வேதங்கள் கூறும் நான்கு மகாவாக்கியங்களும் ஆத்மாவிற்கும் பிரம்மனுக்கும் உள்ள உள்ளுறவை வெளிப்படுத்துகின்றன. பிரம்மன் படைப்பின் அடிப்படைத் தத்துவம். பிரம்மனிடமிருந்தே அனைத்தும் தோன்றின. அதே சமயம் ஆத்மன் அனைத்து உயிர்களிடத்தும் அறியப்படும் ‘தான்’ என்ற தத்துவத்தின் மூலாதார உருவகம். ஆத்மன் அழிவற்றது. அதேபோல் பிரம்மமும் அழிவற்றது. யோகத்தின் மூலமாகவும், தியானத்தின் மூலமாகவும் ஒருவர் ஆத்மனும் பிரம்மனும் ஒன்று என்பதை அறிய இயலும்.ஒவ்வொரு வாக்கியம் கூறும் உண்மைகளின் விளக்கத்தைப் பார்ப்போம்.தத் த்வம் அஸி – சாம வேதம் - சந்தோக்கிய உபனிடதம்.நீயே அதுவாக இருக்கிறாய் என்பது பொருள். நம்மை அறிந்து கொள்ளும்போது பரம்பொருளான பிரம்மத்தை அறியத் தொடங்குகிறோம். அது என்பது பிரம்மம். பிரம்மா எனப்படும் கடவுள் வேறு; பிரம்மம் என்று கூறப்படுவது வேறு.இந்த பிரம்மம் குணமற்றது; வடிவில்லாதது; முதலும் முடிவும் இல்லாதது. மும்மூர்த்திகளையும், பார்வதி, பராசக்தி, லட்சுமி என்று தேவிகளையும் சகுண பிரம்மம் என்பார்கள். ஆனால் பிரம்மம் தன்மை, உருவம், காலம் ஆகியவற்றைக் கடந்து நிற்பது. உபநிடத மகாவாக்கியம் ‘அது நீ’என்று பொருள் தருகிறது. உள்முகமாக மனம் திரும்பி இதயத்தில் ஆழ்ந்து அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்த சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ, அது பிரம்மம் என்பது.மனப்பக்குவம் அடையாத மானிடர்களைக் குறித்துச் சொல்லப்படும் ‘அது நீ’ என்ற உபதேசம், என்றும் அதுவே தானாய் அமர்ந்திருக்கும் பிரம்ம நிலையை நோக்கி மனிதன் முன்னேற வேண்டும் என்ற நோக்குடன் சொல்லப்பட்டது. .இம்மகாவாக்கியம் சாந்தோக்கிய உபனிடதத்தில் ஸ்வேதகேது என்ற வாலிபனுக்கும் அவன் தந்தை உத்தாலக ஆருணிக்கும் நடக்கும் உரையாடலில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. ரிஷி உத்தாலக அருணியின் இயற்பெயர் அருணி. பின்னால் பிரஹதாரண்யக உபனிடதம், சந்தோக்ய உபனிடதம் ஆகியவற்றில் பெறும் ஞானம் பெற்றவர். தர்க்க சாஸ்திரத்தின் முதல் நிபுணர் என்று இந்திய ஆன்மிக வரலாறு கூறுகிறது.ஸ்வேதகேது உத்தாலக ஆருணியின் சீடர்; மகனும் கூட. பன்னிரண்டு ஆண்டுகள் வேதங்களை குரு ஆசிரமத்தில் ஸ்வேதகேது கற்றறிந்தார். ஆனால் அந்த அறிவின் காரணமாக ஸ்வேதகேதுவிடம் ஆணவமும் அகந்தையும் குடியேறின. மற்றவர்களை துச்சமாக மதிக்கத் தொடங்கினார். உத்தாலக ஆருணி மகனாகிய சீடனுக்கு இப்போது பணிவையும் அடக்கத்தையும் போதிக்க விரும்பினார்.எது உனக்குத் தெரியாததைத் தெரிய வைக்கும்.... கேளாததைக் கேட்க வைக்கும்…. புரியாததைப் புரிய வைக்கும்.... கண்டறியாதைக் காண வைக்கும்.