வைரல் ஆகும் பிரதமர் மோடியின் கைக்கடிகாரம்

ஒரு ரூபாய் நாண​யம் முகப்​பில் பொறிக்​கப்​பட்ட கைக்​கடி​காரத்தை பிரதமர் நரேந்​திர மோடி அணிந்​துள்ள வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வருகிறது.

வைரல் ஆகும் பிரதமர் மோடியின் கைக்கடிகாரம்
modi watch

வெற்​றிகர​மான அரசி​யல்​வாதி என்​பதை தாண்டி அற்​புத​மான ஃபேஷன் உணர்​வுக்கு சொந்​தக்​காரர் பிரதமர் மோடி. இதற்கு ஒவ்​வொரு ஆண்டு சுதந்​திர தினத்​தின்​போதும் டெல்லி செங்​கோட்​டை​யில் கொடியேற்​றும்​போது பிரதமர் மோடி அணி​யும் தலைப்​பாகையே சாட்​சி.

அந்த வகை​யில் தற்​போது பிரதமர் மோடி தனது கைகளில் அணிந்​திருக்​கும் கடி​காரம் சமூக வலை​தளங்​களில் பேசுபொருளாகி​யுள்​ளது. அந்த கடி​காரத்​தின் முகப்​பில் மிக​வும் அரிய பழைமை​யான (1947) ஒரு ரூபாய் நாண​யம் பொறிக்கப்பட்டுள்​ளது. மேலும், அந்த நாண​யத்​தின் நடுவே இந்தியா​வின் சுதந்​திர பயணத்தை குறிக்​கும் மற்​றும் நாட்​டின் மேக் இன் இந்​தி​யா' திட்​டத்தை பிர​திபலிக்​கும் வகையி​லான புலியின் உரு​வம் இடம்​பெற்​றுள்​ளது.

சுமார் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை விலை கொண்ட அந்த ரோமன் பாக் பிராண்ட் கைக்​ கடி​காரத்தை ஜெய்​பூரைச் சேர்ந்த நிறு​வனம் தயாரித்​துள்​ளது. இது, 43 மி.மீ அளவுள்ள துருப்பிடிக்காத எஃகி​னால் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த ஒரு ரூபாய் நாண​யம் பிரிட்​டிஷ் ஆட்​சி​யின் கீழ் அச்சிடப்பட்ட கடைசி நாண​யம் என்​ப​தால் அது முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக உள்​ளது. 1946 (இரண்​டாம் பாதி) மற்​றும் 1947-க்கு இடை​யில் மட்​டுமே இந்த ஒரு ரூபாய் நாண​யம் அச்​சிடப்​பட்​டது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow