Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61
Kumudam.com, Kumudam Jothidam - ராசி பலன்கள்

Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Kumudam Welcomes U
          Magazine
Kumudam Jothidam
தலையங்கம்
சிறப்புக் கட்டுரை
கேள்வி பதில்
ராசி பலன்கள்
மற்றவை
 
 03.02.12    ராசி பலன்கள்


29.1.2012 முதல் 4.2.2012 வரை
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் குரு; குடும்ப ஸ்தானத்தில் கேது; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய்; சப்தம ஸ்தானத்தில் சனி; அஷ்டம ஸ்தானத்தில் ராகு; ஜீவன  ஸ்தானத்தில் சூரியன், புதன்; லாப ஸ்தானத்தில் சுக்கிரன்; விரய ஸ்தானத்தில் சந்திரன்; ஏழாமிடத்தில் சனி. கணவன், மனைவியரிடையே கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும்.  நண்பர்களில் நல்லவரல்லாதவர் தொடர்பும், அதனால் தொந்தரவுகளும் ஏற்படலாம். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.  புதனின் நிலையினால் தொழில் மேலோங்கும். உ த்தியோகத்தில் பதவி உயர்வும், சலுகைகளும் கிடைக்கும். சுக்கிரன் விரய ஸ்தானமாகிய மீனத்தில் உச்சம் பெறவிருக்கிறார். பணவரவு அதிகரிக்கும். ஆடை, ஆபரணச்  சேர்க்கை ஏற்படும். வீட்டிற்குத் தேவைப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

உத்தியோகம் : வேலையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். உடன் உழைப்பவர்கள் உதவிக்கு வருவார்கள்.

தொழில் : தொழில் முன்னேற்றம் பெறும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் ஓரளவு சீராக இருந்துவரும். கொடுக்கல்-வாங்கலில் சற்று எச்சரிக்கை தேவை.

கலைத்துறையினர் : கிரகநிலைகள் சாதகமாக சஞ்சரிப்பதால் வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். நடிக, நடிகையர் நல்ல ஆதாயம் பெறுவர். வருமானம் உயரும். வசதிகள்  அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : கட்சித் தலைமையுடன் சமரசம் ஏற்படும். உங்கள் நிலையும் மேம்படும். எனவே வருமானம் இனி சீராகும்.

மாணவமணிகள் : மனதில் இதுவரை நிலவிய சஞ்சலங்கள் நீங்கும். மனம் தெளிவு பெறும். அறிவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

விவசாயத்துறையினர் : பொறுப்புகள் கூடும். உழைப்பு கடினமாகும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமற் போகலாம்.

பெண்மணிகள் : பணவரவு அதிகரிக்கும். என்றாலும் செலவுகள் அதிகமாவதால் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குக் கவலைகள் அதிகரிக்கும். வேலைக்குச் சென் றுவரும் பெண்மணிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

அறிவுரை : ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

அத்தகு வானவர்க் காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியு மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக்காடரே.   

- திருஞானசம்பந்தர்

அனுகூல தினங்கள் : ஜன : 29; பிப் : 1, 2
பிரதிகூல தினங்கள் : ஜன : 30, 31; பிப் : 3, 4
அதிர்ஷ்ட எண்கள் : 6, 7

(கிருத்திகை 2-ம் பாதம் முதல், ரோகிணி,
மிருகசீரிஷம் 2-ம் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் கேது; சுக ஸ்தானத்தில் செவ்வாய்; ருண ஸ்தானத்தில் சனி; சப்தம ஸ்தானத்தில் ராகு; பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன்; ஜீவன ஸ்தானத் தில் சுக்கிரன்; லாப ஸ்தானத்தில் சந்திரன். வருமானம் நல்லபடி நீடிக்கும். உங்களால் சேமிக்கவும் முடியும். தொழில், வேலை சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த தொழில்  கூட்டாளிகள் விலகுவர். சனி வக்கிரம் பெறவுள்ளார். வேலைச்சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும். 1-ல் கேது; 7-ல் ராகு. மனைவியின் உடல்நலனில் கவனம் தேவை.  சிலர் ஊர் மாற்றத்தை எதிர்கொள்ள நேரிடும். புதன் மகரத்தில். பணவரவு அதிகரிக்கும். உற்றார், உறவுமுறை சுமுகமாகும். சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெறுகிறார். எடு த்த காரியங்கள் எளிதாக நடைபெறும்.

உத்தியோகம் : வேலையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும். இதனால் நன் மைகள் அதிகரிக்கும். என்றாலும் வேலைச்சுமை இனி அதிகரிக்கக்கூடும்.

தொழில் : தொழிலில் தொல்லை தந்தவர் விலகுவர். பொருளாதார உதவிகள் கிடைக்கும். தொழில் மேம்படும். உற்பத்தியும், வருமானமும் உயரும்.

