திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
annamalai temple

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும்.

இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற டிசம்பா் 3-ஆம் தேதி மிக விமர்சையாக நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம்.

இந்த நிலையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயரக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

10 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் கடைசி நாளான டிசம்பர் 3-ஆம் தேதி அதிகாலை அதிகாலை கோவிலில் பரணி தீபமும், மாலை கோவில் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் உச்சியில் பரணி தீபமும் ஏற்றப்படும். இந்த நிகழ்வுகளில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow