Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61 Kumudam.com, Kumudam Kalkandu - தெரிஞ்சுக்குங்க...
பிரபல ஆங்கில நாவலாசிரியர் ருட்யார்டு கிப்ளிங் எழுதிய உலகப் புகழ்வாய்ந்த நாவலைத் தழுவி 1967இல் திரையிடப் பெற்ற ‘வனநூல்’ வால்ட் டிஸ்னியின் புகழை இ ன்றும் பேச வைக்கின்ற அரிய படைப்பு எனலாம். இதுவே டிஸ்னியின் இறுதி கார்ட்டூன் படம் என்பதும் உண்மை.
வன விலங்குகளை பாத்திரங்களாக அமைத்துப் பல கார்ட்டூன் படங்களைப் படைத்திட்ட வால்ட் டிஸ்னிக்கு இது கடைசிப் படம் என்பதாலோ என்னவோ, வனநூல் என்ற இப்படம் டிஸ்னிக்கு மாபெரும் வெற்றியைத் திரட்டித் தந்தது போலும் மௌலி என்ற அனாதைக் குழந்தையைச் சில ஓநாய்கள், தங்கள் ஆதரவில் வைத்து வளர்த்து வ ருகின்றன. இடையே வந்து சேரும் ஒரு சிறுத்தையானது, ‘இளைஞனாக வளர்ந்துவிட்ட மனித இனத்தோடு சேர்த்து விடுவதுதான் நலம்’ என்று போதிக்கிறது. ஓநாயும் அதன் சொல்படி இணங்கி, அச்சிறுவனை அழைத்துக்கொண்டு பட்டணத்தை நோக்கிப் புறப்படுகிறது. வழியில் ஒரு கரடியும் சில குரங்குகளும் சிறுவனுக்கு அறிமுகமாகி ன்றன. அவனுக்கு அந்தக் காட்டைவிட்டுப் பிரிந்து செல்ல மனம் வரவில்லை. ஒருநாள் அந்த இளைஞன் ஓர் அழகிய இளம் பெண்ணைச் சந்திக்கின்றான். இருவ ருக்கும் காதல் மலர்கிறது. அவனுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் மிருகத்தனத்தை அந்த அழகிக்காக சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு முற்றிலும் மனிதத் தன்மைக்குத் திரும்புகிறான். மிருகமும் மனிதனாகலாம் என்பது படத்தின் கருத்து.
இந்தப் படத்திற்காக டிஸ்னி, மொத்தம் 42 மாதங்கள் கடுமையாக உழைத்து உருவாக்கியிருக்கிறார். இதற்காக அவர் செலவிட்ட தொகை 4 மில்லியன் டாலராகும். 1968-இல் இதற்கு வசூலான தொகை 11.5 மில்லியன் டாலரை எட்டிவிட்டது.
இதில் வரும் சிறுத்தை, ஓநாய், புலி, கரடி மற்றும் குரங்குகளுக்குப் பின்னணிக் குரல் வழங்குவதற்கு ஃபில் ஹாரிஸ், சபாஸ்டின் காபாட், ஜார்ஜ் சாண்டரீல் போன்ற புகழ் மிகுந்த நட்சத்திர நடிகைகளை அமர்த்தினார் வால்ட் டிஸ்னி.
78 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த முழு நீள கார்ட்டூன் படைப்பிற்கு சிறந்த இசைப் பாடலுக்கான அகாதமி விருதும் வழங்கப்பெற்றது. வால்ட் டிஸ்னி மறைந்து போனாலும் அவரது படைப்புகள் இன்றும் அவரது நாமத்தை நினைவுபடுத்திக் கொண்டுள்ளன என்பது உண்மை.