-முனைவர் ஜி.குமார்கலியுகத்தில் பொது ஜன வாழ்வில் முக்கியமான சாதனங்களாக சம்ஸ்காரங்கள் எனப்படும் சடங்குகளையும் யோக பயிற்சிகளையும் கண்டோம். மூன்றாவது முக்கிய சாதனம் சனாதன தர்மம் வேர் ஊன்றியுள்ள பக்தி மார்க்கம்! .முக்திக்கு வழிவகுக்க சனாதன தர்மம் மூன்று வழிமுறைகளைப் பரிந்துரைத்திருக்கிறது. கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்பனவே அவை! மார்க்கம், யோகம் ஆகிய இரண்டு சொற்களும் மாறி மாறிப் பயன்படுத்தப்படுகின்றன. யோகம் என்பது மனம், வாக்கு, உடல் என்ற மூன்றும் ஒன்றிணைந்து செயல்படுவது. புலன்கள் ஒன்றோடு ஒன்று இணக்கமாக இருப்பது. வேதங்கள் கர்மா காண்டம், உபாசன காண்டம், ஞான காண்டம் என்ற மூன்று பெரும் பாகங்களாக அமைந்திருக்கின்றன எனக் கண்டோம். இந்த மூன்று காண்டங்களுமே கர்ம, பக்தி, ஞான மார்க்கங்களுக்கு வழிவகுக்கின்றன. உரிய கடமைகளை இறைவனுக்கு உகந்த சேவையாகப் புரிவதே கர்ம யோகம். சுய நலமற்ற பாதை! தர்ம நெறிப்படி கடமையைச் சார்ந்து வாழும் தன்மை! .எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனிடம் அடையும் முழு சரணாகதியே பக்தி! உபாசன காண்டம் பக்தி யோகத்திற்கு வழிகாட்டுகிறது. உணர்ச்சி நிறைந்த ஆளுமை உள்ளவர்களுக்கு உகந்தது. இறையின் மெய் தத்துவத்தை உணர முயற்சிக்கும் செயலே ஞான மார்க்கம்! இது ஒரு கடின முயற்சிதான். உபனிடதங்களிலும் வேதங்களின் ஆன்மிகப் பகுதிகளிலும் அதிகம் விவரிக்கப்பட்ட பகுதி! எந்தவித பதட்டமுமின்றி பற்றுகளும் குறைந்து சாந்த நிலையில் இருப்பவர்களுக்கு ஏற்ற மார்க்கம்! கர்மா, ஞானம், பக்தி ஆகிய வழிமுறைகள் மூன்றும் வெவ்வேறல்ல. ஆழ்ந்த தொடர்புடையவை! பரமாத்வாவைத் தவிர வேறெதுவும் இல்லை என்ற கருத்து மூன்றிலும் பரவியுள்ளது. .இறைவனைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனைத் திறன் ஞானத்தை வெளிப்படுத்தும். அதே போல் இறைவன் மேல் வைக்கும் அளவு கடந்த அன்பு பக்தியைத் தெரிவிக்கும். இரண்டு குணங்களும் நமது மனதுடன் தொடர்பு கொண்டவை! உலகில் எதைப் பெற்றாலும் அதை அனுபவிக்கும்போது இறைவன் நினைவு பக்தியில் பிறக்கும். உலகில் எது தென்பட்டாலும் அது இறையின் சொரூபம் என்ற உணர்வு ஞான மார்க்கத்தில் இருக்கும். பிறப்பு மற்றும் மற்றும் மரணத்திற்குப் பின்னால் உள்ள உண்மைதான் என்ன? ஒவ்வொரு ஜீவாத்மாக்களிடமும் சிறப்பான படைப்பை வடிவமைக்க ஏற்ற பிரம்மாண்டமான அறிவுத்திறன் கொண்டவர்தான் யார்? அவர்தான் பிரம்மம் என்றால் அந்த பிரம்மத்திற்கும் எனக்கும் என்ன தொடர்பு?விருப்பு வெறுப்புகளுடன் பண்டைய காலத்திலிருந்தே பிறப்பு - இறப்புச் சுழற்சியில், சம்சார சாகரத்தில் உழண்டு கொண்டிருக்கும் ஒவ்வொரு ஜீவன்களிடையுமே எழக் கூடிய கேள்வி இது! .