உலக மக்களின் கர்ம பலன்களை நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர். மார்க்கண்டேயர் எப்படி பதினாறு வயது சிரஞ்சீவியாகக் கருதப்படுகிறாரோ, அப்படியே இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாக அறியப்படுகிறார்.சித்திரைமாத பௌர்ணமி அன்று சித்ரகுப்தருடைய ஜெயந்தி விழா நாடெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அது போலவே, யமதுவிதியை, பாய்தூஜ் என்று வடமாநிலங்களில் போற்றி வணங்கப்படும் தீபாவளிக்கு அடுத்து வரும் நாளன்று, யமதர்ம ராஜனுக்கும், அவனது கணக்குப் பிள்ளையாக அன்று பதவியேற்ற சித்ர குப்தருக்கும் சேர்த்து விழா எடுக்கப்படுகிறது. ஆண்டில் இருமுறை ஒரு தேவனுக்கு பூஜை நடப்பது சித்ரகுப்த மகாராஜாவுக்கு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.கருடபுராணத்தில் சொல்வது போல், சித்ரகுப்தர் ஒரு தேவாதி தேவர், ராஜாக்களுக்கு எல்லாம் ராஜா, சக்ரவர்த்தி. அவரது எழுத்தாணி எழுதுவதைப் பொறுத்துதான் ஒரு ஆன்மா, நரகத்தில் உழலுமா, சொர்க்கத்து சுக போகத்தில் மூழ்கியிருக்குமா அல்லது மறுபிறவி எடுக்கத் தள்ளப்படுமா என்பது நிர்ணயிக்கப்படும்.யமலோக கணக்குப் பிள்ளைக்குத் தமிழ்நாட்டில் காஞ்சியில் தனிக்கோயிலும், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள ஆதிமூலேஸ்வரர் ஆலயத்தில் தனிச் சன்னதியும் இருக்கின்றன என்பது தெரிந்ததே. ஆனால், சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான சித்ரகுப்தருடைய புராதன ஆலயம், பீகார் தலைநகர் பாட்னாவில் அமைந்துள்ளது என்பது ஆச்சரியமல்லவா?ஆம், பாட்னா பழைய டவுன் பகுதியில் தெற்கு நோக்கிப் பாய்ந்தோடும் கங்கைநதியின் நௌஜர் (சூஃபி துறவி) படித்துறை (தற்போதைய பெயர் சித்ரகுப்தர் படித்துறை) வளாகத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது காயஸ்தர்கள் வழிபடும் சித்ரகுப்த மகராஜின் இரண்டாவது புண்ணியத் தலமான 'ஆதி மந்திர்'. அவர்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் நான்கு புனித தீர்த்த யாத்திரையில் அடங்கியுள்ள மற்ற தலங்கள்; தர்மஹரி ஶ்ரீசித்ரகுப்தர், அயோத்தியா, தர்மராஜர் சித்ரகுப்தர், உஜ்ஜயினி, சித்ரகுப்தர் ஆலயம், காஞ்சிபுரம் ஆகும்..புராண வாயிலாக இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்த்துறையாகும். ராமர், இலக்குவன், ரிஷி விஸ்வாமித்திரர் ஜனகபுரி செல்ல இங்கிருந்துதான் பயணித்தனர். வைசாலியிலிருந்து வந்த புத்தர்பிரான் இவ்வழியேதான் பாடலிபுத்திரம் சென்றாராம். பொது ஆண்டுக்கு முன் நான்காம் நூற்றாண்டில் மகததேசத்தை நந்தவம்ச அரசன் மகாபத்மானந்தா ஆண்டபோது, அவனுக்குப் பிரதம மந்திரியாய் இருந்தவ ரும், பின்பு, சந்திரகுப்த மௌரியனுக்கும் முதன் மந்திரியாக விளங்கியவருமான மகாமாத்ய காத்யாயினி என்கிற முத்ராராக்ஷசனால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் இது. இதற்கு மேலும் பல சிறப்புகளை அளித்தவர், மொகலாயப் பேரரசர் அக்பரின் சபையில் நிதி,வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவரும், நவரத்தினங்களில் ஒருவருமான ராஜாதோடர்மால் ஆவார். பொ.ஆ.1573ல் தீபாவளிப் பண்டிகையின் போது, ஜனக்புரியிலிருந்து (நேபாளம் ) தலைநகர் டில்லி வரும் வழியில், யமதுவிதியை அன்று காயஸ்தர்கள் இக்கோயிலில் வழிபடுவதைக் கண்டு அதில் தானும் பங்கேற்று அகமகிழ்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டே, கருமை நிற எரிமலைக்கல்லைக் கொண்டு, கண்கவர் சித்ரகுப்தர் சிலையை வடிவமைத்து இங்கு பிரதிஷ்டை செய்தார். கோயிலுக்கு நிவேதனமாகப் பல நிலபுலன்களை அளித்துள்ளார்.கங்கை நதியின் வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்க, கோயில் தரைமட்டத்திலிருந்து நன்கு உயர்த்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நான்கு வரிசையாக அமைக்கப்பட்ட பதினாறு கல் தூண்களின் மீது எழுந்துள்ள வட்டவடிவ கருவறைக் கோபுரம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது .அதையொட்டி எழுப்பப்பட்டுள்ள நாற்புறச் சுவர் பிரமிடு போல் மேலேழும்பியுள்ளது. இவ்வித ஆலயக் கட்டடக்கலை மேலும் வியக்க வைக்கிறது..செவ்வகப் பீடத்தின் மீது சப்பணமிட்டு, இடையில் அங்கி அணிந்து, காதுகளில் குண்டலம் தரித்து, மார்பில் சங்கிலி, பதக்கமுடன், தோளில் அங்கவஸ்திரம் அணிந்து, வலதுகரத்தில் எழுத்தாணி, இடக்கையில் ஓலைச் சுவடியுடன் கருமை நிறத்தில் காட்சியளிக்கிறார். உலகளவில் மிகவும் வியந்து பாராட்டப்படும் சிலாவடிவம் அவருடையது. முக உணர்ச்சிபாவங்கள் அப்படியே அச்சுப் பிறழாமல் வெளிப்படுத்தியுள்ளச் சிற்பியின் கைவண்ணத்தைப் பாராட்ட வார்த்தையே இல்லை எனலாம்!ரூபாய் முந்நூறு கோடி பெறுமானமிக்க இச்சிலை, 1950-ஆம் ஆண்டு களவாடப்பட்டு, 57 ஆண்டுகள் கழித்து 2007-ல் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கண்டெடுக்கப்பட்டது. சித்ரகுப்த படித்துறையின் எதிர்க்கரையில் உள்ள சித்ரசேன் கிராமத்தில் செங்கல் சூளை அமைக்கக் குழி தோண்டி மண் எடுக்கும் போது அதே பழைய சிலை எவ்விதச் சேத முமின்றித் தோன்ற, அது மீட்கப்பட்டு, தொல்பொருள்துறை அனுமதியுடன் மறுபடியும் 2009-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றிப் பிராகாரம் அமைந்துள்ளது.இங்கு ஈசன் லிங்கரூபத்தில் சித்ரகுப்தேஷ்வர் என்ற பெயரில், நந்திதேவர், விநாயகர், கார்த்திகேயசுவாமி, அன்னை பார்வதி மற்றும் படமெடுக்கும் நாகதேவதை ஆகியோருடன் அருள்பாலிக்கிறார். மொத்தம் ஏழு தளங்கள் இருக்கின்றன. வெவ்வேறு கடவுளரின் சிலைகள் சிறுசிறு மேடைகளில் முறையே முதல் மாடியில் 15, இரண்டாவதில் 11, மூன்றாவதில் 10 என்ற வரிசையில் நிறுவப்பட்டுள்ளன. மற்றவற்றில் முக்கிய சபாமண்டபமும், திருமணமண்டபமும் அமைந்துள்ளன..சித்ரகுப்தர் பற்றிய விவரங்கள், 'பாட்னா கலம்' என்றழைக்கப்படும் ஓவியங்களாக அங்கங்கே வரையப்பட்டுள்ளன. ஒரு ஓவியத்தில் சித்ரகுப்தர் தனது இரு மனைவியர், ஐராவதி எனும் ஷோபவதி, நந்தினி மற்றும் 12 புத்திரர்களுடன் காட்சியளிக்கிறார். காயஸ்த வகுப்பினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள தேவஸ்தான டிரஸ்ட் கோயிலைப் பராமரிக்கிறது.பொ.ஆ. 1766-ல் மகாராஜா சீதப்தி ராய், இக்கோயிலைச் சுற்றியுள்ள அநேக நிலங்களை மானியமாக வழங்கியுள்ளார். அவரது பேரன் ராஜா பூப்நாராயண் சிங் அவர்களின் பெருமுயற்சியால் தற்போதைய ஆலயம் புனரமைப்பு பெற்றுள்ளது. புராதனச் சின்னமான கோயிலின் கட்டடக்கலைக்குப் பழுது ஏற்படாதவண்ணம் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.நந்தவம்ச ஆட்சி முதல் சமீபகாலம் வரையிலான சரித்திர நிகழ்வுகள், சீன யாத்ரீகர் யுவான் சுவாங் வருகை, நாளந்தா பல்கலைக்கழகம், ஆம்ப்ரபாலி நடனம் முதலியவை ஒலி, ஒளி காட்சிகளாகக் காண்பிக்கப் படுகின்றன. ஹரித்வாரில் உள்ள 'ஹரி கீ பௌரி' போன்று இங்கும் ஆலயத்தைச் சுற்றி, கங்கைக் கரையோரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சித்ர குப்த பூஜையை முறையாகச் செய்தால் உயர் நிலை அடையலாம் என்பது திண்ணம். அதனால்தான் காயஸ்த வகுப்பினர் தங்களது 'நான்கு சித்ரகுப்த ஆலயத் தீர்த்த யாத்திரை'யை வழுவாமல் அனுசரித்து வருகின்றனர்.சித்ரா பௌர்ணமி அடுத்து வரும் துவிதியையிலும், ஐப்பசி அமாவாசைக்குப் பின் வரும் துவிதியையிலும் மிகக் கோலாகலமாகக் 'கணக்குப்பிள்ளை'க்கு விழா நடத்தப்படுகிறது. வெல்லமும், இஞ்சியும் கலந்து (இஞ்சி முரப்பா) பிரசாதமாக அளிக்கிறார்கள்.சித்ரகுப்தரின் அதிதேவதை கேது ஆவார். சித்ரகுப்தரை பூஜிப்பதால் கேது பகவானின் அருள்கிட்டி, வாழ்வில் நல்லவையே நடக்கும் என்பது நம்பிக்கை.எங்கே இருக்கு?பீகார் மாநிலம், பாட்னா பழைய டவுனில் கங்கைக்கரையோரம் சித்ரகுப்தர் படித்துறையில் சித்ரகுப்தர் கோயிலான ஆதிமந்திர் உள்ளது. பஸ்நிலையத்திலிருந்து 1.2 கி.மீ., ரயில் நிலையத்திலிருந்து 2.5 கி.மீ. தரிசன நேரம்காலை 7 – இரவு 9.-பா.கண்ணன்