டிசம்பர் 4-ல் இருந்து விஜய் மீண்டும் பிரச்சாரம் ? சேலத்தில் இருந்து தொடங்க திட்டம்…
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த த.வெ.க. தலைவர் விஜய். கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக தனது சுற்றுப்பயணத்தை தள்ளிப்போட்டு இருந்தார். இந்த நிலையில் மீண்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.

டிசம்பர் முதல் வாரத்தில், அதாவது 4-ம் தேதி முதல் விஜய் தனது சுற்றுப்பயணத்தை மீண்டும் துவங்க உள்ளதாக தவெக கட்சி தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேலம் மாவட்டத்தில் இருந்து விஜய் தனது பிரசார பயணத்தை தொடங்குவார் எனவும் தெரிகிறது.
விஜய் மீண்டும் பிரசாரம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியாக உள்ள தகவல். தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி பெற அம்மாவட்ட நிர்வாகிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
இந்த முறை சுற்றுப்பயணத்தின் போது எந்த வித அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். இதனால் நிர்வாகிகளுக்கு கடும் உத்தரவுக்களையும் விஜய் பிறப்பித்து இருக்கிறாராம். தண்ணீர், மருத்துவ உதவி உள்பட அனைத்து வசதிகளும் பிரசார பகுதிகளில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என விஜய் தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறாராம்.
What's Your Reaction?