ஒவ்வொருவரும் வாழ்வில் எதிர்கொள்ளுகிற பிரச்னைகள் ஏராளம். அதிலும் உரிய மணப்பருவம் அடைந்தும் பெண்ணுக்கோ, ஆணுக்கோ மாங்கல்ய யோகம் கூடிவராமல் போனால் மொத்த குடும்பமும் வாடிப்போகும். சிலருக்கு இல்லறம் புகுந்தும் அது இனிதாக அமைந்ததற்கு அடையாளமாக விரைவில் சந்தான பாக்கியம் கிடைத்துவிட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கும். இவையெல்லாம் பொய்யாகிப்போன வேளையில், நம்பிக்கையோடு பிரதோஷ வழிபாட்டில் பரம்பொருளுக்கு பச்சரிசி மாவு கொண்டு அபிஷேகம் செய்தால் திருமண வரம், குழந்தை வரம் கிடைத்து விடுவதாக பலனடைந்த பக்தர்கள் பலரும் பரவசத்தோடு சொல்லி மகிழும் தலம், மதுரை மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம். இரண்டாயிரம் ஆண்டு பழம்பெருமை மிக்கது இத்தலம். சோழர்களும், பாண்டியர்களும் கட்டி உருவாக்கிய கோயில்கள் வரிசையில் விக்கிரமங்கலம் கோயிலும் குறிப்பிடத்தக்கது. சோழர்கள் ஆட்சியின்கீழ் பாண்டியநாடு இருந்தபோது பாண்டிய நாட்டை பல வளநாடுகளாகப் பிரித்திருந்தனர். அவற்றில் வைகை கரையில் அமைந்திருந்த விக்கிரமங்கலம் பகுதி மதுரோதைய வளநாடு என்ற 3 பிரிவில் அடங்கியிருந்தது. எனவே, இத்தல பரம்பொருளின் பெயர் மதுரோதைய ஈஸ்வரமுடையார் என அழைக்கப்பட்டது. விக்கிரமங்கலத்தைச் சுற்றி நாற்புறங்களில் இருந்தும் வருவதற்கு வழிகள் உள்ளன. பழங்காலத்தில் மதுரையையும் சேரநாட்டையும் இணைக்கும் முக்கியப் பெருவழியாக விக்கிரமங்கலம் இருந்துள்ளது. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த சோழர்களின் அரசப்பிரதிநிதியாக விளங்கிய விக்கிரமசோழ பாண்டியனின் பெயரால் இது விக்கிரமசோழபுரம் என்ற வணிக நகராக உருவானது. விக்கிரமசோழ பாண்டியனின் (காலம் கி.பி. 1050-1079) கல்வெட்டுகள் பாண்டிய நாட்டில் பல இடங்களில் உள்ளன. விக்கிரமசோழபுரம் என்ற பெயரே பிற்காலத்தில் விக்கிரமங்கலம் என்று மருவி வழங்கப்படுகிறது..ஊரின் மையப்பகுதியில் சோழர், பாண்டியர் கால சிற்பக் கலையை எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டியர் காலக் கல்வெட்டுகளோடு ஓர் அற்புத சிற்பக் கருவூலமாக இத்திருக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எதிரே பிரமாண்ட தெப்பக்குளம் மற்றும் பாண்டியன் கிணறு உள்ளது. சுற்றுச்சுவருடன் திருச்சுற்று நடைமாளிகையோடு கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. இதன் முன்புறம் வேலைப்பாட்டுடன் கூடிய தூண்களோடு கூடிய முகமண்டபம் உள்ளது. அதன் முன்புறம் பிற்காலப் பாண்டியர் கால பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. இக்கோயில் முன்மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் வேலைப்பாடு கொண்ட பல தூண்களுடன் கூடிய மகாமண்டபம் உள்ளது. இதனையடுத்து கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபத்துடன் கூடிய சிவன் சந்நதி உள்ளது. இதனைச் சுற்றி கலைநயமிக்க தூண்களைக் கொண்ட திருச்சுற்று நடைமாளிகை உள்ளது. கருவறை, அர்த்த மண்டப பிரஸ்தரத்தில் உள்ள கொடுங்கைகளில் உள்ள கூடுகளில் அழகிய சிறு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த இரு சுற்றுச்சுவர்களில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் காண்போரின் கண்ணையும், கருத்தையும் கவர்வன. யோக நரசிம்மர், சிம்ம முகமும் பறவையின் உடலும் மிருகத்தின் கால்களையும் பெற்ற