பூலோக கற்பக விருட்சம் எனப்படும் பனைமரம், தானே வளரும் தன்மை கொண்டது. பனை மரத்தில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. தென்னிந்தியாவின் தொன்மையான மரங்களில் முதன்மையானதாகத் திகழ்கின்றது.இந்தியாவில் தமிழ்நாடு முதல் குஜராத் வரையிலும், இலங்கையின் மையப்பகுதி, தெற்காசியா மற்றும் சில ஆப்பிரிக்கா நாடுகளிலும் காணப்படும் பனைமரம் தமிழகத்தில் இராமநாதபுரம், திருநெல்வேலி பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. இம்மரத்தின் இலை முதல் வேர் வரை அனைத்துமே பயனுள்ளது. 30 மீட்டர் உயரம், 3 மீட்டர் அகலம் வரை கொண்டது.மர உச்சியில் காணப்படும் இலைகளின் கூட்டமைப்பு, நுங்குக் குலைகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.இதில் ஆண்பனை, பெண்பனை என இரு வகையுண்டு. தென்னை மரத்தினைப் போல உருளை வடிவக்குலைகள் பெண் பனையில் இருக்கும். இதில் உள்ள நுங்கு மிகவும் சுவைமிக்கது. பழங்காலத்தில் தமிழ்நாட்டின் நூல்கள் அனைத்தும் பனை ஓலையில் தான் எழுதப்பட்டு வந்தன. அதனால் பனை ஓலைக்குச் சுவடி என்னும் பெயர் வைத்தனர்.பாரதக் கதையில் பாண்டவர்களின் பிதா மகனான பீஷ்மரின் கொடி, பனைக் கொடியாகும். சேரமன்னனின் மாலையில் பனந்தோட்டைக் கட்டியிருந்தான்.பனை வெல்லம், பனைவிசிறி, பனஞ்சீனி, பனை ஓலை, பதநீர், சமையல் எண்ணெய் என அனைத்திலும் மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் பனைமரம் உள்ளது. .இலக்கியங்கள் : பாடலொம் பெண்ணை யின் பழம் விழப் பைம்பொழில் மாடலொம் மல்குசீர் மாமழ பாடியே- என திருநாவுக்கரசர் திருமழபாடி தேவாரத்திலும், குரும்பை யாண்பனையீன் குலையோத்தூர் ...- என திருவோத்தூர் தேவாரத்திலும், பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்............ வலம்புரமே - என திருவலம்புரம் தேவாரத்திலும்,பாளைதந்த பஞ்சியங் குறுங்காய்ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும் - எனக்குறுந்தொகையிலும் ,கரண்டமாடுபொய்கை யுட்கரும் பனைப் பெரும்பழம்புரண்டுவீழ வாளை பாய்க்குறுங்குடி நெடுந்த காய் .... என திவ்யபிரபந்தத்திலும் பனையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.. பனை மரத்தின் பெருமைகளை விளக்கி, "தால விலாசம்" என்ற நூலை அருணாசல கவிராயர் இயற்றியுள்ளார். இதில் பனைமரம், அதன் பாகங்கள், பயன்கள் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது."பனையின் மேல் வற்றிய ஓலைசலசலக்கும் எஞ்ஞான்றும்பச்சோலைக்கு இல்லை ஒலி" பனையிலுள்ள பச்சைஓலை காற்றில் அசைந்தாடினாலும் அதனிடம் இரைச்சல் இல்லை. அறிஞர்களுடைய அடக்கமான நல்லுரை பச்சோலை போன்றது என்ற பொருளில் நாலடியார் பாடல் ஒன்று கூறுகிறது. ஒளவையாரின் ஒருங்கிணைப்பில் மூவேந்தர்களும் ஒரு திருமண விழாவிற்கு வருகை தந்தனர். அவர்களை ஒற்றுமையுடன் வாழ வாழ்த்திய ஒளவையார், இந்த மகிழ்ச்சியின் அறிகுறியாக மூன்று பனம் பழங்களை தருமாறு பனந்துண்டத்திடம் கூறுவதான பாடல் வரிகள் இவை:சேர, சோழ, பாண்டியர்கள் திங்கள்குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்மங்கைக் கருகிட வந்து நின்றார்மணப் பந்தலிலேநுங்குக்கண் முற்றி அடிக்கண் சிவந்து நுனிக்கறுத்துப்பங்குக்கு மூன்று பழந்தரல் வேண்டும் பனந்துண்டமே! .தலமரங்கள் : சோழநாட்டில் திருமழபாடி, திருவலம்புரம், மேலைப் பெரும்பள்ளம், திருகன்றாப்பூர், திருப்பனந்தாள், திருப்பனையூர், தொண்டைநாட்டில் , திருவோத்தூர் (செய்யாறு), திருப்பனங்காடு, நடுநாட்டில் புறவார்ப் பனங்காட்டூர் (பனையபுரம்), பனைமலை மற்றும் திருவரங்குளம் ஆகிய சிவாலயங்களிலும், பாண்டிய நாட்டில் திருக்குறுங்குடி என்ற திருமால் தலத்தில் பனைமரம், தலமரமாகத் திகழ்கின்றது.தலமரச் சிறப்புகள் : நடுநாட்டு, புறவார்ப்பனங்காட்டூர் எனும் பனையபுரத்தில் தலமரத்தில் இரண்டு விதமான பனை மரங்கள் அமைந்துள்ளன. ஒன்று ஆண்பனை. இது உயரமானது. மற்றொன்று பெண்பனை சற்றுக் குள்ளமானது. குலை தள்ளி பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் இம்மரங்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றன. இதேபோல, திருப்பனந்தாள் மற்றும் திருப்பனையூரிலும் அமைந்துள்ளன. தொண்டை நாட்டில் உள்ள திருவோத்தூரில் (செய்யாறு) சமணர்களுக்கும், திருஞானசம்பந்தருக்கும் எந்த சமயம் பெரியது என்ற போட்டி ஏற்பட்டபோது, சமணர்களின் விருப்பத்திற்கு இணங்க, திருஞானசம்பந்தர், "பூத்தேர்த்தாய கொண்டு நின் பொன்னடி" எனத் தொடங்கும் பதிகம் பாடி அத்தலத்தில் இருந்த ஆண்பனை, பெண்பனையின் அம்சம் பெற்று குலை காய்த்த அதிசயம் நிகழ்ந்தது. அதன்பின் சமணர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு, அவ்வூரை விட்டு வெளியேறினர் என்பது வரலாறு. இதன் ஐதிகமாக நான்கு பெரிய மரங்கள் இத்திருக்கோயிலுள் தலமரங்களாக அமைந்துள்ளன. பனைமரத்தின் வடிவம் பொறிக்கப்பட்ட மிகப்பெரிய கல் சிற்பம் இக்கோயிலில் அமைந்துள்ளது.திருப்பனந்தாளில் அம்பிகை பனைமரத்தடியில் தவம் இயற்றினார். திருவலம்புரம் தலத்தில் ரிஷிகளுக்காகப் பனை மரத்தடியில் இறைவன் திருமணக் காட்சிதந்தார். திருப்பனங்காடு தல பனைமரத்தில் அகத்தியர் தவம் செய்தார். திருக்குறுங்குடியில் வேதங்கள் பனைமரமாகி நின்றன. திருப்பனையூரில் பனைமரம் கரிகால் சோழனுக்கு நிழல் தந்ததாகவும் வரலாறு கூறுகிறது. .