“மௌனம் சர்வார்த்த சாதகம்” என்பது பழமொழி.இது உண்மைதான் என்றாலும், “சரணாகதியே சர்வார்த்த சாதகம்” என்பது நடைமுறை உண்மையாக இருக்கின்றது.சரணாகதி என்பது என்ன?நம்மால் முடியாத ஒரு காரியத்தை இன்னொருவரை நம்பி ஒப்படைப்பதே சரணாகதி.“ஸார், எங்க பையன் எப்படியாவது பரிட்சையிலே நல்ல மார்க் எடுக்கணும். அது உங்க கையிலதான் இருக்குது” என்று டியூஷன் மாஸ்டரிடம் பெற்றோர்கள் கூறுவதும், “டாக்டர், என் மனைவியின் உயிருக்கு நீங்கதான் உத்தரவாதம். உங்களைத்தான் நான் நம்பியிருக்கிறேன்?” என்று ஆபரேஷன் நடக்கின்ற தினத்தன்று டாக்டரின் கையைப் பிடித்துக் கொண்டு கணவர் கண்ணீர் மல்க கெஞ்சுவதும், “ஐயா, என் பொண்ணு கல்யாணத்துக்கு மேற்கொண்டு சில லட்சம் தேவைப்படுது. நீங்கதான் கடன் கொடுத்து உதவணும். எங்கள் குடும்ப மானத்தைக் காப்பாத்துவது உங்க பொறுப்பு” என்று மணப்பெண்ணைப் பெற்ற தந்தை பணக்காரரிடம் வேண்டுவதும்….இவை போன்ற மேலும் எத்தனையோ நிகழ்வுகளும் சரணாகதி என்பதன் வெவ்வேறு வடிவங்களேயாகும்.இவ்வளவு ஏன் –இரு நாடுகளுக்கிடையிலான போர்களிலும், இனக்குழுக்களுக்கு இடையிலான சண்டைகளிலும் இனி உயிரிழப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்ற நிலையை எட்டிய தரப்பினர் சமாதானத்தின் அடையாளமாகிய வெள்ளைக்கொடியை உயர்த்திக் காட்டி உயிர்பிழைப்பதும் சரணாகதியின் இன்னொரு வடிவம்தான்.மேற்கண்ட சரணாகதிகள் அனைத்துமே இவ்வுலகில் பிறந்துள்ள மனிதர்களின் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் அந்தந்த நேரத்திற்கான தேவைகளை சாதித்துக்கொள்வதற்காகச் செய்யப்படுகின்ற சரணாகதிகளாகும். .“எனக்கு ஒரு தேவை இருக்கின்றது. என்னுடைய சொந்த முயற்சியால் அதனை அடைய இயலாது. என் எதிரே நிற்கும் உன்னுடைய அல்லது உங்களுடைய ஒத்துழைப்பினால் மட்டுமே எனது தேவை பூர்த்தியாகும். இவ்விஷயத்தில் நான் உங்களையே நம்பி இருக்கின்றேன். உங்களைத் தவிர வேறு யாரையும் இது விஷயமாக நான் நாடவில்லை” என்ற எல்லா வாக்கியங்களின் சாரமாக “சரணாகதி” என்ற அற்புதமான ஒற்றை வார்த்தை அமைந்திருக்கின்றது.அதே சமயம் ஆன்மிகத்திற்கும் சரணாகதிக்கும் உள்ள தொடர்போ, உலகாயத விஷயங்களைக் காட்டிலும் மிகச் சிறந்ததாகவும், வேண்டிய பலனைத் தருவதாகவும் அமைந்துள்ளது. நம் இந்திய ஆன்மிக மரபில் ஆத்மாவுக்கும், இறைவனுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய சிந்தனைகள் நெடுங்காலத்திற்கும் முன்னதாகவே தொடங்கிவிட்டன.அத்துடன், இந்தப் பிறவிக்கு அப்பால் என்ன நிகழப்போகிறது என்கின்ற கேள்வியும் மனிதர்களின் மனங்களை அரிக்கத் தொடங்கியிருக்கின்றது. வைணவம் அதற்கு ஒரு விளக்கத்தை கொடுத்தது. “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், அது எத்தைத் தின்று எங்கே கிடக்கும்” என்ற மதுரகவியாழ்வாரின் கேள்விக்கு, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று நம்மாழ்வார் பதிலளித்தார். ஜீவாத்மாக்கள் அனைத்தும் தாம் செய்யும் பாவ புண்ணியச் செயல்களுக்கு