மகாபெரியவா கூட நெருக்கத்துல இருந்தவாளுக்கு அவரைப் பத்தின ஒரு விஷயம் ரொம்பவே நன்னாத் தெரியும்.அது என்னன்னா, வேத அத்யயனம் பண்றவாளையும், வேதம் படிக்கற குழந்தைகளையும் பெரியவாளுக்கு ரொம்பவே பிடிக்கும்கறதுதான்.அதேமாதிரியே உபன்யாசம் பண்றவா, கதாகாலட்சேபங்கள் செய்யறவாளையும் மகானுக்கு ரொம்பவே பிடிக்கும்.ஜனங்களோட மனசுல பக்தியை விதைக்கக்கூடிய அருமையான பணியைச் செய்யறவா அவாங்கறதால, அப்படிப்பட்டவா தன்னை தரிசிக்க வந்தா, அவாளுக்கு ஸ்ரீமடத்து சார்புல சால்வையெல்லாம் போட்டு, விசேஷமா பிரசாதங்கள் தந்து ஆசிர்வதிப்பார் பெரியவா.இதை எதுக்குச் சொல்றேன்னா, நாடு ஏன் உலகமே அறிஞ்ச மிகப் பிரபலமான ஆன்மிகச் சொற்பொழிவாளர், திருமுருக கிருபானந்த வாரியார். அவர் சன்யாசி இல்லைன்னாலும் பலரும் அவரை சுவாமி, சுவாமின்னுதான் கூப்பிடுவா. தன்னோட பேச்சால நாத்திகரையும் ஆத்திகரா மாற்றக்கூடிய அளவுக்குப் பேச்சாற்றலும் வாக்கு வன்மையும் உள்ளவர். முருகப்பெருமான் மேல அபார பக்தி உள்ளவர். இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, வாரியார்னதும் பொதுவா அவரைப் பத்திப் பலருக்கும் ஞாபகம் வரக்கூடிய விஷயங்கள் இதுதான்.அப்படிப்பட்ட வாரியார், ஒரு சமயம் மகாபெரியவா முன்னிலையில நடந்த ஒரு கூட்டத்துல கலந்துண்டார்.பெரியவாளோட உபதேசத்தைக் கூட்டத்துல ஒருத்தர் மாதிரி மேடைக்குக் கீழே இருந்து கேட்டார். அப்போ அவரை மேடைக்கு அழைச்சார், பெரியவா.பவ்யமா கையைக்கட்டிண்டு வந்த வாரியார், மகாபெரியவாளை நமஸ்காரம் பண்ணறதுக்காகக் குனிஞ்சார்..சட்டுன்னு கைய நீட்டி, நமஸ்காரம் பண்ணாதேங்கற மாதிரி சைகை செஞ்சார் பெரியவா.அப்படியே அதிர்ந்துட்டார், வாரியார். “சுவாமி நான் ஏன்…” அப்படின்னு தயக்கமாக் கேட்டார்.”ஓ … நீ தடையா நினைச்சுட்டியா? நான் சொன்னது, உன்னோட கழுத்துல அணிஞ்சுண்டிருக்கியே லிங்கம், அது தரையில படக்கூடாதுங்கறதுக்காக!” அப்படின்னார் பெரியவா. வாரியார் முகத்துல பரம சந்தோஷம்.கொஞ்ச நேரம் அமைதியா இருந்த பெரியவா, தெய்வங்களைப் பத்தி தெரியாத விஷயங்களையெல்லாம் எளிமையா எல்லாருக்கும் எடுத்துச் சொல்றியே, உன்னைப் பத்தின விஷயங்களையும் கொஞ்சம் சொல்லேன்!” பெரியவா சொல்ல, அப்படியே விழிச்சுண்டு நின்னார், வாரியார்.“சுவாமி, என்னைப் பத்தி நானே எப்படிச் சொல்லிக்கறது? என்ன சொல்றது?” அப்படின்னு தயங்கினார்.அதைக் கேட்டு வாத்சல்யமா சிரிச்ச பெரியவா, “ஏன், நீ சம்பாதிக்கற காசுல உன்னோட தேவை போக, மீதியை கோயில் திருப்பணிகளுக்கே குடுத்துடறியே… அதைச் சொல்லேன்!” பெரியவா மைக் முன்னால இருந்துண்டு சொன்னது, அந்த ஊர் முழுக்க எதிரொலிச்சுது.யாருக்கும் தெரியாம தான் பண்ணிண்டு இருக்கற தெய்வத் தொண்டை, ஊரறியச் செய்யறதுக்காக மகான் நடத்தின நாடகம்தான், தன்னை பேசச் சொன்னதுன்னு புரிஞ்சுண்ட வாரியார், கையைக் கூப்பி பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார். -பி.ராமகிருஷ்ணன்