Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61
Kumudam.com, Kumudam Snegiti - விவாத மேடை

Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Kumudam Welcomes U
          Magazine
Kumudam Snegithi
தலையங்கம்
தன்னம்பிக்கை ஸ்பெஷல்
தொடர்கள்
திரைவிமர்சனம்
கேள்வி பதில்
விவாத மேடை
ஆன்மிக தகவல்
சிறுகதை
கவிதை
மற்றவை
 01.03.10    விவாத மேடை

எஸ். விஜயலக்ஷ்மி, சென்னை-88.

பெ: ஒரு கொம்புக்கு புடவை கட்டினாலே ‘ஈ’ என்று பல்லிளிக்கும் ஆண்களுக்கு மத்தியில் ‘என்னைப் பார்; என் அழகைப் பார்’ என பெண்கள் அரைகுறை உடை அணியும்போது எந்த ஆணுக்கும் ‘சபலம்’ தோன்றுவது இயற்கையே. இது வக்கிர மனம் படைத்த ஆண்களின் ‘சபலத்தீக்கு நெய் ஊற்றியது போல்’ ஆகிறது.

முத்துலக்ஷ்மி சங்கரன், சென்னை-20.

பெ: பல பெண் குழந்தைகளின் பெற்றோரே தம் பெண்கள் இறுக்கமான மற்றும்  உடலழகை உரித்துக் காட்டும் ஆடைகளை அணிவதில் ஆர்வம் காட்டுவதுடன் பெருமையும் படுகிறார்களே! இந்த நிலையில் ஆண்களைக் குறை சொல்வது என்பது இரண்டாம் பட்சமாகி விட்டது.

எஸ். மங்கை, குளித்தலை.

பெ:இரண்டு அர்த்தம் சொல்லும் வாசகங்களை மார்பில் அணிந்து, அடுத்தவர் பார்வைக்கு அளிப்பது யார் குற்றம்?இது பாலியல் தொந்தரவுகளை தாம்பூலம் வைத்து அழைப்பதாகாதா?

முத்துலட்சுமிமோகன்தாஸ்,சென்னை-40.

பெ: இப்போதுள்ள உணவு முறையில் கொழுப்புச்சத்து  அதிகம் நிறைந்ததாக இருப்பதால், பத்து வயதுச் சிறுமியின் உடல் அமைப்பே திரட்சியாக காட்சி அளிக்கிறது. அவர்களுக்கு அணிவிக்கும் உடை கூடுதல் (ஸ்லீவ்லெஸ், லோநெக்) கவர்ச்சியான தோற்றத்தை அளிக்கிறது. இதுவே ஆண்களின் வக்கிரப்புத்திக்கு காரணமாகி விடுகிறது.

ரேவதிப்ரியன், ஈரோடு-638 001.

பெ: பாவாடை- தாவணி மறைந்து, புடவைகளும் மறந்து, இப்போது எங்கும் ‘சுடிதார்’ மயம்.  பெண்களுக்கு ஏற்ற சௌகரியமான உடைதான் இது. ஆனால் அதிலும் வல்காரடியானது ஜீன்ஸ், டி.சர்ட், மிடி என்பது போன்ற நாகரீக உடைகள்தான். ஆண்களை மயக்கி, அவர்களை தகாத வழிகளுக்கு ஆளாக்க, இந்த டிரெஸ்கள் ஒரு தூண்டுகோல் என்பதை நினைவில் கொண்டு, பெண்கள் அடக்கமாக உடையணிவதே அவர்களுக்கும் நல்லது.

எஸ். கௌரிலக்ஷ்மி,ஸ்ரீரங்கம்.

ஆ: பாலியல் தொந்தரவோ, வெறும் ஈவ் டீசிங்கோ அதற்கு முழுக் காரணம் ஆண்களின் வக்கிர புத்தியே தவிர வேறெதுவுமில்லை. ஏன் இவ்வளவு உறுதியாக கூறுகிறேனென்றால்,வெளியுலகுக்குத் தெரிந்த பாலியல் தொந்தரவில் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும் பாலானோர் முறையாக உடையுடுத்தி, அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்ட வர்கள்தான். உடைதான் காரணம் என்றால் இவர்களுக்கு ஏன் இந்த நிலை நேர்ந்திருக்கப் போகிறது?

