‘அன்பில் அவன்’ MOVIE REVIEW : முதல் பாதி ஃபீல் குட்... கிளைமாக்ஸ் TOO MUCH!

அசோக் செல்வன் - ப்ரீத்தி முகுந்தன் ஜோடியின் ஹோம் ஸ்டே கனவை அழகாக சொல்லத் தொடங்கும் ‘அன்பில் அவன்’, திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்போம்.

Oct 6, 2026 - 13:17
‘அன்பில் அவன்’ MOVIE REVIEW : முதல் பாதி ஃபீல் குட்... கிளைமாக்ஸ் TOO MUCH!
Anbil Avan Review

விமர்சனம், அன்பில் அவன்  

ஹீரோ அசோக் செல்வனும் ஹீரோயின் ப்ரீத்தி முகுந்தனும் ஒரு ஹில் ஸ்டேஷனில் ஒரு ஹோம் ஸ்டே பிசினஸ் ஆரம்பிக்க படும் சிரமங்கள் தான் கதை.   அசோக் செல்வனும் மனைவி ப்ரீத்தியும் நட்சத்திர ஓட்டலில் வேலை பார்ப்பது, அங்கு சில அவமானங்களை சந்திப்பது, பின்னர் தங்கள் கனவான ஹோம் ஸ்டே விடுதியை துவங்க நினைப்பது, அதற்காக வங்கியில் கடன் வாங்குவது, நகைகளை விற்பது, நண்பர்களிடம் உதவி கேடபதில் துவங்கி… தம்பதியர்களுக்கு இடையே வரும் செல்லச் சண்டைகள், அவர்களின் லவ் ஃபிளாஷ்பேக் என எல்லாமே ஒரு ஃபீல் குட் படத்தின் அம்சமாக அழகாக இருந்தன.. இருவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.

ரேவதியிடமிருந்து வீட்டை  அசோக் செல்வன்  வாங்கி டெகரேஷன் வேலைகளை ஆரம்பிக்கும் பொழுது அரசு அதிகாரிகளின் கெடுபிடி,  லோக்கல் எம்.எல்.வின் சதி என பிரச்னைகள் துவங்கியதும் கூட ஸ்டார்ட்டப் இளைஞர்களுக்கான ஒரு விழிப்புணர்ச்சியாகத்தான் இருந்தது. 

ஆனால் அந்த ஊர் இன்ஸ்பெக்டர் ப்ரீத்தி முகுந்தனிடம் அத்துமீறியதும்  படம் பாதாளத்தில் விழுந்து விடுகிறது. அதற்குப் பிறகு அந்த வீட்டை ஆட்டையப் போட எம்.எல்.ஏ. செய்யும் அட்டகாசம், அதற்கான அடிதடி , வெட்டு, குத்து, கொலைவெறி தாக்குதல், ஹீரோவின் எதிர்வினைகள் என அசோக் செல்வனை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக காட்ட இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் வலிந்து புகுத்திய அத்தனை வன்முறைகளும் படத்தை கிடத்தி விடுகின்றன. இருபது நிமிட கிளைமாக்ஸ் சண்டை டூ மச்... 

அன்பில் அவன் - வன்முறைக்கு பலியானவன்

(2.5 ஸ்டார்)  (இளையரவி)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow