இந்து மதம் இன்று இவ்வளவு சீரும் சிறப்பும் பெற்று இருப்பதற்கு ஆதிசங்கரர் அமைத்துக் கொடுத்த அடித்தளமே காரணமாகும். அவர் நிறுவிய மடங்களும் ஏற்படுத்திய ஆன்மிக வழிபாட்டு நெறிமுறைகளும் இந்து மதத்தை மேம்படுத்தி வருகின்றன. அவரது வாழ்வும் வாக்கும் இந்து மதத்துடன் இரண்டறக் கலந்தது. பல இடங்களுக்குச் சென்று வேதக் கருத்துகளைப் போதித்த ஆதிசங்கரர் வேதபாடசாலை அமைக்கும் பொருட்டு பாரதமெங்கும் யாத்திரை மேற்கொண்டார். நாலா திசைகளிலும் தேடியலைந்து திவ்யமான ஐந்து திருத்தலங்களைக் கண்டறிந்தார். ஆதிசங்கரர் முதலில் வேத மடத்தை நிறுவியது சிருங்கேரியில். அதன்பிறகு அவர் நான்கு தலைமை மடங்களை நிறுவினார். ஆக நம் பாரத தேசத்தில் திசைக்கொரு மடமாக, நான்கு தலைமை மடங்களாக நிறுவி தன் பிரதமச் சீடர்களை அங்கெல்லாம் தலைமைப் பீடாதிபதிகளாக நியமித்தார். இவையெல்லாம் ரிக், யஜூர், சாம, அதர்வண என நான்கு வேதங்கள் கூறும் ‘அத்வைதக்’ கருத்துகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட மடங்களாகும். அவர் நாடெங்கும் நிறுவிய ஐந்து மடங்கள் சிருங்கேரி சாரதா மடம், பூரி கோவர்த்தன மடம், துவாரகா காளிகா மடம், வடக்கே ஜோதிர் மடம், தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் காமகோடி மடம் என்பவையாகும். இவையெல்லாம் ‘பீடம்’ என்று போற்றப்படுவதுடன், தலைமை மடாதிபதிகள் எல்லோரும் ‘பீடாதிபதிகள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்..சிருங்கேரி சாரதா பீடம்: ஆதிசங்கரர் முதன்முதலாக தட்சிணத்தில் (தெற்கில்) கர்நாடகா மாநிலத்தில் உள்ள துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள சிருங்கேரியில் ‘சாரதா பீடம்’ எனும் திருமடத்தை நிறுவினார். இது ‘யஜூர்’ வேதம் சொல்லும் ‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற அத்வைத தத்துவத்தை உணர்த்துகிறது. இதன் தலைமைப் பீடாதிபதியாக விளங்கியவர் சுரேச்சாரியார். இம்மடத்தின் தலைமைப் பீடாதிபதியாய் பொறுப்பேற்பவர்களுக்கு பாரதி, தீர்த்தர், பூரி, கிரி, ஆசிரமர், ஆரண்யர் ஆகிய பட்டங்கள் வழங்கப்படுகின்றன.பூரி கோவர்த்தன பீடம்: இரண்டாவதாக கிழக்கில் பூரியில் ஜகந்நாதம் கோவர்த்தன மடம் நிறுவப்பட்டது. இது ‘ரிக்’ வேதம் சொல்லும் ‘பிரஜ்ஞானம் பிரம்மம்’ என்கிற அத்வைதத் தத்துவத்தை விளக்குகிறது. இம்மடத்தின் தலைமைப் பீடாதிபதியாகத் தன் சீடர் ஹஸ்தாமலகரை நியமித்தார். இம்மடத்தின் பீடாதிபதிகளாகப் பொறுப்பேற்பவர்களுக்கு வனர், ஆரண்யர், மகாமந்திரர் ஆகிய பட்டங்கள் வழங்கப்படுகின்றன.துவாரகா காளிகா பீடம்: அடுத்து மூன்றாவதாக மேற்கில் துவாரகா நகரில் அமைக்கப்பட்டது காளிகா மடம். இது ‘சாம’ வேதம் சொல்கிற ‘தத்வமசி’ என்ற தத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. இதன் தலைமைப் பீடாதிபதியாகத் தனது பிரதமச் சீடரான பத்மபாதரை நியமித்தார். இதன் பீடாதிபதியாகப் பொறுப்பேற்பவர்களுக்கு தீர்த்தர், ஆஸ்ரமர் ஆகிய பட்டங்கள் வழங்கப்படுகின்றன.