நிம்மதி! சந்தோஷம்! உற்சாகம்!பக்தி: 25ஆசி: 18ஒவ்வொரு மனிதருக்கும் ஏதாவது ஒரு கவலை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். முதலில் அந்தக் கவலை என்னவென்று பார்த்தால், ‘அப்படி நடக்குமோ? இப்படி நடக்குமோ?’ என்பதாகத்தான் இருக்கும். பல சமயங்களில் அது போன்று நடக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.சில சமயங்களில் அப்படியே நடந்தாலும், அதைத் தனக்குச் சாதகமாக மாற்றுவதுதான் பகுத்தறிவு. அதற்காகத்தான் நமக்கு ஆறாவது அறிவு தரப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இரவில் வெளிச்சம் இன்மையால் ஒரு வேலையும் செய்ய முடியாது. ஆனால், அறிவியல் வளர்ச்சியில் மின்சாரமும் மின்சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மனிதர்கள் உழைக்கும் நேரம் அதிகரித்துள்ளது.குளிர் அதிகமாக உள்ள இடத்தில் வசிப்போர் அதைத் தாங்கிக் கொள்ளக் கூடிய உடைகளை அணிந்துகொள்கிறார்கள். மனிதர்களைப் போலவே மற்ற உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் இயற்கை இடர்களைச் சமாளித்து வாழ்கிறது.பனிக்காலத்தில் கண்டம் விட்டுக் கண்டம் இடம் பெயரும் பறவைகள் ஒன்பது நாட்கள் உணவு, உறக்கம், ஓய்வின்றித் தொடர்ந்து 11,000 கிலோ மீட்டர் பறக்கின்றன எனில், அதற்கான ஜிபிஎஸ் வழித்தடத்தையும், உடல் வலிமையையும் யார் கொடுத்தது?புது இடத்திற்கு வந்து முட்டையிட்டு சந்ததியைப் பெருக்குகின்ற பறவைகள் திரும்பச் செல்லும் பொழுது தம் குஞ்சுகளையும் கூடவே அழைத்துச் செல்கின்றன.ஓர் அறிவுகொண்ட உயிரினம் முதல் ஐந்தறிவுகொண்ட பறவைகள் வரை ஒரு நாளும் வெயில் அதிகமென்றோ, குளிர் அதிகமென்றோ குறைப்பட்டுக்கொண்டதில்லை. அவை எல்லா சூழ்நிலைகளையும் அனுசரித்து நன்றாக வாழும்போது மனிதனால் அவ்வாறு வாழமுடியாதா என்ன? மனிதர்கள் பெரும்பாலும், ‘பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்வது? எப்படி அதை எதிர்கொள்வது?’ என்று சதா அதுபற்றியே எப்போதும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு கவலை இருந்து கொண்டேதான் இருக்கும். இந்த மாதிரி மனிதர்களை எதிர்காலத்தில் வாழ்பவர்கள் என்று சொல்லுவார்கள். நேற்று முடிந்த ஒன்றை யாராலும் மாற்ற இயலாது. நாளையும் நம் கையில் இல்லை. ஆனால் இன்று இந்த நொடி நம் கையில் உள்ளது.நாம் வெறும் கருவிதான். இயக்குபவன் அவன்தான் என்றும், நமக்கு வரும் கவலை எல்லாமே தற்காலிகம்தான் என்றும், காலம் எல்லாவற்றையும் ஆற்றிவிடும் என்றும், எது வந்தாலும் இறைவன் துணை இருப்பான் என்றும் நம்புபவர்களுக்கு எல்லா நாளும் இன்பம்தான். பக்தியுடன் ஆசிரியர்