Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61
Kumudam.com, Kumudam Magazine - லைட்ஸ் ஆன் சுனில்

Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Kumudam Welcomes U
          Magazine
Kumudam
தலையங்கம்
கார்ட்டூன்
கவர் ஸ்டோரி
சினிமா
தொடர்கள்
பதில்கள்
ஒரு பக்கக் கதைகள்
ஜோக்ஸ்
சிறுகதை
வாசகர் கவிதை
கடைசி பக்கம்!
மற்றவை
 
 01.02.12  சினிமா

மலா பால் வாய் திறந்தால் மாதவன் புகழ்தான் பாடுகிறார். கெமிஸ்ட்ரி அந்தளவுக்கு ஓ.கே. ஆகியிருக்கிறது. இந்நிலையில், ‘நாயகன்’ படத்தை யாராவது ரீமேக் செய்தால்  அதில் தான் நடிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார் மேடி. (சரண்யா வேடத்துல அமலா பாலா?)

‘மௌனகுரு’ வின் சைலன்ட்டான ஓட்டம் பல இயக்குநர்களை யோசிக்க வைத்திருக்கிறது. இத்தனை நாள் சசிகுமாரே என் ஆஸ்தான இயக்குநர் என்றிருந்த சமுத் திரக்கனி, ‘மௌனகுரு’ இயக்குநர் சாந்தகுமாரைக்  கூப்பிட்டு தனக்கு ஒரு கதை சொல்லும்படி கேட்டு, ஒரு கதையை ‘டிக்’ அடித்திருக்கிறார். வித்தியாசமான கூட்டணியில்  களம் இறங்கப்போகிறார் கனி. (அட!)

வண்ண நிலவன் எழுதிய ‘எஸ்தர்’ நாவலை படமாக்கப் போகிறார் கவிஞர் ரவி சுப்ரமணியன். இவர் ஏற்கெனவே இளையராஜா, ஜெயகாந்தனைப் பற்றி குறும்படம் ஒன் றை எடுத்தவர். எஸ்தர் கதைக்கு வசனம் எஸ்.ராமகிருஷ்ணன். (வாழ்த்துக்கள்)

கார்த்திக் மகனுடன் சமந்தா ஜோடி சேரப்போகிறார் என்ற தகவல் வந்தவுடனே சமந்தா செல்போனை ஆஃப் செய்து விட்டார். அந்தளவுக்கு மற்ற இயக்குநர்களிடமிருந்து  தொடர் கால்ஷீட் கேட்டு அன்புத் தொல்லையாம். (சமந்தா, சமத்தா!)

அண்ணன் தான் சேர மறுத்து அடம்பிடிக்கிறார் என்பதாலோ என்னவோ பாரதிராஜா, கங்கை அமரனை தன்னோடு சேர்த்துக் கொண்டிருக்கிறார். ‘அன்னக் கொடியும்  கொடி வீரனும்’ படத்தில் இரண்டு பாடல்களை கங்கை அமரன் எழுதியிருக்கிறார். (கரகாட்டக்காரன் ஒண்ணு போதுமே!)

எல்லோரின் செல்போனிலும் ‘கொலைவெறி’ ரிங் டோனாக, அலறிக் கொண்டிருக்க, அதை இசையமைத்த அனிரூத் செல்போனில், என்ன ரிங்டோன்? ‘கொலைவெறி’ இல் லை! அதே படத்தில் இடம்பெற்ற ‘கமான் கேள்ஸ்’ பாடலை வைத்திருக்கிறார். அனிரூத்தின் கொலைவெறிக்கு பாகிஸ்தானிலிருந்து ஏகப்பட்ட லவ் லெட்டர்ஸ் வந்து கு விகிறதாம். எல்லோருக்கும் அறநெறியோடு பதிலனுப்புகிறாராம் அனிரூத். (நம்பிட்டேன்!)

சமீராவா? அமலா பாலா? யார் பிடிக்கும் என்று லிங்குசாமியிடம் கேட்டபோது, ‘ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதற்கு முன்னால் சமீராவைப் பிடிக்கும். வந்த பிறகு  அமலாவைப் பிடிக்கும்’ என்று எஸ்கேப் ஆனார். (பதில்ல ஏதோ வில்லங்கம் இருக்கிறது மாதிரி தெரீல?)