வி. கலைச்செல்வி, தஞ்சாவூர்-1.

பெ: புடவை கட்டினால் லோ நெக் ஜாக்கெட், சுடிதார் போட்டாலோ துப்பட்டாவை ஒழுங்காகப் போடுவதில்லை. இல்லையென்றால் ஜீன்ஸ், டீ ஷர்ட். இப்படி டிரெஸ் பண்ணினால் ஒழுங்காய் இருக்கும் ஆண்கள் கூட சலனப்படத் தான் செய்வார்கள்.

வஸந்தா வேணுகோபால், சென்னை-24.

பெ: அந்தக் காலத்தில் தாவணி அணியும் போதே இடுப்புப் பகுதி கூட வெளியில் தெரியாமல், அடக்கமாக அணிய பெரியவர்கள் வற்புறுத்துவார்கள். ஆனால், தற்காலத்தில் பெரிய வயதுப் பெண்மணிகள்கூட சில சமயம் ‘ரவிக்’ மட்டும் அணிந்து கொண்டு, கைகளின் தோள் பகுதிகளை வெளியில் காட்டியபடி திரிவது எத்தனை வருத்தமாக உள்ளது தெரியுமா? நாம்தானே, நம் குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும்! சிலர் மிக மெல்லிய துப்பட்டாக்களை பயன்படுத்துகின்றனர். அது போடாததும் போடுவதும் ஒன்றாகவே உள்ளது. எனவே, பெண்களும் உடைகளை அடக்கமாக அணிந்து கொண்டால் எந்த உபத்திரவமும் வராது.

சு. கணேஷ்குமார், சென்னை.

ஆ: பெண்கள் அவ்விதம் உடையணிவதால்தான் ஆண்களால் பாலியல் தொல்லைக்குள்ளாகிறார்கள் என்பதெல்லாம் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. இதனை ஒரு ஆணாகிய நானே சொல்கிறேன். பெண்கள் மட்டும்தான் கவர்ச்சியாக உடையணிகிறார்கள் என்றால் ஆண்கள் அப்படி அணிவதில்லையா என்றும் யோசிக்க வேண்டுமல்லவா? ஆண்கள் ஷாட்ஸ், பனியனோடு வலம் வருதல் மட்டுமின்றி மேலே பனியன்கூட போடாமல் திரிவதுண்டு.பெண்களின் அங்கங்கள் ஆண்களுக்கு உணர்ச்சியைத் தூண்டுமெனில், ஆணின் கவர்ச்சிகள் பெண்களின் உணர்ச்சியைத் தூண்டாதா என்ன? பெண் என்பவள் உணர்ச்சியற்ற ஜடமல்லவே. அவளுக்கும் உணர்ச்சிகள் கிளர்ந்தெழத்தான் செய்யும். ஆனாலும் பெண் உணர்ச்சிகளையடக்கி சுய கட்டுப்பாட்டுடன் இருக்கிறாள். ஆண்களைப்போல் சுய கட்டுப்பாடற்று எந்த ஆணையும் கையைப் பிடித்து இழுப்பதோ, கற்பழிப்பதோ இல்லை. வக்கிர எண்ணம்கொண்ட ஆண்கள்தான் பெண்களிடம் பாலியல் தொல்லைகளில் ஈடுபடுகின்றனர். பெண்களைப்போல் சுயகட்டுப்பாட்டோடு இருக்க முடியாத ஆண்கள்தான் பெண்களின் உடையணியும் முறையை குறை கூறி வருகின்றனர்.

எஸ். சரோஜா, ராயப்பேட்டை.

ஆ: இன்று நிறைய பேப்பர்களில் பள்ளிச் சிறுமிகளை பலாத்காரம் செய்த ஆண் ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். பாவம் அந்த பெண் குழந்தைகள் உடல் முழுக்க மூடிய யூனிபார்ம்தானே போட்டு இருந்திருப்பார்கள். வேலியே பயிரை மேய்ந்ததற்கு காரணம் அந்த ஆணின் வக்கிரம்தானே!

