ஸ்ரீ ராமருக்கு ராமநவமி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு கோகுலாஷ்டமி, சிவபெருமானுக்கு சிவராத்திரி, அம்பாளுக்கு நவராத்திரி என ஒவ்வொரு தேவதைகளுக்கும் ஒரு நாளை விசேஷ தினமாகவும், பண்டிகையாகவும் கொண்டாடுவது நமது மரபு.சனாதன தர்மம் என்று அழைக்கப்படும் இந்து மதத்தின் அடித்தளமான வேதத்திற்கு என இப்படி ஒரு பண்டிகை இருக்கிறதா என்றால், அதுதான் உபாகர்மா என்கிற ஆவணி அவிட்டம். வேதத்தை அத்யயனம் செய்ய ஆரம்பிக்கும் நன்னாளே உபாகர்மா நாள். இதை முன்னோர்கள் அத்யாய (அத்யயன) உபாகர்மா என்றும் சொல்லுவார்கள். பொதுவாக ஆவணி மாதத்தில்தான் இந்த விசேஷ தினம் வரும். ரிக் வேதத்தை கடைபிடிப்பவர்களுக்கு ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் அன்றும், யஜுர் வேதத்தைக் கடைபிடிப்பவர்களுக்கு அவிட்டம் நட்சத்திரம் அன்றும், சாம வேதத்தைக் கடைபிடிப்பவர்களுக்கு புரட்டாசி மாதம் ஹஸ்தம் நட்சத்திர அன்றும் இந்தப் புனித சடங்குகளைச் செய்வது வழக்கம். (அதர்வண வேதத்தைக் கடைபிடிப்பவர்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவு தான். ஒரிசா, பீகார் போன்ற வடமாநிலங்களில் தான் இவ்வேதத்தைத் தழுவியவர்கள் வசிக்கிறார்கள்.).புனித பூணூலை தமிழில் முப்புரி நூல் என்றும், சமஸ்கிருதத்தில் யக்ஞோபதவீதம் என்றும் சொல்வார்கள். அந்தணர்கள் மட்டும் இன்றி மேலும் சில பிரிவுகளைச் சார்ந்தவர்களும் பூணூலை அணியும் வழக்கம் தொன்று தொட்டு இருந்தது. காலப்போக்கில் சில மாற்றங்கள் வந்தன.தர்ம சாஸ்திரப்படி குறைந்தது 7 வயது முதல் 11 வயதுக்குள் பிரம்மசாரி சிறுவனுக்கு உபநயனம் (பிரும்ஹோபதேசம்) செய்வது வழக்கம். அதன் பின்பு தான் பிரம்மசாரி சிறுவன் வேத பாடசாலைக்குச் சென்று குருவின் மூலம் வேதம், சாஸ்திரங்களைக் கற்கமுடியும்.அந்தணர்கள் இதுவரை அணிந்திருந்த பூணூலை ஆவணி அவிட்டம் நாளில் மாற்றிவிட்டு புதிய (நூதன) பூணூலை வைதீக முறைப்படி சடங்குகள் செய்து அணிவார்கள். இந்த கூட்டு வழிபாட்டுச் சடங்கை கோவில் வளாகம், நதிக்கரை, குளத்துக்கரை, கோசாலை போன்ற இடங்களில் செய்வதுண்டு. மறுநாள் காயத்ரீ மந்திரத்தை குறைந்தது 1008 தடவை ஜபம் செய்வார்கள்..ஆவணி அவிட்டம் அன்று புதிய பூணூலை அணியும் சமயத்தில் சிராவண ஹோமம், காமோகார்ஷீத் ஜபம், தேவரிஷி, பித்ரு தர்ப்பணம், காண்டர்ஷி தர்ப்பணம் முதலிய சடங்குகளைச் செய்வார்கள். இந்தச் சடங்குகள் வேதங்களைப் பொறுத்து சற்று மாறும். இங்ஙனம் சடங்குகளைச் செய்த பின்னர் தான் அவர்களுக்கு உண்டான வேதத்தை அன்று முதல் படிக்க (அத்யயனம்) செய்ய முடியும்.இந்துக்களின் புனிதமான வேதமானது பரமேஸ்வரனுடைய மூச்சுக்காற்றிலிருந்து வந்தது என்றும், அவரால் உபதேசிக்கப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. ஒருவராலும் இயற்றப்படாததால் வேதத்தை அபெளருஷேயம் என்றும் கூறுவார்கள். வேதத்தில் கூறப்படாத விஷயங்களே உலகில் ஒன்றும் இல்லை எனக் கூறலாம்.’’வேதத்தை விட்ட அறம் இல்லைவேதத்தில் ஓதத் தகும் அறமெல்லாமுள – தர்க்கவாதத்தை விட்டு மதிஞர் வளமுள்ளவேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே’’.என வேதத்தின் சிறப்பை திருமூலர் எடுத்துக்காட்டுகிறார். வேதங்களின் மூலமாக நாம் அறத்தை (தர்மம்) அறிந்து கொள்ள முடியும். வேதம் தான் நம் தர்மத்திற்குப் பிரமாணமாக உள்ளது. சிவபெருமானைப் போன்று வேதமும் ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று என்பதை இரண்டாம் திருமுறையில், ஆதியை ஆதியும் அந்தமுமில்லா வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்.. (2:14) என சம்பந்தர் பாடியுள்ளார். நேரடியாகப் பார்த்தோ ஊகித்தோ புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைப் பற்றிய அறிவைக் (ஞானம்) கொடுப்பவைதான் வேதங்கள். சமீபத்தில் உஜ்ஜைனியில் உள்ள மகரிஷி பாணினி சமஸ்கிருத மற்றும் வேதிக் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், ’அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடம் வேதங்கள் தான்’என இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் பேசியிருப்பது பொருத்தமானது.இந்த வேதமானது ஆதிகாலத்தில் ஒரே கிரந்தமாகவும் (நூல்), அகண்டதாகவும் இருந்தது. பிற்காலத்திலும் வேதத்தை இரட்சிக்க (போற்றுதல்) வேண்டும் என்பதற்காகவும், அத்யயனம் (கற்பது) செய்வதற்கு வசதியாக, பிரிக்க வேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நல்ல காரியத்தை தனது ஞானத்தால் திறம்படச் செய்தவர் தான் கிருஷ்ணத்வைபாயணர் என்கிற பகவான் வேதவியாசர். வசிஷ்ட மகரிஷியின் மகன் சக்தி மகரிஷி. இவரது மகன் தான் பராசர மகரிஷி ஆவார். பராசர மகரிஷி - சத்யவதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர்தான் கிருஷ்ணத்வைபாயணர். இவர் வேதக் கடலில் நீந்தித் திளைத்தவர். என்றுமே சிரஞ்சீவி. இவருக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாத அளவுக்கு மிகப்பெரிய ஞானி..வ்யாஸாய விஷ்ணுரூபாயவ்யாஸரூபாய விஷ்ணவே (4)என்கிற ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்ர ஸ்லோகப்படி மகாவிஷ்ணு வடிவில் வியாசரும், வியாசர் வடிவில் மகாவிஷ்ணுவும் உள்ளனர்.வ்ருஷ்ணீனாம் வாஸுதேவோ (அ)ஸ்மி பாண்டவானாம் தனஞ்ஜயமுனீணம் அப்யஹம் வ்யாஸ கவீனாம் உஷனா கவி (10.37)என்கிற பகவத் கீதை கருத்துப்படி, முனிவர்களில் நான் வியாசர் என ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொன்னது சரியே! வேதங்களைத் தொகுத்துக் கொடுத்ததால் வியாஸம் (விபாகம்) என்பது வேதவியாசர் என்கிற பெயராகப் பின்னாளில் நிலைத்தது. இவரே வேதங்களை ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என நான்காகப் பிரித்து அவற்றைக் கோர்வையாகத் தொகுத்துக் கொடுத்தார். அதற்குப் பின்பு யஜூர் வேதம் சுக்ல (வாஜஸனேய ஸம்ஹிதை), கிருஷ்ணம் (தைத்திரீயம்) என இரண்டாகப் பிரிந்தன.வேதம் தோன்றிய காலத்தில் ஒவ்வொரு ரிஷிகளும் தம் தம் சீடர்களுக்கு உபதேசம் செய்தனர். பின்னர் வேத மந்திரங்களை காதினால் கேட்டு, வாயால் ஸ்வர சுத்தமாக அத்யயனம் செய்து வாழையடி வாழையாக குரு - சிஷ்ய பரம்பரையாகப் போதிக்கப்பட்டு வருகிறது. புனித வேதங்கள் இன்றும் நிலைத்திருப்பது தான் சனாதன தர்மத்தின் ஆத்ம பலம். முற்காலத்தில் வேதங்கள் எழுத்து வடிவில் இல்லாததால் வேதத்தை எழுதாக்கிளவி என அழைப்பதுண்டு. போற்றுதலுக்குரிய புனித வேத மந்திரங்களால் அறியப்பட்டவள் என்பதால் அம்பாளை வேத வேத்யா என லலிதா சகஸ்ர நாமாவில் சொல்லப்பட்டுள்ளது.’’நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னைஎன்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதா மறையின்ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்துஅன்றும் பிறந்தவளே அழியா முத்தியானந்தமே’’என்கிற அபிராமி பட்டரின் பாடலில், ’எழுதா மறையின் ஒன்றும் அரும் பொருளே’ என அம்பிகையைப் போற்றிப் பாடுகிறார்.வேதங்கள் நிலைத்து நிற்கக் காரணகர்த்தாவாக இருந்த பகவான் வேத வியாசரை இந்துக்களாகிய நாம் என்றும் போற்றி வணங்கவேண்டும். அப்போதுதான் கச்சியப்ப சிவாச்சாரியார் சொன்னதுபோன்று நான் மறை அறங்கள் ஓங்கும்! - முனைவர் இரா.இராஜேஸ்வரன்