தியானம் என்பது கண்களை மூடிக்கொண்டு ஏதோவொன்றை நினைத்துக் கொண்டிருப்பது அல்ல. அது தற்போதம் நிகழாது, தியானிப்போன் தியானிக்கப்படும் சிவமாகவே ஆதல் என்பதாகும். தியானத்தில் அமரவேண்டுமெனில் முதலில் நமக்குத் தியானத்தானம் தெரிய வேண்டும். அது என்னவென்று தெரியாமல் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஏதோவொரு மந்திரங்களை முணுமுணுத்துச் செய்வதெல்லாம் யோகம், தவம், நிஷ்டை, தியானம் ஆகாது. தியானத்திற்கு இணையான தமிழ்ச் சொல் கவனம் என்பதாகும். சுய கவனிப்பே உண்மையான யோக ஞான நெறியாகும். எப்போதும் வெளியே பாய்ந்து கொண்டிருக்கும் சுவாசத்தை, நினைவை மடைமாற்றி உள்ளே திருப்புகையில், கவனம் உள்முகமாக அவை தம் மூலஸ்தானம் சென்றடையும் யோகப் பயிற்சியே தியானம் ஆகும். "மூலமதை அறிந்தக்கால் யோகமாச்சு." - அகத்தியர் ஞானம்- பாடல் எண் 2:5 சூரிய, சந்திர, அக்கினி கலைகளை (அகர, உகர, மகரம்) புருவ மத்தியாகிய நெற்றிக்கண் எனப்படும் லலாட ஸ்தானத்தில் நிலைநிறுத்தி, சோதி சொரூபமான இறைவனை பிரத்தியட்சமாக நேருக்கு நேர் தரிசிப்பதற்கான பயிற்சியே தியானம் என்பதாகும். "பாரப்பா இடதுகண் அகாரஞ் சந்திரன்பதிவான வலதுகண் உகாரஞ் சூரியன்நேரப்பா சுழிமுனைதான் மகாரம் அக்கினிநினைவாக இப்படியே தியானஞ் செய்துகூரப்பா செபிக்கிரதேவி மந்திரங் கேளுநினைவாக இப்படியே தியானஞ் செய்துதேரப்பா இப்படியே தியானம் பண்ணசிவசிவா இகபரமும் முத்தி யாச்சே." - அகத்தியரின் வாத சௌமியம் 1200:454 மூச்சும் மனமும் லயமாவது தான் தியானம்.தன்னுள்ளே இருக்கும் தியான தானம் இன்னதெனத் தெரிந்து நினைவை அதனுள் நிலைக்கச் செய்வதே தியானம். வடலூர் வள்ளற்பெருமானார், திருவருட்பா ஆறாவது திருமுறை - வசன பாகத்தில் தியானம் குறித்துக் கூறுகிறார். "தியானம் செய்ய வேண்டுமானால், ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்க வேண்டும். நிஷ்களமாயிருக்கப்படாது. உருவமாக இருக்கவேண்டும். அருவமாகத் தியானிக்கப்படாது. பின் உருவங் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்வைதம் தானே ஆகும்." தியானம் இருவகைப்படும்.ஆரம்பத்தில் சகுணத் தியானம்.மூர்த்தியை - குருவைத் தியானித்தல்.குருவுரு என்பது தொடக்கத்தில் அவர்களின் தூலத் திருமேனி - பின்னர் அவர்களின் அறிவுத் திருமேனியைச் சிந்தித்தல். நிர்க்குணத் தியானம் என்பது சோதிமயமான ஆன்மாவைத் தியானித்தல். ஒரு வெறிபிடித்த முரட்டுக் காட்டுக் குதிரை போன்றது நம் மனம். அதைப் பிடித்து வந்து ஓரிடத்தில் கட்டி வைத்தால் பிராணன், மனம் இவை தம் போக்கில் ஓட மாட்டாது. அதற்கான யோக நெறி முயற்சியே தியானம் ஆகும். "கட்டுக்கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென் மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே"....... - திருவருட்பா ஆறாம் திருமுறை பா.