ஸ்வேதகேது குழம்பி நின்றார். தான் கல்லாதது உலகளவு என்ற தெளிவு பிறந்தது. ஆருணி இப்போது சீடருக்கு பிரம்மன் யார் என்ற ஞானத்தை விளக்கினார். ஸ்வேதகேது அந்த விளக்கத்திற்கு உதாரணம் தாருங்கள் என்று வினயமுடன் குருவைக் கேட்டார்.ஆருணி ஒரு குடம் நீரில் ஒரு குவியல் உப்பைப் போடச் சொல்கிறார். மறுநாள் ஸ்வேதகேதுவை அழைத்து அந்த நீர் குடத்தை எடுத்து வரச் சொல்கிறார். அந்த குடத்து நீரில் ஸ்வேதகேது போட்ட உப்பைக் காண்பிக்கச் சொல்கிறார். உப்பு நீரில் கரைந்து விட்டது என ஸ்வேதகேது பவ்வியமாகச் சொல்கிறார்.பின்னர் உத்தாலக ஆருணி, ஸ்வேதகேதுவை குடத்து நீரின் அடிப்பாகம், மேல் பாகம், நடுப்பாகம் ஆகிய மூன்றிலிருந்தும் சிறிது நீரை எடுத்து ஸ்வேதகேதுவை ருசி பார்க்கச் சொல்கிறார். மூன்றும் ஒரே மாதிரி உப்புத் தன்மையுடன் இருப்பதாக ஸ்வேதகேது சொல்கிறார்..உப்பு அந்த நீரில் நாள் முழுவதும் இருந்தது. அதனைக் காண உன்னால் இயலவில்லை. ஆனால் அந்த நீரில் அந்த உப்பு இருப்பது நீரை அருந்தியபோது தெரிந்துகொண்டாய். பிரம்மனும் அதே போல் உன்னிடத்தில் இருக்கிறான். நீ அதனை பூரணமாக உணர வேண்டும். தூய ஆத்மனே பிரம்மன்.தத் த்வம் இஸி – நீயே அதுவாக இருக்கிறாய். சந்தோக்கிய உபனிடதம் கூறுகிறது. உத்தாலகர் மேலும் விளக்குகிறார்ஒரு ஆலம் விதையை எடுத்து வரச் சொல்லி, அதை ஸ்வேதகேதுவைப் பிளக்கச் செய்கிறார். அதில் என்ன உள்ளது எனக் கேட்கிறார்.விதைகள் என ஸ்வேதகேது பதில் சொல்கிறார்.விதைகளைப் பிளக்கச் சொல்லி, உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்கிறார்.ஒன்றுமில்லை என்பது ஸ்வேதகேதுவின் பதில்.அந்த ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்துதான் இந்த பிரம்மாண்ட ஆலமரம் வளர்ந்துள்ளது. பிரபஞ்சமும் அப்படித்தான். உன்னுள்ளே உள்ள ஆத்மாவாகத்தான் நீ இருக்கிறாய். அதுவே பிரம்மம்.குயவனிடம் உள்ள களிமண்ணைப் பார்த்திருக்கிறோம். சட்டி பானைகளை நாம் கண்டால் அது அந்த களிமண்ணால் ஆனது என அறிவோம். எந்த ஆபரணங்களையும் பார்த்தால் தங்கம் மூலாதாரம் எனப் புரியும். அதேபோல் பிரம்மனை அறிந்தால் இந்த பிரபஞ்சம் பிரம்மனன்றி உருப் பெற்றிருக்க முடியாது எனப் புரிந்து கொள்வோம்.தத் பிரம்மனையும் த்வம் ஆத்மாவையும் (ஜீவாத்மாவிடம் உள்ள) குறிக்கின்றன. அஸி அவைகளைச் சமப்படுத்துகிறது. பரக்ஞான பிரம்ம – ரிக்வேதம் – ஐத்ரேய உபனிடதம். தூய அறிவே பிரம்மம் என்பது பொருள்..பிரக்ஞா அல்லது பிரக்ஞை உணர்வு அல்லது உள்ளுணர்வைக் குறிப்பிடும். ஐத்ரேய உபனிடதம் ஆத்மா, பிரம்மன், படைப்பு, பிறப்பு-இறப்பு, அன்னம் ஆகியவற்றை விளக்கும் ஸ்மிரிதி ஆகும்.