ரயில் தடம்புரண்டு விபத்து... சக்கரம் கழன்று தடம் புரண்டதாக தகவல்

சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே திடீரென தடம் புரண்டது.

ரயில் தடம்புரண்டு விபத்து...  சக்கரம் கழன்று தடம் புரண்டதாக தகவல்

சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே திடீரென தடம் புரண்டது.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தெற்கு ரயில்வே 4 நாட்களுக்கு முன்பு சிறப்பு ரயில்களை அறிவித்தது.

குறிப்பாக சென்னையில் இருந்து மதுரைக்கு சொந்த ஊர் செல்வோருக்காக சிறப்பு ரயில்கள் விடப்பட்டது. அக்டோபர் 29, 30, நவம்பர் 2ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதனடிப்படையில் சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டுள்ளது. ரயில் என்ஜினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று தடம் புரண்டதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஜாக்கி மூலம் பழுதுகள் சீரமைக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow