|
உலகிலேயே சுற்றுப்புறச் சூழ்நிலை மிகவும் சுத்தமாக உள்ள நாடு நியூசிலாந்துதான். உலகின் மிகப் பெரிய வெந்நீர் ஊற்று இந்த நாட்டில் தான் இருக்கிறது. 1903ஆம் ஆண்டு வைமாவ் என்ற இந்த வெந்நீர் ஊற்று 460 மீட்டர் உயரத்திற்கு எழுந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்தது.
இரண்டு வேலைகள்!
ஆண்டுதோறும் ஒவ் வோர் அமெரிக்கரும் 471 பாட்டில் மென்பானங்களை அருந்துகிறார். தினமும் 4லு மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்காமல் எந்த ஓர் அமெரிக்கரும் தூங்குவதில்லை.
உண்மைகள்
அமெரிக்காவின் மக் கள் தொகையில் இஸ் லாமியர்களின் சதவீதம் 0.06 மட்டுமே. எதனால்? ஒசாமா பின்லேடனால் இஸ்லாமியர்களுக்கு அமெரிக்கா அதிகம் பயப்படு கிறது.
கொலம்பியாவில்...
கொலம்பியா நாட்டில் குழந்தைகள் முதல் அனைத்து வயதுக்காரர்களையும் கடத்திப் பணம் பறிப்பதுதான் பெரிய தொழிலாக வளர்ந்துள்ளது. இத்துடன் கோகைன் என்ற போதைப் பொருள் உற்பத்தியிலும் இந்த நாடு முதலிடத்தில் இருக்கிறது. இந்த நாட்டு மக்கள் பலர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே வாழ்கின்றனர். கனிம வளமும், நிலக்கரி இருப்பும் அதிகமாக இருந்தாலும் மக்களைக் கடத்திப் பெரும் பணம் கொள்ளையடிக்கும் கும்பலை இந்த நாட்டின் காவல் துறை கண்டு கொள்ளாதது அதிசயம்தான்.
மிகப் பெரிய எரிகற்கள் உள்ள இடங்கள்!
தினசரி எழுபது இலட்சம் எரி நட் சத்திரங்களை - எரிகற்களை நம்பூமி சந்திக்கிறது. அப்படி விழுந்த எரிகற்களுள் மிகப்பெரிய கல்ஒன்றை நியூயார்க் நகரில் உள்ள ஹேடன் பிளானட்டோரியத்தில் வைத்திருக்கிறார்கள். 1897 ஆம் ஆண்டு கிரீன்லாந்தின் மேற்குக் கடற்கரை அருகில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல்லின் எடை 35,000 கிலோவாகும். டென்ட் (Tent)என்ற பெயருடைய இந்த எரிகல்லே உலகிலேயே அருங்காட்சியகம் ஒன்றில் உள்ள ஒரே பெரிய எரிகல்லாகும்.
தென் ஆப்பிரிக்காவில் ஹோபா வெஸ்ட்(Hoba West) என்னுமிடத்தில் விழுந்த எரிகல்தான் உலகிலேயே மிகப்பெரியது. 1920ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த எரிகல் 93% இரும்பும், 7% நிக்கலும் சேர்ந்த கல்லாகும்.
எரிகற்கள் எல்லாம் வால் நட்சத்திரங்களில் இருந்து விழுபவை தான்.
மனிதனின் குடியேற்றங்கள் பற்றிய விஞ்ஞான ஆய்வுப் பிரிவிற்கு எகிஸ்டிக்ஸ் என்று பெயர்.
-ப்ரியம்வதா
|