வியாபாரம் : விற்பனை அதிகரிக்கும். லாபம் உயரும். கொடுக்கல்-வாங்கல் சீராகும்.

கலைத்துறையினர் : செய்தொழில் மேம்படும். நடிக, நடிகையர் நல்ல ஆதரவு பெறுவர். வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் உயரும்.

அரசியல்துறையினர் : உங்களுக்கு இதுவரை ஏற்பட்டுவந்த தடைகள் விலகும். பொறுப்பும், மரியாதையுமிக்க பதவி கிடைக்கும். வருமானம் உயரும்.

மாணவமணிகள் : மனதில் நிலவிய சஞ்சலங்கள் தீரும். அறிவுத்திறனும், ஞாபக சக்தியும் வளரும். படிப்பில் நல்ல ஆர்வம் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : பயிர்கள் செழிக்கும். வருமானம் உயரும். இந்த வாரம் மண், மனை ஆதாயம் தரும்.

பெண்மணிகள் : வருமானம் அதிகரிக்கும். கடன்களைச் சுலபமாக அடைத்து நிம்மதி காணலாம். சிறிது சேமிக்கவும் முடியும்.

அறிவுரை : வருமானம் அதிகரிப்பதால் தொல்லை தந்துவந்த கடன்கள் அடைத்து நிம்மதி பெறுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே.
     
- திருஞானசம்பந்தர்

அனுகூல தினங்கள் : ஜன : 29, 30; பிப் : 3, 4
பிரதிகூல தினங்கள் : ஜன : 31; பிப் : 1, 2
அதிர்ஷ்ட எண்கள் : 1, 2

(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் வரை)

குடும்பம் : தைரிய ஸ்தானத்தில் செவ்வாய்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி; ருண ஸ்தானத்தில் ராகு; அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன்; பாக்கிய ஸ்தானத்தில்  சுக்கிரன்; ஜீவன ஸ்தானத்தில் சந்திரன்; லாப ஸ்தானத்தில் குரு; விரய ஸ்தானத்தில் கேது; புதன் மகரத்தில். அறிவு, தெளிவு பெறும். எதையும் நிதானித்துச் செய்து வெற்றி  பெறலாம். எடுத்த காரியங்கள் முடிவடையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை கிடைக்கும். இதனால் வேலை செய்பவர்கள்  நன்மை பெறுவார்கள். உடல்நலன் சீராகும். மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெறவுள்ளார். பிள்ளைகளின் கல்வி, உடல்நலனுக்காக அதிகம் செலவாகும்.

உத்தியோகம் : வேலையில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும். இதனால் நன்மைகள் உண்டாகும்.

தொழில் : தொழில் மேம்படும். தொழிலுக்குத் தேவைப்படும் நிதிஉதவிகள் தேடிவரும். உற்பத்தியும், வருமானமும் உயரும்.

வியாபாரம் : விற்பனை அதிகரிக்கும். லாபம் உயரும். கொடுக்கல்-வாங்கல் சீராகும். வரவேண்டிய பணம் வசூலாகும்.

கலைத்துறையினர் : கிரகநிலைகள் சாதகமாக உள்ளதால் நடிக, நடிகையர் நல்ல வாய்ப்புகளைப் பெறமுடியும். வருமானம் நன்கு உயரும். வசதிகளும் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மனவேறுபாடுகள் நீங்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். வருமானமும் உயரப் பெறுவீர்கள்.

மாணவமணிகள் : மனதில் குழப்பநிலை நீங்கி தெளிவான நிலை நிலவும். எனவே பாடங்களில் முழுகவனம் செலுத்தமுடியும்.

விவசாயத்துறையினர் : உழைப்பும், பொறுப்பும் கூடும். என்றாலும் இனி நிலைமை மேம்படும். வருமானம் உயரும்.

பெண்மணிகள் : வருமானம் நல்லபடி நீடிக்கும். என்றாலும் செலவுகள் சற்று அதிகரிக்கக்கூடும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகள் அலுவலகத்தில் நல்ல முன்னேற் றத்தை எதிர்பார்க்கலாம்.

அறிவுரை : குடும்பச் செலவுகளை மட்டும் குறைத்துக்கொண்டால் போதும்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வரவும்.

உணர்வார் ஆர்உன் பெருமை? ஊழி தோறு ஊழி
உணர்வார் ஆர்உன் உருவம் தன்னை? உணர்வார் ஆர்
விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால்வேதப்
பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்?       