ஜி. பிரேமா, தர்மபுரி.

ஆ:சரிகா முதல் ருச்சிகா வரை யாரும் மோசமான உடை அணிந்திருக்கவில்லை. ஜீவஜோதி,  வாசாத்தி சாந்தி வரை யாரும் அலங்கார உடையணியவில்லை.அர்ச்சகர் முதல் ஆளுனர் வரை ஆண்களின் வக்ரபுத்தியாலேயே பாலியல் தொந்தரவுகள் பெருகி வருகின்றன. நொய்டாவில் நடந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளின் மரணம் ஆண்களின் வக்ர புத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு.

 பி. அனிதா, சேலம்.

ஆ: இன்றைக்கு சிறு பிஞ்சுகளாகிய ஐந்தாறு வயது குழந்தைகளைக் கூட விட்டுவைப்பதில்லை ஆண்களின் வக்கிரம். இத்தகைய கயவர்களின் கொடூரம் வெளிநாட்டு பிஞ்சுகளையும் விட்டுவைப்பதில்லை. 9 வயது ரஷ்யச் சிறுமியை கோவா கடற்கரையில் சின்னாபின்னமாக்கிய (அதுவும் தாயின் எதிரே) காமுகனின் வக்கிரம் பூமாதேவியின் சோதனைக்கு உச்சம் என்றால் மிகையல்ல! படித்த மிகப்பெரிய உயரதிகாரிகளும் இப்படிப்பட்ட வக்கிர எண்ணம் படைத்தவர்களாக உள்ளனர் என்பதற்கு ருச்சிகா-ரத்தோர் வழக்கு ஒரு உதாரணம்.

எஸ். விஜயாசீனிவாசன், திருச்சி.

ஆ:பணியிலிருந்த பெண் போலீசையே பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனைப்பற்றி தொலைக்காட்சியிலும், தினசரிகளிலும் பார்த்துள்ளோம். இதன் மூலம் பாலியல் தொந்தரவுக்குக் காரணம் பெண்கள் உடை அணியும் முறையல்ல. ஆண்களின் வக்ரபுத்திதான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எஸ். சசிகலா, சென்னை-90.

பெ: பெண்களின் சிந்தனை, செயல், போக்கு போல் உடையும் மாறிக் (குறைந்து) கொண்டேதான் வருகிறது. புடவைக்கு மாற்றாக சுரிதார், மாக்ஸி என்று ஆரம்பித்து டாப்ஸ்- பாட்டம், மிடி, மைக்ரோ மினி, லோகட் டாப்ஸ், ஸ்லீவ் லெஸ் டாப்ஸ் என்று பரிணமித்துப்போனது. சில பெண்கள் ஜீன்ஸ் அணிந்து செல்வது அவர்களுக்கு அழகு என்று தோன்றினாலும், அதன்  பின் பக்கம் அபாயகரமான எல்லையில் இருப்பதைப் பார்க்கையில் பெண்களுக்கே கூச்சத்தை ஏற்படுத்துகிறதே... ஆண்களுக்கு சொல்லவா வேண்டும்?

புவனம் தர்மரட்னம், லண்டன்.

பெ: இன்றைய பெண்கள் மேல்நாட்டு பாணியில் உடை அணிகிறார்கள். இதில் தவறில்லை. ஆனால், அதிலேயே மற்றவர்கள் கவனத்தை உங்கள் பக்கம் தவறாக திருப்பி விடாதபடிக்கு டிரெஸ் செய்யுங்கள். இதுவே நிறைய பாலியல் தொந்தரவுகளைத் தடுத்துவிடும்.

ம. காயத்ரி அன்னபூரணி, ஈரோடு.

பெ: பெண்களின் பார்வையைக்கூட நிலைகுலைய வைக்கும் நவநாகரிக உடைகள் இன்றைய காலகட்டங்களில் ஃபேஷனாம்! பாதுகாப்பான உடை என்று எண்ணக்கூடிய சுடிதாரில்கூட துப்பட்டா அணியும் முறை கொடுமையிலும் கொடுமை!