ஜீவன்கள் இந்தக் கேள்வியின் மெய்யை உணரவும், சம்சாரத்திலிருந்து விடுபடவும் இறைவனே அமைத்த போதனைகள்தான் வேத வேதாந்தங்கள் என்பதைக் கண்டோம். பிரம்மா தனது மகன் வசிஷ்டருக்கு இந்த போதனைகளை வழங்கினார். வசிஷ்டர் முதல் பராசரர், வியாசர் மற்றும் பின்னர் சுகர் என்ற வரிசையில் தந்தையிடமிருந்து மகனுக்கு போதனைகள் வழங்கப்பட்டன. இந்த சங்கிலியே குரு - சீட பரம்பரை என்றும் சனாதன தர்மத்தில் அழைக்கப்படுகிறது. மக்களுக்கு எளிதாக இருக்க முதலில் வேதங்கள் நான்காகப் பிரிக்கப்பட்டன. அவை தரும் சாரங்கள் அனைவரையும் போய்ச் சேர இதிகாச புராணங்களும் எழுதப்பட்டன! முற்காலத்தில் குரு – சீடர் பரம்பரையில் இருவரும் உடன் வசித்ததால் ஆன்மிகமும் அறிவும் வார்ந்த உணர்ச்சி பூர்வமான ஒட்டுதல் இருந்தது. துவாபர யுகத்தில் துரோணர் கௌரவ, பாண்டவர்களுக்கு கர்ம மார்க்கத்திற்கு ஒட்டிய திறமைகளைப் போதித்தார்.பரந்தாமன் குருவாக சீடன் அர்ஜுனனுக்குத் தந்த அறிவுரையில் கர்ம மார்க்கம் அதிகம் வியாபித்திருந்தாலும் கர்ம, உபாசன, ஞான மார்க்கங்களும் அடக்கம். யக்ஞவால்கியர், உத்தாலக அருணி, பிப்பலாதர், தித்திரி, சனத்குமார் ஆகியோருடன் மைத்ரேயி, கர்கி, லோபாமுத்திரை என்ற பெண்களின் முக்கியத்தையும் குரு - சீட பரம்பரையில் காண்கிறோம்..மனைவி - கணவன், மகன் - தந்தை, அரசன் (உதாரணம் – ஜனகர்) - ரிஷி எனப் பல ஜோடிகளின் அறிவு சார்ந்த உரையாடல்களையும் காண்கிறோம். இவை அனைத்தும் குரு – சீட பரம்பரை சமுதாயத்திற்கு அளித்த உன்னதப் பங்கு. பக்திக்கு வழிகாட்டுதல் உயர்வானது. எனவே சனாதன பக்தி மார்க்கத்தில் கடவுளைவிட குருவிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் அந்த கோவிந்தனை, இறைவனை அடையாளம் காட்டுவதே குரு தான்! தற்போதைய யுகத்தில் பிரத்யேக குரு ஒவ்வொருவருக்கும் அமைவது சற்று கடினமானது. குரு பரம்பரை தந்த மார்க்கத்தில் பயணத்திலே அதிக பலன் கிடைக்கும். கலியுகத்தில், கௌடபாதர் கோவிந்த பகவத்பாதருக்கு உபதேசித்தார். கோவிந்த பகவத்பாதர் அந்த தெய்வீக அறிவை சங்கர பகவத்பாதாவுக்கு அல்லது ஆதி சங்கராச்சாரியாருக்கு வழங்கினார். .கோவிந்த பகவத்பாதர் ஆதி சங்கரருக்கு வேதங்கள், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்களுடன் ஞான மார்கத்தை உபதேசித்தார். பின்னர் இராமானுஜாச்சாரியார், மத்வச்சாரியார் ஆகியோர் தோன்றினர். ஒவ்வொருவருக்கும் எண்ணற்ற சீடர்கள் உருவாகினர். பின்னர் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு ஆச்சாரியார்கள் போதித்த சித்தாந்தங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். குரு - சீட பரம்பரை இவ்வாறே தொடர்கிறது என நம்பப்படுகிறது. ஆதி சங்கரர் சிவனின் அவதாரமாகக் கருதப்படுகிறார். அதேபோல் இராமானுஜர் இலக்குவனின் அவதாரம் என்று சொல்லப்படுகிறது. அனுஜ் என்ற சொல் இளைய சகோதரனைக் குறிப்பிடும். ஶ்ரீராமனுக்கு அனுஜ் இலக்குவனன்!அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என பரமாத்மா, ஜீவாத்மா, ஜகத் எனப்படும் உலகம் ஆகியவைகளின் தொடர்புகளை முறையே ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகியோர் தத்தம் சித்தாந்தங்கள் மூலம் உலகிற்கு விளக்கினர்..அத்வைதம். துவி (த்வி) என்பது இரண்டைக் குறிப்பிடும். அ-த்வி அதற்கு எதிர்மறை. அதாவது இரண்டற்றது அல்லது இரண்டில்லாதது.