வியாசரின் மகாபாரதத்தை, வட மொழியில், இப்போது இருக்கிற வடிவத்தில் பயிலக்கூடியவர்களுக்குச் சின்ன சந்தேகம் ஒன்று வரும். இது உண்மையில் வியாசர் இயற்றியது தானா? ஆங்காங்கே மொழி நடைமாற்றங்கள், சில பல இடங்களில் முன்னர் கூறியது மீண்டும் விரிவாகக்காணப்படுதல், நிறைய நிறைய கிளைக்கதைகள் என்றிருக்கும் காவியத்தைக் காண்கையில், இப்படிப்பட்ட ஐயம் எழுவதற்கு வாய்ப்புள்ளது.வியாசபாரதம் என்று இப்போது நாம் குறிப்பிடுகிற நூலில், ஏறத்தாழ1,00,000 இரட்டை வரிசு லோகங்கள் உள்ளன என்று ஏற்கெனவே கண்டோம். இப்போதைய அளவில், உலகின் மிக நீண்ட கவிதை, மிக நீண்ட இலக்கியப்படைப்பு என்னும் பெருமைகள் இதற்கு உண்டு. பொது ஆண்டு 50 வாக்கில்(கி.பி. 50) பாண்டியதேசத்திற்கு வந்த கிரேக்க எழுத்தாளர் ஒருவர், இந்தியாவில் ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட இலியட்காவியம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இது மகாபாரதம் என்பதையும்,இந்திய நாடு முழுமையும் இக்காவியம் புகழ்பெற்றிருந்தது என்பதையும் ஊகிப்பதில் சங்கடமில்லை. கிரேக்கக்காவியம் இலியட் என்பதை வைத்து, காவியங்களுக்கே இலியட் என்னும் பெயரை அவர் பயன்படுத்தியிருக்கிறார் (தனிப்பெயர்களைப் பொதுப்பெயர்களின் இடத்தில் வைத்துப்பயன்படுத்துகிற வழக்கம் இன்றும் நம்மிடம் இருக்கிறதே – எ.கா: ஃபோட்டோ காப்பியிங் என்பதைத் தனிப்பெயரான ஜெராக்ஸ் என்று தானே பலரும் பயன்படுத்துகிறோம்)..பொதுக்கால முதல் நூற்றாண்டிலேயே (கி.பி. 1 ஆம்நூற்றாண்டு) 1 லட்சம் சுலோகங்களோடு இப்போதைய அளவில் இக்காவியம் காணப்பட்டிருந்தாலும், ஒரே சமயத்தில் இது முழுமையாகத் தோன்றவில்லை என்றே எண்ண வேண்டியுள்ளது. ஆய்வாளர்கள் பலரும் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.பாரதக் காவியத்தின்மையமான குருக்ஷேத்திரப்போர், பொது காலநிலை10 - 11 நூற்றாண்டுகளுக்கு (கி.மு. 10ஆம்/ 11 ஆம் நூற்றாண்டு அல்லது கி.மு. 1100 - 1000) முன்பாகவே நடந்திருக்க வேண்டுமேயன்றிப் பின்னர் இல்லை என்பது தெளிவு. கதைச் சம்பவங்களின் உறுப்பினராகவே திகழ்கிறவியாசர், அதிகபட்சம், அடுத்த நூறாண்டுகளுக்குள்ளாக இக்காவியத்தை இயற்றியிருக்க வேண்டும்.அப்படியானால், ஒரு லட்சம் சுலோகங்களும் அப்போதே எழுதப்பட்டு விட்டனவா?அதுதான் இல்லை. இங்குதான்வேறுபாடு.தொடக்கத்தில்வியாசர், இக்காவியத்தை வரலாற்றுக்காவியமாக இயற்றினார்; சுமார் 8800 சுலோகங்கள். வியாசரே இக்காவியத்திற்கு ‘ஜய’ என்னும் பெயர் கொடுத்ததாகத் தெரிகிறது. அறம் (தர்மம்) வெல்லும் என்பதைச்சுட்டும் விதமாக அமைந்த பெயர். ’ததோஜயமுதீரயேத், ஜயநாமேதிஹாஸோயம்’ என்னும் விவரிப்பு இதனை உறுதிப்படுத்துகிறது. வியாசரே, கதையின் நிகழ்வு கருதி, ’பாரத’என்றும் இக்காவியத்தை அழைத்ததாகவும் தெரிகிறது..