- பொய்கையாழ்வார்

அனுகூல தினங்கள் : ஜன : 29; பிப் : 1, 2, 3
பிரதிகூல தினங்கள் : ஜன : 30, 31; பிப் : 4
அதிர்ஷ்ட எண்கள் : 3, 5

(புனர்பூசம் 4-ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்; சுக ஸ்தானத்தில் சனி; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு; சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன்; அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன்;  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்; ஜீவன ஸ்தானத்தில் குரு; லாப ஸ்தானத்தில் கேது. குடும்பத்தில் அனைவருடனும் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். புதன் மகர ராசியில்.  நீதிமன்ற வழக்குகளில் திருப்பம் ஏற்படலாம். மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெறவுள்ளார். மனைவியின் உடல்நலனில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக  அதிகம் செலவிட வேண்டிவரும். நல்லவரல்லாத நண்பர்களின் தொடர்பால் தொல்லைகள் நேரலாம். மனதில் இனம்புரியாத பயம் ஏற்படும்.

உத்தியோகம் : ஒரு சிலருக்குப் பதவியில் மாற்றமோ அல்லது இடமாற்றமோ ஏற்படக்கூடும். எனவே பொறுமையுடன் செயல்படுங்கள்.

தொழில் : தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு பாதிப்பிராது. தொழிலுக்குப் பொருளுதவிகள் கிடைக்கும். உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனை அதிகரிக்கும். லாபம் உயரும். என்றாலும் உங்களுக்கு வரவேண்டிய பணம் வசூலாவது தாமதப்படும். கொடுக்கல்-வாங்கலும் சிரமம் தரும்.

கலைத்துறையினர் : கிரகநிலைகள் சாதகமாக இல்லை. எனவே நடிக, நடிகையருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். எனவே  பணவரவு குறையலாம்.

அரசியல்துறையினர் : தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகள் தொடரக்கூடும். எனவே அரசியல்வாதிகளுக்குப் பொறுமை தேவை. எனினும் வருமானம் சீராக இருக்கும்.

மாணவமணிகள் : மனக்குழப்பங்கள் மேலும் சில வாரங்கள் தொடரக்கூடும். எனவே பொறுமையுடன் செயல்படுங்கள். பாடங்களில் முழுகவனம் செலுத்தி வாருங்கள்.

விவசாயத்துறையினர் : இந்த வாரமும் உழைப்பு கடினமாகவும், பொறுப்புகள் அதிகமாகவும் இருக்கும். எனவே வருமானம் சற்று குறையலாம்.

பெண்மணிகள் : பணவரவு தொடர்ந்து நன்றாகவே இருந்துவரும். என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு இது கவலை தரும்.

வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு மாற்றங்கள் ஏற்படலாம்.

அறிவுரை : உடல்நலனில் கவனம் தேவை. வேண்டாத செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

அடிகள் கைதொழுது அலர்மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கு ஒலிக்கும் திருவண் வண்டூர் உறையும்
கூடிய மாயன் தன்னைக் கண்ணனை நெடுமாலை கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறுகொண்டே.
       
- நம்மாழ்வார்

அனுகூல தினங்கள் : ஜன : 31; பிப் : 1, 2
பிரதிகூல தினங்கள் : ஜன : 29, 30; பிப் : 3, 4
அதிர்ஷ்ட எண்கள் : 4, 6

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் செவ்வாய்; தைரிய ஸ்தானத்தில் சனி; சுக ஸ்தானத்தில் ராகு; ருண ஸ்தானத்தில் சூரியன், புதன்; சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன்; அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன்; பாக்கிய ஸ்தானத்தில் குரு; ஜீவன ஸ்தானத்தில் கேது. குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமை ஓங்கும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சனி  வக்கிரம் பெறவுள்ளார். உடன் இருப்பவர்களால் சிற்சில சிரமங்கள் தோன்றலாம். மகர ராசியில் புதன். வீட்டிற்குத் தேவைப்படும் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.  குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மீன ராசியில் சுக்கிரன் உச்சம் பெறவுள்ளார். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் உதவ முன்வருவார்கள்.

உத்தியோகம் : பணியிடத்தில் மேன்மை உண்டாகும். பதவி உயர்வையும், ஊதிய உயர்வையும் எதிர்பார்க்கலாம். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

தொழில் : தொழிலில் உங்களது கூட்டாளிகளாக இருந்தவர்களுடன் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கும். இதனால் தொழிலில் கவனம் செல்லும். தொழிலுக்குப் பொருளுதவிகள்  கிடைக்கும். உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனை மேம்படும். லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகை குறித்த காலத்தில் வந்து சேரும். கொடுக்கல்-வாங்கல் சீராகும்.

கலைத்துறையினர் : திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் அதிக ஆதாயம் அடைவார்கள். புதுப்பட மற்றும் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வருமானம் உயரும். வசதிகள் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : கிரகநிலைகள் சாதகமாக உள்ளதால் அரசியல்வாதிகளுக்குப் பொறுப்புமிக்க பதவி ஒன்று கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். வருமானமும்  நன்கு உயரும்.