உருவம், யாளி, கின்னரர், மகிஷாசுரமர்த்தினி, கஜசம்ஹாரமூர்த்தி, சுப்பிரமணியர் ஆகிய சிற்பங்கள் எல்லாம் தமிழர்களின் சிற்பக்கலை மேன்மையை எடுத்துச் சொல்லிய வண்ணம் நூற்றாண்டுகள் பல கடந்தும் நீடித்து நிற்கின்றன. அர்த்த மண்டப வாசலில் மகாகணபதி, பாலமுருகன் விக்ரகங்கள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் பிரதோஷ உற்சவமூர்த்தி விக்ரகம் உள்ளது. கருவறை மூலவராக, சாந்நித்தியமிக்க தெய்வமாக மதுரோதைய ஈஸ்வரமுடையார் எழுந்தருளியுள்ளார். மூலவர் விமானம் ஏகதள விமானமாக நாகர வடிவில் அமைந்துள்ளது. சோழர்கால கட்டடக்கலைக்கு இந்த விமான அமைப்பு ஓர் அரிய உதாரணம். தேவகோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, கேது ஆகிய விக்ரகங்கள் உள்ளன. உள்சுற்றில் அக்னி ஈஸ்வரர், கன்னிமூலை கணபதி, சுப்பிரமணியர் வேல், சண்டிகேசுவரர், சிவனேசவல்லி அம்பாள் ஆகிய சந்நதிகள் உள்ளன..இதயநோய் பிரச்னை இருப்பவர்கள் இந்தக் கருவறை ஈஸ்வரனுக்கு நெய் அபிஷேகம் செய்து உள்ளம் உருக வழிபடுகின்றனர். பின்னர், இந்த அபிஷேக நெய்யை நம்பிக்கையோடு சாப்பிட்டுவர இதயநோய் முழுமையாகத் தீர்ந்து நலமும், வளமும் கிடைக்கிறதாம். கோயில் கட்டப்பட்ட காலத்தில் அம்பாள் சிவனேசவல்லி சந்நதி தனிக்கோயிலாக கோயிலின் தென்புறம் இருந்தது. கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் அந்நியர் படையெடுப்பின்போது இது முழுமையாக சிதிலமானது. எனவே, இடைக்கால ஏற்பாடாக சினேகவல்லி அம்பாளை சுவாமி சந்நதி மகாமண்டப வடபுறம் எழுந்தருள வைத்துள்ளனர். திருமணத் தடை நீங்க அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்து வணங்குகின்றனர். அதுபோல வேண்டிய கோரிக்கைகள் நிறைவேறினால் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இக்கோயில் நித்ய பூஜை, விழா செலவினங்களுக்காக சடையவர்மன் ஸ்ரீவல்லப பாண்டியன் (காலம் கி.பி. 1101-1124), மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1143-1166), சடையவர்மன் குலசேகரபாண்டியன் (கி.பி. 1162-1177), முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் (கி.பி. 1190-1218), முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1251-1271) மற்றும் பெயர் குறிப்பிடப்படாத இரு மன்னர்கள் பல தானங்களை அளித்துள்ள கல்வெட்டுகள் இக்கோயில் சுவர்களில் உள்ளன. தினமும் இரு கால பூஜை நடைபெறுகிறது. சித்ராபௌர்ணமியையொட்டி திருக்கல்யாணம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி கொலு உற்சவம், அதனையொட்டி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை முதல் சோமவாரம் 108 சங்காபிஷேகம், கார்த்திகை மகாதீபம், மார்கழி 30 நாட்கள் திருப்பள்ளியெழுச்சி, ஆருத்ரா தரிசனம், தைப்பொங்கல் மூன்று நாள் உற்சவம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், அட்சய திரிதியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். இக்கோயில் குடமுழுக்கு நடந்து நீண்ட காலமானதால் தற்போது திருப்பணி மற்றும் குடமுழுக்கு வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது..எங்கே இருக்கு?மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து விக்கிரமங்கலத்திற்கு நேரடியாக போக்குவரத்து வசதி உள்ளது. பயண தூரம் 26 கி.மீ.தரிசன நேரம்:காலை: 7 – பகல் 11.30; மாலை 5 – இரவு 8.30.- வடிவேல் முருகன்