இராமாயணத்தோடு தொடர்பும், வாயுபகவானால் ஏற்படுத்தப்பட்ட பெருமையும், ஈசன் நடத்திய 64 திருவிளையாடல்களில் முக்கியத்துவமிக்கதும், மீனவப்பெண்ணான பார்வதியை மணமுடிப்பதற்காக பயங்கர சுறாமீனை வலைவீசி பிடித்த இடமாகவும் விளங்கும் கடற்கரைத்தலம், இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள மாரியூர்.திருவிளையாடல் புராணத்தில் 57-ஆவது படலமாக வரும் இந்த வலைவீசும் படலத்தில், மீனவர்களுக்குச் சொல்லமுடியாத துன்பங்களைத் தந்துகொண்டிருந்த ஒரு பயங்கர சுறாமீனைப் பிடிப்பவருக்கு தனது மகளான பார்வதிதேவியை மணமுடித்துத் தருவதாக மீனவர் சமுதாயத் தலைவர் மக்களிடையே ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார்..அதன்படி பார்வதிதேவியின் சாபம் முடித்து, அவளை மணமுடிக்க ஒரு மீனவர் வேடம் கொண்டு ஈசன் வலையுடன் கடலுக்குள் சென்று அந்த சுறாமீனைப் பிடித்து அடக்கினார். ஏற்கெனவே பொதுமக்களிடம் அறிவித்தபடி, மீனவர் தலைவன் தனது பெண் பார்வதிதேவியை சுறாமீனை வலைவீசிப் பிடித்து அடக்கிய ஈசனுக்கே மணமுடித்துத் தருகிறார். இதன்மூலம் சுறா வடிவம் பெற்ற நந்திதேவரின் சாபமும் நீங்கியது.இந்தத் திருவிளையாடலையே ஆண்டுதோறும் கடற்கரைத் தலமான மாரியூரில் சித்ரா பௌர்ணமித் திருவிழாவாக பத்து நாட்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் கடலில் வலைவீசும் படலம் நிகழ்ச்சி வரும் 5.5.2023, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கடலில் ஏராளமான படகுகள் சூழ சுவாரஸ்யமாக நடைபெற இருக்கிறது. அதுசமயம் திரளான பக்தர்கள் கடற்கரையில் நின்று இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசிப்பர்..கடலில் சுறாமீனைப் பிடித்த கையோடு காலை 9.30 மணிக்கு பார்வதியை சிவனுக்கு மணமுடித்துக் கொடுக்க மீனவ சமுதாய மக்கள் சீர்வரிசைப் பொருட்களோடு ஊர்வலமாக அருள்மிகு பூவேந்தியநாதர் கோயிலுக்கு மேளதாளத்துடன் வருவார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் இந்நிகழ்ச்சியைக் கண்டு ரசிப்பர். திருக்கல்யாண நிகழ்ச்சியை ஒட்டி அங்கு திரண்டிருக்கும் பக்தர்களுக்கு கல்யாண விருந்தாக காலை முதல் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி, அம்பாள் புறப்பாடாகி திருவீதி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த வலைவீசும் படல நிகழ்வைக் காண மாரியூர் கடற்கரையில் பக்தர்கள் இரவிலேயே வந்து தங்கிவிடுவார்கள்..வழக்கம்போல், இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு 26.4.2023-ஆம் நாள் கொடியேற்றத்துடன் இனிதே துவங்கி பத்து நாட்கள் நடைபெற்று 5.5.2023 ஆம் நாள் முடிவடைய இருக்கிறது.காணக்கிடைக்காத இந்த அரிய நிகழ்வை வாய்ப்புள்ளவர்கள் கண்டு மகிழலாமே!-வடிவேல் முருகன்