மாதவப்பெருமாளும், யோக நரசிம்மரும் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ள தலம், தஞ்சை மாவட்டத்திலுள்ள வல்லம்.நரசிம்மப்பெருமாள் வல்லாசுரன் என்ற அசுரனை இத்தலத்தில் வதம் செய்தகாரணத்தால்இவ்வூருக்குவல்லம்எனப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்திரன்,கௌதமமுனிவர்வழிபட்டவேதநாயகப்பெருமாள்என்கிறதெய்வநாயகப்பெருமாள்தனிச்சன்னதிகொண்டு கிழக்கு நோக்கி நரசிம்மப்பெருமாள் கோயில் திருச்சுற்றுக்குள்ளேயே அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இவ்விருபெருமாள்களையும்ஒரேஇடத்தில்அருகருகே தரிசிக்கபக்தர்கள்பூர்வஜென்மத்தில்மாதவம் செய்திருக்க வேண்டும் என்பதால்,மாதவயோகநரசிம்மப்பெருமாள்கோயில் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.ஆவணங்களிலும் கல்வெட்டுகளிலும் இது வல்லம் கோட்டைமேட்டுநரசிங்கப்பெருமாள்கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னன் விக்கிரமசோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில். அப்போது விக்கிரம சோழ விண்ணகரம் என்று இத்தலம் அழைக்கப்பட்டுள்ளது.ஆலயத்திற்குவரும்பிரதானசாலையில்நுழைவுவளைவு அமைந்துள்ளது. கோயிலை அடைந்ததும், யோகநரசிம்மரை முதலில் தரிசிக்க தெற்கு வாயில் வழியாகச் செல்கிறோம்.கோயிலுக்கு கிழக்கு, தெற்கு என இரு வாயில்கள் இருந்தாலும் கிழக்கு வாயில் திறப்பது இல்லை.ஐந்து விதமானதுர் குணங்களை விட்டுவிட்டுஆலயத்திற்கு வரவேண்டும் என்பதுபோல், சமதளத்தில் இருந்து ஐந்துபடிகளில் இறங்கி கோயிலுக்குச் செல்ல வேண்டும்..தெற்குவாயில் முன்பு 12 தமிழ்மாதங்களைக்குறிக்கும் வகையில் பன்னிரண்டு தூண்களைக் காணலாம். முதலில்யோகநரசிம்மர்தரிசனம் தருகிறார். அதனையடுத்து கிழக்கேதிரும்பினால்,தெய்வநாயகப்பெருமாள்தரிசனம் கிடைக்கிறது. அவருக்கு எதிரில் கருடாழ்வார் உள்ளார். அதன் பின்புறம்கிழக்குப்பக்கம் நுழைவாயிலுக்கு பதிலாககல்சாளரம் உள்ளது. அருகே பலிபீடமும் உள்ளது.இக்கோயில்உட்பிராகாரத்தின் கிழக்கில் வகுளாதேவிஅம்மன் (திருப்பதி ஏழுமலையானின் வளர்ப்புத்தாய்) சன்னதி,தெற்கில்தும்பிக்கைஆழ்வார்கள்(இரண்டுகணபதிகள்கௌதமமுனிவரின்ஆசிரமத்தைக்காப்பாற்ற யானை உருவில் வந்தாகஐதிகம்) சன்னதி, ஆனந்தஅனுமார்சன்னதி; மேற்கில் இராமர்சன்னதி, கோமளவல்லிஅம்மன், யோகதர்மசாஸ்தாசன்னதி, ஆண்டாள் சன்னதியும், வடக்கில் நந்தவனமும் உள்ளதுவேதநாயகப்பெருமாள்என்கிறதெய்வநாயகப்பெருமாள்:தனிவிமானத்துடன் கூடிய தனிச்சன்னதியில் ஸ்ரீதேவி,பூதேவிசமத தெய்வநாயகப்பெருமாள் அமர்ந்தகோலத்தில்சுயம்பு வடிவில் கிழக்குநோக்கி பக்தர்களுக்குதரிசனம்தருகிறார். சுதையாக இருப்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது.உற்சவரான ஸ்ரீதேவி,பூதேவிசமத தெய்வநாயகப் பெருமாளுக்கு திருவோணம் அன்று விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது.நோய்களைத்தீர்க்கும்திருவோணம்தீபவழிபாடு:ஒவ்வொரு திருவோணம் நட்சத்திரத்தன்றும் பக்தர்கள் நோய்கள் குணமாக வேண்டி தலைவாழை இலையில் பச்சரிசியைப்பரப்பி,அதன் மீது 12அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்வதைக்காண கண் கோடி வேண்டும்..யோகநரசிம்மப்பெருமாள்:இவரும் சுயம்பு மூர்த்தமே. நரசிம்மரின்வலதுகண்ணில் சூரியனும்,இடதுகண்ணில்சந்திரனும்,நடுவில் புருவமத்தியில் அக்னியும் (நெற்றிக்கண்) உள்ளது. நரசிம்மர்மனித உடலும் சிங்கமுகமும் கொண்டவர் என்பதால்,இக்கோயிலில் யோகநரசிம்மர் தலை மற்றும் சங்குசக்கரத்துடன் கூடிய இரண்டு கைகள்கல்லாகவும்,மீதமுள்ளஉடல்பகுதிமுழுவதும்சுதையாகவும்உள்ளது. கல், சுதை இரண்டும் சேர்ந்து யோகநரசிம்மராகக்காட்சி தருகிறார்.