சித்திரைமாதத்தில்பௌர்ணமி அன்றுகொண்டாடப்படுவது சித்ரா பெளர்ணமி விழாவாகும். இது காலம் காலமாக தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.சிலப்பதிகாரத்தில் சித்ரா பௌர்ணமி அன்று பூம்புகாரில் இந்திரவிழா நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திரன் தன் பாவங்கள் நீங்கப்பெற்ற நாள் சித்ரா பௌர்ணமி என்றும் புராணம் கூறுகிறது.சூரியனின் அஸ்தமனமும் சந்திரனின் உதயமும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் நிகழும் நாள் இது என்பதால்,அந்த முழு நிலவின் எழிலைக்காண கன்னியாகுமரி கடற்கரைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வது வழக்கம்.அன்று பல கோயில்களிலும் இல்லங்களிலும் சித்திரகுப்தன் கதை படித்தும்,கஞ்சிகாய்ச்சி எல்லோருக்கும் வழங்கியும், பொங்கல் வைத்து குரவைக்கூத்தாடி வசந்த விழாவாகவும் நம்முன்னோர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வந்துள்ளனர்.சித்ராபௌர்ணமிகொண்டாட்டங்கள்:சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டூகமகரிஷிக்கு அருள்புரியும் வைபவம் நடக்கிறது. மக்கள் புத்தாடை அணிந்து, குடும்பம் குடும்பமாக வைகை நதிக்கரைகளில் பொங்கல்வைத்தும்,ஒருவர் மேல் ஒருவர் விளையாட்டாக நீர்பீய்ச்சியும்,பெண்கள் புதுச்சரடு மாற்றிக்கொண்டும் ஆனந்தமாக சித்ராபௌர்ணமி விழாவைக்கொண்டாடுவார்கள்.சித்ரா பௌர்ணமி நாளில் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், ‘நடவாவி’ என்னும் கிணற்றுக்குள் எழுந்தருள்வார். ஸ்ரீராமாநுஜருக்கு வரதராஜப்பெருமாள்காட்சி அளித்து அருள்பாலித்த வைபவத்தைக் கொண்டாடும் விதமாக இந்தத்திருவிழா நடந்து வருகிறது..மங்கலதேவி கண்ணகி கோயில், மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்றெல்லாம் அழைக்கப்படும் கோயில் தேனி மாவட்டம், கூடலூர் அருகே தமிழக - கேரள வனப்பகுதியில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயில் கடல் மட்டத்திலிருந்து1337 மீட்டர் உயரத்தில் உள்ளது. கண்ணகிதார் மீகச்சக்தியின் அடையாளமாக,பெண்களின் காவல் தெய்வமாகத் திகழ்கிறாள். பண்டைய தமிழ் இலக்கியத்தின் ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். அதில் குறிப்பிட்டுள்ளபடி மதுரையை எரித்த பிறகு கண்ணகி இப்பகுதியில் உள்ள காடுகளைஅடைந்ததாக நம்பப்படுகிறது. கண்ணகி கோயிலில் சித்ராபௌர்ணமி அன்று நடைபெறும் திருவிழாவின் போது வழிபடப்படும் சிலைகம்பத்திலிருந்து கொண்டு வரப்படுவது வழக்கம். சித்ராபௌர்ணமி கொண்டாட்டங்களுக்காக ஆண்டுக்கு ஒரு முறைமட்டு மே,ஏப்ரல், மேமாதங்களில் பக்தர்களுக்காக இக்கோயில் திறக்கப்படும்.சித்ராபௌர்ணமி நாளில்மலர்கள்,பட்டு போன்றவற்றால் முக்கிய தெய்வமான மங்கலதேவி அலங்கரிக்கப்பட்டு தமிழ்நாடு மற்றும் கேரள பூசாரிகள் நாள் முழுவதும் விசேஷ பூஜைகள் நடத்துகின்றனர்.மங்கலதேவிக்கு பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.அன்று கோயிலுக்கு வரும் பெண்களுக்கு தாலிச்சரடு மற்றும் கண்ணாடி வளையல்கள் வழங்கப்படுகிறது.நாமக்கல் மாவட்டம்,கொல்லிமலையில் அமைந்துள்ள அறப்பளீஸ்வரர்கோயிலில் சித்ராபௌர்ணமி அன்று சித்தர்கள் நீராடிய பொய்கையானது கோயில் தீர்த்தமான சரபேஸ்வரதீர்த்தத்தில் கலப்பதாக ஐதிகம். அன்று கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அக்காலத்தில்,சித்ரா பெளர்ணமியன்று கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெறும் போது சந்தனவாசனையுடன் மழை பொழிந்ததாக இலக்கியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.கையில் எழுத்தாணியும் ஓலைச்சுவடியும் கொண்டு அருள்பாலிப்பவர் சித்ரகுப்தர். பார்வதி தேவி வரைந்த சித்திரத்தில் இருந்து பிறந்தவர் என்பதால்,அவருக்கு சித்ரகுப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. சித்ரா பெளர்ணமிநாளில் சித்ரகுப்தரை வழிபாடு செய்தால்,சிவனருளை நாம்பரி பூரணமாகப் பெறலாம் என்பது நம்பிக்கை..சித்ராபௌர்ணமியின் விசேஷங்களில் ஒன்று சித்ரகுப்தர் வழிபாடாகும். இந்நாள் சித்ரகுப்தரின் அவதார நாளாகக் கருதப்படுகிறது. மனிதர்கள் பூலோகத்தில் செய்யும்பாவ,புண்ணிய கணக்குகளைப்பார்த்துக்கொள்பவர் சித்ரகுப்தர். அவரவர் செய்யும் பக்திக்கேற்ப, பாவபுண்ணியத்திற்கு ஏற்ப கைலாயத்திற்கோ ,வைகுண்டத்திற்கோ அவர்களை சித்ரகுப்தர் அனுப்பி வைப்பார் என்பது நம்பிக்கை. காஞ்சிபுரத்தில் ராஜவீதியில் சித்ரகுப்தருக்கு தனிக்கோயில் இருக்கிறது. இந்தக்கோயில் கைலாசநாதர் கோயிலுக்கும் வைகுண்டப்பெருமாள் கோயிலுக்கும் இடையில் அமைந்திருப்பது விசேஷம். இங்கு சித்ரா பெளர்ணமி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையிலும் சித்ரகுப்தன் சன்னதி உள்ளது.வழிபாடும்பலன்களும்:சித்ராபௌர்ணமி அன்று சித்ரகுப்தரை வணங்கினால் ஞானமும், இறப்பிற்குப் பின்மோட்சமும் எளிதில் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்கள் அன்று சித்ரகுப்தரை வழிபட்டால், விரைவில் மணப்பேறு அமையும் என்றும் கூறப்படுகிறது. சித்ரகுப்தரின் படத்திற்கு முன்பேனா,காகிதம் போன்றவற்றை வைத்து மலர்களால் பூஜித்து வணங்கலாம். நீர்மோர், பானகம் போன்றவற்றைப்படைத்து அனைவருக்கும் வழங்கலாம். சித்ராபௌர்ணமி அன்று சித்ரகுப்தரை வழிபட்டால் நோய் நொடிகள் நீங்கி,நீண்ட ஆயுளும் செல்வமும்,புண்ணியமும் பெறலாம். அன்று இல்லத்தில் உள்ள தெய்வங்களுக்கு மலர்கள் சாற்றி,தீபமேற்றி,சர்க்கரைப்பொங்கல்,பானகம்,நீர்மோர் போன்றவற்றை நிவேதனமாகப்படைத்தும் வழிபடலாம்.இந்த வருடம் 5.5.2023அன்று சித்ராபௌர்ணமி வருகிறது. பூர்வ ஜென்ம கர்மாக்களின்படி நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களில் இருந்து விடுபட சித்ரகுப்தர் வழிபாடு சிறந்தது. இவரை மட்டுமல்லாமல் இந்நாளில் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபாடு செய்வதும் பல மடங்கு நன்மைகளைத்தரும்.