அள்ள அள்ளக் குறையாமல் செல்வத்தை அள்ளித் தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது, அட்சய திரிதியை. அன்று ஏழைகளுக்குத் தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தைத் தரும். அட்சய என்றால் வளரக்கூடியது, அழியாதது என்று அர்த்தம். சயம் என்றால் தேய்தல். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்படும். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை அட்சய திரிதியை நாளாகக் கொண்டாடுகிறோம். இந்த வருடம் ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய நாட்களில் அந்த திதி வருவதால், இந்த வருடம் அந்த இரு தினங்களும் அட்சய திரிதியை நாளாகக் கருதப்படுகிறது.அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் அது பல மடங்காகப் பெருகும் எனக்கூறப்படுகிறது. எனவே தங்கம் வாங்க சிறந்த தினமாக அட்சய திரிதியை விளங்குகிறது. அதேசமயம், தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால்கூடபோதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். அன்று நாம் தொட்டது துலங்கும்.அட்சய திரிதியை அன்று செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையும். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும்.அட்சய திரிதியை அன்று பிறருக்கு பானகம் மற்றும் நீர்மோர் வழங்குவது சிறப்பு. தண்ணீர் தானம் கூட சிறந்தது. அட்சய திரிதியையின் பல சிறப்புகள் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை அறிந்து கொள்வோம்.அட்சய திரிதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர புராணம்’ விரிவாக விவரிக்கிறது..சிறப்புகள்:அட்சய திரிதியை தினத்தன்றுதான் கிருதயுகம் பிறந்தது. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திரிதியை தினத்தன்றுதான் தொட்டது. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திரிதியை தினத்தன்றுதான். அட்சய திரிதியை நாளில்தான் மணிமேகலை அட்சயபாத்திரம் பெற்றாள். அட்சய திரிதியை நன்னாளில்தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.அட்சய திரிதியை தினத்தன்றுதான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அட்சய திரிதியை நாளில்தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம்பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்டலட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்யலட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.அமாவாசைக்கு 3 வதுநாள் அட்சய திரிதியை. 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு. உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார் குரு. எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால்தான் அட்சய திரிதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.அண்டை மாநில கொண்டாட்டங்கள்:வடமாநிலங்களில் அட்சய திரிதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாகக் கருதுகிறார்கள். அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட் இனத்தவர்கள் அட்சய திரிதியை தினத்தன்று மறக்காமல் மண்வெட்டி எடுத்துக்கொண்டு வயலுக்குச் செல்வார்கள்.ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திரிதியை புனிதநாளாகும். வடஇந்தியர்கள் நீண்டதூர புனிதப் பயணங்களை அட்சய திரிதியை நாளில்தான் தொடங்குவார்கள். ஒரிசாவில் வீடுகட்ட, கிணறுதோண்ட சிறந்தநாளாக அட்சய திரிதியை தினம் கருதப்படுகிறது. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல்விதைப்பை அட்சய திரிதியை தினத்தன்று தொடங்குவார்கள்..அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும்:அட்சய திரிதியை நாளில், பூஜையறையில் வெள்ளை மலர்களான மல்லி, முல்லை, வெண்தாமரை போன்றவை கொண்டு படங்களை அலங்கரிக்கலாம். குலதெய்வம், இஷ்டதெய்வங்களை வணங்கி வழிபடும்போது, பூஜையில் பணம், முக்கிய பத்திரங்கள் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச்சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்யவேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்பவிருத்தியும் ஏற்படும்.அன்றைய தினம் பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மணைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒருசெம்பில் நீர்நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். அதனுள் காசுகளைப் போடலாம். கலசத்தின் அருகே ஒருபடி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்குப் பொட்டு, பூவையுங்கள். லட்சுமிநாராயணர் படம், லக்ஷ்மி குபேரன் படம், அஷ்டலக்ஷ்மி படம் போன்ற படங்கள் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றிவையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வையுங்கள். நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அட்சய திரிதியை நாளில் எல்லோராலும் வாங்கமுடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடுதேடி வந்துவிடும்.முதலில் விநாயகரை வேண்டிக்கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணு - லட்சுமி, சிவன் - பார்வதி, குபேரன் ஸ்லோகங்களை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். பின்னர் தூபதீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது. அன்றைய தினம் மாலையில் அம்மன் கோயில், சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள். அதன்பின்னர் மீண்டும் தூபதீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள்..பலன்கள்: அட்சய திரிதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது இவற்றைவிட முக்கியமானது, தானமளிப்பதும், முன்னோர் கடன்களைச் செய்வதும்தான். இல்லாதோருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுவது இவற்றினாலும் தெய்வ அருளைப் பெறலாம்.கோயில்களிலும் தத்தம் இல்லங்களிலும் முறைப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் மரணபயம் நீங்கி, உடல் நலம் பெறும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எமவேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவிசெய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர்பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர்சாதம் தானம் அளித்தால் பாவவிமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.அட்சய திரிதியை தினம் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்களை வாங்க மட்டுமன்றி, வணிகத்தினைத் துவங்குதல், பூமிபூஜை போடுதல், புதிய கலையினைக் கற்க ஆரம்பித்தல் போன்றவற்றுக்கும் உரியதாகக் கருதப்படுகிறது. அட்சய திரிதியை தினத்தன்று ஆலிலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜபித்து, தலையணை அடியில் வைத்தால், நோய்களின் கடுமை குறையும். குழந்தைகளின் படுக்கை அடியில் வைத்தால், கண்திருஷ்டி கழியும், பயங்கள் போகும். பூஜை அறையில் அல்லது வியாபாரத் தலத்தில் வைத்திருந்தால் எதிரிபயம் விலகும். இந்த நாளில், குபேரபூஜை, லட்சுமிநாராயண பூஜை, சிவபூஜை, மகாலட்சுமி பூஜை போன்றவற்றைச் செய்வது, நற்பலன்களைத் தரும். அட்சய திரிதியை நாளில் இயன்ற அளவில் தானம் செய்வது மிகமிகச் சிறந்தது. இந்நாளில் செய்யப்படும் தானங்கள், பலமடங்கு அதிக நன்மைதரும் என்று புராணங்கள் கூறுகின்றன.சித்திரை மாதத்தில் வரும் அட்சய திரிதியை கடும்வெயிலில் வரக்கூடிய சுபநாளாக இருப்பதால் இந்நாளில் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் தண்ணீர்ப்பந்தல் அமைப்பது, வீட்டின் முன்பு மண்பானையில் குடிநீர் வைப்பது, நீர்மோர்ப்பானை வைப்பது, கோயில்களில் பானகம் தானம் செய்வது ஆகியவை உங்களுக்குப் புண்ணியத்தைத் தேடித்தரும். தண்ணீரால் வயிறு குளிறும், மனமும் நிறையும். நமக்கும் எல்லா நலங்களையும் வளங்களையும் அள்ளித்தரும் நாளாக அட்சய திரிதியை அமையும்.