புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகள் திருமாலாகிய ஏழுமலையானுக்கு உகந்த நாட்கள். சிலர் வீடு வீடாகச் சென்று, கோவிந்த நாமம் சொல்லி, பிட்சையாக அரிசி பெற்று வருவதுண்டு. அவ்வாறு பெற்ற அரிசியை ஊற வைத்து, உலர வைத்து, அரைத்து அதில் சர்க்கரை சேர்த்து, நெய்யில் முந்திரி, பாதாம், கொப்பரைத் தேங்காய், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போன்றவற்றைப் பொரித்து அந்த மாவில் கலந்து, குளம் போலாக்கி, நெய்விட்டு தீபமேற்றுவர். அதற்கு இரு புறங்களிலும் தேங்காய் உடைத்து வைத்து வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றைப் படைப்பர். அந்த தீபத்தில் திருமலையப்பன் எழுந்தருள்வதாக ஐதிகம். அழகான மலர்ச் சரத்தையும், துளசி மாலையையும் அந்த மாவிளக்கைச் சுற்றி சமர்ப்பிப்பர். திருமலையில் பிரம்மோற்சவக் கொடியேறினால் அந்த வாரம் மாவிளக்கு ஏற்றமாட்டார்கள். கொடித் தடை காரணமாக ஏழுமலையப்பன் மலையிலிருந்து இறங்கி நம் இல்லங்களுக்கு எழுந்தருள மாட்டாரென்பது நம்பிக்கை. எள்ளுச்சாதம், சர்க்கரைப் பொங்கல், வடை என தடபுடலாக விருந்தையும் பெருமாளுக்கு நிவேதித்து பிரசாதமாக உண்பர். இதை தளிகை போடுதல் என அழைப்பதுண்டு. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருப்பதால் திருமலையப்பனின் அருளுக்குப் பாத்திரமாகலாம்!- ஆர். சாந்தா, மயிலாப்பூர்.