|
கற்பை இழந்தால்தான் காம்பியர் ஆகலாம்' - இப்படி ஒரு (புது) மாதிரி பொன்மொழியை உதிர்த்தபடி கல்லூரி மாணவி ஒருவருடன் மன்மத மல்லுக்கட்டு நடத்த முயன்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார். அவருடன் மேலும் மூவர் கைதாகியிருக்கிறார்கள். கைதான நிகழ்ச்சித் தொகுப்பாளர் `மக்கள் தொலைக்காட்சி'யைச் சேர்ந்தவர் என்பதுதான் கொஞ்சம் அதிர வைக்கும் விஷயம்.
தமிழ்க் கலாசாரம், தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸால் நடத்தப்பட்டு வருகிறது மக்கள் தொலைக் காட்சி. அதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை நண்பகலிலும் `வேடிக்கை விளையாட்டு' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் கோபி தேஜா. இவர் சென்னை காசிமேட்டைச் சேர்ந்தவர்.
நிகழ்ச்சி கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் கல்லூரிகளில் படிக்கும் அழகான மாணவிகளை ஸ்டூடியோவுக்கு வரவழைத்து இவர் ஒத்திகை பார்ப்பது வழக்கம். அந்த வரிசையில் பெண்கள் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படிக்கும் சுகந்தியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காம்பியர் ஆக்குகிறேன் என்று ஆசை காட்டி, இவர் நடத்த முயன்ற செக்ஸ் சில்மிஷம்தான் இப்போது லேட்டஸ்ட் பரபரப்பு.
ஆரம்பத்தில்சுகந்தியைமக்கள்டி.வி.அலுவலகத்துக்கே வரவழைத்துப் பேசியிருக்கிறார் கோபி தேஜா. `மேக்அப் டெஸ்ட் எடுக்கணும். அவுட்டோர் ஷூட்டிங் போனால் விஷுவலா நல்லா படம் எடுக்கலாம். ஈ.சி.ஆர். (கிழக்கு கடற்கரைச் சாலை) போகலாமே' என்று வலையை விரித்திருக்கிறார். காம்பியர் ஆகப்போகிறோம் என்ற கலர்கலர் கனவில் இருந்த சுகந்தி, கோபி தேஜா கும்பலோடு கடந்த 8_ம்தேதி, காரில் ஈ.சி.ஆர். ரோட்டுக்குப் பயணித்திருக்கிறார். கார் நேராக சோழிங்க நல்லூரை அடுத்து மெயின் ரோட்டில் இருந்து விலகி ஒதுக்குப்புறமாக இருந்த சென்னை கார்ப்பரேட் கிளப்புக்குள் நுழைந்தபோது மாலை ஆறு மணி.
மேக்கப் டெஸ்ட் எடுக்க அறை எண் 203-க்குப் போகும்படி கோபி தேஜாகூற,அதைநம்பி சுகந்தி அந்த அறைக்குள் நுழைந்திருக்கிறார். மேக்கப் ரூமில் கண்ணாடி, மேக்கப் சாதனங்கள் இருக்கும் என்று நினைத்தவருக்குஅதிர்ச்சி.அங்கேஇருந்தவைகண்ணாடிக்குடுவைகளில் கலர்கலர் திரவங்கள். கூடவே நொறுக்குத்தீனி வகையறாக்கள்.
அப்போது அந்த அறைக்குள் கோபி தேஜாவும் அவரது நண்பர் காமராஜ்என்பவரும்நுழைந்திருக்கிறார்கள்.``தொலைக்காட்சிதொகுப்பாளினிஆகவேண்டும்என்றால்தொல்லைகில்லைகொடுக்காமல் எங்களுக்கு நீ இணங்க வேண்டும்'' என்றிருக்கிறார்கள். அதோடு ஆபாச வர்ணனை,அங்கங்களைத் தொடுதல் என்று அவர்கள் ஆரம்பிக்க,அதிர்ந்து போன சுகந்தி,அலறியடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே ஓடிவந்திருக்கிறார். கிளப்பில் இருந்த குமரவேல், சதிஷ் என்பவர்களிடம் சுகந்தி முறையிட, அவர்கள் தந்த அட்வைஸ் இதுதான்: ``அழுது அடம்பிடிக்காமல் சும்மா அட்ஜெஸ்ட் செய்துகிட்டுப் போம்மா!''