மாணவமணிகள் : மாணவமணிகளுக்கு நல்ல காலகட்டம். அறிவுத்திறன் அதிகரிக்கும். படிப்பில் நல்ல ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : இதுவரை நிலவிய பிரச்சினைகள் யாவும் தீரும். தொழில் மேம்படும். பயிர்கள் செழிக்கும். வருமானம் உயரும்.

பெண்மணிகள் : குடும்ப பிரச்சினைகள் தீரும். மனதில் நிம்மதியும் நிறைவும் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு அலுவலக த்தில் முன்னேற்றம் ஏற்படும்.

அறிவுரை : வருமானம் நல்லபடி இருப்பதால் பழைய கடன்களை அடைத்து நிம்மதி காணுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

சொன்னால் விரோதம் இது. ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ;
என் நாவில் இன்கவியான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்;
தென்னா தெனா என்று வண்டுமுரல் திருவேங்கடத்து
என்னானை என் அப்பன் எம்பெருமான் உளன் ஆகவே.

- நம்மாழ்வார்

அனுகூல தினங்கள் : ஜன : 30, 31; பிப் : 3, 4
பிரதிகூல தினங்கள் : ஜன : 29; பிப் : 1, 2
அதிர்ஷ்ட எண்கள் : 7, 9

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் வரை)

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் சனி; தைரிய ஸ்தானத்தில் ராகு; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன்; ருண ஸ்தானத்தில் சுக்கிரன்; சப்தம ஸ்தானத்தில் சந்திரன்;  அஷ்டம ஸ்தானத்தில் குரு; பாக்கிய ஸ்தானத்தில் கேது; விரய ஸ்தானத்தில் செவ்வாய். வரவு நன்றாக இருக்கும். என்றாலும் செலவுகளும் அதற்கேற்றாற்போல்  அதிகமாகவே இருக்கும். சனி வக்கிரம் பெறவுள்ளது நல்லதுதான். பிள்ளைகள் கல்வி, உடல்நலனில் சிறந்து விளங்குவார்கள். மகர ராசியில் புதன். வீடு, சொத்து, வாகனம்  இவற்றால் ஏற்பட்ட செலவுகள் குறைந்து ஆதாயம் கிடைக்கும். மீன ராசியில் சுக்கிரன் உச்சம் பெறவுள்ளார். வருமானம் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

உத்தியோகம் : பணியிடத்தில் மேன்மை உண்டாகும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர்.

தொழில் : தொழிலில் முன்னேற்றம் நீடிக்கும். தொழிலுக்குப் பொருளுதவிகள் கிடைக்கும். உற்பத்தி உயரும். வருமானமும் பெருகும்.

வியாபாரம் : விற்பனை அதிகரிக்கும். லாபம் உயரும். வரவேண்டிய பணம் குறித்த காலத்தில் வந்து சேரும். கொடுக்கல்-வாங்கல் சீராகும்.

கலைத்துறையினர் : நீங்கள் இதுவரை பட்ட துயரங்கள் யாவும் நீங்கும். கிரகநிலைகள் சாதகமாக உள்ளதால் நடிக, நடிகையர் நல்ல ஆதாயம் பெறுவார்கள். புதுப்பட  வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் உயரும்.

அரசியல்துறையினர் : தலைவரிடம் செல்வாக்கு ஓங்கும். பெயரும், புகழும் உயரும். வருமானமும் நன்கு உயரும்.

மாணவமணிகள் : மனம் தெளிவு பெறும். அறிவாற்றல் அதிகரிக்கும். ஞாபகத்திறன் கூடும். படிப்பில் நல்ல நாட்டம் அதிகரிக்கும்.

விவசாயத்துறையினர் : பயிர்கள் செழிக்கும். தொழில் சிறக்கும். வருமானம் பெருகும். இந்த வாரம் மண், மனை ஆதாயம் தரும்.

பெண்மணிகள் : பணவரவு அதிகரிக்கும். என்றாலும் வருமானத்திற்கேற்ப செலவினங்களும் அதிகரிக்கும். உத்தியோகம் பார்க்கும் பெண்மணிகளுக்குப் பணியிடத்தில்  நிலைமை மேம்படும்.

அறிவுரை : உடல்நலனில் கவனம் தேவை.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

நெடியர்; சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வர் கொடியர் மொழிக் கொள்ளார்
கடிய தொழிற்காலன் மடிய உதை கொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே.

- திருஞானசம்பந்தர்.