சிவனுக்குக் குடைபிடிக்கும் புஷ்பதந்தன் என்பவன் சிவனுடைய ஆணைப்படி பூமிக்கு வந்து திருவரங்குளம் தலத்தில் பொற்பனையாக இருந்தான். அம்மரத்துக் காய்களை வேடன் ஒருவன் எடுத்துச் சென்று விற்க, அதை பெண் ஒருத்தி வாங்கி உண்டுவந்தாள். அவளுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அளவற்ற அறிவும், அழகும் கொண்ட அப்பெண்குழந்தை மணப்பருவம் அமைத்து, ஒருநாள் இத்திருக்குளத்தில் மூழ்கி எழ, சிவபெருமான் அவளை அணைத்துக் கொண்டு எழுந்தார். இருவரும் திருமணக் கோலத்தில் காட்சிதர, அனைவரும் வணங்கி மகிழ்ந்தனர். இதனைக் குறிக்கும் ஐதிக விழா ஆடிப்பூரத்திற்கு முன்னாளில் இத்தலத்தில் நடத்தப்படுகிறது. விரிஞ்சிபுரத்தில் பாலாற்றின் ஓரம் பொற்பனையீசர் ஆலயம் உள்ளது. இங்குள்ள பனைமரத்தில் அன்னை தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. திருவோத்தூரில் பனை மரம் சிவசக்தி வடிவமாக விளங்குவதாக ஓத்தூர் புராணம் கூறுகிறது.மருத்துவம் : ஓலை, மட்டை, குருத்து, பாளை, பூ, கிழங்கு, நுங்கு, பனை வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பதநீர் என அனைத்துமே மருத்துவக் குணம் மிக்கவையாகும். இதனாலேயே இம்மரம் பூலோக கற்பகத்தரு எனப் போற்றப்படுகிறது. பனையபுரம் (புறவார்ப்பனங்காட்டூர்), திருப்பனங்காடு ஆகியவை பனை மரத்தின் பெயரைக் கொண்ட தலங்களாகவும், பனங்காட்டீசன்(பனை), தாலபுரீஸ்வரர் (தாலம் -பனை) ஆகிய இறைவனின் திருநாமங்கள் பனை மரத்தின்அடிப்பட்டையிலும், வழங்கப்படுகின்றன. திருப்பனங்காட்டு தலத்தில் தலமரச்சிற்பம் தூணில் இடம் பெற்றுள்ளது.தாடகை : தாடகை என்பது பனையின் வகைகளில் ஒன்று. இதில் தெய்வீகத் தன்மையைக் கொண்டு பெண்களுக்கும் இப்பெயர் சூட்டப்பட்டது. குமரி மாவட்டத்தில் இவ்வகை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. இலை அதிகம் உள்ள மலை, தாடகை மலை என வழங்கப்படுகிறது. இம்மலையில் பிறந்து வளர்ந்த அசுரப் பெண்ணே தாடகை ஆவாள். இராவணனின் தங்கையாக இவள் இராமன் மீது மோகங்கொண்டு லக்ஷ்மணனிடம் அவமானப்பட்டதாக இராமாயணம் கூறுகிறது..இங்கு நாம் சிவபக்தியான தாடகையைப் பற்றிப் பார்ப்போம். திருப்பனந்தாளில் உள்ளசிவபெருமானுக்கு நாள்தோறும் சிவபூஜை செய்துவந்தாள் தாடகை. ஒருநாள் சிவலிங்கத்திற்கு மாலை அணிவிக்க எழுந்த போது, மேலாடை நழுவியது. மாலையைக் கீழே வைக்க விரும்பாத அவளிடம், தன் தலையை வளைத்து இறைவன், மாலையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் தான் பூஜிக்கும் போது, பதினாறு உபசாரங்களை ஒருசேர செய்ய பதினாறு கரங்களைத் தந்தருள வேண்டினாள். அதன்படியே வரமளித்தார் இறைவன். அவளுடைய பகுதியை உலகறியச் செய்ய தலை நிமிராமலேயே இருந்தார். அதன்பின் குங்கிலிய நாயனார் வேண்டுதலின் பேரில் தலையை நிமிர்த்தினார் என தலபுராணம் கூறுகிறது. தாடகை பதினாறு கரங்களுடன் வழிபடும் காட்சி, மகாமண்டபத்தின் விதானத்தில் ஓவியமாகவும், தென்புறத்தில் சுதைச் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.(தலவிருட்சம் வளரும்)-பனையபுரம் அதியமான்