இக்கதையும் கதையின் உட்பொருளும் அறநெறிகளும் வழிவழியாகப்பயன் தர வேண்டும் என்று விரும்பியவியாசர், தம்முடைய மாணாக்கர்கள் ஐவருக்கு இதனைக் கற்பித்தார். ஐவரில் ஒருவரான வைசம்பாயனர், அர்ஜுன - அபிமன்யுவழித்தோன்றலான ஜனமேஜயன் முன்னிலையில், சர்ப்பயாகத்தின்போது, காவியத்தை உரைத்ததைக் கேள்வியுறுகிறோம். வியாச சீடர்கள் ஐவருமே, அவரவர் பங்குக்குச் சுலோகங்களைச் சேர்த்திருக்கக்கூடும் என்றாலும், வைசம்பாயனரே இதனை மேலும் விரிவாக்கி, அறக்காவியமாக நீட்டியிருக்க வேண்டும்.சதுர்விம்சதிஸாஹஸ்ரீ, சக்ரேபாரதஸம்ஹிதாம்உபாக்யானேவினாதாவத், பாரதம்ப்ரோச்யதேபுதௌ:என்னும் விவரிப்பை வைத்துப் பார்த்தால், வைசம் பாயனப்பதிவில் 24, 000 சுலோகங்கள் இருந்தன. வியாசரின் கூற்றை விளக்குவதற்காகச் சில தகவல்களையோ பொழிப்புரைகளையோ வைசம்பாயனர் சேர்த்திருக்கக்கூடும். ஜனமேஜயன், தன்பங்குக்குச் சில ஐயங்களையும் வினாக்களையும் எழுப்பியுள்ளான். இவற்றுக்கான விளக்கங்களும் விடைகளும் கூட, வைசம்பாயனப் பதிவாகச் சேர்க்கப்பட்டுவிட்டன..லோம ஹர்ஷமுனிவரின் மகனும், வியாசரின் சீடரும், உக்ரஸ்ரவஸ்ஸௌதி – ஸூதகோஸ்வாமி – ஸூதர் போன்ற பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டவருமான ஸௌதிஎன்னும் பெரும்புலவர், இக்காவியத்தை மேலும் விரிவுபடுத்தி, அறநெறித்தகவல்கள் பலவற்றைக் கூட்டினார். நைமிசாரண்யக் காடுகளில், சௌனகமாமுனிவரும் அரசர்கள் பலருமாகச் சேர்ந்து12 ஆண்டுகள் தவம் இயற்றியாகங்கள் நிறைவேற்றினர். அப்போது, நீட்டிக்கப் பெற்ற பாரதக்காவியத்தை அவர்களுக்கு ஸௌதி உபதேசித்தார். வைசம்பாயனருக்கு ஏற்பட்டது போன்றே, ஆங்காங்கே விளக்கங்கள் தர வேண்டிய சூழல் ஸௌதிக்கும் நேர்ந்தது. சௌனகரும் பிறரும் ஐயங்கள் எழுப்பினர். அவற்றுக்கான விளக்கங்களும் சேர்ந்தன. கதைப் போக்கிலும் வம்சாவளிகளிலும் நிகழ்வுக் காரணங்களிலும் சந்தேகங்கள் தோன்றின. எல்லாவற்றுக்கு மானவி வரிப்புகளும் விளக்கங்களும் கூடிய போது, 1,00,000 சுலோகங்கள் என்னும் நிலையை பாரதக் காவியம் தொட்டது.இந்தியாவில் பல ஆண்டுகள் பணி செய்த கல்வியாளர் எட்வின்ஆர்னல்ட் என்பார். புத்தமதத்திலும்,ஜப்பானியதத்துவத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், இந்திய இலக்கியங்களையும் இதிகாசங்களையும் திறம்பட உணர்ந்தவரும் ஆவார். இதழாளராகவும்,கவிஞராகவும் பெரும் பெயர் பெற்ற இவர், 1883-ல், ’மகாபாரதத்திலிருந்து சில கவித்துவங்கள்’ என்னும் பெயரிட்டு, குறிப்பிட்ட சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கட்டுரையாக்கினார். இக்கட்டுரையின் முகப்புரையில் குறிப்பிட்டார்: ‘இந்தக்கவித்துவசாகரத்தில் சற்றே நீந்துபவர்கள், இதனில் குறைகளை, புடைப்புகளை, வேறுபாடுகளை, கலைபாணியின் உடைப்புகளைக்கண்ணுறக்கூடும். ஆனால், எளிமையும் மேன்மையும் மிக்க வடமொழிச்சுலோகங்கள் பலவும், இந்தியக்கவித்துவத்தின் மகத்துவத்தைக் காட்டுகின்றன – எழுத்தின்காலத்திற்கும்முன்பிருந்து……புராண இறையியலுக்கும் முன்பிருந்து…..’