Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61
Kumudam.com, Kumudam Kalkandu - உலகப் புகழ் பெற்ற மனிதர்

Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Kumudam Welcomes U
          Magazine
Kalkandu
கவர் ஸ்டோரி
தொடர்கள்
கேள்வி பதில்
தொடர்கதை
உலகப் புகழ் பெற்ற மனிதர்
கவிதை அரங்கம்
திரைச் செய்திகள்
வெற்றியாளர் பக்கம்
தெரிஞ்சுக்குங்க
 
 21.04.10    உலகப் புகழ் பெற்ற மனிதர்
றவழியே அரசியல் நெறி

அமெரிக்க நாட்டில் வெள்ளையரின் நிறவெறிக் கொள்கையால் நீக்ரோ மக்கள் படும் துன்பங்களையும் கொடுமைகளையும் எழுத்தில் வடிப்பது எளிதன்று. அமெரிக்கா  சுதந்தரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பின்புங்கூட இன்றும் நீக்ரோ மக்களின்மீது அமெரிக்கர்களுக்கு இருக்கும் வெறுப்புணர்ச்சி முழுவதுமாக மறைந்து விடவில் லை.

இந்திய நாட்டின் விடுதலைப் போரை அறவழியில் நடத்திச் சென்ற காந்தியடிகளின் போக்கு மார்ட்டின் லூதரை மிகவும் கவர்ந்தது. காந்தியடிகளின் வாழ்க்கை  வரலாற்றையும் அவர் வகுத்துத் தந்த அறநெறிக் கொள்கைகளையும் மார்ட்டின் லூதர் இளமையிலேயே ஆழ்ந்து கற்றார். அதனால் அவர், அறநெறியே மக்களின் மனத் தைஅமைதிப்படுத்தும்; அறப்போராட்டமே நீக்ரோக்களின் விடுதலைக்குச் சரியான வழி என்று போதிக்கத் தொடங்கினார். தன் தத்துவம் தோய்ந்த கருத்துக்களை தம்மின  மக்களின் உள்ளத்தில் பதிய வைக்க எளிமையான முறையில் எழுதிவந்தார். அவரது அறப்போராட்டங்கள் வெற்றியைத் தந்தன. அவரது சிந்தனையைப் பாராட்டி உலக  நாடுகள் அவருக்கு நோபல் பரிசினை வழங்கிச் சிறப்பித்தன.

கறுப்பு நிலா உதித்தது!

ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக வந்த நீக்ரோக்கள் அமெரிக்க நாட்டின் தென்பகுதியில் குடிபுகுந்தனர். அவர்கள் தங்கள் அயராத உழைப்பினால் அமெரிக்காவின்  தென்பகுதியை வளங்கொழிக்கச் செய்தனர். ஆனால், அமெரிக்காவின் வடபகுதியில் வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். தென் பகுதியில் வாழ்ந்த வெள்ளை யர்கள் நீக்ரோக்களை அடிமை நிலையிலிருந்து விடுவிக்கவில்லை.

மார்ட்டின் லூதர், ஏழ்மையான நீக்ரோ குடும்பத்தில் பிறந்தார். அவர், 1929 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 15-ஆம் தேதி, அமெரிக்காவிலுள்ள அட்லாண்டா என்னும்  நகரத்தில் பிறந்தார்.

கல்லுரியில் படிக்கும் காலத்திலேயே நீக்ரோக்களின் பிரச்சினைகளுக்கு விடிவு காணச் சிந்திக்கத் தொடங்கினார்.

காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறும் அவரது நீக்ரோ இனக் கொள்கைகளும் மார்ட்டினை மிகவும் கவர்ந்தன. அவரின் அறப்போராட்ட முறையே இன வெறியை ஒடுக்க  ஏற்றது என உறுதியாக நம்பினார். மேலும் பேராசிரியர்களின் சொற்பொழிவுகள் மார்ட்டினின் சிந்தனையைத் தூண்டின. சமுதாயத்தின் பொதுவான நன்மைக்கும் தனிமனித  வாழ்க்கைக்கும் சமயநெறி முக்கியமானது என உணர்ந்தார். எனவே, சமுதாயத்திற்குத் தொண்டு செய்யச் சமயமே சரியான வழி என்பதை அவர் அறிந்தார்.