தரைமட்டத்திலிருந்து கீழே அமர்ந்து இருப்பதால், இவரை பாதாள யோகநரசிங்கப்பெருமாள் எனவும் அழைக்கிறார்கள்.இவருக்குத்தைலக்காப்பு மட்டுமே சாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோன்ற அமைப்புடைய யோகநரசிம்மர் இவர் ஒருவர்தானாம். உற்சவரானலக்ஷ்மிநரசிம்மருக்குத்தான் இங்கு அபிஷேகம் செய்கிறார்கள். உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்ய செய்ய யோகநரசிம்மர் உக்ரம் தணிகிறதாம். என்ன ஓர் ஆச்சரியம்!சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஒன்பது சுவாதி நட்சத்திர நாளன்று இவரை வழிபாடு செய்தால் எண்ணியவை எண்ணியபடி நடக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.முடிகயிறுவழிபாடு:யோகநரசிம்மப்பெருமாள்பாதத்தில்வைத்துபூஜிக்கப்பட்டமுடிகயிறைபெற்றுபக்தர்கள்கைகளில்அணிவதால்பக்தர்களுக்குஉடல்ஆரோக்யம்மேம்படுகிறது. விபத்துகள்அண்டாது. திருஷ்டிகள்விலகும். குழந்தைகளுக்குஏற்படும்அனைத்துதோஷங்களும்நீங்கும்என்பதுநம்பிக்கை.கோமளவல்லிதாயார்சன்னதி:கிழக்குநோக்கி கோமளவல்லிதாயார் நின்ற கோலத்தில்காட்சி தருகிறார். குழந்தைப் பேறு வேண்டி தம்பதியர் பௌர்ணமி அன்று பிரார்த்தனை செய்கிறார்கள்..ஆனந்தஅனுமார்:வாலில் மணிக்கட்டிய ஆனந்த அனுமாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் நீங்கும். வாழைப்பழ மாலை சாற்றி வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும். வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் எடுத்தகாரியத்தில் வெற்றிகிட்டும்.கல்வெட்டுகள்:இக்கோயிலில் சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்களது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.தீர்த்தம்:கௌதமதீர்த்தம்என்கிறவெள்ளக்குளம்முக்கியதினங்கள்:பிரதிமாதம்சுவாதிநட்சத்திரம், திருவோணம், பிரதோஷம் நாட்களிலும்;நரசிம்ம ஜெயந்தி, சித்ரா பெளர்ணமி, ஆடிப்பூரத்தன்று ஆண்டாள்கல்யாணம், புரட்டாசியில் கல்யாண உற்சவம், புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது..நரசிம்மஜெயந்தி:வருகிற 4.5.2023, வியாழக்கிழமை நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலையில் உற்வர்லட்சுமி நரசிம்மருக்கு சிறப்புபாலபிஷேகம், விசேஷதிருமஞ்சனம், சிறப்புஅலங்காரம்,தீபாராதனையும்; மாலையில் யோகநரசிம்மப்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும்,தீபாராதனையும் வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது.வல்லம்யோகநரசிம்மரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், மனதிலுள்ள இனம்புரியாத பயம் விலகும், நவகிரக பாதிப்புகள் அகலும், யோகமான வாழ்வு அமையும்!எங்கேஇருக்கு?தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார்7 கி.மீ.தொலைவிலும்,வல்லம்பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்திலும் மாதவ யோகநரசிம்மப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. (தஞ்சாவூர் - திருச்சி புறவழிச்சாலை வழியாகச் செல்லாமல்,வல்லம் ஊருக்குள் செல்லும் அணுகு சாலை வழியாக வரவேண்டும்)தரிசன நேரம்காலை6 – 11; மாலை5 - இரவு8. விசேஷ நாட்களில்கூடுதல்நேரம்கோயில் திறந்திருக்கும்.-குமிலகுடி கமலா இராஜகோபாலன்