மகாபாரதக்காவியம்மிகநீண்டதுஎன்பதொருபக்கம்; இதில்இல்லாததுஇல்லைஎன்பதுமறுபக்கம்.மகாபாரதத்திலிருந்துஎன்னவெல்லாம்தெரிந்துகொள்ளலாம்?.இலக்கியமற்றும் கவிதைச் சிந்தனைகள் – இந்திய மொழிகள் அனைத்தின் இலக்கியங்களிலும் மகாபாரதச் செல்வாக்கு உண்டு. ஏதோவொரு வகையில், இக்காவியத்தின் கதை மாந்தர்கள், பிறகதைகளிலும் கவிதைகளிலும் நாடகங்களிலும் ஊடகங்களிலும் கருத்துகளிலும் எண்ணங்களிலும் தலை காட்டியிருப்பார்கள்.வரலாற்றுத்தகவல்கள் – சந்திரவம் சத்துக்கதையாக மட்டுமல்லாமல், பல்லாண்டுக்கால இந்தியாவின் சமூக – பொருளாதார- மானுடவியல் – வணிக – அரசியல் இயல்புகளையும் தன்மைகளையும் மாற்றங்களையும் இக்காவியம் புலப்படுத்துகிறது.பண்பாட்டுநெறிகள் – பாரதமண்ணின் பண்பாட்டுப்பெருமையை இக்காவியம் கூறுகிறது. தவிரவும், நெருடலான தருணங்களில், என்னென்ன அங்கீகாரங்கள் எப்படியெப்படி வழங்கப்படும் என்பதையும், இவை எப்படியெல்லாம் எதிரொலிக்கும் என்பதையும் தெரிவிக்கிறது.வருங்காலப்பாடநூல் – எதிர்காலத்தலைமுறைகள் பயின்று கொள்ள வேண்டிய பாடங்களையும் படிப்பினைகளையும் அள்ளிஅள்ளித் தருகிறது இக்காவியம்.எல்லாவற்றைக் காட்டிலும், காலகாலத்திற்கும் மாறாத, காலகாலத்திற்கும் மாற முடியாத, காலகாலத்திற்கும் மாறக்கூடாத அறநெறிகளை ஆணித்தரமாகக் கூறுவதில் பாரதத்திற்கு நிகர்பாரதமே எனலாம்.எண்ணிக்கை என்று பார்த்தால், தீமையைக்காட்டிலும் நன்மையின் எண்ணிக்கை எப்போதுமே குறைவுதான் என்பதும்,வாழ்க்கையில் சோதனைகள் வந்து கொண்டேதாம் இருக்கும், அதுவும் நல்லவர்களுக்கு அதிகமாகவே வரும் என்பதும்,ஆர்ப்பாட்டங்களும் ஆரவாரங்களும் எவ்வகையிலும் உதவாஎன்பதும்,பெண்ணைப் புறந்தள்ளுவதும், இன்னல்களுக்கு ஆளாக்குவதும் அனைத்துத் தரப்பிலும் அனைத்துக்காலங்களிலும் நிகழ்பவை என்பதும்,அடக்கமும்பணிவும் அனைவரையும் காக்கும் என்பதும்பாரதம்தருகிற நிரந்தரப்பாடங்கள், இல்லையா?எத்தனையோ தொழில்நுட்பமாற்றங்களும் மேம்பாடுகளும் வந்த பின்னரும், நவீன மேலாண்மை மேற்கோள்களுக்கு, இன்றளவிலும் பகவத்கீதையைத்தானே ‘மேனேஜ்மெண்ட்குரு’மார்கள் அனைவரும் நாடுகின்றனர்! கடவுளா மனிதனா என்றே நிலைநிறுத்த முடியாத ஒருவன், யானைகளும் குதிரைகளும் ஓலமிட்டிருக்கக்கூடிய போர்க்களத்தில் நின்று, அத்தியாயம் அத்தியாயமாகநியாயம் பேசியிருக்க முடியுமா என்று பலரும் வினாக்கள் எழுப்புகின்றனர். ஆயினும், அவன் சொன்னதை இன்றளவும் படிப்பினையாக, பாடமாக, மேற்கோளாக, மேலானதாக, வேதமாகக் கொள்ள முடிகிறதென்றால், எங்கு சொன்னாலும், எப்படிச்சொன்னாலும், சொன்னது தானேமானுடச்சொத்து!மகாபாரதம் என்பது ஒருவம்சத்தின், ஒருகுலத்தின், ஒரு மொழியின், ஒரு சமூகத்தின், ஒரு நிலப்பரப்பின் கதையன்று; மானுடத்தின் சிந்தனை; மனிதத்துவத்தின் எண்ணக்குவியல்!(பாரதம் விரியும்)-டாக்டர் சுதா சேஷய்யன்