ஏற்ப தேவலோகத்திற்கோ, நரகலோகத்திற்கோ சென்று இன்ப துன்பங்களை அனுபவித்த பின்பு மீண்டும் இந்தப் பிரபஞ்சத்தின் பல்வேறு உலகங்களில் மனிதனாகவோ, மிருகமாகவோ, புழு பூச்சிகளாகவோ மீண்டும் பிறக்கின்றனஅவ்வாறு கணக்கற்ற பிறவிகளை எடுக்கும் ஜீவாத்மாக்கள் அந்தந்த உடல்களில் இருந்து கொண்டு அவ்வுடல்களை இயக்கியபடியே அந்தந்த உடல்கள் அடையும் அனுபவங்களைத் தாமும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றன என்பதே இதன் எளிய விளக்கமாகும்.இவ்விதம் ஜீவாத்மாக்கள் பிறப்பு இறப்புச் சுழலில் இடையறாது சிக்கித் தவிப்பதை, “புனரபி ஜனனம் புனரபி மரணம்; புனரபி ஜனனீ ஜடரே சயனம்” என்றார் ஸ்ரீஆதிசங்கரபகவத்பாதர் தமது பஜகோவிந்தத்தில்.எல்லாம் சரி. .ஜீவாத்மாக்களின் பிறப்பு – இறப்புக்கும் சரணாகதிக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகின்றதல்லவா?அன்றாட வாழ்வியல் அனுபவங்களில் தாங்க முடியாத துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் தாம் நம்புகின்ற ஒருவரின் உதவியை நாடுவதன் மூலம் அந்தத் துன்பங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர். அதே போன்று – மீண்டும் மீண்டும் பிறப்பதும் இறப்பதுமாக அமைந்துவிட்ட இந்தத் தளையிலிருந்து ஒரேயடியாக விடுதலை பெற வேண்டும், மீண்டும் பிறக்கவே பிறக்காத முக்தி நிலையை அடைய வேண்டும் என்ற அவாவினால் உந்தப் படுகின்ற அனைவரும் அந்தச் சரணாகதியின் மூலமே அதனைச் சாதித்துக் கொள்ள முடியும் என்பதே வைணவம் காட்டும் உயர்ந்த வழி. அந்தச் சரணாகதித் தத்துவத்தையே ஸ்ரீராமாநுஜர் தம் வாழ்நாள் முழுவதும் போதித்து வந்தார்.“செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்” என்று மாணிக்கவாசகரின் திருவுள்ளத்தில் தோன்றிய அலுப்பு நம்மில் சிலருக்காவது தோன்றுவதில் வியப்பு இல்லை அல்லவா?மீண்டும் மீண்டும் பிறப்பதும் இறப்பதுமாக மிகவும் அலுப்பூட்டுகின்ற இந்தச் சுழலில் இருந்து விடுபடுவதற்கு என்னதான் வழி என்ற யோசனை பிறப்பதும் சகஜம்தானே?“பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதவர்” என்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறியதைப் போன்று, இறைவனின் திருவடிகளாகிய தெப்பத்தைப் பிடித்துக் கொண்டு கரையேறுவதே நாம் செய்யக் கூடியது.அவ்வாறு நம்முடைய இரண்டு கைகளாலும் இறைவனின் திருவடிகளை இறுகப் பற்றிக் கொள்ளும்பொழுது அந்தத் திருவடிகளைத் தவிர வேறு எந்த ஒரு விஷயத்திலும் நமக்குப் பிடிப்பு இல்லாமல் போகின்றது. வெளிவிஷயங்களில் காட்டும் பற்றினை விலக்கி இறைவனின் திருவடியின் மீது பற்று வைப்பதே பக்தி என்பதன் வெளிப்பாடு ஆகும்.பக்தியினால் நெஞ்சம் தெளிவு பெறும், புறப்பற்றுகள் அகலும். ஆனால், முக்தி அடைவதற்கு பக்தி மட்டும் போதுமா என்ற கேள்வியும் ஒரு புறம் கிளர்ந்தது..