மூன்று முக்கிய அம்சங்கள்

மனித வாழ்க்கை முழுமையாக இருக்க வேண்டுமெனில் மூன்று அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். அவை தன்னலம், பிறர்நலம், இறைபணி ஆகிய மூன்று  முக்கிய அம்சங்கள். ஒரு முக்கோணத்திற்கு மூன்று பக்கங்கள் அவசியம். மூன்று பக்கங்கள் இல்லாமல் முக்கோணம் உருவாகாது.

அதுபோல, மனித வாழ்க்கை முழுமை அடைய மனிதன் தன் நலனுக்காகப் பாடுபட வேண்டும். அதே சமயத்தில் பிறர் நலனையும் மனத்தில் கொண்டு செயல்பட வே ண்டும். அத்துடன், இறைவனை அடைவதற்கு இறைபணியையும் செய்தல் வேண்டும். ஒவ்வொரு மனிதனிடமும் தனிப்பட்ட ஆற்றல் மறைந்துள்ளது. அந்த ஆற்றலின்  இயல்பினை அறிந்து, அதனை வாழ்க்கையில் பயன்படுத்துவது அவசியம்.
புகழ், மனிதனுக்கு திடீரெனக் கிடைத்துவிடாது. ஊக்கமும் உழைப்புமே மனிதனுக்குப் புகழையும் செல்வத்தையும் கொடுக்கும்.

மனிதன் தன் ஆற்றலைப் பயன்படுத்திப் பிறருக்கு நன்மையைச் செய்ய வேண்டும். தனக்கு ஆற்றல் நல்கிய இறைவனுக்குப் பணியாற்றி வாழ்வில் உயர்தல் வேண்டும்.  இவ்வாறு முழுவாழ்க்கையின் மூன்று அமைப்புகள் என்னும் கொள்கையை மார்ட்டின் உருவாக்கினார்.

மாண்ட்கோமரி நகரத்தில் நிறவெறி

மார்ட்டின், சமயப்பணியில் ஈடுபட்டுத் தன் மனைவியுடன் அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்தார். மாண்ட்கோமரி மாநிலத்தில் நாளுக்கு நாள் நிறவெறி வலுத் துக்கொண்டே இருந்தது. நீக்ரோக்களுக்கெனத் தனிப்பள்ளி, தனிப்பேருந்து, தனி மருத்துவர், தனி வக்கீல் என்று எல்லா நிலைகளிலும் அவர்கள் ஒதுக்கப்பட்டனர்.

இன ஒதுக்கல் முறை, சட்டப்படி தவறானது என நீக்ரோத் தலைவர்கள் ஒன்று திரண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கினை உடைக்க வெள்ளையர்கள்  எவ்வளவோ முயன்றனர். இறுதியாக நீக்ரோக்கள் வெற்றி பெற்றனர். பேருந்துகளில் இன ஒதுக்கீடு தவறானது. எனவே இம்முறை அகற்றப்பட வேண்டும் என நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.
அதற்குப் பின் மார்ட்டின் நீக்ரோக்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தினார். அவரது போராட்ட முறைகள் வெள்ளையர்கள் மனம்  மாறப் பயன்பட்டன.

தொடர்ந்து பலபோராட்டங்களை முன்னின்று நடத்தினார். உறங்கிக் கிடந்த நீக்ரோ மக்களின் உணர்ச்சியைத் தட்டியெழுப்பினார். படிப்படியாக நீக்ரோ மக்களுக்குப் பல  உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.

அவர் ஆற்றிய அமைதிப் பணிக்காக அவருக்கு 1963ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தன் வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட மார்ட்டினை ஒரு வெள்ளையன், 1968ஆம் ஆண்டு ஏப்ரல் நான்காம் நாள் சுட்டுக் கொன்றான். அச்செய்தியறிந்த  அமெரிக்க நாட்டினர் அனைவரும் வருந்தினர்.

அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த ஜான்சன், ‘‘அமெரிக்காவின் ஆன்மா கண்ணீர் வடிக்கிறது’’ என்று கூறி வருந்தினார். நாடு முழுவதும் துக்கம் கொண் டாடப்பட்டது. மாதா கோவில்களில்  அவருக்காகப் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடந்தன.

அவர் எழுதி வைத்துவிட்டுச் சென்ற தத்துவங்கள் இன்றும் உலக மக்களால் மதிக்கப்பட்டு வருகின்றன.

-தமிழ்மணி.
Current Issue
16-05-2012
Previous Issue
09-05-2012
   
Previous Issues
 
<< Back to Homepage
 

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.