கிளப் உறுப்பினர் ஒருவரிடம் நீலாங்கரை போலீஸ் நிலைய எண்களை வாங்கி சுகந்தி போன் செய்ய, போலீஸார் வந்து கோபி தேஜா, காமராஜ், குமரவேல், சதிஷ் ஆகிய நான்கு பேரையும் கொத்தாக அள்ளியிருக்கிறார்கள். சுகந்தியின் தந்தைக்கும் தகவல் சொல்லி அவரை வரவழைத்திருக்கிறார்கள். அந்த நால்வர் அணி இப்போது புழல் சிறையில்.
கல்லூரி மாணவியிடம் இப்படி செக்ஸ் சில்மிஷம் நடந்த அந்த கார்ப்பரேட் கிளப்பைக் காண நாம் விரைந்தோம். ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது அது. கிளப் நிர்வாகிகள் நம்மிடம் எதையும் பேச மறுத்து விட்டனர். ஊழியர்கள் சிலர் மட்டும் தகவல்களைக் கொட்டினார்கள்.
"இருபத்தைந்தாயிரம் ரூபாய் கட்டினால் இந்த கிளப்பில் உறுப்பினராகலாம். படப்பை, மாமல்லபுரம், மவுண்ட்ரோடு உள்பட நான்கு இடங்களில் இந்த கிளப் செயல்படுகிறது. காங்கேயன் என்பவர்தான் உரிமையாளர். அந்தக் கல்லூரி மாணவி சம்பவம் உண்மைதான். கைதான குமரவேல், கிளப் மேனேஜர் கிடையாது. கருப்பையா என்பவர்தான் உண்மையான மேனேஜர். தான் போலீஸில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக குமரவேலை அவர் சரிக்கட்டி போலீஸாருடன் அனுப்பி விட்டார்.
இது ஒருமாதிரியான கிளப். உறுப்பினர்கள் இங்கே எத்தனை பெண்களைக் கூட்டி வந்தாலும் யாரும் கேட்க முடியாது. இந்த மாதிரி சின்னப் பெண்கள் அடிக்கடி வந்து போவார்கள். கோபி தேஜா இதுவரை நிறைய பெண்களைக் கூட்டி வந்திருக்கிறார். அவர் எதற்காகக் கூட்டி வந்தார் என்பது இப்போதுதான் புரிகிறது. மூன்று மாதத்துக்கு முன்பு அப்போதைய மேனேஜர் ஜெயக்குமார் என்பவர் கூட ஒரு பெண் தந்த புகாரின் பேரில் கைதாகி இருக்கிறார்'' என்றனர் அந்த ஊழியர்கள்.
பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி சுகந்தி, வடசென்னைப் பகுதியில் பெற்றோருடன் வசிக்கிறார். அவரை நாம் சந்திக்க முயன்றபோது, சுகந்தியின் தாய் அழுத முகத்தோடு நமக்கு அனுமதி மறுத்து விட்டார், அருகில் இருந்த சுகந்தியின் தந்தையோ, ``நடந்த சம்பவத்தைப் பற்றி நீலாங்கரை இன்ஸ்பெக்டர் புகார் தரச் சொன்னார். நாங்கள் எழுதித் தந்திருக்கிறோம். மற்றபடி எதுவும் பேச விரும்பவில்லை'' என நம்மை அனுப்பி வைத்தார்.