அனுகூல தினங்கள் : பிப் : 2, 3, 4
பிரதிகூல தினங்கள் : ஜன : 29, 30, 31; பிப் : 1
அதிர்ஷ்ட எண்கள் : 2, 5

(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் சனி; குடும்ப ஸ்தானத்தில் ராகு; சுக ஸ்தானத்தில் சூரியன், புதன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன்; ருண ஸ்தானத்தில் சந்திரன்; சப்தம  ஸ்தானத்தில் குரு; அஷ்டம ஸ்தானத்தில் கேது; லாப ஸ்தானத்தில் செவ்வாய்; ஷென்மத்தில் சனி. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொதுவாகவே, எந்தக்  காரியமென்றாலும் தீர யோசித்து பின்னர் செயல்படுவதே நல்லது. குடும்பத்தில் கணவன்-மனைவி, மக்களுடன் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். செலவுகள்  அதிகரிக்கக்கூடும். பிள்ளைகளின் நலனுக்காக செலவுகள் ஏற்படலாம். புதன் மகரத்தில். குடும்பச் செலவுகள் கூடும். வீட்டிற்குத் தேவைப்படும் ஆடம்பரப் பொருட்களை  வாங்குவீர்கள். மீன ராசியில் சுக்கிரன் உச்சம் பெறுகிறார். மனதில் கவலைகள் ஏற்படும். பொருட்செலவுகளால் சேமிப்பு கரையும்.

உத்தியோகம் : பணியிடத்தில் பொறுப்புகள் கூடும். வேலைப்பளு அதிகமாகவும், கடினமாகவும் இருக்கும்.

தொழில் : தொழிலில் கூட்டாக இருக்கும் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படலாம். என்றாலும் தொழில் முன்னேற்றத்தில் தடைகள் இராது. உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் பெருகும். என்றாலும் கொடுக்கல்-வாங்கல் சிரமம் தரும். வரவேண்டிய பாக்கித் தொகை வசூல் தாமதப்படும்.

கலைத்துறையினர் : நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வருமானமும் பாதிக்கப்படக்கூடும்.

அரசியல்துறையினர் : கட்சிப் பிரச்சினைகளால் உங்களுக்கும் சிரமங்கள் ஏற்படும். வருமானமும் சற்று குறையக்கூடும்.

மாணவமணிகள் : மனதில் நிலவும் சஞ்சலங்களால் படிப்பில் ஈடுபட மனம் மறுக்கும். எனவே நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தவும்.

விவசாயத்துறையினர் : பயிர்கள் செழிக்கும். எனவே வருமானம் உயரும். இந்த வாரம் மண், மனை ஆதாயம் தரும்.

பெண்மணிகள் : வரவு நன்றாக இருக்கும். என்றாலும் செலவுகளும் வரவுக்கேற்றாற்போல் அதிகமாகவே இருக்கும். இது பெண்மணிகளுக்குக் கவலை அளிக்கும்.  வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும்.

அறிவுரை : வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

இறையுறு வரிவளை யிசைகள் பாடிட
அறையுறு கழலடி யார்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னியின் மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக்காடரே.   

- திருஞானசம்பந்தர்

அனுகூல தினங்கள் : ஜன : 31; பிப் : 4
பிரதிகூல தினங்கள் : ஜன : 29, 30; பிப் : 1, 2, 3
அதிர்ஷ்ட எண்கள் : 1, 6

(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் ராகு; தைரிய ஸ்தானத்தில் சூரியன், புதன்; சுக ஸ்தானத்தில் சுக்கிரன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன்; ருண ஸ்தானத்தில் குரு; சப்தம  ஸ்தானத்தில் கேது; ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய்; விரய ஸ்தானத்தில் சனி. இவ்வாரம் சுபச் செலவுகள் ஏற்படும். எடுக்கும் காரியங்கள் கைகூடும். குருவின் சுபப்பார்வை  குடும்ப ஸ்தானம், ஜீவன ஸ்தானம், விரய ஸ்தானங்களுக்குக் கிடைக்கிறது. குடும்ப ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் கணவன்-மனைவி ஒற்றுமை ஓங்கும். கு டும்பத்தில் நிம்மதி நிலவும். விரயாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல்-வாங்கல் சீராகும். எனினும் உடல்நலனில் கவனம் தேவை. மகரத்தில் புதன். உடன்பிறந்தவர்கள்  உதவிக்கு வருவர்.

உத்தியோகம் : வேலைச்சுமையும், பொறுப்புகளும் அதிகமாகவும், கடினமாகவும் இருக்கும். ஒருசிலருக்கு வேலையில் மாற்றமோ அல்லது நிறுவன மாற்றமோ ஏற்படலாம்.

தொழில் : தொழிலில் சிரமங்கள் தோன்றக்கூடும். என்றாலும் தொழில் வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கும். தொழிலுக்கு நிதிஉதவிகள் கிடைக்கும். உற்பத்தி உயரும். பணவரவு  அதிகரிக்கும்.

வியாபாரம் : விற்பனை மேம்படும். லாபம் உயரும். வரவேண்டிய பாக்கித் தொகை வசூலாகும். கொடுக்கல்-வாங்கல் சீராகும்.

கலைத்துறையினர் : எதிர்பாராத நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் உயரும். வசதிகள் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்குப் புதிய பொறுப்புமிக்க பதவி ஒன்று கிடைக்கும். வருமானம் உயரும்.

