|
 12.9.2010 முதல் 18.9.2010 வரை
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம் : தைரிய ஸ்தானத்தில் கேது; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன்; ருண ஸ்தானத்தில் சனி; சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன், செவ்வாய், சந்திரன்; பாக்கிய ஸ்தானத்தில் ராகு; விரய ஸ்தானத்தில் குரு(வ); சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன், செவ்வாய். வேலை, தொழில் காரணமாக அலைச்சல் அதிகமாகலாம்.உடலும்,உள்ளமும் சோர்வுறக்கூடும்.கணவன்-மனைவியரிடையே கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். தீயவர்களின் நட்பு ஏற்படலாம். அது காரணமாக மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் கண்டுகொள்ளாமல், உதவாமல் இருப்பார்கள். பொருளாதார முடக்கம் ஏற்படலாம். 6-ல் சனி. நோய்கள் நீங்கும். பகைவர் தொல்லைகள் மறையும். வேலை, தொழிலில் நல்ல மேன்மை உண்டாகும். வம்பு, வழக்குகளில் நல்ல தீர்வு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.
உத்தியோகம்:பதவி உயர்வும்,ஊதிய உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.
 தொழில் : தொழில்துறையினருக்கு மேன்மை உண்டாகும். உற்பத்தி உயரும். பொருளாதார நிலை உயரும்.
வியாபாரம் : வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வருமானம் உயரும்.
கலைத்துறையினர் : உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம். வருமானம் உயரும்.
அரசியல்துறையினர் : இந்த வாரமும் மனதில் குழப்பங்கள் நீடிக்கலாம். எனவே பொறுமை தேவை. வருமானம் சற்று குறையலாம்.
மாணவமணிகள் : படிப்பில் நாட்டம் ஏற்படும்.
விவசாயத்துறையினர்:தொழிலில் காணப்பட்ட தேக்கநிலை தொடரக்கூடும். வருமானம் பாதிக்கப்படலாம்.
பெண்மணிகள் :குடும்ப வருமானம் திருப்தி தரும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமை தேவை.
அறிவுரை : குடும்பத்தில் ஒற்றுமை தேவை.
பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.
மாய னென் னெஞ்சி னுள்ளான் மற்றும் யவர்க்கும் அதுவே, காயமும் சீவனும் தானே காலு மெரியும் அவனே சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் சோசர மல்லன் தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே.
- திருவாய்மொழி
அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 12, 16, 17, 18 பிரதிகூல தினங்கள் : செப்டம்பர் : 13, 14, 15 அதிர்ஷ்ட எண்கள் : 4, 5
 (கிருத்திகை 2-ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் வரை)
குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் கேது; சுக ஸ்தானத்தில் சூரியன், புதன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி; ருண ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சந்திரன்; அஷ்டம ஸ்தானத்தில் ராகு; லாப ஸ்தானத்தில் குரு(வ); எட்டில் ராகு. எடுக்கும் காரியங்கள் தாமதப்படும். நெருங்கிய உறவினர்களிடையே பிரிவு இருக்கும். இடமாற்றம் ஏற்படலாம். வேலை, தொழிலில் தேக்கம் ஏற்படலாம். வண்டி, வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது.குடும்பத்தில் நிம்மதி குறையும். 5-ல் சனியும் நன்மையைத் தராது. பிள்ளைகளால் சங்கடங்கள் உண்டாகும். தீய எண்ணங்கள் ஏற்படலாம். 6-ல் செவ்வாய். நன்மைகள் ஏற்படும். நோய்கள் நீங்கும். வேலை, தொழில் மேம்படும்.
உத்தியோகம் : வேலையில் உள்ளவர்களுக்கு அவ்வப்போது பிரச்சினைகள் எழக்கூடும்.எனினும் செவ்வாய் ருண ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நிலைமையில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.
தொழில் :தொழிலிலும் கூட்டாளிகளால் தொல்லைகள் ஏற்படலாம். எனினும் தொழிலுக்குப் பொருளாதார உதவிகள் கிடைக்கும். வருமானம் உயரும்.
வியாபாரம் : விற்பனை மேம்படும். லாபம் உயரும்.
கலைத்துறையினர் : 6-ல் சுக்கிரன் நன்மையைத் தராது. பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும்.எனினும் சில வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் சற்று உயரும்.
அரசியல்துறையினர் : பொறுமை தேவை. எனினும் வருமானம் சீராக இருக்கும். மாணவமணிகள் : படிப்பில் நல்ல நாட்டம் ஏற்படும்.
விவசாயத்துறையினர் : கிரகநிலைகள் அனுகூலம். எனவே தொழில் மேம்படும். வருமானம் உயரும்.
பெண்மணிகள் : குடும்ப வருமானம் உயரும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு மேன்மை உண்டாகும்.
அறிவுரை : 1-ல் கேது; 4-ல் சூரியன்; 5-ல் சனி; 7-ல் செவ்வாய், சுக்கிரன்; 8-ல் ராகு. எனவே பொறுமையும், நிதானமும் அவசியம்.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.
முன்நல் யாழ்பயில்நூல் நாம்பின் முதிர் சுவையே, பன்ன லார்பயிலும் பரனே! பவித்திரனே, கன்னலே! அமுதே! கார்முகிலே! என் கண்ணா! நின்னலா லிலேன்கா ணென்னை நீ குறிகொள்ளே.
- திருவாய்மொழி
அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 12 13, 14, 18 பிரதிகூல தினங்கள் : செப்டம்பர் : 15, 16, 17 அதிர்ஷ்ட எண்கள் : 1, 2
 (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் வரை)
குடும்பம் : ஜென்ம ராசியில் கேது; தைரிய ஸ்தானத்தில் சூரியன், புதன்; சுக ஸ்தானத்தில் சனி; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சந்திரன்; சப்தம ஸ்தானத்தில் ராகு; ஜீவன ஸ்தானத்தில் குரு(வ); 1-ல் கேது; 7-ல் ராகு. உடல்நலன் பாதிக்கப்படும். வேலை, தொழிலில் தேக்கம் காணப்படும். வலுக்கட்டாயமான இடமாற்றம் ஏற்படலாம். உற்றார், உறவினரிடையே பிரிவு ஏற்படும். கணவன், மனைவியரிடையே சண்டை, சச்சரவும் பிரிவும் ஏற்படும். தீயவர்களின் நட்பு ஏற்படும். ஊர் மாற்றம் ஏற்படலாம். 4-ல் சனியும் நல்லதல்ல.
உத்தியோகம் : 1-கேது; 4-ல் சனி; 5-ல் செவ்வாய்; 7-ல் ராகு. எனவே பொறுமை வேண்டும்.
தொழில் : தொழில் துறையினருக்குப் பிரச்சினைகள் ஏற்படலாம். எனினும் தொழில் பாதிக்கப்படாது. வருமானம் உயரும்.
வியாபாரம் : விற்பனையும், லாபமும் உயரும்.
கலைத்துறையினர் : சுக்கிரன் அனுகூலமாகச் சஞ்சரிக்கிறார். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். நண்பர்கள் உதவ முன்வருவர். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும், வசதிகளும் அதிகரிக்கும்.
அரசியல்துறையினர் : கட்சியில் செல்வாக்கும், மதிப்பும் உயரும். வருமானம் உயரும். வசதிகளும் அதிகரிக்கும்.
மாணவமணிகள் : படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
விவசாயத்துறையினர் : தொழிலில் தேக்கநிலை காணப்படும். வருமானம் பாதிக்கப்படலாம்.
பெண்மணிகள்:குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமை தேவை.
அறிவுரை : செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வரவும்.
ஆரா அமுதமாய் அல்லாவி யுள்கலந்த, காரார் கருமுகில்போல் என்னம்மான் கண்ணனுக்கு, நேராவாய் செம்பவளம் கண்பாதம் கைகமலம், பேரார நீண்முடிநாண் பின்னும் இழை பலவே.
