அம்பிகையை பல வடிவங்களில் வழிபடுகிறோம். அவற்றில் அன்னையை ஒன்பது வயதுச்சிறுமியாக, பாலாவாக வழிபடுவது தொன்றுதொட்டு நம் மண்ணில் மரபாக இருந்து வருகிறது. புராண வரலாறுப்படி, மன்மதனை ஈசன் எரித்த சாம்பலில் இருந்து தோன்றியவன் ‘பண்டன்’ எனும் அரக்கன். ஒரு பெண்ணைத் தவிர யாராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றிருந்தான். அந்த மமதையில் தேவர்களுக்கு மிகுந்த இன்னல்களை அளித்தான். தேவர்கள் லலிதா பரமேஸ்வரியை சரணடைந்தனர். இதனால் தேவர்களை ஆபத்திலிருந்து காக்கும் கடமையில் அசுரனுடன் போர் புரிய ஆயத்தமானாள் அம்பிகை. ஒரு கட்டத்தில் தேவியை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அசுரன், வலிமைமிக்க தனது முப்பது மைந்தர்களைப் போருக்கு அனுப்பினான். பண்டாசுரனுக்கு ஈடான அவர்களை அழிக்க, ஸ்ரீலலிதாதேவியின் உடலிலிருந்து ஆவிர்பவித்தாள் அண்டத்தைக் காக்கும் அம்பிகையின் தெய்வ மகளாக ஸ்ரீபாலா. தனது அன்னையிடம் கவசங்களையும், ஆயுதங்களையும் பெற்று பண்டாசுரன் மகன்களோடு போரிட்டு அனைவரையும் கூண்டோடு அழித்து வதம் செய்தாள். தன் அவதார நோக்கம் நிறைவேறிய கையோடு அன்னை லலிதாவோடு அப்படியே ஐக்கியம் ஆகிவிட்டாள். இதனை எடுத்துச் சொல்லும் வைர வரிகள் லலிதா சகஸ்ர நாம ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலதிரிபுரசுந்தரியான அவளை ‘வாலை’ என அழைத்து வணங்கியும், போற்றியும் வந்துள்ளனர் சித்தர்கள். அந்த சக்தி சொரூபமான பாலாவை வணங்கினால் நோய்கள் விலகும். வாழ்க்கையில் குறையிலாது வசதிகள் நம்மை வந்து சேரும்..இப்பேர்ப்பட்ட பூரண சக்தியான திரிபுரசுந்தரிக்கு மதுரை - தூத்துக்குடி நான்குவழிச் சாலையில், பாளையம்பட்டி என்னும் தலத்தில் கிழக்கு நோக்கி ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது. வாகனங்கள் மிகுதியாகச் செல்லும் வழியில் கோயில் உள்ளதால், சற்றே ஓய்வுக்காக இங்கே நிற்பவர்கள்கூட கண் குளிர, அகம் குளிர அம்பாளின் கருணை மிகுந்த எழில் கோலத்தை தரிசித்து மகிழ்கின்றனர். கோயில் வாசலில் கணபதி சன்னதி அமைந்துள்ளது. இவரை வாகன வழிபாடு விநாயகர் என்கின்றனர்.இவருக்கு இடதுபக்கம் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சன்னதியும், சுயம்பு பெருமாள் சன்னதியும் உள்ளன. பிரதான வாசல் சாலக்கோபுர அமைப்பில் உள்ளது. வாசல் தாண்டியதும் கருவறை, அர்த்த மண்டபம் என்ற அமைப்பில் உள்சுற்றுடன் சன்னதிகள் அமைந்துள்ளன. தெற்கே ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனம் உள்ளது. இங்கு ஸ்ரீராமர், லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர் விக்ரகங்கள் உள்ளன.