தெய்வங்கள் கோயிலுக்குள்எழுந்தருளி தரிசனம் தருவதோடு மட்டுமல்லாமல்,சமீபத்தில் பூமிக்குள்இருந்தும்வெளியேவந்து அருள்பாலித்து அனைவரையும் பக்திப்பரவசத்தில் ஆழ்த்தியிருக்கின்றனர். அந்த அற்புதம் நடைபெற்ற தலம், திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி.விஷயம் கேள்விப்பட்டவுடன் நாம் அங்கு விஜயம் செய்தோம். தகவல்களைத் திரட்டத் தொடங்கினோம்.தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமானது சீர்காழியில் உள்ளசட்டைநாதர் கோயில். இங்கு 32 ஆண்டுகளுக்குப்பின்னர் வரும் மே மாதம் 24-ஆம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதற்கான திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்திற்காக கோயிலின் மேற்குக்கோபுரவாசல் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி சிலநாட்களுக்கு முன்னர் தொடங்கியது..இங்கு குண்டங்கள் அமைப்பதற்காக களிமண் எடுக்க,அருகே உள்ள காலி நிலத்தில் பொக்லைன் மூலம் தோண்டியிருக்கின்றனர். அப்போது பூமிக்குக்கீழே நாலடி ஆழத்தில் ஏதோ வித்தியாசமான சப்தம்கேட்க,மிகப்பொறுமையாகத் தோண்டியிருக்கின்றனர். பின்னர் தோண்டிய மண்ணை பொக்லைன் மூலம் கொட்டியபோது,அதில் ஐம்பொன்னாலான அம்பாள், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சண்முகநாதர், முருகன், விநாயகர், சோமாஸ்கந்தர், இடும்பன், நால்வர், சண்டிகேஸ்வரர், பூர்ணபுஷ்கலா, அய்யனார்சாமி என 22-க்கும் மேற்பட்ட சிலைகள், பீடங்கள், திருவாசிகள், பூஜைபொருட்கள், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட, 462-க்கும் அதிகமான 62 பதிகம் கொண்ட620 பாடல்களுடைய தேவாரதிருப்பதிகச் செப்பேடுகள் அரிய பொக்கிஷங்களாய்க் கிடைத்திருக்கிறது.சுவாமி சிலைகள் புதையலாகக் கிடைத்ததகவல் பரவ பொதுமக்கள், மற்றும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சிலைகளை தரிசனம் செய்ததுடன்,தங்கள் செல்போனில் பதிவு செய்தும், மற்றவர்களுக்கு ஷேர் செய்தும் மகிழ்ந்தனர்..தகவல் உடனடியாக தருமை ஆதீன குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட, அடுத்த அரைமணி நேரத்தில் அவர் வந்துவிட்டார். அதேசமயம், ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், தொல்லியல்துறை ஆய்வாளர் மதிவாணன் என அதிகாரிகளும் விரைந்து வந்து சிலைகளைப் பார்வையிட்டனர். குருமகாசந்நிதானம் அவர்கள் ஒவ்வொரு சிலைகளையும் கையில் எடுத்துப் பார்த்து பரவசமடைந்தார்.அவரிடம் பேசினோம், "திருஞானசம்பந்தர் அருளியதிருக்கடைக்காப்பு என்ற பதிகத்தைப்பாடினால் துன்பம் நீங்கும், இன்பம் பெருகும். இதனை பாராயணம் செய்பவர்கள் ஊழ்வினையிலிருந்து விடுபடுவதோடு, இப்பிறப்பிலேயே வீடு பேற்றை அடைவர் என சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டிருக்கிறார். 'எந்தைக்கு எழுக்கூற்றிருக்கை என்னும் ஓரிரு வாயின'என உள்ள தேவாரதிருப்பதிகத்தை ஒரு கோடி முறை ஓதுவோம் என்றபடி,அதற்கான பாராயணத்தை துவக்கியதன் பலன் தான் இப்படியொரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.சுவாமி சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். ஒவ்வொரு சிலைகளும் 50 கிலோ முதல்100 கிலோ வரை உள்ளது. இந்த அரிய பொக்கிஷங்களை கோயில் வளாகத்திலேயே அருங்காட்சியகம் அமைத்துக்காட்சிப்படுத்தலாம் என்றுள்ளோம்."என்றார் நெகிழ்ச்சியுடன்..இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விரைந்து வந்து சிலைகளைப்பார்வையிட்டார். தொல்லியல் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிலைகளை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர், ‘’வருவாய்த்துறையினர் வசம் சிலைகளை ஒப்படையுங்கள்'’ என குருமகாசந்நிதானத்தைக் கேட்டுக்கொண்டார். அதற்கு மறுத்த குருமகாசந்நிதானம் அவர்கள், ‘’எங்கள் கோயில் வளாகத்தில் கிடைத்த ஒட்டு மொத்த சிலைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கோயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் தான் வைக்கப்பட வேண்டும். அந்த அறை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கட்டும்’'என்று கூற,அதன்படி கோயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் சிலைகள் வைக்கப்பட்டது.