அமாவாசை மறுநாளில் (பாட்டியம்) சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்று சொல்வது ஏன்?- த. சத்தியநாராயணன், அயன்புரம்.பாரதப்போருக்குமுன்வெற்றிபெறவேண்டிபூஜைபோடுவதற்காக, துரியோதனன்,பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனிடம் நாள் குறித்துத்தரும்படி கேட்டான். சகாதேவன் நல்ல ஜோதிடன். அவன் அமாவாசையன்று நாள் குறித்துக்கொடுத்தான். வாஸ்தவத்தில் அவன் சரியாகத்தான், அதைக்குறித்துத்தந்தான். ஆனால், கிருஷ்ணபரமாத்மா,கௌரவர்கள் ஜெயிக்கக்கூடாது என்பதற்காக, சூரியனையும்சந்திரனையும்அழைத்தார். இருவரும் நேருக்கு நேராக வந்து நின்றார்கள். அதனால், அன்றைய தினமே அமாவாசை ஆகிவிட்டது. உடனே பாண்டவர்களை பூஜை போடச் சொல்லிவிட்டார். அமாவாசை முந்தி வந்து விட்டதால், மறுநாளான அமாவாசை பிரதமை ஆகிவிட்டது. இதை அறியாமல் கௌரவர்கள் பிரதமை தினத்தில் பூஜை போட்டார்கள். அப்புறம் போரின் முடிவு என்ன ஆனது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.அதனால் தான் அமாவாசைக்கு அப்புறமோ, பௌர்ணமிக்கு அடுத்தோ வரக்கூடிய பிரதமைதினத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது. எந்தப்புதுமுயற்சியும் தொடங்கக்கூடாது என்ற வழக்கம் வந்தது.நம்முடைய பூஜை அறையில் சில இறைவனின் புகைப்படங்களை வைக்கக்கூடாது என்று கூறுகிறார்களே, அவை என்னென்ன படங்கள்?- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.பூஜை அறையிலே சில விதமான சுவாமி உருவங்களை வைக்கக்கூடாது என்கிற நம்பிக்கை பலரிடத்திலே இருக்கிறது. இது வெறும் செவி வழிக்கருத்துதானே ஒழிய, எந்த சுவாமி படத்தையும் பூஜை அறையில் தவிர்க்க வேண்டும் என்பது சாஸ்திரத்தில் இல்லை. எல்லாவிதமான தெய்வவடிவங்களையும் வீட்டு பூஜை அறையிலே வைக்கலாம். சில வெளிநாடுகளில் பார்த்தால், காலணிகளைவைக்கும் அலமாரி அருகே கூட சுவாமி படங்களை வைத்திருக்கிறார்கள். அப்படி வைக்கக்கூடாத இடத்தில் வைப்பது தான் தவறே தவிர, பூஜை அறையில் குறிப்பிட்ட சுவாமி படத்தை... உதாரணமாக குழலூதும்க்ருஷ்ணன், நடராஜர், பறக்கும் அனுமான் இப்படிப்படங்களை வைக்கக்கூடாது என்பதெல்லாம் அஞ்ஞானம்... அதாவது அறியாமையால் சொல்லப்படுவதே தவிர, இதற்கெல்லாம்சாஸ்திரங்கள்இல்லவேஇல்லை. அவரவர் மனதுக்குப்பிடித்தமான சுவாமி உருவம் எதையும் பூஜை அறையில் வைக்கலாம். வணங்கலாம். ஆராதிக்கலாம்..அஷ்டமி பூஜையை எத்தகையவர்கள் செய்யவேண்டும்? ஆலயத்தில் வைத்தா, இல்லை வீட்டில் வைத்தா? அதன் பலாபலன் என்ன?- கே.எல். கந்தரூபி, பெரியபாளையம்.அஷ்டமி பூஜையை வீட்டில் செய்யலாமா? என்று விளக்கமே இல்லாமல் கேட்டால் அதற்கு எப்படிப்பதில் சொல்வது? அஷ்டமி பூஜை என்றால், பைரவர் பூஜையா? சண்டிகாபரமேஸ்வரி பூஜையா? என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். பொதுவாகவே இந்த பூஜைகள் எதுவாக இருந்தாலும் குருமுகமாக உபதேசம் பெற்றவர்களாக இருந்தால், அதாவது இந்த பூஜையை இப்படித்தான் செய்யவேண்டும் என்று யாரிடமாவது நேரடியாகக்கற்றிருந்தால், அவர்கள் வீட்டிலேயே செய்யலாம். அப்படி இல்லாமல், யாரோ சொன்னதைமட்டும் கேட்டு விட்டு நாமும் செய்யலாம் என்று நினைப்பவர்கள், கோயிலுக்குச் சென்று அங்கே உள்ள முறைப்படி செய்வதே நல்லது.நம்முடைய பூஜை அறையில் மறைந்த பெற்றோர்களின் படங்களை வைத்து வணங்கலாமா?- விக்னேஷ், மாதவரம்.முன்னோர்கள் படங்களை பூஜை அறையில் வைக்கக்கூடாது என்பதுதான் பூஜா விதி. சிலர் பெற்றோரின் படங்களை வைத்துக்கொள்கிறார்கள். இது அவரவர் குடும்பத்துப்பழக்கத்தால் வருவது. சாஸ்திரத்தின் படி என்றால், எந்த முன்னோரின் படத்தையும் பூஜை அறையில் வைப்பது கூடாது.-மோகன் குருஜி