நமது பாரத தேசத்தில் அவதரித்த இறை பக்தர்களுக்கு ஒரு கணக்கே கிடையாது. தென்னகத்தில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், புரந்தரதாஸர், அன்னமாச்சாரியார், வடபுலத்தில் ஸ்ரீகிருஷ்ணசைதன்யர், மீராபாய், துளஸிதாஸர், சூர்தாஸர், கபீர்தாஸர் என்று காலங்கள் தோறும் இறைபக்தர்கள் அவதரித்தபடியே இருக்கின்றார்கள்தான். அவர்கள் அனைவருமே தாங்கள் வழிபட்ட கடவுளைத் தங்களின் பக்தியால் கட்டிப்போட்டு, அந்த பக்தியின் பலனாக முக்தியை அடைந்தவர்கள்தாம்.நம்மில் பலருக்கும் பக்தி இருக்கவே செய்கிறது. ஆனால், பக்தி உள்ளவர்கள் அனைவரும் ஆழ்வார்களாகிவிட முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.இறைபக்தி என்பதன் இறுதி லட்சியம் என்பது மோட்சமாகத்தானே இருக்க முடியும்?மோட்சம் என்பதோ பிறப்பு இறப்பு இல்லாத நிலை. இறைபக்தி செய்வதன் இறுதிப் பலனாக மோட்சம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது இந்தப் பிறவியின் இறுதியிலேயே கிடைக்குமா என்பதுதான் கேள்வி.இறைபக்தி என்பது தைலதாரையைப் போன்று இடைவிடாமல், பிறவிகளைத் தாண்டியும் தொடர வேண்டும். ஏதாவது ஒரு பிறவியில் இறைச்சிந்தனை சற்றே தடைப்பட்டு விட்டால், மீண்டும் அதனைப் பெறுவதற்கு எத்தனை பிறவிகள் தேவைப்படுமோ, யார் கண்டது?ஸ்ரீநாதமுனிகள் என்ற உத்தமமான ஆசாரிய புருஷரின் பேரனாக அவதரித்த ஸ்ரீஆளவந்தார் இளம் வயதில் அரசபோகத்தில் ஆழ்ந்திருந்த பொழுது அவரைத் திருத்திப் பணிகொண்டு மடைமாற்றம் செய்ய ஒரு மணக்கால் நம்பிகள் இருந்தார். நமக்கெல்லாம் அப்படிப்பட்ட பாக்கியம் அமையுமா என்ன? பக்தி என்னும் ராஜபாட்டையிலிருந்து சற்றே திசை பிசகி விலகிச் சென்றாலும் அது நம்மை திக்குத் தெரியாத காட்டில் அல்லவா நிறுத்திவிடுகிறது? அதன் பிறகு முக்தி நிலையை எட்டிப்பிடிக்க எத்தனை பிறவிகள் பிடிக்குமோ, யார் கண்டது?.மேலும், பக்தி செய்வதன் மூலம் புண்ணியங்கள் அதிக அளவில் நம்மை வந்தடைகின்றன. இதன் காரணமாக அடுத்தடுத்து உயர்ந்த பிறவிகளை அடையும் வாய்ப்பும் ஒரு பக்த ஜீவனுக்குக் கிட்டுகின்றது. அப்படி அமையக்கூடிய பிறவியில் கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்புகளில் தன்னிலை மறந்து இறைபக்தியிலிருந்து சிறிது பிசகினாலும், அது மேலும் மேலும் பிறவிச் சுழலில் நம்மைக் கொண்டுபோய்த் தள்ளிவிடும். எப்படிப் பார்த்தாலும், பிறப்பு இறப்பு இரண்டும் இல்லாத முக்தி நிலையை அடைவதற்குப் புண்ணியம், பாவம் ஆகிய இரண்டுமே தடைக் கற்களாக இருக்கின்றன என்பதே நம்முடைய முன்னோர்களின் தீர்மானமாக இருந்தது. அதற்காக, பக்தியோ, புண்ணியச் செயல்களோ செய்யக்கூடாதா என்று கேட்க வேண்டாம். முக்தி அடைய விரும்புபவர்கள், பாவச் செயல்களில் நிச்சயமாக ஈடுபடக் கூடாது. அதே சமயம் பக்திநெறியில் ஈடுபட்டுப் புண்ணியச் செயல்களைச் செய்யத்தான் வேண்டும். ஆனால், அந்தப் புண்ணியச் செயல்களின் பலன்களை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும். அதுவே மோட்சம் அடைவதற்கான வழி. புண்ணியங்களின் பலனையும் அனுபவித்தே தீரவேண்டும் என்று ஆசைப்பட்டால், இந்தப் பிறவிக்குப் பிறகு சிறிது காலம் சுவர்க்கலோகத்தில் சுகபோகங்களை அனுபவித்து விட்டு மீண்டும் ஒரு பிறவியை எடுக்க வேண்டியதுதான். சுவர்க்கத்தில் அனுபவித்தது போக மிச்சம் மீதிப் புண்ணியப் பலன்கள் ஏதேனும் இருந்ததென்றால், இவ்வுலகிலும் ஒரு ராஜ வம்சத்திலோ, பணக்காரக் குடும்பத்திலோ பிறந்து சுகங்களை அனுபவித்துக் கழிக்கலாம். பின்னர் மீண்டும் மரணம். அதன் பிறகு சுவர்க்கத்திலோ நரகத்திலோ வசித்து விட்டு மறுபடியும் பிறவி எடுக்க வேண்டியதுதான்.