Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61 Kumudam.com, Kumudam Reporter - வம்பானந்தா
ஒருவழியாக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து முடிந்துவிட்டதை கவனித்தீர்களா சுவாமி’’ என்றபடி வந்திருந்த மின்னஞ்சல்களை மடிக்கணினியில் படித்துக் கொண்டே சுவாமியிடம் சிஷ்யை கேட்டார்.
‘‘தேர்தலில் ஏதாவது விசேஷம் உண்டா பெண்ணே?’’
‘‘தமிழகம் முழுவதும் மக்களவைத் தொகுதிகள் அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களில் வாசன் ஆதரவாளர்கள் 24 பேரும், ப. சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் ஆறு பேரும், தங்கபாலு கோஷ்டியினர் மூன்று பேரும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் இரண்டு பேரும் வெற்றி பெற்றிருக்கிறார்களாம். மீதமுள்ள நான்கு இடங்களில் அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்குள்ளவர்கள் பதவியைப் பிடித்திருக்கிறார்களாம். இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக யுவராஜா தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கிறார். வாசன் கோஷ்டியைச் சேர்ந்த இவரைக் கடைசி நேரத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோஷ்டியும் சுவாமி.’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம் சுவாமி. இளங்கோவன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை; கடந்த 10-ம் தேதி தனது ஆதரவாளர் களை அவசரமாகத் தொடர்பு கொண்டு யுவராஜாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று உத்தரவிட்டாராம்.’’
‘‘சகோதர யுத்தம் எப்படி இருக்கிறது?’’
‘‘சொல்கிறேன், முதலில் இதைக் கேளுங்கள். தென் மாவட்டங்களில் இயங்கி வரும் தனது ராயல் கேபிள் விஷன் எம்.எஸ்.ஓ. நிறுவனத்தை சென்னை வரை மத்திய அமைச்சர் அழகிரி விரிவுபடுத்துகிறாராம்.’’
‘‘அதுதான் செய்தி பார்த்தேனே!’’
‘‘ஓ.கே. தலைவர் பதவி தொடர்பான சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அழகிரியுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்ததாம். பேச்சுக்கு இடையே, அழகிரியின் மகனிடம் இந்த கேபிள் விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் எம்.எஸ்.ஓ. நடத்தி வரும் அந்த சென்ட்ரல் மினிஸ்டர் ஏதோ வாக்குவாதம் செய்தாராம். அப்போது அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கும் அவருக்கும் மோதல் முற்றியதில், தடித்த வார்த்தைகள் வந்து விழுந்தனவாம். இதில் கோபித்துக் கொண்டு மினிஸ்டர் கிளம்பிவிட, பதவியை ராஜிநாமா செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டு அழகிரியும் கிளம்பிப் போய்விட்டாராம்.’’
‘‘தந்தை என்னதான் சொல்கிறார்?’’
‘‘ராஜிநாமா எப்போது? என்று மனைவியிடம் கேட்டார் எனக் கூறுகிறார்கள்.’’
‘‘ஜெ.வின் நேர்காணல் என்ன ஆச்சு?’’
‘‘நேர்காணலுக்கு வந்து செல்வதில் தொண்டர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம் என்று கருத்து சொல்லப்பட்டதாம். அதை ஏற்றுக் கொண்ட ஜெ., தொண்டர்கள் இடத் துக்கே போய் அவரைச் சந்திக்க இருக்கிறாராம். இதன் மூலம், தொண்டர்களுக்கும், தலைமைக்கும் இடையே நெருக்கம் கூடும் என்று வழங்கப்பட்ட ஆலோசனையையும் கேட்டுக்கொண்டாராம்.’’
‘‘அப்படியென்றால் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணமா?’’
‘‘நெல்லையில் நடந்த கட்சி மாநாட்டுக்குப் பின்புதான் கடந்த முறை மீண்டும் ஆட்சியைப் பிடித்தாராம், ஜெ. சென்டிமெண்டாக நெல்லையில் மாநாடு நடத்தி அங்கேயே தொண்டர்களைச் சந்திக்கவும் ஏற்பாடு நடக்கிறதாம். பிறந்தநாள், வீட்டு விசேஷங்களுக்கு தன்னிடம் வாழ்த்துப் பெற அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருந்தவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கி வருவதோடு, கழக நாளேட்டில் அவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை உடனடியாக பிரசுரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறாராம். உட்கட்சித் தேர்தலில் பதவி கிடைக்காததால் அதிருப்தியானவர்களை அழைத்துப் பேசவும் முடிவு செய்திருக்கிறாராம்.’’
‘‘ஜெ.வின் உதவியாளர் பதவி காலியாகிவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.’’
