இமயமலைச் சாரலில் அமைந்துள்ள உத்தராகண்ட் மாநிலம் தேவபூமியாகவும், தவசீலர்கள், யோகிகளின் இருப்பிடமாகத் திகழ்வதால் முனிவர்களின் பாததூளி பதிந்த புண்ணியபூமியாகவும் விளங்குகிறது. வருடந்தோறும் கோடைகாலத்தில் பக்தகோடிகள் இங்குள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகிய நான்கு ஆலயங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதை, ‘சார்தாம் யாத்திரை’ எனக் குறிப்பிடுவர். இதன் ஆரம்பக்கட்டமான ஹ்ருகேஷில் (ரிஷிகேஷ்) எழுந்தருளியிருக்கும் ஶ்ரீமந் நாராயணன், பாதாளேஸ்வரர் மகாதேவ், போகும் வழியிலுள்ள தக்ஷிணகாளி ஆகிய மூன்று கோயில்களைத் தரிசித்துவிட்டுத்தான் மேலே பயணிக்கவேண்டும் என்பது நியதி. ‘முனி கீ ரேதி (முனிகளின் பாதங்கள் பதிந்த மணல்வெளி) என்றழைக்கப்படும் பிரதேசமான ஹ்ருஷிகேஷ் டவுனிலிருந்து 3 கி.மீ. தொலைவில் கங்கையின் மேல் கரையில் உள்ளது. ஹ்ருஷீக்= இந்திரியங்களை அடக்கியவர், ஈஷ்= தலைவன். இவ்விரண்டும் சேர்ந்து ஹ்ருஷிகேஷ் என்றாகி, பின்னர் ரிஷிகேஷ் எனக் காலப்போக்கில் பேச்சு வழக்காக மருவிவிட்டது. தேசிய நெடுஞ்சாலை எண் 58-ல் ஹரித்வாரிலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். இங்குதான் துஷ்யந்தன் - சகுந்தலையின் குமாரன் பரதன் தவமியற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவன் இப்பிரதேசத்தில் 55 அஸ்வமேத, ராஜசூய யாகங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளான். பல ஆசிரமங்களும், யோகா மையங்களும் நிறைந்து காணப்படுகிறது. இதன் எதிர்க்கரையில் ஶ்ரீபரத் நாராயணன் போன்ற ஆலயங்கள், கீதா பவன், கங்கா ஆரத்தி நடக்கும் சத்ருக்ணன் பரமார்த்த நிகேதன் படித்துறை முதலியவை அமைந்துள்ளன. இருகரைகளையும் இணைக்கிறது கம்பீரமான 750 அடி நீளமுள்ள ராம்ஜூலா தொங்குப் பாலம். இதன் தலபுராணம் ஹ்ருஷிகேஷின் வரலாற்றுடன் பிணைந்துள்ளது..இக்கோயில் மகிமையை நரசிங்கப் புராணமும், கந்தபுராணத்தின் கேதார்காண்டமும் (அத்.115-120) எடுத்துக்கூறுகின்றன. சத்ய (கிருத) யுகத்தில் சோமசர்மா என்ற துறவி இங்கு கடும் தவமிருந்து, பகவான் நாராயணனின் தரிசனம் பெற்றதும் அல்லாமல் அவரது மாயா விநோதச் செயல்களைக் காணும் பாக்கியமும் அடைந்தாராம். ஒரு சமயம் இவ்விடம் தீக்கிரையானதால் மகேசனின் கோபத்திலிருந்து மீள அக்னிதேவன் தவமிருந்த இடமாதலால் இதற்கு அக்னிதீர்த்தம் என்ற பெயருமுண்டு. ஆயிரமாயிரம் பசுக்களைத் தானமளிப்பதற்கு நிகரானது இந்நீர்த்துறையின் மகிமை என மகாபாரதம் கூறுகிறது. பக்தபிரகலாதன் மற்றும் விண்ணுலகம் செல்லும் வழியில் பஞ்சபாண்டவர்கள் ஶ்ரீபரத்ஜியைத் தரிசித்துள்ளனர். மேலும் ஶ்ரீராமரின் சகோதரர்கள் பரதனும், சத்ருக்ணனும் மாதவனைத் தொழுது போற்றியிருந்தனர் எனவும் புராணம் வாயிலாகத் தெரிய வருகிறது. தலபுராணத்தின் மற்றொரு பகுதி, இதோ….. கஸ்யப மகரிஷியின் குமாரர் வத்சராவின் புதல்வர் ரைப்யர் ஒரு சிறந்த தவசீலர். கங்காதேவி ஆக்ரோஷத்துடன் பாய்ந்தோடும் மா, அரசு, ஆல், இலந்தை, வில்வ மரங்கள் நிறைந்த இப்பிரதேசத்தில், மாமரத்தின் கீழ் இந்திரியங்களை அடக்கி மகா விஷ்ணுவை நோக்கி கடும் தவமியற்றினார். அதனால் மகிழ்வுற்ற கேசவன் அங்கே எழுந்தருளி, மாமரங்களுக்கிடையே மறைந்த வண்ணம் முனிவரைப் பார்த்ததில், அவர் சாய்ந்திருந்த மரக்கிளை, பளு தாங்காமல் கூனி, மடிந்து வளைந்துவிட்டதாம். அதனால் இப்பிரதேசம் ‘குப்ஜாம்ரக்’ (குப்ஜ=கூனல், ஆம்ரக்=மாமரம்) என்று அழைக்கப்பட்டுள்ளது.