கடவுள் மறுப்புக்கொள்கை உடையவர்கள் இந்துசமய அறநிலையத் துறையில் இருக்கிறார்களா?-ஓய்வு பெற்ற கோயில் இணை ஆணையர் எஸ்.ஜெயராமன் பேட்டி(சென்ற இதழ் தொடர்ச்சி) சில அதிகாரிகள் திருப்பணிகள் செய்ய லஞ்சம் கேட்பதாகச் சொல்லுகிறார்களே, நீங்கள் உங்கள் காலத்தில் எப்படிச் சமாளித்தீர்கள்?எனது பணிக்காலத்தில் எவரும் என்னிடம் லஞ்சம் கேட்டதில்லை. லஞ்சம் பெறக்கூடியவர்களால், உத்தரவுகள் தாமதமாகும். மேற்பார்வையாளர்கள் முக்கியமான பணியின்போது வரமாட்டார்கள். அளவீடு செய்துதர தாமதப்படுத்துவார்கள். சிறிய குறைகளையும் பெரிதாக்குவார்கள். ஆனாலும் இறுதியில் உத்தரவுகள் வந்தே தீரும். ஆணையராக திரு.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ். இருந்த காலத்தில் திருப்பணிகளில் கூடுதல் எஸ்டிமேட் போட அனுமதிக்கமாட்டார்கள். எஸ்டிமேட்டிற்குள் ஆலய நிர்வாகமே டெண்டர் விடாமல் இலாகா பூர்வமாக திருப்பணி செய்ய அனுமதிப்பார்கள். அதனால் எவருக்கும் லஞ்சம் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. இதுபோன்ற நிகழ்வுகளில் நிர்வாகிகளுக்கு வேலை கடினம். ஆனாலும் சரியாகச் செய்தோம் என்ற நிம்மதி இருக்கும். எனது பணிக்காலத்தில் அதிக குடமுழுக்கு செய்ததில்லை. திருப்பணி செய்துமுடிப்பதற்குள் பணி மாறுதல் கிடைத்ததுண்டு..அரசியல் கட்சியின் தலையீடு இத்துறையில் இருக்கிறதா?அரசியல் கட்சிகளின் தலையீடு இதர அரசுத் துறைகளில் உள்ளதுபோல் இதில் அதிகம் இருக்காது. அறங்காவலர்களை நியமித்துவிட்டால், அரசியல் தலையீடுக்கு வழிவகுக்காது. திருவிழாக் காலங்களில் சிறப்பு அனுமதி எதிர்பார்ப்பார்கள். மிகச்சிலர் தனக்கு நெருங்கியவர்களிடம் ஒப்பந்த வேலையைத் தருவதற்கு வற்புறுத்துவார்கள். பணியாளர் நியமனத்தின் போது தனது ஆட்களை நியமிக்க வற்புறுத்துவார்கள். இவையெல்லாம் உள்ளூர் அரசியல்வாதிகளின் குடும்ப நபர்கள் கோயிலுக்கு வரும்போது, சிறப்பு வழியில் அனுமதிக்கும்போது சரியாகும். வேறு பெரிய அளவில் அரசியல்வாதிகள் கோயிலில் தலையிட்டு சொத்துகளுக்குக் களங்கமேற்படுத்தமாட்டார்கள். எந்தக் கட்சியாகஇருந்தாலும் அரசியல்வாதிகளால் பெரிய இழப்பு ஏற்படாது.. கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்கள் எல்லாம் இந்து சமய அறநிலையத் துறையில் இருப்பதாகச் சொல்லுவது உண்மையா?கடவுள் மறுப்பாளர்கள் அறநிலையத்துறையில் வேலை பார்க்கிறார்கள் என்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறையில் இந்துக்கள் தவிர பிற மதத்தவர் பணியில் சேரமுடியாது என்கிறது சட்டம். ஒருவர் கடவுள் நம்பிக்கையாளர் என்பதற்கு அந்த நபர்தரும் உறுதி மொழிதான் ஆவணம். கடவுள் நம்பிக்கையாளர் அல்ல என்பதால் எவ்வகையில் இத்துறை பாதிப்படைகிறது? ஆலய சொத்துகள் பொது சொத்துகளாகும். அதனை நிர்வகிக்கவே அறநிலையத்துறை. மற்றபடி கோயில் வழிபாடுகள், திருவிழாக்கள் சட்ட விதிகளின்படி, பழக்க வழக்கங்களின்படி நடைபெறும். இதில் எவரும் குறுக்கிடுவதில்லை. அறநிலையச் சட்டத்திற்கு விரோதமானவர்கள் நியமனமாக இருந்தால் அவர்களைத் தடுக்கும். ஏற்கனவே பணியிலிருந்தால் நீக்கலாம். ஆகவே இந்துக்கள் அல்லாதவர் என்பதோ, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பணியாற்றுகின்றனர் என்பதோ சரியானதல்ல.இப்போது கோயில்களில் உள்ள வங்கி வைப்பு தொகையை கமிஷனர் அலுவலகத்திற்கு மாற்றச் சொல்லி உத்தரவு வந்துள்ளது என்றும்; பெரும் தொகை அனுப்பப்பட்டுள்ளது என்று சொல்லுகிறார்களே?