‘‘உண்மைதான் சுவாமி. முருகனின் திருநாமத்தைக் கொண்ட அந்த உதவியாளர் ஏற்கெனவே ஒருமுறை கொடநாட்டில் இருந்து தலைமறைவு ஆனவராம். அதன்பின்பு சமாதானம் செய்து அவரை அழைத்து வந்தார்களாம். இப்போது அவர் மீது ஏகப்பட்ட மோசடி புகார்கள் கிளம்ப, அவரை தலைமையே வெளியே அனுப்பிவிட்டதாம். தாற்காலிகமாக முன்னாள் உதவியாளரின் உதவியாளர் அந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் நிரந்தரமாக ஒருவரை நியமிக்க ஆள் தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.’’
‘‘சல்மாவின் சமூகலநல வாரியத் தலைவர் பதவிக் காலத்தை முதல்வர் நீட்டிப்பு செய்திருக்கிறாரே?’’
‘‘ஆமாம் சுவாமி. அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சல்மா நாடு திரும்பியதும் முதல்வரைச் சந்தித்தாராம். சல்மாவிடம் ‘என்னம்மா, நாடோடி?’ என விசாரித்த முத ல்வர், அவரது பதவிக் காலத்தை நீட்டிப்பு செய்து அறிவித்திருக்கிறார்.’’
‘‘பி.ஜே.பி. தேசியத் தலைவர் நிதின் கட்காரியின் தமிழக விசிட் பற்றி?’’
‘‘வடசென்னை, ராயபுரம் பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் வீடுகளுக்கு விசிட் அடித்தபோது, நடந்து சென்ற அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் கட்சி நிர்வாகிகள் பின் னாலேயே ஓடிவந்ததுதான் காமெடி.’’
‘‘அதன் தொடக்க விழாவில் சேனலின் நிர்வாக இயக்குநர் சுதீஸிடம், ‘நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகள் உங்கள் சேனலில் ஒளிபரப்பாகுமா’ என்று நிருபர்கள் கே ட்க, நேரடியாக பதில் சொல்லாமல் அந்தக் கேள்வியை அவர் தவிர்த்துவிட்டாராம்.’’
‘‘என்கவுன்ட்டர்கள் நடக்கலாம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறதே?’’
‘‘ஆமாம் சுவாமி. நாட்டு வெடிகுண்டு, அதிநவீன பிஸ்டலுடன் நடமாடும் மேலகுப்பம் சங்கர் என்பவர்தான் கடலூர் போலீஸின் அடுத்த டார்கெட்டாம். ஆயுதங்களுடன் அலைவதால் சுட்டுப் பிடியுங்கள் என்று எஸ்.பி.அஸ்வின் கோட்னிஸ் உத்தரவிட்டுள்ளாராம்.’’
‘‘அப்புறம்?’’
‘‘சட்டமன்றத்தில் மேலவை அமைக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக பா.ம.க. வாக்களித்ததன் மூலம் உறவுக்கான நெருக்கம் அதிகமாகிறதாம்’’ என்றபடி சிஷ்யை புறப்பட, சுவாமி தியானத்தில் ஆழ்ந்தார்.
நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இருவரும் மாறி மாறி புகார்கள் கொடுத்து வரும் நிலையில், இவர்களுடைய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மேலிடம்தான் தலையிட வேண்டும் என்று காவல் துறையினரே புலம்ப ஆரம்பித்துவிட்டார்களாம்.
காஞ்சிபுரம் கானத்தூர் ரெட்டிக்குப்பம் அருகே வடிவேலு என்ற குற்றவாளியைத் தேடி வந்த போலீஸ் அவர் கிடைக்காததால், அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலுவின் சகோதரர் ஸ்ரீதர் என்பவரின் வீட்டுக்குப் போய் இருக்கிறார்கள். வீட்டில் இருந்த ஸ்ரீதரை இரண்டு லத்திகள் உடையும் வரை அடித்துக் காயப்படுத்தியிருக்கிறார்கள். தடுத்த ஸ்ரீதரின் தாய், தங்கை ஆகியோரையும் தாக்கியிருக்கிறார்கள். ஸ்ரீதரை ஜீப்பில் ஏற்றிய போதுதான் தாங்கள் தேடி வந்த வடிவேலுவின் தம்பி ஸ்ரீதர் அவர் இல்லை என்று அந்தக் காவலர்களுக்குத் தெரிந்ததாம். பின்னர், அவரை வீட்டில் விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஸ்ரீதர் சென்னை கமிஜனரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்.
அ.தி.மு.க.வின் பாசறைப் பெண்கள் சிலருக்கு சில்மிஜ சிகிச்சை அளித்தாராம், மருத்துவர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமைக்குப் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லையாம். தலைமைக்கும், தனக்கும் இருக்கும் நெருக்கத்தால் புகார்களைக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பிவிட்டாராம், மருத்துவர்.