நாம் ஆத்மா என நினைத்து வணங்குவது எது என்ற கேள்விக்கு அது பிரம்மனே என்ற பதிலைத் தருகிறது. ஆத்மா என்ற உள்ளுணர்வைத் தெரிந்து கொள்வது அறிவாகும்.நான் யார் என்ற கேள்விக்கு இந்த உடலில்லை, மனமில்லை, ஐம்புலன்கள் இல்லை என பதில்கள் தொடரும். நமது உள்ளுணர்வே நாம். அது பிரம்மன் என்ற அறிவே பிரம்மன்.அயம் ஆத்ம பிரம்ம – அதர்வண வேதம் – மாண்டூக்கிய உபனிடதம் இந்த ஆத்மாவே பிரம்மம் என்பது அர்த்தம்.மாண்டூகம் என்பதற்கு தவளை என்று பொருள். இந்த உபநிடதம் சொல்ல வந்த பொருளை நேரடியாகச் சொல்லாமல், தவளை போல இங்கும் அங்கும் தாவித்தாவிச் செல்வது போன்று சொல்வதால், இது மாண்டூக்ய உபநிடதம் என்று பெயர் பெற்றது.அஹம் பிரம்மாஸ்மி - யஜுர் வேதம் – பிரஹதாரண்யக உபனிடதம் நானே பிரம்மம் என்பது இதன் பொருள்.அஹம் என்பது நான் ; பிரம்மம் புனிதம் என்ற பொருளைக் குறிக்கும் என்று சொல்பவர்களும் உண்டு. நானே பிரம்மன் ; நானே புனிதமானவன்.ஆத்மா, பிரம்மன் ஆகியவைகளின் இணைப்பைக் காட்டும் அத்வைத மந்திரம். பிரஹதாரண்யக உபனிடதம் மிகப் பழமையானது. சுக்ல யஜுர் வேதத்தில் உள்ளது. பிரமாண்டமான பிரம்மத்தை நுண்ணுயிர்களின் ஆத்மாவுடன் இணைக்கும் மந்திரம். பிரம்மனும் ஆன்மாவும் பிரிவில்லாதவை.இவற்றில் ரிக் வேதம் மட்டும் சற்று மாறுபட்டுக் கூறுகிறது. ஏனைய வேத உபனிடதங்கள் நீயே அல்லது நானே அல்லது இந்த ஆத்மாவே பிரம்மம் எனக் குறிப்பிடுகின்றன. ஜீவாத்மா பராமாத்மா ஆகிய இரண்டும் வேறல்ல; ஒன்றே எனத் தெரிவிக்கும் அத்வைத கோட்பாட்டிற்கு ஒத்துப் போவதாகத் தோன்றும். ஆனால் த்வைத, விசிஷ்டாத்வைத ஞானிகள் தத்தம் பார்வையில் வெவ்வேறு விளக்கங்கள் அளித்திருக்கிறார்கள். இந்த வாக்கியங்களின் ஆழமான பொருளை அந்த விளக்கங்கள் புரிந்துகொள்ள உதவும்.ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு; இரண்டும் தனித்தனி என்பது மத்வாச்சாரியரின் துவைதம்.இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் ஜீவாத்மா பரமாத்மாவின் ஒரு சிறிய பகுதி என்று சொல்கிறது. அதாவது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒரே பொருளால் ஆனவைதான். ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்துதான் வெளிப்பட்டது. பரமாத்மாவே நிலையானவர் என்பது அவர் கருத்து.ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவம் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே; இரண்டும் வேறு வேறு அல்ல என்பதாகும். சுவாமி விவேகானந்தர் இந்த மூன்றையும் இணைத்து அருமையான யோக விளக்கத்தை அருளினார்.ஆன்மிகவாதியின் தொடக்க நிலை துவைதம். இடைப்பட்ட நிலை விசிஷ்டாத்வைதம். முடிந்த முழுமையான நிலை அத்வைதம் என்றார்.(சனாதன தர்மம் தழைக்கும்)-முனைவர் ஜி.குமார்