்காமல் காப்பதாலும் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இவருக்கு சந்தனக் காப்பு செய்து வழிபட வினைகள் தீரும். குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை. மனிதமுக விநாயகர் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் பூந்தோட்டம் அருகே செதலபதி எனும் திருத்தலத்தில் மனித முகத்துடன் விநாயகர் உள்ளார். இத்தலம் தசரதருக்கு ராமர் திதி கொடுத்த தலமாகும். இங்கு மறைந்த பெற்றோருக்குத் தர்ப்பணம் செய்வது சிறப்பு..கூக்குரல் விநாயகர் மதுரையை அடுத்த கோச்சடை அருகே கோயில் கொண்டுள்ள விநாயகருக்கு கூக்குரல் விநாயகர் என்று பெயர். மின்விளக்கு வசதி இல்லாத அக்காலத்தில் மதுரை நகருக்கு தானியங்களை விற்பனைக்குக் கொண்டு செல்லும் விவசாயிகளைக் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற பல்வேறு வேடமிட்டு கூக்குரல் எழுப்புவார் இந்த விநாயகர் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. அதனால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. வெளியூர்களுக்குச் செல்லும் மக்கள் தீயசக்திகளிடமிருந்து தங்களையும் தங்கள் உடமைகளையும் காப்பாற்றவேண்டும் என்று இந்த விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கம் இன்றும் இங்குள்ளது.