மாணவமணிகள் : மாணவமணிகளுக்கு அறிவாற்றலும், ஞாபகத்திறனும் அதிகரிக்கும். படிப்பில் நல்ல ஆர்வம் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : எந்தக் காரியமென்றாலும் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் சிந்தித்துச் செயல்படுங்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும் பணவரவு சீராக இருக்கும்.

பெண்மணிகள் : வருமானம் தொடர்ந்து நன்றாக இருந்துவரும். வரவைவிட செலவுகள் அதிகமாகலாம். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமை தேவை.

அறிவுரை : உடல்நலனில் கவனம் தேவை.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

மாவாய் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவா அவர் தேடி திரிந்தல மந்தார்
பூவார்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த்
தேவா! வன வேண்டிக்கொள்வேன் தவதெறியே!   

 - சுந்தரர்

அனுகூல தினங்கள் : ஜன : 31; பிப் : 1, 2
பிரதிகூல தினங்கள் : ஜன : 29, 30; பிப் : 3, 4
அதிர்ஷ்ட எண்கள் : 2, 7

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் வரை)

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன்; தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன்; சுக ஸ்தானத்தில் சந்திரன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு; ருண ஸ்தானத்தில் கேது;  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்; லாப ஸ்தானத்தில் சனி; விரய ஸ்தானத்தில் ராகு. நிதிநிலைமை நல்லபடி நீடிக்கும். சனி வக்கிர கதி காலத்தில் குடும்பத்தில் ஒருவ ருக்கொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல்நலனிலும் கவனம் தேவை. மகரத்தில் புதன். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி  நிலவும். உற்றார், உறவினருடன் சுமுக உறவு நிலவும். மீன ராசியில் சுக்கிரன் உச்சம் பெறவுள்ளார். இது நன்மையைத் தராது. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்  கொடுத்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.

உத்தியோகம் : பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சனி வக்கிர கதியில் சஞ்சரிக்கவிருப்பதால்  அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு மாற்றங்களும் ஏற்படலாம்.

தொழில் : தொழில் முன்னேற்றம் தொடரும். உற்பத்தி உயரும். வருமானம் பெருகும்.

வியாபாரம் : சனி வக்கிர கதியில் சஞ்சரிக்கவிருப்பதால் வியாபாரத்திலுள்ளவர்களுக்குக் கொடுக்கல்-வாங்கலில் பிரச்சினைகள் எழக்கூடும்.

கலைத்துறையினர் : திரையுலக மற்றும் டி.வி. கலைஞர்கள் ஆதாயம் பெறுவார்கள். வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் உயரும்.

அரசியல்துறையினர் : உங்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் பல காரணங்களினால் மற்றவர்களுக்கு சென்று விடக்கூடும். எனவே எச்சரிக்கை தேவை.

மாணவமணிகள் : அறிவாற்றலும், ஞாபகசக்தியும் அதிகரிக்கும். படிப்பில் நல்ல ஈடுபாடு ஏற்படும்.

விவசாயத்துறையினர் : பயிர்கள் செழிக்கும். வருமானம் உயரும். என்றாலும் சனி வக்கிரம் பெற்றிருப்பதால் எதிலும் விழிப்புணர்ச்சி தேவை.

பெண்மணிகள் : வருமானம் சீராக இருக்கும். எனவே குடும்பச் செலவுகளை எளிதில் சமாளித்துவிடலாம். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு முன்னேற்றம்  ஏற்படும்.

அறிவுரை : குடும்பத்தில் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. சனி வக்கிர கதி காலத்தில் எதிலும் விழிப்புணர்ச்சி தேவை.

பரிகாரம் : தடங்கல்கள் நீங்கி, சகல காரியங்களும் நிறைவேற  கீழ்க்கண்ட பாடலை 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

நெற்றிக்கண் உடையானை, நீறுஏறும் திருமேனிக்
குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானை,
பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்று ஏறும் பிரானைப் பேசாதார் பேச்சென்னே.       

- சுந்தரர்

அனுகூல தினங்கள் : ஜன : 31; பிப் : 1, 2, 3
பிரதிகூல தினங்கள் : ஜன : 29, 30; பிப் : 4
அதிர்ஷ்ட எண்கள் : 3, 5

(உத்திராடம் 2-ம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் சூரியன், புதன்; குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன்; தைரிய ஸ்தானத்தில் சந்திரன்; சுக ஸ்தானத்தில் குரு; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது;  அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்; ஜீவன ஸ்தானத்தில் சனி; லாப ஸ்தானத்தில் ராகு. ஷென்ம ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். அஷ்டமத்தில் செவ்வாய். எனவே எதைச்  செய்தாலும் அவசரப்படாமல் தீர யோசித்து பின்னர் செய்வதே நல்லதாகும். உடல்நலனில் கவனம் வேண்டும். மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெறவுள்ளார். இது நல்லதே.  பெண்களால் நன்மைகள் ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார், உறவுமுறை சுமுகமாக இருக்கும்.