செ. கலைவாணி, சென்னை-16.

பெ :பெண்கள், ஆடவர்கள் தன் அழகில் சொக்கி தன் பின்னால் அலைய வேண்டும் என்று தன் உடலுக்குப் பொருந்தாத உடைகளை அணிந்து வருகின்றனர். அந்த கவர்ச்சியாடைகளில் பெண்களைப் பார்க்கும் ஆண்களின் மனம் சபலப்படுகிறது. சபலத்துடன் தினந்தோறும் அவர்களைக் காணக்காண ஒரு நாள் அந்த ஆண்கள் வக்கிரபுத்தி உடையவர்களாக  மாற்றப்படுகிறார்கள்.

சுகந்தாராம், சென்னை.

பெ: வசீகரமான ஆடை அணிதல்தான் வாலிபர்களை பாலியல் தொந்தரவு செய்ய தூண்டுகிறது. புடவை கட்டிய பெண்களிடம் ஆண்கள் பாலியல் தொந்தரவு செய்யவில்லையா? என்று கேட்கலாம். இது எப்படி என்றால், விலை மதிப்புள்ள சாமான்களை வீட்டில் பூட்டி வைக்கிறோம். அப்படியும் சில இடங்களில் திருடு போகிறது. பூட்டிவைத்தாலும் திருட்டு போகிறதே என்று சொல்லி, பொருளை எல்லோர் கண்ணிலும் படும்படி வைத்தல் எவ்வாறு சரி இல்லையோ, அதுபோலதான் இதுவும்.

பிரேமா சாந்தாராம், சென்னை-110.

பெ : உடலை இறுக்கிப் பிடிக்கும் பனியன்கள், டீ-சர்ட்டுகள், அதற்கு ஏற்ற மாதிரி இறுக்கமான ஜீன்ஸ் பேண்டுகள் அணிந்து கொண்டு கல்லூரி முதல் கல்யாண வீடுகள் வரையிலும் செல்கின்றனர். சுடிதார் அணிந்தால் மேல் சட்டையை மிகவும் இறுக்கமாகப் போட்டுக் கொண்டு மார்பை மூட வேண்டிய துண்டுகளை கழுத்தில் போட்டுக் கொண்டு திரிகின்றனர். வயதானவர்களே இவர்களைக் குறும்புப் பார்வையுடன் பார்க்கும்போது வாலிபர்களைக் கேட்க வேண்டுமா?

‘டிரெஸ் கோடு’ மட்டும் காரணம் இல்லை!

- டாக்டர். ஷாலினி


இன்றைக்கு கிரைம் ரேட் அதிகரித்துவிட்டது. அதில் ஒன்றாக செக்ஸுவல் கிரைம் ரேட்டும் அதிகமாகி உள்ளது.

இதற்குக் காரணம், பொதுமக்களுக்குத் தவறு செய்வதற்கு பயமில்லை. எப்போதுமே தண்டனைகள் உடனடியாகவோ அல்லது கண் முன்னால் தரப்பட்டாலோ தான் பயம் அதிகரிக்கும். அப்படியில்லாதபோது பயமறியாத  பொதுமக்கள் தவறுகளைச் செய்ய துணிந்தே இருப்பார்கள். இது மனித இயல்பு. அப்படியே, பெண்கள் ஆடை அணியும் முறைதான் பாலியல் தொந்தரவுகளுக்குக் காரணமென்றால், பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளான குழந்தைகளுக்கும் வயதான பெண்களுக்கும், நம்மிடம் என்ன பதில் இருக்கிறது?

 இதில் பெண்களின் ‘டிரெஸ்ஸை’ குற்றம் சாட்டி புண்ணியமில்லை.

Current Issue
01-05-2012
Previous Issue
16-04-2012
   
Previous Issues
Please give your valuable feedback on this article/programme
( Examples for tamil font
ammaa = அம்மா, kumutham = குமுதம், vaNakkam = வணக்கம், thamiz = தமிழ் )
Tamil font help    தமிழ் English
Click here for sending feedback to a friend
 
<< Back to Homepage
 

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.