எ.4871 "கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்து..." என்கிறார் வள்ளற் பெருமானார்..மனப்பரியைக் கட்டுமிடம் பரம ரகசியம். வாழையடி வாழையாக வரும் பிரம்ம நிஷ்டர்களால் மட்டுமே அந்தக் "கட்டும் இடம்" உபதேசிக்கப்படுகிறது. அந்த இடம் தான் சுழிமுனை. நம் சித்தர் முத்தர்கள் பாடல்களிலும், வேத உபநிடதங்களிலும் பயின்று வரும் சுழிமுனை எனும் பரிபாஷை சொல் மிகவும் முக்கியமான மறைமொழி சொல்லாட்சியாகும். நம் தேகாலயத்தினுள்ளே தேவ ரகசியங்கள் எல்லாம் வைத்துப் பூட்டப் பெற்ற இடம் சுழிமுனை ஆகும். இதுவே இறைவன் உறையும் திருத்தலமும் ஆகும். இந்தத் தேகாலயத்தில் 72000 நாடிகள் உள்ளன. அவற்றுள் பத்து (தச) நாடிகள் கவனிக்கத் தக்கவை. இந்த பத்து நாடிகளிலும் மேன்மை வாய்ந்தவை மூன்றே.அவை இடகலை, பிங்கலை, சுழிமுனை என்பன. இம்மூன்றிலும் யோகப் பயிற்சிக்கும், யோகத்தில் யோகம் என்று சிறப்பிக்கப் பெறும் தியானத்திற்கும் மிகவும் துணையாவது சுழிமுனை நாடியாகும். இதற்குப் பிரம்ம நாடி என்ற பெயரும் உண்டு. இந்த நாடி புருவ மத்தியில் வந்து நிற்கும் இயல்புடையது. புறத்தே இருகண்களும், அகப்புறமாயுள்ள பிராண வாயுவும், அகத்ததாகிய சுழிமுனை நாடியும் சரியாக - பரிசுத்தமாக இருந்துவிடின் சிந்தை சிவத்திடம் ஒடுங்கிப் போகும்.தியானத் தானம் என்பது புருவ நடுத்தானம் எனும் சுழிமுனையேயாகும். "மதிரவியும் பூரணமும் கண்வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசம் எட்டும் பதியுமிடம் சுழினை என்றதற்குப் பேராம் பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே." - அகத்தியர் ஞானம் 4:13 ஆகவே ஒரு சற்குரு பெருமான் வாய்க்கும் பேறு பெற்று, சுழிமுனை என்ற பூட்டை அவர்கள் திறந்து காட்டிக் காணும் பேறு பெற்றால், எல்லாம் பட்டப் பகல் போல் தெரியும்."கொண்ட சுழிமுனைப் பூட்டு திறந்து காட்டி."...... - மெய்வழி ஆண்டவர்கள் "சுழிமுனை (யோகிகளின் பாதை) வழியாகச் செல்பவர்களே ஆன்மாவை அடைவர். அதை அறிந்து கொள்ள குருவை நாட வேண்டும்" என்கிறார் சுவாமி விவேகானந்தர்.." வழிபடு மெய்ஞ்ஞானம் வாய்க்கும் வழிகேளாய் சுழினையெனும் அவ்விடங் கருத்தும் - வைக்குஞ் சாதகத்தில் ஆண்டொன்று தப்பாமற் சாதிக்கிற் பேதகம் ஒன்றில்லைப் பிடி." - அகத்தியரின் மதி வெண்பா 100:85 "அறிவான சுழிமுனையில் மனத்தை வைத்து அசையாமல் ஒருமையாய்க் காக்கும் போது குறியான சிவயோகம் சித்தி யாச்சு