உத்தியோகம் : பணியிடத்தில் சிரமங்கள் தொடரக்கூடும். நிர்வாகத்தினர் அதிருப்திக்கு ஆளாகலாம். எனவே பொறுமை தேவை.
தொழில் : தொழிலதிபர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனினும் தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பு எதுவுமிராது. உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனையில் மந்தநிலை தொடரும். லாபம் பாதிக்கப்படும். கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை தரும். வரவேண்டிய பாக்கித் தொகை வசூல் தாமதமாகும்.

கலைத்துறையினர் : எதிர்பார்த்த புதுப்பட வாய்ப்புகள் கைநழுவிப் போகக்கூடும். வருமானம் பாதிக்கப்படும். வசதிகளும் குறையலாம்.

அரசியல்துறையினர் : கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மனவேறுபாடுகள் தொடரக்கூடும். உங்கள் நிலையும் பாதிக்கப்படும். வருமானம் பாதிக்கப்படலாம்.

மாணவமணிகள் : மனதில் நிலவிய சஞ்சலங்கள் நீங்கும். தெளிவான சிந்தனைகள் நிலவும். படிப்பில் ஆர்வம் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : தொழிலில் மந்தநிலை தொடரும். வருமானம் குறையலாம். எதையும் தீர யோசித்த பின்னரே செய்யுங்கள். இந்த வாரம் மண், மனை ஆதாயம்  தராது.

பெண்மணிகள் : வருமானம் ஒரே சீராக இருக்கும். என்றாலும் குடும்பச் செலவுகள் அதிகமாகலாம். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமை தேவை.

அறிவுரை : உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வரவும்.

எண்ணார் தருபயனாய் அயன் அவனாய் மிகுகலையாய்
பண்ணார் தருமுறையாய் உயர்பொருளாய் இறை அவனாய்க்
கண்ணார்தரும் உருவாகிய கடவுள் இடம் எனலாம்
விண்ணோரொடு மண்ணோர் தொழு விரிநீர் வியலூரே.

- சம்பந்தர்

அனுகூல தினங்கள் : ஜன : 29; பிப் : 1, 2
பிரதிகூல தினங்கள் : ஜன : 30, 31; பிப் : 3, 4
அதிர்ஷ்ட எண்கள் : 4, 9

(அவிட்டம் 3-ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் சுக்கிரன்; குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன்; தைரிய ஸ்தானத்தில் குரு; சுக ஸ்தானத்தில் கேது; ஸ்தானத்தில் செவ்வாய்; பாக்கிய ஸ்தானத்தில்  சனி; ஜீவன சப்தம ஸ்தானத்தில் ராகு; விரய ஸ்தானத்தில் சூரியன், புதன். சனி வக்கிர கதியில் சஞ்சரிக்கவிருக்கிறார். இந்தக் காலத்தில் வியாபாரிகளுக்குக் கொடுக்கல் -வாங்கலில் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மகர ராசியில் புதன். பிள்ளைகள் கல்வி,  உடல்நலனுக்கு அதிகம்  செலவாகலாம். ஆடை, ஆபரணங்கள், வீட்டிற்குத் தேவைப்படும் விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றிற்காக பணம் அதிகமாகச் செலவழியும். வீடு மாற்றம், இடமாற்றம் சிலருக்கு ஏற்படும். மீன ராசியில் சுக்கிரன் உச்சம் பெறவுள்ளார். இது நல்லதே. பெற்றோர் ஆரோக்கியம் சீராகும். உற்றார், உறவினர் உதவ முன்வருவர்.

உத்தியோகம் : பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். நிலைமை மேம்படும். நிர்வாகத்தினர் பாராட்டுகள் கிடைக்கும்.

தொழில் : தொழிலில் சிரமங்கள் நீங்கும். தொழில் முன்னேற்றம் நீடிக்கும். உற்பத்தியும், வருமானமும் உயரும். சனி வக்கிர கதியில் சஞ்சரிக்கவிருப்பதால் எச்சரிக்கை  தேவை.

வியாபாரம் : போட்டிகள் குறையும். விற்பனையும், லாபமும் உயரும். என்றாலும் சனி வக்கிரமடையவிருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

கலைத்துறையினர் : திரைப்பட மற்றும் டி.வி. கலைஞர்கள் அதிக ஆதாயம் அடைவார்கள். புதுப்பட வாய்ப்புகள் தேடிவரும். பணவரவு அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : கட்சியில் செல்வாக்கு உயரும். பெயரும், புகழும் ஓங்கும். வருமானமும் உயரும்.

மாணவமணிகள் : மனதில் நிலவிய இனம் தெரியாத குழப்பங்கள் நீங்கும். படிப்பில் மனம் ஈடுபடும்.