தலைவன் கோச்சடையானுக்கு தலைவியாக பல பெயர்கள் அடிபட்டு இப்போது கத்ரீனா கைஃப் வரை வந்து விட்டது. சௌந்தர்யா இந்த தகவலை கத்ரீனாவிடம் சொன் னபோது துள்ளிக் குதித்து விட்டார். பல படங்களின் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து ரஜினி படத்துக்கு கால்ஷீட் தரச் சம்மதித்திருக்கிறாராம் கைஃப். (ஒரு முடிவுக்கு  வாங்கப்பா)

வெள்ளாவிப் பொண்ணைத் தேடி கதை சொல்லப் போன இயக்குநர்கள் தலைதெறிக்க ஓடி வருகிறார்கள். கொழு கொழு உடம்பைக் குறைத்து குச்சி மிட்டாய் போல  காட்சியளிக்கிறாராம். ‘தமிழ் ரசிகர்களுக்கு தளதள உடம்புதான் வேணும் சீக்கிரம் குண்டாகுங்க’ என்று ஒரு இயக்குநர் வெளிப்படையாகவே சொல்லி விட்டு வந்திருக்கிறார்.  (ஃபுல்லா சாப்பிட்டா போவுது!)

ஜீ.வி. பிரகாஷ் இருபத்தி நான்கு வயதில் இருபத்தி ஐந்து படங்கள் இசையமைத்து இருக்கிறார். இவர் அடிக்கடி மைசூர் அருகில் உள்ள பத்திரி சங்கராச்சாரியாரிடம் செ ன்று ஆசிவாங்கி வருகிறார். இந்த வருட இறுதியில் திருமணத் தேதியைக் குறித்துக் கொடுத்து உள்ளார் சாமியார் (வாழ்த்துக்கள்)

பாலா படத்தின் கதாநாயகி வேதிகா சேட்டுப் பெண் மாதிரி செம கலராக இருக்கிறார். அவரை கருப்பா ஆக்குவதற்காக தினமும் ஷூட்டிங் இல்லாவிட்டாலும் தன்னுடன்  வெயிலில் அலைய உதவி இயக்குநராக வேலை கொடுத்து இருக்கிறார் பாலா. (அதுக்கு ஒரு கறுப்புப் பொண்ணையே பாத்திருக்கலாமே!)


என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமான முதல் படம் எது?

 கே.ஜெயபிரகாஷ், போடி.

1935&ல் ‘மேனகா’ என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் என்.எஸ்.கே. 150 படங்களில் நடித்து முடித்த என்.எஸ்.கே., கருத்துமிக்க பாடல்கள் மூலம் இன்றும் நம் நெஞ்சில்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பல வெற்றிப் படங்களைத் தந்த ஏ.பி.நாகராஜன் இயக்குநராக மட்டுமில்லாமல் படங்களில் நடிகராக தலை காட்டியது எப்படி?

 எல்.ஆதிலட்சுமி, சிவகங்கை.

திரையுலகுக்கு வரும்போதே ஏ.பி.என். அவர்கள் நடிகராகவும் கதை வசனகர்த்தாவாகவும் தான் அறிமுகமானார். 1953ல் வெளிவந்த ‘நால்வர்’ என்ற படத்தில்  அறிமுகமானார். இதிலிருந்து ‘நால்வர் நாகராஜன்’ என்றே கொஞ்சகாலம் அழைக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர். படங்களை இயக்கியது போல, நடிகர் திலகம் சிவாஜி டைரக்ட் செய்ததுண்டா?

 சூடாமணி, சேலம்.

‘‘1980&ம் ஆண்டு வெளிவந்த படம் ‘ரத்தபாசம்’ இதனை கே.விஜயன் இயக்கியிருந்தார். படம் முடியும் தறுவாயில் இயக்குநருக்கும், சிவாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு  மீதமுள்ள படத்தை சிவாஜியே இயக்கினார் என்று ஒரு தகவல் உண்டு. டைட்டிலில் கே.விஜயன் பெயரும் இருக்காது, சிவாஜியின் பெயரும் இருக்காது. பிறகு  கே.விஜயனும் சிவாஜியும் நட்பு கொண்டனர் என்பது தனிக்கதை’’ என்று விளக்குகிறார் இதயக்கனி விஜயன்

Current Issue
23-05-2012
Previous Issue
16-05-2012
   
Previous Issues
Please give your valuable feedback on this article/programme
( Examples for tamil font
ammaa = அம்மா, kumutham = குமுதம், vaNakkam = வணக்கம், thamiz = தமிழ் )
Tamil font help    தமிழ் English
Click here for sending feedback to a friend
 
<< Back to Homepage
 

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.