நாம் சின்னத்திரை வட்டாரங்களில் கோபி தேஜாவைப் பற்றி விசாரித்தோம். அவரது பெயரைக் கேட்டதுமே பலர் அலறினார்கள். "கோபி தேஜா எப்போதும் பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத்தான் நடத்துவார். பெண்களோடு பழகும்போது `எந்தப் பெண் விழும், விழாது' என கணிப்பதில் தேஜா கில்லாடி. இவருக்கு சம்பளம் வழங்குவது மக்கள் டி.விதான். ஒருமுறை ஊட்டியில் ஒரு லாட்ஜில் தங்கியதாக பத்தாயிரம் ரூபாய்க்கு பில்லை நீட்டினார். ஆனால், இவர் அங்கு தங்கவே இல்லை என விசாரணையில் தெரியவந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவரால் இதுவரை இருபது நியூஸ் ரீடர்கள் (பெண்கள்) அங்கே வேலையை விட்டு ஓடியிருக்கிறார்கள். புதிதாக அங்கே வேலைக்கு வரும் பெண்களிடம், `உன் வாய்ஸ் நல்லா இருக்கு' என்று கோபி தேஜா ஆரம்பிப்பார். அப்புறம் செக்ஸ் மெஸேஜ் அனுப்புவார். அவருடன் ஒத்துப் போகிறவர்கள் தினமும் அலுவலகம் வந்து செல்ல கார் அனுப்புவார். கோபிக்கு மக்கள் டி.வி.யின் முக்கிய அதிகாரி ஒருவரின் ஆதரவும் இருக்கிறது. மக்கள் தொலைக்காட்சியில் மட்டுமல்ல, ஏறத்தாழ எல்லா சேனல்களிலும் கோபி தேஜா போன்ற ஆட்கள் இருக்கிறார்கள். சுகந்தி விவகாரம் ஒரு சோறு பதம்தான்'' என்றனர் அவர்கள்.
கோபி தேஜாவைக் கைதுசெய்த நீலாங்கரை இன்ஸ்பெக்டர் ஜெயசேகர் பெர்னாண்டோவிடம் பேசினோம். "அந்த கிளப்பின் உரிமையாளர் காங்கேயனை முன்பே `இந்த' மாதிரி விஷயங்கள் நடத்துவதற்கு அனுமதி கொடுத்ததற்காகக் கைது செய்திருக்கிறேன். கிளப்பின் பொறுப்பாளராக இருந்த குமரவேலையும் கைது செய்திருக்கிறோம். அவர் மேனேஜரா இல்லையா என்பது தெரியாது.
கார்ப்பரேட் கிளப்பின் உறுப்பினர்கள் ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு உள்ளே சென்றால் நாங்கள் விபசார வழக்கு போட முடியாது. சம்பந்தப்பட்ட பெண் விபசாரத்துடன் தொடர்புள்ளவராக இருந்தால் மட்டுமே கைது செய்ய சட்டத்தில் இடம் உண்டு. இது தான் அந்த கிளப்புக்கு வரும் மெம்பர்களுக்குத் துணிச்சலைக் கொடுக்கிறது. அதேபோல் இங்குள்ள ரிசார்ட்டுகளில் ஐ.டி.யில் வேலை பார்க்கும் ஆண்கள், பெண்கள் கும்பலாக குடித்துவிட்டு கும்மாளம் போடும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. நாங்கள் எங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்'' என்றார் அவர்.
மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரியான சிவகுமாரிடம் பேசினோம். ``கோபி தேஜா ஒரு மோசடிப் பேர்வழி'' என்று ஆரம்பித்தவர், ``அவரை பதினைந்து நாட்களுக்கு முன்பே வேலையை விட்டு அனுப்பி விட்டோம். பலமுறை இங்கே தவறுகளைச் செய்துவிட்டு அவர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஊட்டி ஓட்டல் போலி பில் விவகாரம் கூட உண்மைதான். எனக்கும் அவருக்கும் எந்த நெருக்கமும் இல்லை.
கோபி தேஜா விவகாரத்தைக் கேள்விப்பட்டதும் டாக்டர் அய்யா கொதித்துப் போய்விட்டார். முதல் வேலையாக வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லிவிட்டார். கோபி தேஜா பற்றி போலீஸ் கமிஷனரிடம் நாங்களும் புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.
உண்மைதான்.கடந்த9-ம்தேதிஞாயிற்றுக்கிழமைஒளிபரப்பாக வேண்டிய வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை.
படங்கள் : ஞானமணி ஸீ விஜய் |