கோடிஜன்மம் சித்தரைப்போல் வாழலாமே." - அகத்தியரின் வாதசௌமியம் -1200 "கோடு தப்பாமற் சுழிமுனை மேவிக் குறித்திரு கண்ணது மேவுங் கும்பியும் வாசி ஒளியது வீசும் குறிப்பதாம் ஒளியினிற் கூடிக் கூடுமே இதுதான் மகராஜ யோகம்." - புலத்தியர் கற்பம் 300 :101 "அட்டாங்க யோகத்திற் காதாரம் அபிராமி தொட்டாங்கு நின்ற துரியாதீதச் சுழினைதனில் பட்டார்க்குக் கிட்டும் பரமபதம்; பாதகர்க்குச் கிட்டாது கிருபையின் குருவழி கேளண்டே." - திருவள்ளுவ நாயனார் பஞ்சரத்தினம் 500:195 "சுழிமுனையைத் திறந்தக்கால் மனம் ஒடுங்கும்." - போகர் 7000 முதற்காண்டம் பா.எண்: 22 "சோதியென்ற சுழிமுனையைத் தியானஞ் செய்து"...... - காகபுசுண்டர் பெருநூல் காவியம் - 1000:1 "வாடாத தீபமதில் ஒடுங்க வேணும்"... - சுப்பிரமணியர்ஞானம்-500:269வாடாத - அணையாத தீபம் என்பது எது?"ஆதி என்ற தீபமடா ஆத்துமா வாகும்." - அகத்தியரின் வாத சௌமியம் 1200:1041 நமது தேகாலயத்தினுள்ளே ஒரு நூற்றாண்டு காலம், அணையாத - வாடாத கற்பூர தீபமொன்று ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. "கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக் கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே"என்கிறார் வள்ளற் பெருமானார். அந்த சோதி மயமான - வாடாத தீபமாகிய - அதாவது சிற்சபையின்கண் மனத்தைச் செலுத்துவது தவிர மற்றெந்த வகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து சுழிமுனையாகிய சிற்சபையில் - ஆன்மாவில் நிலைநிறுத்தலே தியானமாகும். ஒரு பிரம்ம நிஷ்டர் சற்குருபிரானாக வாய்த்து, அவர்களிடத்தே பன்னிரண்டு ஆண்டுகள் குருகுல வாசமாயிருந்து, அவர்களுடைய திருவாய்மொழி - அமுத மொழியாகிய பிரணவ நாதத்தை செவி வாயாக, நெஞ்சம் கலனாக யிருத்திப் பருகினால், சுவாசம் உள்ளடங்கி மனோலயமாக, அங்ஙனம் பழகுபவர்களுக்கு தியானம், நிஷ்டை, வாசியோகம் என்பதெல்லாம் நிஜமாகவே எளிதாகக் கைவரவாகி விடுகிறது. ஆனால் சித்தம் சுத்தமாக அதாவது சத்துவமாக இருந்தாலொழிய மனம் சோதியில் நிலைத்து நிற்க இயலாது..அதற்காக வேண்டியே அஷ்டாங்க யோகத்தில் இயமம் தொடங்கி பிரத்தியாகாரம் வரை ஐந்து படிநிலைகள் யோகநெறியில் கடைப்பிடித்தொழுக வேண்டிய ஒழுக்க நெறிகளாக எடுத்து வைக்கப் பெற்றுள்ளன. ஞான நெறியில் பயணிக்க விழைவோர்க்கு, உடல் – சுவாசம் - புலன்கள் - மனம் என இவற்றோடு போராடி வெற்றி கொள்ள வேண்டியிருக்கிறது.ஆதலால் தான் முன்னாளில் ஒரு சற்குருபிரானிடம் குருகுல வாசமாகப் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்து யோக ஞானம் பயிலவேண்டும் என்று எடுத்து வைக்கப் பெற்றது. (யோகம் சித்திக்கும்)