கோயில் திருப்பணிதாரர்மார்கோனியிடம் பேசினோம். "அதிகாரிகள் சிலைகளை சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பெட்டகத்தில் வைத்துக்கொள்ள அனுமதிகேட்டனர். ஆனால் ஆதீனமோ, 'தாசில்தார் அலுவலகமே எங்கள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தான் உள்ளது. அங்கே சிலைகளை வைப்பது என்பது அவ்வளவு பாதுகாப்பாக இருக்காது. கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் வைத்து அதனை பூட்டி சீல் வைத்து சாவியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.'என்றார். அதிகாரிகளும் அதனை ஏற்றுக் கொண்டனர்.இப்போது சென்னையிலிருந்து தொல்லியல்துறை உயர் அதிகாரிகள் வருகைதந்து சிலைகளையும், செப்புப்பட்டயங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச்சிலைகள் வெளியே எங்கேயோ சென்று பாதுகாப்பில்லாத நிலைமை ஏற்படுவதை விட,இங்கே தருமை ஆதீனகட்டுப்பாட்டிலே ஒட்டு மொத்த சிலைகளும் இருப்பதைத்தான் பக்தர்களும் விரும்புகின்றனர். சிலைகளை அருங்காட்சியகம் அமைத்து பக்தர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது தான் ஆதீனகர்த்தரின் விருப்பமும்.செப்புப்பட்டயங்களில் திருஞானசம்பந்தர் அருளிய அத்தனை பதிகங்களும் எழுதப்பட்டிருக்கிறது என்பது அரியதகவல். தேவாரம் எழுதப்பட்ட கல்வெட்டுகள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ளன..ஆனால், 462 தேவாரபாடல்கள் பொறிக்கப்பட்ட செப்பேடுகள் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை என தொல்லியல்துறை அறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்."என்றார்.இதற்கிடையே இந்தச்சிலை புதையல் குறித்து பல்வேறு சுவாரஸ்யதகவல்களும் உலா வந்தபடி உள்ளது. போர் நடைபெறும் சமயத்தில் எதிரிநாட்டு மன்னனிடம் விலை மதிப்புமிக்கக்கோயில் சிலைகள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக,அந்தக்காலத்தில் இவற்றை குழி தோண்டி புதைத்திருக்கலாம் என்றும்,சில நூறு வருடங்களுக்கு முன்பு திருடர்களிடமிருந்து சிலைகளைக்காக்கும் விதமாக இவற்றை பூமிக்குள் புதைத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது..இந்நிலையில் கோயில் நிர்வாகத்தினர் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் கோயில் வளாகத்திற்குள் வேறு எங்காவது சிலைகள் புதைக்கப்பட்டிருக்கிறதா? என தோண்டி தேடவுள்ளார்களாம். சிலை கிடைத்த பரபரப்பு ஒருபுறம் இருக்க,புதையலாகக் கிடைத்த சிலைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தொல்லியல்துறையினர் தமக்கு உரிமையுள்ளதாக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும் ஒரு தகவல் பரவியதன் அடிப்படையில்,அதற்கு இந்துமக்கள்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்துமக்கள் கட்சியின் மாநிலசெயலாளர் சுவாமிநாதன், "தொல்லியல்துறை இதனை கையகப்படுத்திட மேற்கொள்ளும் முயற்சியைக்கைவிட வேண்டும். கோயில் வளாகத்தில் கிடைத்த விக்ரகங்களை வேறு துறைக்கு உரிமையுள்ளதாக்க முயற்சித்தால்,தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சிஜனநாயக வழியில் அறப்போராட்டங்களில் ஈடுபடும்"என்றும் கூறியிருக்கிறார்.இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், "கோயிலில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் சிலைகளை வைத்துக்கொள்ளும் பொறுப்பு அவர்களுடையது. அதன் சாவிமட்டும் ரெவின்யூ அதிகாரிகளிடம் இருக்கும் என மாவட்ட ஆட்சியரே முடிவு செய்து,அதன்படி சிலைகள் கோயிலில் தான் இருக்கின்றது."என்றார் சுருக்கமாக.-ஆர்.விவேக் ஆனந்தன்