கோயில்களிலுள்ள வைப்புத்தொகையை கமிஷனர் அலுவலகத்துக்குமாற்றச்சொல்கிறார்கள் என்பது சரியானதல்ல. இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் அரசு ஊழியர்கள். ஆனால் அவர்கள் பெறும் ஊதியம் அரசிடமிருந்து வருவதில்லை. ஊழியர்களுக்கானதை அரசுகொடுத்துவிட்டு பிறகு அத்தொகையைத் திரும்பப் பெறும். அத்தொகை திரும்பச் செலுத்தப்படாமல் இருக்கும்போது, அரசு தொடர்ந்து ஊதியம் தந்துகொண்டிருக்கும். அரசு கணக்கில் அறநிலையத்துறை பெயரில் நிலுவையாய் நிற்கும். இந்த நிலுவையை அந்தந்தக் கோயிலுக்கு உண்டானதை அந்தந்த கோயில்கள் தங்களது வைப்புத்தொகையிலிருந்து செலுத்த உத்தரவாகியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. கடனாக Outstanding ஊதியத் தொகையைத் திரும்பப் பெறுகிறது ஆணையர் அலுவலகம்..கமிஷனர் அலுவலகத்தில் தனியாருக்கு ஒரு அலுவலக வசதி செய்து தரப்பட்டு உள்ளதே…..அதன் மூலம் மலர் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே….அது போலச் செய்ய முடியுமா? மலர் தயாரிக்க லட்சக்கணக்கான தொகையை ஒரு குறிப்பிட்ட நபருக்குத் தருவது குறித்து போதுமான விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு, பணிக்காலத்தில் ஏன் ஆதரவு இல்லை?எனது பணிக்காலத்தில் எனக்கு எத்தகைய இடையூறும் ஏற்பட்டதில்லை. பணி மாறுதலில் அவ்வப்போது நகை சரிபார்த்தல் என்ற பதவிக்கு மாற்றுவார்கள். இந்தப் பதவிக்கு மோட்டார் ஊர்தி வசதி இல்லை. இரண்டு மூன்று மாவட்டங்களுக்கு ஒரு பதவி. பேருந்திலோ ரயிலிலோ செல்லவேண்டும். அப்பதவியை பாதிப்பில்லாமல் பார்த்தேன். திரும்ப மாற்றுவார்கள். அவ்வளவுதான். ஆணையர்கள் எல்லோருமே உத்தரவுகளை நிறுத்தியதில்லை. எனக்கு எந்தப் பாதிப்பும் பெரிய அளவில் ஏற்பட்டதில்லை. அறநிலையத்துறை பணிச் சட்டத்தில் உள்ளபடி செய்திடுகிறோம். இதனால் ஆதரவு எவரும் தரவில்லை எனக்கருதவில்லை..இன்றைய அமைச்சரின் செயல்பாடு எப்படி உள்ளது?இன்றைய அமைச்சரின் செயல்பாடு சென்ற மானியக் கோரிக்கையில்,இந்தியா முழுமைக்கும் ஒரே சட்டம் வேண்டும் என்பதில் தெரிந்தது.எல்லோரும் ஒன்றிய அரசு எனக் குறிப்பிட, அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் மட்டும் மைய அரசு என வாசிக்கப்பட்டதில் தெரிந்தது.மற்றபடி இவரது செயல்பாட்டால் கோயில் நிர்வாகம் சீரழியாது. விரைவாக அனைத்துக் கோயில்களுக்கும் அறங்காவலர் குழுவை நியமித்தாலே இவர் நல்ல அமைச்சர் என்பதாகக் கருதலாம். அ.தி.மு.க.வில் கொண்டுவந்த அரசாணை எண் 318யை அமுலுக்குக் கொண்டுவரவேண்டிய சட்டநடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும்.உங்களின் பார்வையில் கோயிலில் எது செய்தால் எல்லாம் சரியாகி விடும்?கோயில் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்த செய்ய வேண்டியவைகள்:*அனைத்துக் கோயில்களுக்கும் அறங்காவலர் குழு நியமிக்கப்பட வேண்டும். இதனால் குறைந்தது 45,000 பட்டியல் இனத்தவர்களும், 45,000 பெண்களும் கோயில் நிர்வாகத்திற்குள் வருவார்கள்.* திருக்கோயில்களின் நிலையான வங்கி இருப்பு, அறநிலையத்துறை சட்டம் வருவதற்கு முன் எவ்வளவு இருந்தது? இன்று அறநிலையத்துறை வந்தபின் எவ்வளவு உள்ளது? என்ற ஒப்பீடு எல்லா பத்திரிகையிலும்விளம்பரமாகவாவது வெளிவர வேண்டும்.*45,000 கோயில்களிலும் பாதுகாப்பான உண்டியல்கள் வைக்கப்பட வேண்டும். அதனைத் திறக்க அறங்காவலர் குழு மட்டும் போதுமானது. முறைகேடு நடக்கும் என்பதாக புகார் வந்தால், துறை ஊழியர்கள் அனுப்பப்படலாம். உண்டியல் மூலம் எளியவர்கூட தனது பங்கினை கோயிலுக்கு அளிக்க முடியும்.*ஆகமத்தில் உள்ளது ஆகமத்தில் உள்ளது என அவ்வப்போதுதெரிவிக்கப்படுகிறது. அதனால் ஆகமத்தை மொழி பெயர்க்கவேண்டும்.* கோயில் பணியாளர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வயது மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யவேண்டும்.* அரசர்கள் கண்காணிப்பில் கோயில் இருந்தது போல் அரசாங்கத்தின் கண்காணிப்பில் கோயில்கள் நிர்வகிக்கப்படவேண்டும்.-மு.வெங்கடேசன்