கைலாயம் – ஜோதிர் பீடம்: நான்காவதாக வடக்கில் ஜோதிர்மடம் நிறுவப்பட்டது. இது கைலாயத்தில் அமைந்துள்ளது. இது, ‘அதர்வண வேதம்’ சொல்லும் ‘அயமாத்மா பிரம்மம்’ என்கிற அத்வைத தத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. இதன் தலைமைப் பீடாதிபதியாக தமது சீடர் தோடகாச்சாரியாரை நியமித்தார் சங்கரர். இந்த மடத்தின் தலைமைப் பீடாதிபதியாகப் பொறுப்பேற்பவர்களுக்கு கிரி, பர்வதர், சாகரர் என்ற பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு நான்கு திசைக்கொரு மண்டலங்களாகப் பிரித்து அவற்றிற்கொரு தலைமை மடங்களை அமைத்து அத்வைதத்தைப் பரப்பினார். கூடவே தன்னுடைய ஒவ்வொரு சீடருக்கும் தன்னுடைய பாஷ்யங்களின் தெளிவான விளக்கவுரையை எழுதும்படி கூறினார். சங்கரரின் நூல்களுக்குத் தெளிவுரை எழுதினார் சுரேசாசாரியார். அதுபோல் சங்கரர் பாஷ்யம் செய்த அனைத்து உபநிடதங்களையும் கற்று அதில் தைத்திரியம், பிருகதாரண்யம் ஆகிய உபநிடதங்களுக்கும் விளக்கம் எழுதினார். சங்கரரின் பிரதம சீடரான பத்மபாதர் சங்கரரின் பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு விரிவான விளக்கம் எழுதினார். இப்படி சிருங்கேரியில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த ஆதிசங்கரர் நால் வேதங்களையும் தன் சீடர்களைக் கொண்டு எளிமையாக்கி மக்களைச் சேரும்படி செய்தார்..காஞ்சி சங்கரமடம் (காமகோடி பீடம்): தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பீடம் இந்து சமய துறவியர் இருப்பிடமாகும். இது காஞ்சி காமகோடி பீடம் என்று அழைக்கப்படுகிறது. ஐந்தாவதாக ஆதிசங்கரர் இந்த மடத்தை நிறுவியதாகக் கூறப்படுகிறது. இந்த மடத்தின் தலைவர்கள் சரஸ்வதி, சங்கராச்சாரியார் என்ற பட்டங்களுடன் விளங்குகின்றனர். காஞ்சியில் வாழ்ந்தபோது ஆதிசங்கரர் அரும்பெரும் செயல் ஒன்றை ஆற்றினார். அக்னி, குபேரன், பிரம்மன், மன்மதன், யமன், வருணன், வாயு போன்ற தேவர்களை வழிபட்டு வந்த மதங்கள் மொத்தம் 72 இருந்தன. ஆதிசங்கரர் அவற்றிலிருந்த வேத விரோதமான ஆசாரங்களை நீக்கினார். இந்து மதத்தின் முக்கிய கிளை மதங்களாகக் கருதப்படுபவை ஆறாகும். அவை சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சௌரம், சாக்தம் என்பனவாகும். அவற்றை நெறிமுறைப்படுத்தி, சிவனை வழிபடுவது சைவம். திருமாலை முக்கியக் கடவுளாகக் கொண்ட சமயம் வைணவம். கணபதியை வழிபடும் மதம் காணாபத்யம். முருகனை வழிபடும் மதம் கௌமாரம். சக்தியை வழிபடும் மதம் சாக்தம். சூரியனை வழிபடும் மதம் சௌரம் என்று சங்கரர் இந்த ஆறு சமயங்களையும் நெறிமுறைப்படுத்தி சீர்திருத்தம் செய்து திருத்தினார். அவற்றைப் பரப்புவதற்கு தம்முடைய சீடர்களை நாடெங்கும் அனுப்பி வைத்தார். இதனால் அவரை ‘ஷண்மத ஸ்தாபகர்’ என்று அழைக்கின்றார்கள். நாடெங்கிலும் உள்ள பிரசித்தி பெற்ற பல ஆலயங்களில் உக்ர வடிவம் கொண்டு வீற்றிருந்த ஏராளமான பெண் தெய்வங்களை உக்ரம் நீக்கி சாந்தமடையப் பல சக்கரங்களையும், யந்திரங்களையும் பதித்து நெறிமுறைப்படுத்தினார். அத்திருத்தலங்களை எல்லாம் மக்கள் வழிபாட்டிற்குரியதாக்கினார் ஆதிசங்கரர். .கைலாயத்தில் ஆதிசங்கரர் சிவபெருமானை தரிசித்தபோது, அவர் தந்தருளிய ஐந்து ஸ்படிக லிங்கங்களை உலக நன்மைக்காகக் கொண்டு வந்து ஐந்து இடங்களில் பிரதிஷ்டை செய்தார். இறைவன் தந்த முக்தி லிங்கத்தை பத்ரிகாசிரமத்திலும், நேபாளம் நீலகண்ட க்ஷேத்திரத்தில் வரலிங்கத்தையும், சிதம்பரத்தில் மோட்ச லிங்கத்தையும், காஞ்சிபுரத்தில் யோகலிங்கத்தையும், சந்திரமௌலீசுவரலிங்கம் மற்றும் ரத்ன கற்ப விநாயகர் வடிவங்களை சிருங்கேரியிலும் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட வைத்தார். உலக நன்மைக்காக இந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களும் தொடர்ந்து இன்றளவும் வழிபாட்டிற்காகப் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன.- டி.எம். இரத்தினவேல்