அத்வைதம் (அ + த்வைதம்) - அதாவது இரண்டற்ற நிலை. ஜீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல. சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகிறது என்று கூறுகிறது சித்தாந்தம்.ஆதிசங்கரர் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். ஸத் எனப்படும் பரம்பொருள் ஒன்றே மெய்ப்பொருள்! அதாவது நிலைத்திருக்கும் பொருள்..பிரம்மம் என்பது பெயர், உருவம் என எந்த குணங்களும் அற்றது. அதாவது நிர் குணப்பிரும்மம். நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருள் சகுணப் பிரும்மம்!அனைத்து உயிர்களுக்கும் உயிருக்கு உயிராகவும் அறிவுக்கு அறிவாகவும் இருக்கும் ஜீவாத்மா, அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பரமாத்மா, ஆகிய இரண்டும் இரண்டல்ல; ஒன்றே. இவையே அத்வைதம் கூறும் அடிப்படைக் கொள்கைகள். அனைத்தும் பிரம்மம் என்ற அத்வைத சித்தாந்தம் பலருக்கு ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கலாம். எல்லாம் வல்ல இறைவனும் குறைகளும் பலவீனங்களும் ஆசைகளும் நிறைந்த ஜீவாத்மாவும் எப்படி ஒன்றாக முடியும் என்ற வினா அவர்களுக்கு எழாமல் இல்லை. பரமாத்வாவும் ஜீவாத்மாவும் ஒன்று என்றால் ஜீவாத்மா தன்னையே வணங்கிக்கொள்வது போலாகாதா என்ற கேள்வியும் எழுகிறது. உலகம், அதில் வெவ்வேறு பொருட்கள் இருக்கின்றன. அவைகளில் வித்தியாசங்கள் உண்டு. அவைகள் எப்படி ஒன்றாக முடியும்? .பாமர மனிதனின் இந்த ஐயங்களுக்குப் பதிலாகவே த்வைதம், விசிஷ்டாத்வைதம் இரண்டும் தோன்றின. 'த்வி' என்ற சொல் ‘இரண்டு' என்ற பொருள் தரும்.ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டையும்தான் த்வைதம் குறிப்பிடுகிறது.பரமாத்மா என்பது இறைவன். ஜீவாத்மா என்பது கடவுளால் படைக்கப்பட்ட உயிர். எனவே எப்போதும் இந்த வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதே த்வைதம் சொல்லும் உண்மை. இந்தக் கோட்பாட்டை உபதேசித்தவர் மத்வாச்சாரியார்.மேலும் மத்வர் பரமாத்மா, ஜீவாத்மா, ஜடப்பொருள் என்ற மூன்றும் வெவ்வேறானவை என்றும் குறிப்பிடுகிறார். ஜீவாத்மாக்களிலிருந்து பரமாத்மாவான கடவுள் வேறுபட்டவர்; ஜடப்பொருளிலிருந்தும் பரமாத்மாவான கடவுள் வித்தியாசமானவர். ஜடப்பொருள் என்பது அறிவோ உயிரோ இல்லாதது.ஒரு ஜீவாத்மாவிலிருந்து இன்னொரு ஜீவாத்மாவிற்கு வேறுபாடு உள்ளது..இப்படி இரண்டிரண்டாக எதையும் எதிர் எதிர் நிலையில் வைத்துச் சொல்லுவதால் இந்தத் சித்தாந்தம் த்வைதம் என்று பெயர் பெற்றது. விசிஷ்டாத்வைதம் என்பதற்கு விசேஷத்தோடு, அதாவது சில சிறப்புகளோடு கூடிய அத்வைதம் என்பது பொருள்.பிரம்மமே ஜீவாத்மாக்கள் அனைத்துக்கும் மற்றும் உலகிற்கும் உள் நின்று எல்லாவற்றையும் இயக்குகிறது. எனவே ஆன்மாக்கள் பலவாயினும் ஆன்மாக்களுக்கெல்லாம் ஆன்மாவாக நிற்பது அந்த பரமாத்மா ஒன்றுதான். பரமாத்மாவே முழுமை என்றும், அதில் தன்னை ஓர் அம்சம் என்றும் ஜீவன் தன் சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்ளுதல் முக்தி. அதற்கு ஜீவன் பக்தியுடன் இறைவனை சரணாகதி அடைய வேண்டும் என்று ராமானுஜர் கூறுகிறார். .