புனரபி ஜனனம்….புனரபி மரணம்….இந்தச் சுழலில் இருந்து தப்பிக்க என்னதான் வழி.யோசித்துப் பார்த்த நம் ஆசாரிய புருஷர்களுக்குப் புலப்பட்டதே சரணாகதி..இது கலியுகம். தர்மத்தின் நெறியில் மக்கள் செல்லுவது சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே செல்வதே கலியின் லட்சணம்.பஞ்சாங்கங்களில் கலிலட்சண பலன் என்று அச்சிட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். “வழக்கம் போல தேவதா பக்திக் குறைவும், சாது ஜன தூஷணையும் இந்த வருஷத்திலும் மிகுந்திருக்கும்”தமிழ் வருஷங்களின் பெயர்கள் மாறினாலும், இந்தக் கலி லட்சண பலன் மட்டும் மாறவே மாறாமல் அச்சிடப்பட்டிருக்கும்.இந்தக் கலியுகம் பிறந்து ஐயாயிரம் வருடங்களுக்கும் மேல் ஆகின்றது. கலி முடிவதற்கு இன்னும் நான்கு லட்சம் வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும். கி.பி. 2023-ஆம் வருடத்திற்குள்ளாகவே எல்லாவிதமான அக்கிரமங்களையும் நாம் பார்த்தாகிவிட்டது. அவரவர் பிறவி முடிவதற்குள் இன்னும் பார்க்கவேண்டியது எவ்வளவோ இருக்கின்றது.கலியுகத்தில் பக்தி இல்லாமல் இல்லை. ஆனால், பெரும்பான்மையோரிடத்தில் அது பண்டம் மாற்று வியாபாரத்தின் மறுவடிவமாகவே இருக்கின்றது. அந்த பக்தியும் நீடித்து நிலைப்பதில்லை. வந்து வந்து போகிறது. பக்தி வழியில் செல்லுபவர்கள் தீயவை செய்ய அஞ்ச வேண்டும். ஆனால், எதைச் செய்தாலும் அதற்கு ஒரு பரிகாரத்தினைச் செய்து விட்டால் போதும் என்ற மனோபாவமும் ஒருபுறம் வளர்ந்துவருகின்றது.இப்படிப்பட்டவர்களும் முக்தி அடைவதற்கு வழி உண்டா?உண்டு என்று உறுதியாகத் தெரிவித்தவரே ஸ்ரீராமாநுஜர்..சரணாகதி, மோட்சம் என்பவை மெத்தப் படித்த வித்துவான்களுக்கோ, துறவு மனப்பான்மையில் மூழ்கியவர்களுக்கோ மட்டுமே உரியதல்ல. கல்வியறிவும், செல்வச் செழிப்பும் இல்லாத எளியவர்களுக்கும் அவை எட்டும் தூரத்திலேயே உள்ளன.அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் கை கூப்பி வேண்டிக்கொள்ளலும், அதன் பிறகு நம்பிக்கையுடன் மோட்சத்திற்காகக் காத்திருப்பதும் மட்டுமே. எம்பெருமான் முன்பு நாம் கை கூப்புவதை விடவும் பெரிய வழிபாடு வேறு ஒன்றும் இல்லை என்பது நம் பெரியவர்களின் நம்பிக்கையாகும். ஆகவேதான் அந்தக் கைகூப்பலை “அஞ்சலி” என்ற பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர்.“அஞ்சலி” என்ற வடமொழிச் சொல்லுக்கு “அம் ஜலயதி இதி அஞ்சலி:” என்று பொருள் கூறினர் நம் பெரியோர்கள். பரம்பொருளாகிய ஸ்ரீமந்நாராயணனை “அ” என்ற ஒற்றை எழுத்து குறிக்கின்றது.“அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு”என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியது நினைவுக்கு வருகின்றதல்லவா?“ஓம்” என்ற ப்ரணவ மந்திரத்தை “அ”, “உ”, “ம” என்ற மூன்று அட்சரங்களாகப் பிரித்துக்கூறுவது வழக்கம். அவற்றில் முதல் அட்சரமாகிய “அ” வும் அவ்விதமே பரம்பொருளைக் குறிப்பது.“அ” என்ற அட்சரத்தால் அறியப்படுகின்ற பரம்பொருளாகிய எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனைத் தண்ணீராக உருக வைப்பதாலேயே கைகூப்பி நாம் செய்கின்ற வணக்கத்தை அஞ்சலி என்று அழைக்கின்றனர்.பெருமாளைப் பார்த்து, “என்னைக் காப்பாற்று” என்று நாம் ஒரு முறை கை கூப்பினாலும் அவனுடைய நெஞ்சம் பனிக்கட்டி நீராக உருகுவதைப் போன்று உருகிவிடுகின்றது. அவ்வாறு ஒரே ஒரு முறை கைகூப்பி வேண்டிக்கொண்டால் கூட நம்மைக் காப்பாற்றியே தீருவதாக அவன் சங்கல்பித்துக் கொண்டிருக்கின்றான் என்ற காரணத்தினாலேயே நமது வேலை சுலபமாகி விடுகின்றது.ஸ்ரீமத்ராமாயணம்என்னும்ஆதிகாவியத்தைவைணவம்சரணாகதிசாஸ்திரம்என்றேபோற்றுகின்றது.ராவணன், கும்பகர்ணன் மற்றும் அவர்களைச் சேர்ந்த ராட்சஸர்களின் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தேவர்கள் பெருமாளிடம் முதலில் சரணாகதி அடைகின்றனர்.அதன் பொருட்டு பெருமாள் ஸ்ரீராமபிரானாக அவதாரம் செய்கிறார். கைகேயி கேட்ட வரத்திற்கிணங்க ஸ்ரீராமபிரான் வனவாசம் சென்ற பொழுது அங்கு தவம் செய்யும் முனிவர்கள் அவரிடம் சரணமடைகின்றனர். ராட்சஸர்களின் தொந்தரவிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதாக ஸ்ரீராமபிரான் சபதம் செய்கின்றார்.ஸ்ரீராமபிரான் வனவாசத்தை உடனடியாக முடித்துக்கொண்டு நாடு திரும்ப வேண்டுமென்று அவருடைய தம்பி பரதன் சரணாகதி செய்கிறான். பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்வதாகக் கொடுத்த வாக்கினைத் தாமே மீற முடியாததால், ஸ்ரீராமபிரான் தம்மைவிட உயர்ந்தவையான தமது பாதுகைகளை பரதனிடம் கொடுத்தனுப்புகின்றார். பரதனின் புகழும் பன்மடங்கு உயர்கின்றது.விபீஷண சரணாகதியோ விசேஷமானது. எதிரியின் சகோதரன் என்பது தெரிந்தே விபீஷணனுக்குச் சரணமளித்துத் தன்னுடன் சேர்த்துக் கொள்கின்றார் ஸ்ரீராமபிரான்.இவற்றுள் இரண்டு சரணாகதிகள் மிகவும் விசேஷமானவை.வனவாசத் தொடக்கத்தில் ஸ்ரீராமபிரான் ராட்சஸர்களை அழிப்பதாக முனிவர்களுக்கு அபயம் அளித்தபொழுது சீதாபிராட்டியே ஆட்சேபம் தெரிவிக்கின்றாள்.“ராட்சஸர்கள் யாரும் இதுவரையில் நமக்கு நேரடியாக எவ்விதத் தொந்தரவும் கொடுக்கவில்லை. பிறகு எதற்காக அவர்களை நீங்கள் கொல்ல வேண்டும்?” என்று கேட்கிறாள்.ஸ்ரீராமபிரானோ “என்னைச் சரணமடைந்தவர்களுக்காக நான் எதையும் செய்வேன்!” என்று உறுதியாகக் கூறிவிட்டார். “தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்”என்று பெரியாழ்வார் திருமொழி கூறுவதைப் போலவே, தன்னைச் சரணமடைந்தவர்களைக் காப்பாற்றும் விஷயத்தில் தன் தேவியின் பேச்சையும் மீறி நடக்கத்தயார் என்பதே எம்பெருமானின் நிலைப்பாடாகும்.