Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61 Kumudam.com, Kumudam Magazine - தலையங்கம்
தீவிரவாதத்தின் முக்கிய இலக்கே மக்களின் நிம்மதியை உருக்குலைப்பதுதான். அண்டை நாடுகளிடமிருந்தும், மதத் தீவிரவாத அமைப்புகளிடமிருந்தும் நெருக்கடிகள் நீடிக்கும் நிலையில் தீவிரவாதம் விரிந்து பரவியிருக்கிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்திலும் ஆந்திராவிலும் தலையெடுத்த நக்ஸல் இயக்கங்களின் ஆதிக்கம் படிப்படியாக வளர்ந்து, தற்போது நாட்டில் 220 மாவட்டங்கள் இவர்களின் பிடிக்குள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவீன ரக ஆயுதங்களில் இருந்து பல்வேறு பயிற்சிகளுடன் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்-கிறார்கள்.
இந்தத் தாக்குதலின் உச்சகட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தந்தேவாடாவில் மத்திய ரிசர்வ் போல¦சார் 76 பேர் கோரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அடக்கம்.
நாட்டையே உலுக்கிய இந்தக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்தவுடன் தான் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய முன்வந்திருக்கிறார் உள்துறை அமைச்சரான ப. சிதம்பரம். பிரதமர் மட்டுமில்லாமல் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் கூட அவருடைய ராஜினாமாவை ஏற்காமல் கட்சி அரசியலை மீறிய ஒற்றுமை நிலவுவதைப் புலப்படுத்துவது ஆரோக்கியமானது.
மாநில அரசுகளின் பரிபூரண ஒத்துழைப்பு இல்லாமல் மத்திய அரசு நக்சல் இயக்கத்தை ஒழித்துவிட முடியாது.அதே சமயம் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களையும் அழித்துவிடக் கூடாது.
நக்சல்களின் ஆதிக்கத்தில் இருக்கும் பகுதிகளில் அரசின் நலத்திட்டங்களும், தொழில் வாய்ப்புகளும் போய்ச் சேர்ந்தால் மட்டுமே உள்நாட்டு தீவிரவாதத்தைத் தனிமைப்படுத்த முடியும். அதைக் களையெடுக்கவும் முடியும்.மறுபடியும் நாட்டின் அமைதியை மீட்டெடுக்கவும் முடியும்.
முதற்கட்டமாக அந்தப் பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தைகள் துவங்கட்டும்..