காசிக்கு நிகரான தலமாக விளங்கும் மயிலாடுதுறையில் சிவபெருமான் நந்தீஸ்வரருக்கு குருவாக இருந்து சிவஞான உபதேசம் செய்து மேதா தட்சிணாமூர்த்தியாகத் திகழ்கிறார். நவகிரக குருவான பிரகஸ்பதி மேதா தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பேறு பெற்றார். மயிலாடுதுறையில் உள்ள பஞ்ச தட்சிணாமூர்த்தி தலங்களின் பெயர்களை அறிந்துகொள்வோம். 1.மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை மையமாக வைத்து ஏனைய நான்கு தலங்கள் அமைந்துள்ளன. 2. கிழக்குத் திசையில் உள்ள உச்சிரவனேஸ்வரர் கோயில், திருவிளநகர் (துறை காட்டும் வள்ளல்).3.மேற்குத் திசையில் உள்ள மார்கசகாயேஸ்வரர் கோயில், மூவலூர் (வழி காட்டும் வள்ளல்) 4. வடக்குத் திசையில் உள்ள வதாரண்யேஸ்வரர் கோயில், மயிலாடுதுறை (கை காட்டும் வள்ளல்). 5. தெற்குத் திசையில் உள்ள வாகீஸ்வரர் கோயில், பெருஞ்சேரி (மொழி காட்டும் வள்ளல்). மேற்கண்ட ஐந்து தலங்களில் உள்ள தட்சிணாமூர்த்திகளையும் பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்ய ஏதுவாக திட்டமிட்டுச் செல்லலாம். ஐந்து தலங்களுக்கும் செல்லமுடியாதவர்கள், மயிலாடுதுறை கை காட்டும் வள்ளலார் கோயிலில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்தால் போதும், பஞ்ச தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்த புண்ணியம் கிட்டும் என்பது ஐதிகம். மேதா தட்சிணாமூர்த்தி: மயிலாடுதுறை வதாரன்யேஸ்வரர் கோயிலின்கோஷ்டத்தில் மேதாதட்சிணாமூர்த்தி நந்தீஸ்வர்மீதுயோகாசனத்தில் அமர்ந்துள்ளார். இவரது வலது கை ஞானமுத்திரை காட்டியிருக்க, இடதுகையில்புத்தகம்உள்ளது.இவருக்கு எதிரே ஒரு கல் நந்தியும் உள்ளது. இது ஓர் அபூர்வ அமைப்பாகும். சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக விளங்குவதால் இவருக்கு எதிரில் நந்தியைக் காணமுடிகிறது. முயலகன் என்ற அரக்கன் வடிவில் அறியாமை அவன் காலடியில் முற்றிலும் அடங்கிக் கிடக்கிறது. குருவாகிய தட்சிணாமூர்த்தி பிறை சந்திரன், கங்கை, நெருப்பு மற்றும் புனித சாம்பல் ஆகியவற்றால் தன்னை அலங்கரித்துக் கொண்டுள்ளார். நவகிரக சன்னதி இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தட்சிணாமூர்த்திக்கு என தனியாக உற்சவ விக்ரகமும் உள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பு. தேவகுரு வழிபட்ட தலம்: நவகிரகத்தில் பிரகஸ்பதி என்கின்ற தேவ குருவானவர் வதாரண்யேஸ்வரையும் மேதா தட்சிணாமூர்த்தியையும் தரிசித்து தங்களை தரிசிக்கும் மக்களுக்கு குருவால் ஏற்படும் தோஷங்கள் யாவும் நீங்கவும், தடைகள் யாவும் நீங்கவும், வாழ்க்கையில் வெற்றி பெற அனுக்ரஹம் செய்யவேண்டும் என்று வணங்கி வரம்பெற்ற தலம். குருவிற்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி நெய் தீபமேற்றி முல்லைப்பூ சாற்றி அர்ச்சனை செய்து 24 முறை வலம் வருவது சிறப்பு. குரு சாந்தி ஹோமம் பிரதி அமாவாசை தோறும் காலையில் நடைபெறுகிறது. கண்வ மகரிஷி இங்கு காவிரியின் வடகரையில் ஆசிரமம் அமைத்து தங்கி ஒரு மண்டலம் தினமும் சுவாமி, அம்பாள், குரு மேதா தட்சிணாமூர்த்தியை தரிசித்து தன் வளர்ப்பு மகள் சகுந்தலைக்கு குரு தோஷ காலத்தில் துர்வாச முனிவரால் ஏற்பட்ட சாபத்திற்கு விமோசனம் பெற்று குரு தோஷம் நீங்கி அனுக்ரஹம் பெற்ற தலம். இக்கோயிலில் வருகின்ற 22.4.2023, சனிக்கிழமை இரவு 11.24 மணிக்கு குருபெயர்ச்சியை முன்னிட்டு மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. வருகின்ற 27-ஆம் தேதி வரை தினசரி மாலை 6 மணிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது..எங்கே இருக்கு?மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் செல்லும் பேருந்து மார்க்கத்தில் சுமார் அரை கி.மீ. அரை தொலைவில் வள்ளலார் கோவில் எனப்படும் வதாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.தரிசன நேரம்காலை 7 – பகல் 12; மாலை 4 – இரவு 9.-குமிலகுடி கமலா இராஜகோபாலன்