உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்றார்
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், சூா்ய காந்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாயின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்றுள்ளார்.
தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை பணி ஓய்வு பெற்றாா். இவரைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா்.
தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சூா்ய காந்த், அடுத்த 15 மாதங்கள் அந்தப் பதவியில் நீடிப்பாா். 2027-ஆம் ஆண்டு, பிப்ரவரி 9-இல் தனது 65 வயது நிறைவில் அவர் ஓய்வு பெறுவார்.
கடந்த 1962-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி ஹரியானாவின் ஹிசார் பகுதியில் சூர்ய காந்த் பிறந்தார். ஹிசாரில் பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பை நிறைவு செய்த அவர் ரோத்தக் மற்றும்குருஷேத்திரா பல்கலைக்கழகத்தில் எல்எல்பி, எல்எல்எம் சட்டப் படிப்புகளை படித்தார்.
ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம், பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கு உள்ளிட்ட பல முக்கியத் தீா்ப்புகளை வழங்கிய அமா்வுகளில் நீதிபதி சூா்ய காந்த் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

