பக்தி: 25ஆசி: 9மனிதர்களின் வாழ்க்கையில் பலவிதமான பருவங்கள் வந்து செல்கின்றன. குழந்தைப் பருவத்தில் விளையாட்டுதான் பிரதானம். வேறு எதிலும் கவனம் செல்லாது.அடுத்தது இளமைப் பருவம் என்னும் கல்வி கற்கும் தருணம். அது ஏட்டுக்கல்வியோ, தொழிற்கல்வியோ எந்தக் கல்வியாக வேண்டுமானாலும் இருக்கலாம். படித்த கல்வியின் மூலம் தான் சார்ந்து இருக்கும் சமுதாயத்தின் மேன்மைக்கு உதவவேண்டும். மேலும் அக்கல்வியின் மூலம் வருமானம் ஈட்டுவதுடன், அறநெறியில் இருந்து வழுவாமல் வாழ்க்கை நடத்த வேண்டும்.அடுத்தது திருமணப் பந்தம். அது அவரவர்கள் வாழும் பகுதியில் என்ன நடைமுறையோ அதைப் பின்பற்றி நடக்கும். அந்தத் திருமணப் பந்தத்தில் இணையும் தம்பதியர் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டும். மேலும் பெற்றோர்களின் மனம் கோணாதவாறு நடந்து பணிவிடை செய்தல் ஒவ்வொரு கிரகஸ்தனுடைய தலையாயக் கடமை என்று சாஸ்திரம் சொல்லுகிறது..குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர் எல்லாப் பொறுப்புகளில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவது மட்டுமின்றி, நமக்கு அடுத்த தலைமுறையை ஊக்குவிப்பதுதான் சரியான வாழ்க்கை முறையாக இருக்கும். இவை எல்லாமே சொல்லுவதற்கு எளிமையாகத்தான் இருக்கிறது. ஆனால் சொல்லுவதை நடைமுறையில் செயல்படுத்துவது யாருக்கும் சுலபமாக இருந்ததில்லை. மேலும், நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பலவித சவால்களை எதிர்கொள்வதுடன், வீட்டிலும், வெளியிலும் உள்ள பல்வேறு கருத்துகளைக் கொண்ட சக மனிதர்களுடன் வாழ்வு வாழ வேண்டியுள்ளது. பிரச்னைகள் வேண்டாம் என்று நாம் ஒதுக்கினாலும் அவை நம்மை விடுவதில்லை.நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் சக்தி நமது கையில் இல்லை என்று உணர்ந்து கொள்வது மிகவும் அவசியம்.அமைதியாக எதையும் எதிர் கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். தீங்கு செய்பவர்களுக்குத்தான் பலரும் துணையாக வருவார்கள். ஆனால், நல்லதைச் செய்யவேண்டும் எனில் தனியாகத்தான் செய்ய வேண்டியிருக்கின்றது.அதற்காக இனிமேல் தீமைகளையே செய்யப்போகிறேன் என்றும் நினைக்கக் கூடாது.நாம் செய்யும் செயலுக்குப் பாராட்டு, சன்மானம் போன்றவற்றை நமது மனம் எதிர்பார்க்கத் தொடங்கினால், நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். எதையும் பற்று இல்லாமல், எந்தவிதமான பாராட்டும், பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்தால் தான் விமர்சனம் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்குக் கைகூடிவரும். அப்போதுதான் நமது மனம் அமைதியாக இருக்கும். எப்போது மனம் அமைதியாக இருக்கிறதோ அப்போதுதான் நமது சிந்தனையில் ஒரு தெளிவு வரும். எப்போதும் தெளிவாகச் சிந்திக்கும் மனம் இருந்தால் வாழ்க்கை இன்பமயமாக இருக்கும்.இன்பம் என்பதை வெளியில் தேடாமல் நமக்குள்ளிருந்தே அதனைப் பெறுவோம், வாரீர்! பக்தியுடன்ஆசிரியர்