மொத்தத்தில் ஞான மார்க்கத்தை விட முக்கியமாய் பக்தியும், சரணாகதியுமே இறைவனை அடையும் வழிகள் என்று சொல்லி விசிஷ்டாத்வைதம் பின் வரும் தலைமுறைகளுக்குப் பக்தி மார்க்கத்தை வழிகாட்டுகிறது. வேதாந்தத்தில் இருந்து வெளிவரும் தத்துவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தன. இவற்றில் வேதம், உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம் போன்ற முதன்மையான நூல்களைச் சார்ந்து தங்கள் கருத்துகளை விளக்குவது மிகவும் உண்மையானது. சங்கரரின் அத்வைதம் இந்த நூல்களை முழுமையாக நம்பியுள்ளது. இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் பெரும்பாலும் விஷ்ணு புராணம் மற்றும் பஞ்சதந்திரம், வைகானச ஆகமங்கள் ஆகியவற்றைச் சார்ந்தது. மத்வாச்சாரியாரின் த்வைதம் விஷ்ணு, பாகவதம், பத்மம், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற வைஷ்ணவ புராணங்களை அடிப்படையாகக் கொண்டது..ஞான மார்க்கமும் பக்தி மார்க்கமும் மோட்சம் பெறுவதற்கான இரண்டு தனித்தனி வழிகளாக தொன்றுதொட்டு முன் வைக்கப்பட்டவை, ஞானமே முக்தியை அடைய வழி என்பது ஆதி சங்கரரின் பரிந்துரையாக இருந்தது.இருப்பினும் அத்வைதத்தில் பக்திக்கு இடம் உண்டு. மிக முக்கியமான பங்கும் உண்டு. ஆதி சங்கரர் இந்து சமயப்பிரிவுகளான சைவம், சாக்தம், வைணவம், கணாபத்யம், கௌமாரம் மற்றும் சௌரம் ஆகிய ஆறினையும் ஒன்று சேர்த்து சண்மதம் என்று பெயரிட்டு, ஒன்று பட்ட இந்து மதத்திற்கு அடிகோலினார். ஞானம் பெறுவதற்கு பக்தியானது முக்கியமான சாதனம் என்பது இதனால் தெளிவாகிறது. எனவே நம் அனைவராலும் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய சாதனம் பக்தியாகும்..ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் மற்றும் ஸ்ரீ மத்வாச்சார்யார் ஆகியோர் ஒழுக்க சீலர்கள். அவர்களின் நோக்கம் சமுதாயத்தை தர்மத்தின் பாதையில் வழி நடத்துவதாக மட்டுமே இருந்தது. மேலும் அவர்கள் சமுதாயத்திற்கு காலத்திற்கேற்ற போதனைகளை வழங்கினர். தொடக்கத்தில், அவர்களின் சித்தாந்தங்கள் வேறுபட்டுத் தோன்றலாம்; ஆனால், அவற்றின் நடைமுறை விளைவுகளில் எந்த மாற்றமும் இல்லை. அன்பர் ஒருவர் வெளியூர் பயணம் மேற்கொள்கிறார். நெடுந்தூரப் பயணம் என்பதால் கட்டுச்சோற்றை உடன் எடுத்துச் செல்கிறார். தொடக்கத்தில் உணவும் அன்பும் வெவ்வேறாக இருக்கிறார்கள். அது த்வைதம் !பசியேற்பட்டு அன்பர் கொண்டு வந்த உணவைப் புசிக்கிறார். உணவு அவனுள் உள்ளது; ஆனால் கிரகிக்கப்படவில்லை. அந்த நிலை வசிஷ்டாத்வைதம்! நீண்ட நேரம் பிறகு உணவு ஜீரணிக்கப்பட்டு அன்பருடன் ஐக்கியமாகிறது. இது அத்வைத நிலை. .புத்திக்கூர்மையும் ஞானமும் பெற்ற ஒருவர் இம்மூன்று சித்தாந்தங்களும் ஒன்றே என்பதை அறிவர். பக்தர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப எந்தப் பாதையையும் தேர்வு செய்யலாம். ஆனால் இந்தப் பாதைகள் அனைத்தும் முக்திக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை! (சனாதன தர்மம் தழைக்கும்)