விவசாயத்துறையினர் : தொழில் மேம்படும். வருமானம் உயரும். என்றாலும் விழிப்போடு இருப்பது நல்லது.

பெண்மணிகள் : பணவரவு சீராக இருக்கும். என்றாலும் குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். இது குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குக் கவலையைத் தரும்.  வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

அறிவுரை : வீண் செலவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்துவாருங்கள்.

நீ நாளும் நன்நெஞ்சே! நினைகண்டாய் யார் அறிவார்!
சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூநாளும் தலை சுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளும் நவின்று ஏத்த பெறலாமே நல்வினையே.

- சம்பந்தர்

அனுகூல தினங்கள் : ஜன : 29, 30; பிப் : 1, 2, 3
பிரதிகூல தினங்கள் : ஜன : 31; பிப் : 4
அதிர்ஷ்ட எண்கள் : 1, 4

(பூரட்டாதி 4-ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் சந்திரன்; குடும்ப ஸ்தானத்தில் குரு; தைரிய ஸ்தானத்தில் கேது; ருண ஸ்தானத்தில் செவ்வாய்; அஷ்டம ஸ்தானத்தில் சனி; பாக்கிய ஸ்தான த்தில் ராகு; லாப ஸ்தானத்தில் சூரியன், புதன்; விரய ஸ்தானத்தில் சுக்கிரன்; அஷ்டமத்தில் சனி. எந்தக் காரியமென்றாலும் அவசரப்படவேண்டாம். பொறுமையுடன் சிந்தித் துச் செயல்படுங்கள். மகர ராசியில் புதன். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். எடுத்த காரியங்கள் கைகூடும். சிலருக்கு திடீர் தனலாபம் ஏற்படும். மீனத்தில் சுக்கிரன்  உச்சம் பெறுகிறார். வரவு நல்லபடி இருந்தாலும் செலவுகளும் இரட்டிப்பாகும். உடல்நலனிலும் கவனம் வேண்டும்.

உத்தியோகம் : பணியிடத்தில் சிரமங்கள் ஏற்படும். எனவே உடன் உழைப்பவர்களுடன் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.

தொழில் : தொழிலதிபர்களுக்கும் பிரச்சினைகள் தொடரக்கூடும். என்றாலும் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்பில்லை. உங்களது பங்குதாரர்களால் தொல்லைகள் உண் டாகலாம். என்றாலும் வேறு உதவிகள் கிடைக்கும். தொழில் மேலோங்கும். வருமானம் உயரும்.

வியாபாரம் : போட்டிகள் தொடரக்கூடும். விற்பனை அதிகரிக்கும். லாபம் சீராக இருக்கும். என்றாலும் வரவேண்டிய பணம் வருவது தாமதப்படும்.

கலைத்துறையினர் : சினிமா மற்றும் டி.வி. கலைஞர்களுக்குப் பொறுமை தேவை. வாய்ப்புகள் தாமதப்படும். வருமானம் உயரும்.

அரசியல்துறையினர் : கட்சித் தலைமையுடன் மோதல் போக்கு ஏற்படலாம். எனவே உங்கள் நிலைமையும் பாதிக்கப்படும். வருமானமும் சற்று குறையக்கூடும்.

மாணவமணிகள் : மற்றவர் விவகாரங்களில் தலையிட்டு நேரத்தை வீணடிக்காமல் பாடங்களில் முழுகவனம் செலுத்தவும்.

விவசாயத்துறையினர் : பயிர்கள் செழிக்கும். வருமானம் சிறிது அதிகரிக்கும். பூமி, நிலம், வீடு ஆதாயம் தரும்.

பெண்மணிகள் : பணவரவு நன்றாக இருந்துவரும். என்றாலும் செலவுகள் பன்மடங்காகும். இது குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குக் கவலையை அளிக்கும்.  வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பொறுமை தேவை.

அறிவுரை : உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையில்லாத செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.

மிக்கான், மறையாய் விரிந்த விளக்கை, என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை,
தக்கானை கடிகை தடங்குன்றின் மிசை இருந்த
அக்காரக் கனியை அடைந்து உயந்து போனேனே.        

- திருமங்கையாழ்வார்

அனுகூல தினங்கள் : ஜன : 31; பிப் : 2, 3
பிரதிகூல தினங்கள் : ஜன : 29, 30; பிப் : 1, 4
அதிர்ஷ்ட எண்கள் : 2, 7

Current Issue
18-05-2012
Previous Issue
11-05-2012
   
Previous Issues
Please give your valuable feedback on this article/programme
( Examples for tamil font
ammaa = அம்மா, kumutham = குமுதம், vaNakkam = வணக்கம், thamiz = தமிழ் )
Tamil font help    தமிழ் English
Click here for sending feedback to a friend
 
<< Back to Homepage
 

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.