ஒரு குழந்தைக்கு பூணூல் போடுகிற உபநயனம் எந்த வயதிற்குள் நடத்தப்பட வேண்டும்?- த. சத்தியநாராயணன், அயன்புரம்.குழந்தைக்கு உபநயனம் செய்துவைப்பது, அதாவது பூணூல் போடுவதை அந்தக் குழந்தையை வேதம் படிக்க அனுப்புவதாக இருந்தால், ஐந்துவயதில் போடுவது நல்லது. அப்படி இல்லாவிட்டால், ஏழு வயதில் பூணூல் போட்டுவிட்டுவிடவேண்டும். அதைக்கடந்த வயதுகளில் போடுவதெல்லாம் இப்போதைய காலமாற்றத்தால் ஏற்பட்டிருப்பதே தவிர, சாஸ்திரம் சொல்வது ஏழுவயதிற்குள் போட்டுவிட வேண்டும் என்றுதான். ஏனென்றால், மனதில் காமம் புகுவதற்குள் காயத்ரியைப் புகுத்திவிடவேண்டும், அதுவே உத்தமம்..பூஜை அறையில் எரியும் விளக்கை ஆண்கள் அணைக்கக்கூடாது எனக் கூறுகிறார்களே, ஏன்?- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. பூஜை அறையில் எரியும் விளக்கினை ஆண்கள் ஏன் அணைக்கக் கூடாது என்று கேட்டிருக்கிறீர்கள். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களுமே கூட எரியும் விளக்கை அணைக்கக்கூடாது என்றுதான் சாஸ்திரம் சொல்கிறது. விளக்கில் தேவையான அளவு நெய்யோ அல்லது எண்ணெய்யோ ஊற்றி சுவாமி முன் ஏற்றிய பிறகு, சுவாமிக்கு நிவேதனம் செய்யும்போது விளக்குக்கும் நைவேத்தியம் செய்துவிடவேண்டும். அதற்குப் பிறகு அது தானாகவே மலையேறிவிடும். இது நாம் எவ்வளவு நேரம் விளக்கு எரியவேண்டும் என நினைக்கிறோமோ, அதற்கு ஏற்றவகையில் நெய்யோ எண்ணெய்யோ ஊற்றி இப்படி அமைத்துக்கொள்வது. வேறு வழியில்லாத சமயத்தில் மட்டுமே எரியும் தீபத்தை பாலாலோ அல்லது பூவினால் ஒற்றியோ அணைக்கலாமே தவிர, அதையே பழக்கமாகக் கொள்ளக்கூடாது..ஜன்ம சாபல்யம் என்றால் என்ன?- எஸ். மாரிமுத்து, சிட்லபாக்கம்.நாம் இந்த ஜன்மத்தை எடுத்துவிட்டோம். இந்தப் பிறவியில் வாழும்போதே அடுத்தடுத்து ஜன்மாக்கள் இல்லாதபடி, அதாவது மீண்டும் பிறவி எடுத்து உழலாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் செய்வதையே ஜன்ம சாபல்யம் என்பார்கள். அப்படியில்லாமல் செயற்கரிய ஒன்றைச் செய்துவிட்டேன்… எனக்கு மகிழ்ச்சியானதைச் செய்துவிட்டேன்… அதனால் நான் ஜன்ம சாபல்யம் அடைந்துவிட்டேன் என்றெல்லாம் சொல்வது தவறு. அடுத்த பிறவி இல்லாமல் போகும் வண்ணம் இந்தப் பிறவியில் நற்கருமங்களைச் செய்வது, நல்லோர் வழிகாட்டல்களை ஏற்பது இவையெல்லாம்தான் ஜன்ம சாபல்யம் அடையச்செய்யும். இதனை அடைவதற்கு தேவதா உபாசனை என்கிற, தெய்வ வழிபாடே கைகொடுக்கும்..ஆண்கள் திருநீறும், பெண்கள் குங்குமம் மட்டும்தான் அணியவேண்டும் என்ற சாஸ்திரம் உள்ளதா?- எஸ்.நாராயணன், சென்னை.ஆண்கள் விபூதிதான் இட்டுக்கொள்ளவேண்டும், பெண்கள் குங்குமம்தான் இட்டுக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் எந்த சாஸ்திரமும் கிடையாது. யார் வேண்டுமானாலும் இட்டுக்கொள்ளலாம். நெற்றியில் அவரவர் வழக்கப்படியான திருச்சின்னத்தை இட்டுக்கொள்ளவேண்டும் என்பது மட்டுமே அவசியம்..கோயில்களில் உடைக்கப்படும் தேங்காய் அழுகிவிட்டால் அதற்கு பரிகாரம் என்ன செய்யவேண்டும்?- வி.கணேசன், சென்னை. கோயில்களில் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால், அது தெய்வகுற்றமெல்லாம் எதுவும் இல்லை. அதேசமயம், ஒருமுறைக்கு இருமுறை நல்லதாகப் பார்த்து வாங்குவது, கொஞ்சம் விலை அதிகமானாலும் நல்லதை வாங்குவது, அவசரத்தில் வாங்காமல் முன்கூட்டியே வாங்கிவைத்துக்கொள்வது என்று கவனமாக இருந்தால், முடிந்தவரை இதைத் தவிர்க்கலாம். ஆண்டவன் வழிபாட்டில் அலட்சியம் தவிர்த்தாலே, இந்த மாதிரியான மன சங்கடங்களைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம். நாம் பார்த்துப் பார்த்து வாங்கியும் அது அழுகி இருந்ததென்றால், அது நமக்கு மன வருத்தம் தராது. அதைத் தூக்கி எறிந்துவிட்டு, வேறொன்றை வாங்கித் தந்து அர்ச்சனையோ ஆராதனையோ செய்தாலே போதும், அதுவே பரிகாரம். -மோகன் குருஜி