Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61 Kumudam.com, Kumudam Magazine - கடைசி பக்கம்!
‘ஆலய’த்தில் நடக்கும் குடுமிப் பிடிச் சண்டையில் ‘பாடம் சொல்லிக் கொடுப்பவர்’தான் படாதபாடு படுகிறாராம். என்னைவிட்டு விடுங்கள் என கெஞ்சும் அளவுக்கு நிலைமை போகிறதாம். ஆனால், ‘மூத்த’வரே தலையிட்டு சமாதானம் செய்வதால்தான் வேறு வழியின்றி மௌனம் காக்கிறாராம் இரண்டாமிடத்தில் இருப்பவர்.
வழக்கமாக புத்தகக் காட்சியின்போது கொடுக்கப்படும் ‘கலைஞர் விருது’ இந்த வருடம் கொடுக்கப்படவில்லை. ‘வீணாக மேல் இடத்தை ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும்’ என்று ‘பபாசி’யின் சில தலைவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்ததால் விழா ஏப்ரலுக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறதாம்.
தோழியை வெளியேற்றிய பிறகு கார்டனில் பல விஷயங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றனவாம். பல வருடங்களாக வைத்த இடம் விட்டு அசையாமல் இருந்த பொருட்கள் எல்லாம் இப்போது இடம்பெயர்ந்து இருக்கின்றனவாம். தோழியை விட்டுப் பிரிந்ததும் ‘சைலண்ட்’ஆக ஒரு விஷேச பூஜை கார்டனில் நடத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்.
விண்வெளிப் படத்தின் இந்தி ரீமேக்கை முன்னணி நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்ட நிலையில், திடீரென ஒரு பிரச்னை. படத்தின் இரண்டாம் பாதியைக் கொஞ்சம் கு றைக்கும்படி நிறுவனம் சொல்ல, முடியாது என்று இயக்குனர் பறைய, படம் வருமா வராதா என்று இப்போது புதுக்குழப்பம்.
அந்த நடன நடிகை அடிக்கும் கூத்திற்கு அளவே இல்லையாம். நடுவராக பங்கேற்கும் நிகழ்ச்சியில் இளவட்டங்களாக பார்த்து குறி வைத்து மார்க் போடுகிறாராம். மறுநாள், ‘நான் எதற்காக மார்க் போட்டேன் தெரியுமா’ என்று பிராக்கெட் போட்டு சந்திப்பிற்கு நல்ல நேரம் குறித்து விடுகிறாராம்.