‘’நான் கடவுளை வழிபடாத நாளே இல்லை. இருந்தாலும் செல்வச் செழிப்பு என்னிடம் இல்லை’’ என்று பலரும் குறைப்பட்டுக் கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது.நமது பாரத தேசத்தில் உள்ளது போன்ற ஆழமான ஆன்மிக உணர்வும், பரந்து விரிந்த கடவுள் வழிபாட்டு முறைகளும் இல்லாத பல நாடுகளின் மக்களும் நமக்குச் சமமாகவோ, நம்மைவிட அதிகமாகவோ வசதியாக வாழ்வதைப் பார்க்கிறோம். கேள்விப்படுகிறோம்.ஒரு காலத்தில் வளமையாகத் திகழ்ந்த நாடுகள் சில ஏழை நாடுகளாக மாறுவதையும், ஏழை நாடுகள் பணக்கார நாடுகளாக மாறுவதையும் பார்க்கிறோம். அதேபோன்று தனி மனிதர்களும், குடும்பங்களும் அவ்வப்பொழுது பலவிதமான ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாவதையும் பார்க்கின்றோம்.மனிதவளம், நீர்வளம், நிலவளம், கனிமவளம்ஆகியவைதேசத்திற்குதேசம்மாறுபடுகின்றன. அந்தந்ததேசங்களைச்சேர்ந்தகுடிமக்களும், அரசாள்பவர்களும்முறையாகத்திட்டமிட்டுத்தங்கள்நாட்டிலுள்ளவளங்களைத்திறமையாகப்பயன்படுத்தி உற்பத்தியைப்பெருக்கினால்செல்வச்செழிப்பு அனைத்தும் தாமாகவே வந்து சேர்ந்து கொள்ளும்.அவ்வாறு ஒருமித்த குறிக்கோளுடன் தங்கள் நாட்டை முன்னேற்ற உழைப்பவர்களுக்கு அவர்கள் வழிபடுகின்ற தெய்வமும் நிச்சயமாகத் துணையாக விளங்கும்.தெய்வங்கள் எழுந்தருளியுள்ள புனிதமான இடங்களே ஆலயங்கள். எப்போதும் மனதில் நற்பண்புகளுடன் தெய்வபக்தியும் கொண்டவர்கள் நடமாடும் ஆலயங்களாக மாறி விடுவார்கள்.நாமும் அத்தகைய செல்வத்துடன் வாழ நம்முடைய பங்கிற்கு எதிலாவது ஒரு வகையில் நல்லதே செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது இறை சக்தியும் நமக்கு துணை நிற்கும். பக்தியுடன்ஆசிரியர்