அதே போன்று, விபீஷணனின் சரணாகதியை ஏற்றுக் கொள்ளும் முன்பு ஆஞ்சநேயரைத் தவிர மற்ற வானர முக்கியஸ்தர்கள் அனைவருமே எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிரியின் தம்பி என்பதால் நம்மை உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பினர். அனைவரின் கருத்துகளையும் கேட்டுக்கொண்ட ஸ்ரீராமபிரான், “சரணம் என்று ஒருவன் என்னை அடைந்து விட்டால் அவனுக்கு அபயம் அளித்தே தீருவேன். அந்த ராவணனே என்னைச் சரணமடைந்தாலும் அவனுக்கு அபயம் அளிப்பேன்” என்று உறுதியாகக் கூறி, விபீஷணனைச் சேர்த்துக் கொண்டார். மேலும் விபீஷணனுடன் வந்த அவனுடைய மந்திரிமார்கள் நால்வருக்கும் (அவர்கள் தனியாகச் சரணாகதி செய்யாவிட்டாலும்) அபயம் அளித்தார். இதையொட்டியே, ஸ்ரீராமாநுஜரும் “ஒரு பாகவதனின் திருவடிகளை அண்டி இருங்கள்” என்ற உபதேசத்தைத் தம் சீடர்களுக்கு அருளினார்.ஸ்ரீராமபிரான் விபீஷணனுடன் வந்த மந்திரிமார்களுக்கு அபயம் அளித்ததைப் போலவே, எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் பக்தராகிய பாகவதர் ஒருவரை அண்டி வாழ்ந்தால் அவருடன் சேர்ந்து நமக்கும் வைகுண்டத்தில் நுழையும் வாய்ப்பு கிடைக்கும் என்பதே அதன் தாத்பரியமாகும்..இறுதியாக –இது இருபத்தோராம் நூற்றாண்டு. இன்ஸ்டண்ட் யுகம்.உணவு மட்டுமல்ல, பக்தியும் மோட்சமும் கூட நமக்கு இன்ஸ்டண்ட் ஆகக் கிடைக்க ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.இந்தக் காலகட்டத்தில் நமது வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதையெல்லாம் மகத்தான ஆசாரியபுருஷராகிய ஸ்ரீராமாநுஜர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கமாக அலசிப் பார்த்திருக்கின்றார். நிற்க நேரமில்லாமல், ஆராய்ந்து பார்க்க அவகாசமில்லாமல் நாமெல்லாம் வாழப்போவதை நம் ஆசாரியர் தீர்க்க தரிசனத்துடன் கணித்திருக்கிறார்.பக்தியின் மூலம் நிச்சயம் மோட்சம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதற்கு மேலதிகமான பொறுமையும், சிந்தனைத் தெளிவும் தேவை. இந்தப் பிறவியின் இறுதியிலேயே மோட்சம் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதமும் இல்லை.மானுட வாழ்வில் எதுவும் நிலையில்லை. இருக்கும் பக்தியே இந்தப் பிறவியின் இறுதி வரையில் நீடிக்குமா என்பதே சந்தேகம்தான்.“இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?” என்ற கேள்வி அநேகமாக நம் ஒவ்வொருக்குமே பொருந்தும்.பிறவி நோய்க்கு மருந்து மோட்சம். அந்த மோட்சமும் இப்பொழுதே, இந்தப் பிறவியின் இறுதியிலேயே கிடைக்க வேண்டும். சரணாகதியே அந்த மோட்சத்திற்கான உபாயம். எது எதற்காகவோ, யார் யார் கால்களையோ பற்றுவதற்கு நாம் தயங்குவதில்லை.மோட்சம் என்ற உச்சபட்சமான நோக்கத்தினை அடைய அந்த எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் திருவடிகளைப் பற்றுவோம் வாருங்கள்.முக்தி நிச்சயம்.இது, ஸ்ரீராமாநுஜர் நமக்குச் செய்தளிக்கும் சத்தியம். “எம்பெருமானார் திருவடிகளே சரணம்! எஸ். ஸ்ரீதுரை