ரிஷியின் முன் தோன்றிய நாராயணன், “புலன்களை அடக்கித் தாங்கள் மேற்கொண்ட தவத்தை மெச்சுகிறோம். இனி இவ்விடம் அப்பெயரினாலேயே அறியப்படும். விரும்பும் வரத்தைக் கேளுங்கள்!” எனக் கூற, ரைப்யர், “தாங்கள் இதே, ‘ஹ்ருஷிகேஷ் நாராயண’ னாகவே இங்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும். இதுவே யாம் கோரும் வரம்!’’ என்றுரைத்தார்.“அப்படியே ஆகட்டும்! சத்யயுகத்தில் நம்மை வராஹ ரூபத்திலும், திரேதா யுகத்தில் பரசுராமனாகவும், துவாபர யுகத்தில் வாமனனாகவும், கலியுகத்தில் பரத் (ஆசி வழங்குபவர்) ஆகவும், வணங்குபவர்கள் அனைவரையும் உலகப்பந்தங்களிலிருந்து விடுவிப்பேன்!” என்று ரிஷியை வாழ்த்தி அவரைத் தன்னுள் ஐக்கியமாக்கிக்கொண்டார். அதனால் பகவான் விஷ்ணு இங்கு, ‘ஶ்ரீபரத்ஜி மகராஜ்’ என அழைக்கப்படுகிறார். .ராம்ஜூலாவைக் கடந்து அக்கரைச் சென்றால் கீதா பவன் எதிரில் உள்ளது புண்ணியமிகு திரிவேணி நீராடுதுறை. இங்குதான் யமுனை, சரஸ்வதி நதிகள் கங்கையுடன் சங்கமிக்கிறது. பிதுர்க்கடன் செலுத்தும் இடமும்கூட. தினமும் மாலையில் கங்கையை வழிபடும் கங்கா ஆரத்தி நடந்தேறுகிறது.இங்கிருந்து சுமார் அரை கி.மீ. சென்றால் கடைத்தெருவிற்கு இடையே புராதனமிக்கதும், மிகவும் புகழ்பெற்ற ஶ்ரீபரத்ஜி மகராஜ் ஆலய அலங்கார நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. ஆலயம் சிறிதானாலும் கீர்த்தி பெரிது. அகண்ட முன்புற முற்றத்தின் எதிரில் கருவறை நோக்கிச் செல்லும் வாயில். சலவைக்கற்கள் பதித்த தரை. இமாச்சல கட்டடக்கலை பாணியில் 7 அடி அகல கருங்கல் சுவருடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்குக் கூம்பு வடிவில் பத்தாயம் போல் தோன்றுகிறது. வெள்ள அபாயத்தைத் தவிர்க்க ஆலயம் தரைமட்டத்திலிருந்து உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. கால ஓட்டத்தில் சிதையுற்றக் கற்களைக் காணும்போது அசல் மூலமுதற்கோயில் ஆதிசங்கரர் காலத்துக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. கருவறைப் பிராகாரச் சுற்றில் காணப்படும் பாலி மொழி கல்வெட்டு இக்கோயில் 12-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே புனரமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறது. இதன் குவிந்த மேற்கூரை 125 டன் எடையுள்ள ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. வெளி மண்டப மேல்தளத்தில் 9 குவிமாடங்கள் வரிசைக்கு மூன்றாக அமைந்துள்ளன. தனிக்கோயில் ஒவ்வொன்றின் வெளிப்புறச் சுவர்களின் மத்தியப் பகுதிவரை, புராண நிகழ்வுகள் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன.சன்னதியில் நின்ற கோலத்தில் மந்தகாசப் புன்னகைத் தவழ ஶ்ரீபரத்ஜி அருள்பாலிக்கிறார். 5 அடி உயர இச்சிலை ஒரே கருமைநிற சாளக்ராமகல்லில் வடிக்கப்பட்டதாகும். கழுத்திலிருந்து பாதம்வரை அங்கியாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருப்பாதங்கள் மட்டும் முழுவதும் அங்கியால் மறைக்கப்பட்டேயுள்ளன என்பது விசேஷம்! சங்கு, சக்கரம், கதை, தாமரைப்பூ ஆகியவற்றை முறையே நான்கு கரங்களிலும் ஏந்தியுள்ளார். இடதுபக்கம் வராஹ மூர்த்தியும், வலப்பக்கம் குழலூதும் கிருஷ்ணன், மற்ற சாளக்ராம மூர்த்திகளையும் காணலாம். அன்னியப் படையெடுப்பிலிருந்து காக்க மூலவர் சிலை அருகிலுள்ள மாயாகுண்ட் திருக்குளத்தின் கீழ் மறைத்து வைத்துப் பாதுகாக்கப்பட்டதாம். ஞானதிருஷ்டியால் அதை அறிந்துகொண்ட ஆதிசங்கரர் கி.