இந்த சன்னதிக்கு வடக்கே மூலவர் ஸ்ரீபாலதிரிபுரசுந்தரி அம்மன் கருவறை உள்ளது. அம்பாள் அமர்ந்த கோலத்தில் சாந்நித்தியமிக்க தெய்வமாக எழுந்தருளியுள்ளாள். கருவறை எதிரே அன்ன வாகனம், பலிபீடம் உள்ளன. கருவறைக்கும், ஸ்ரீராகவேந்திரர் சன்னதிக்கும் நடுவில் சேவார்த்திகள் அம்பாளை ஊஞ்சல் சேவை செய்து மகிழும் வகையில் குடையோடு கூடிய எழிலான ஊஞ்சலில் உற்சவர் அம்பாள் எழுந்தருளியிருக்கிறாள். உள்சுற்றில் காஞ்சி பெரியவரின் சுதைச்சிற்பம் உள்ளது. தினமும் இரு கால பூஜை நடைபெறுகிறது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு விசேஷம். அட்சய திரிதியை முன்னிட்டு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடைபெறும். ஆடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், நவராத்திரி, கார்த்திகை மகாதீபம், தைப்பொங்கல் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. தைமாதம் சுவாதி நட்சத்திர நன்னாளில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. வாழ்வில் பிரச்னை எதுவாயினும் நம்பிக்கையோடு வேண்டி பாலதிரிபுரசுந்தரிக்கு ஊஞ்சல் சேவை செய்து, விசிறியால் வீசி அவள் மனதைக் குளிரச்செய்துவிட்டுவர, உன்னதமான பலன்கள் கிடைக்கிறதாம். அதனால் ஊஞ்சல் சேவையின் மகிமைகளை இப்பகுதி மக்கள் சொல்லிச் சிலாகிக்கின்றனர்..இந்த அம்பாள் பக்தரின் மகன் ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கௌரவமான வேலை, அதற்கேற்ற கைநிறைய சம்பளம் இருந்தாலும், அவர் நினைத்தபடி மகனுக்கு திருப்தியான பெண் அமையவில்லை. ஒருநாள் கோயிலுக்கு வந்து உள்ளம் உருகக் கோரிக்கை வைத்து ஊஞ்சல் சேவை முடித்து நம்பிக்கையோடு வீட்டுக்குத் திரும்பினார். ஒரு வாரம் ஓடிப்போயிருந்தது. இப்போது நடந்ததுதான் நம்பவே முடியாத ஆச்சர்யம்! ஆம். அவரது வீடு தேடி நண்பர் ஒருவர் தன் உறவுக்காரப் பெண்ணின் ஜாதகத்தைக் கொண்டுவந்து அதைப் பரிசீலித்து முடிவு சொல்லுமாறு கொடுத்துவிட்டுப் போனார். ஆண்டுக்கணக்கில் ஊர், ஊராக அலைந்து திரிந்து சரியாக அமையாத பெண் ஜாதகம் அன்றைக்குப் பொருந்தி வந்ததுதான் ஆச்சர்யம். விரைவில் பெண் பார்த்தல் முடிந்து, நிச்சயதார்த்தம், முகூர்த்தம் ஆகியவற்றுக்கும் நாள் குறித்துவிட்டனர். இது ஊஞ்சல் சேவை நடத்தியதும் கைமேல் கிடைத்த பலன். இனிய இல்லறம் ஆரம்பித்து பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை அந்த தம்பதியருக்கு. ஒரு நல்ல நாளில் நம்பிக்கையோடு வந்து அம்பாளை கண்ணீர் மல்க வேண்டி, ஊஞ்சல் சேவை நடத்தி மகிழ்ச்சியோடு வீடு திரும்பினர். அந்த மகிழ்ச்சி நிரந்தரமாய் அவர்கள் வீட்டில் நிலைத்திட மறுமாதமே அவர்கள் எதிர்பார்த்த தாய்மைப்பேறு செய்தி கிடைத்தது. வாழ்வில் நினைத்த காரியம் கைகூட நீங்களும் ஒருமுறை பாலதிரிபுரசுந்தரியின் தரிசனம் கண்டு செல்ல பாளையம்பட்டி வரலாமே!எங்கே இருக்கு?மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில், விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டைக்கு 5 கி.மீ. முன்பாக பாளையம்பட்டி உள்ளது. ஊருக்குக் கிழக்கே பாலதிரிபுரசுந்தரியம்மன் கோயில் அமைந்துள்ளது.தரிசன நேரம்காலை 8 – பகல் 12; மாலை 4.30 – இரவு 7.30.- வெ.கணேசன்