கும்பகோணம்கருடசேவை விழா அனைத்து வைணவ திருக்கோயில்களிலும் நடைபெறுவது வழக்கம். அவற்றில் காஞ்சிபுரம், திருநாங்கூர், கும்பகோணம் முதலான திருத்தலங்களில் நடைபெறும் கருட சேவை புகழ்பெற்றவையாகும். அந்த வகையில் கோயில் நகரமான கும்பகோணத்தில் நடைபெறும் புகழ்மிக்க திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படுவது, அட்சய திரிதியை அன்று நடைபெறும் 12 கருட சேவை தரிசனம். (இப்போது கூடுதலாக சில கோயில்களும் சேர்ந்துள்ளன) கும்பகோணத்தில் உள்ள பழமையான வைணவக் கோயில்களிலிருந்து கருட வாகனங்களில் உற்சவப் பெருமாள்கள் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் அமைக்கப்படும் பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி, பொதுமக்களுக்கு தரிசனம் தருவார்கள். பொதுவாக இந்த கருட சேவையில், கும்பகோணத்தில் உள்ள கோயில்களான சாரங்கபாணி, சக்கரபாணி, இராமசுவாமி பெருமாள், இராஜகோபாலசுவாமி, ஆதிவராகப் பெருமாள், பாட்ராச்சாரியார் தெரு நவநீதகிருஷ்ணன், காமாட்சி ஜோசியர் தெரு இராமர், கொட்டையூர் நவநீதகிருஷ்ணன், மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், தோப்புத்தெரு இராஜகோபாலன், வேதநாராயணப்பெருமாள், பிரம்மன்கோயில் வரதராஜப்பெருமாள் ஆகிய 12 திருக்கோயில்களின் உற்சவர்கள் கருட வாகனங்களில் எழுந்தருளி நேர் எதிரே பெரிய கடைத்தெரு ஆஞ்சநேயருடன் காட்சியளிப்பார்கள். அதேபோல, பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளியவுடன் நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் மூவரும் எழுந்தருளி மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள்..விதியை மாற்றும் சக்தி திதிக்கு உண்டு என்பார்கள். அந்த திதிகளில் சிறப்பானது அட்சய திரிதியை ஆகும். இந்தத் திதியில் எந்தச் செயலை செய்தாலும் வெற்றி கிட்டும். இது அஷ்ட லட்சுமிகளையும் இல்லத்திற்கு வரவழைக்கும் நாள் என்று புராணம் கூறுகிறது. இவ்வாண்டு அட்சய திரிதியை அன்று கும்பகோணம் வந்து பெரிய கடைத் தெருவில் நடைபெறும் பெருமாள்களின் கருட சேவையைக் கண்டு அருள்பெறுங்கள்!-அ.சுசீலா