பி.789 –ஆம் ஆண்டு ஒரு வசந்த பஞ்சமி தினத்தில் அச்சிலையை வெளியெடுத்துப் புதிதாக பிரதிஷ்டை செய்துள்ளார்..ஆதிசங்கரர் ஸ்ரீபரத்ஜி மகராஜை புனர்நிர்மாணம் செய்த வசந்த பஞ்சமி அன்று ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் இருந்து ஹ்ருஷிகேஷ் நாராயணனின் சாளக்ராமசிலை மாயாகுண்ட் நீர் நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திருமஞ்சனம் முடித்து, கோலாகலமாக ஆலயத்துக்கு அழைத்து வரப்படும். இவ்வைபவத்தைப் பார்த்தால் அது பத்ரிநாத் ஆலயத்து பத்ரியை நேரில் சேவித்ததற்கு இணையாகும் எனச் சொல்லப்படுகிறது. மூலவர் கருவறைக்கு மேலுள்ள விதானத்தில் ஶ்ரீசக்கரத்தையும் ஸ்தாபித்துள்ளார்.வெளிப்பிராகாரத்தைச் சுற்றி விநாயகர், ஊஞ்சலாடும் பாலகிருஷ்ணன், ஈசன், சிறிய சிவலிங்கம் ஆகிய தெய்வங்களின் தனிக் கருவறைகள் உள்ளன. வர்த்தமான மகாவீரர், சிவப்புக் கல்லிலாலான கழுத்தளவு புத்தர், ஐராவதத்தின் மீது அமர்ந்திருக்கும் இந்திரன் ஆகியோரின் சிலைகளையும் காண்கிறோம். சாம்ராட் அசோகன் காலத்துக் கல்வெட்டிலிருந்து இங்கு புத்தமும், சமணமும் பரவி இருந்ததை அறியமுடிகிறது.நுழைவாயிலின் இடப்புறம் மியூசியம் இருக்கிறது. அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட, கலையம்சம் பொருந்தியச் சிற்பங்கள், அலங்காரச் செங்கற்கள், மட்பாண்டங்கள், யக்ஷன் - யக்ஷிணி, நான்கு கைகளுடன் விஷ்ணு, இடுப்பளவே உள்ள சுருள்முடி வாயிற்காப்போன் ஆகியவற்றைக் கண்டுகளிக்கலாம்.இதற்கு நேரெதிரில் பரந்து, விரிந்து பறவைகளுக்கு அடைக்கலமளித்துக் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் தலமரங்கள். ஆம், ஆல், அரசு மற்றும் வில்வ மரங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து ஒரேமரமாகக் காட்சியளிக்கும் அதிசயம். இவை பிரம்மா, விஷ்ணு, மகேசனைக் குறிப்பதாக நம்புகின்றனர். இம்மரம் 25 தலைமுறைகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் கீழும் ஒரு புத்தர் சிலை உள்ளது.இந்துமதம் அறிவுறுத்தும் வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துக்காட்ட முயற்சி மேற்கொண்ட காலஞ்சென்ற மகாந்த் ஶ்ரீபரசுராம்ஜி மகராஜ் 1941 - 42ல் ஶ்ரீபரத் மந்திர் சமூக அமைப்பை ஏற்படுத்தினார். அது இன்றளவும் கல்வி மற்றும் சமுதாயச்சேவைகளில் பெரும் பங்காற்றி வருகிறது. ஆலயத்தில் நுழையும் போதே இங்குள்ள பள்ளியிலிருந்து எழும் வேதகோஷத்தைக் கேட்கலாம்.வசந்த பஞ்சமியும், அட்சய திரிதியையும் முக்கிய விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. அட்சய திரிதியை அன்றுதான் ஶ்ரீபரத்ஜியின் திருப்பாத தரிசனம் பக்தர்களுக்குக் கிடைக்கும் அற்புத நிகழ்வு நடந்தேறும். அன்று நாராயணனின் பாதங்களைக் கண்குளிர தரிசித்து, 108 முறை பிராகாரத்தை வலம் வந்தால், நினைத்தது எல்லாம் நல்லவிதமாக நடந்தேறும் என்பது அசையாத நம்பிக்கை.எங்கே இருக்கு?தில்லியிலிருந்து வடகிழக்கே 228 கி.மீ.; ஹரித்வாரிலிருந்து 27 கி.மீ.; ரிஷிகேஷ் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் பரத்ஜி நாராயணன் கோயில் உள்ளது.தரிசன நேரம்காலை 5 – 11; மாலை 3 - இரவு 9.