- திருவாய்மொழி
அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 15, 16, 17 பிரதிகூல தினங்கள் : செப்டம்பர் : 12, 13, 14, 18 அதிர்ஷ்ட எண்கள் : 3, 6
 (புனர்பூசம் 4-ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)
குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன்; தைரிய ஸ்தானத்தில் சனி; சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சந்திரன்; ருண ஸ்தானத்தில் ராகு; பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ); விரய ஸ்தானத்தில் கேது; 3-ல் சனி. நன்மை தரும். உடல்நலன் சீராகும். வேலை, தொழிலில் விருத்தி உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும்.எதிர்பாராத பணவரவு ஏற்படும்.பகைவர் தொல்லைகள் குறையும். சகோதரர், சகோதரிகளுடன் திருப்தி இருக்காது. 2-ல் சூரியன், புதன். முன்கோபமும், எரிச்சலான பேச்சும் தோன்றக்கூடும், அதைத் தவிர்க்கவேண்டும்.குடும்பத்திலும் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
உத்தியோகம் : வேலையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும்.
தொழில் : தொழில் சிறக்கும். உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.
வியாபாரம் : விற்பனை அதிகரிக்கும். லாபம் உயரும்.
கலைத்துறையினர் :சுக்கிரன் சுபமாகச் சஞ்சரிப்பதால் தொழில் மேம்படும். கலைஞர்கள் ஆதாயம் அதிகம் அடைவார்கள்.நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் உயரும்.
அரசியல்துறையினர் : பொறுமையும், நிதானமும் வேண்டும். எனினும் வருமானம் சீராக இருக்கும்.
மாணவமணிகள் : படிப்பில் நல்ல முன்னேற்றமிருக்கும்.
விவசாயத்துறையினர் : தொழிலில் காணப்பட்ட மந்தநிலை நீடிக்கும். வருமானம் பாதிக்கப்படலாம்.
பெண்மணிகள் :குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பணியில் மேன்மை உண்டாகும்.
அறிவுரை : வேண்டாத செலவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.
பொலிக பொலிக பொலிக! போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை, கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல், மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம். - திருவாய்மொழி
அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 15, 16, 17, 18 பிரதிகூல தினங்கள் : செப்டம்பர் : 12, 13, 14 அதிர்ஷ்ட எண்கள் : 7, 9
 (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குடும்பம் : ஜென்ம ராசியில் சூரியன், புதன்; குடும்ப ஸ்தானத்தில் சனி; தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சந்திரன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு; அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ); லாப ஸ்தானத்தில் கேது; குடும்ப ஸ்தானத்தில் சனி. வேலை, தொழிலில் சிரமங்கள் ஏற்படக்கூடும். செலவுகள் பன்மடங்காகும். முன்கோபமும், கடுகடுப்பான பேச்சும் ஏற்படக்கூடும். பேச்சிலும் நிலையான தன்மை இராது. திருட்டுப் பயம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இராது. வீண் மனஸ்தாபமும் ஏற்படும். செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பது நல்லதே. பூமி, மண், மனை இவற்றால் ஆதாயம் ஏற்படும்.அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். வேலை, தொழில் மேம்படும்.
உத்தியோகம் : பணியில் ஏற்பட்ட சிரமங்கள் குறைந்துவரும். நிலைமை மேம்படும்.
தொழில் : தொழிலிலும் பிரச்சினைகள் குறைந்துவரும். பொருளாதார உதவிகள் கிடைக்கும். எனவே உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.
வியாபாரம் : விற்பனை மேம்படும். வருமானம் அதிகரிக்கும்.
கலைத்துறையினர் :சுக்கிரன் அனுகூலம். எனவே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் உயரும்.
அரசியல்துறையினர் : பொறுமையோடும், நிதானத்தோடும் இருக்கவேண்டியது அவசியம். என்றாலும் வருமானம் பாதிக்கப்படாது.
மாணவமணிகள் : படிப்பில் நல்ல நாட்டம் ஏற்படும்.
விவசாயத்துறையினர் : செவ்வாய் அனுகூலம். எனவே தொழில் மேம்படும். வருமானம் உயரும்.
பெண்மணிகள்:குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பணியில் ஏற்படும் மாற்றங்கள் நன்மை தரும்.
அறிவுரை : 1-ல் சூரியன்; 2-ல் சனி; 5-ல் ராகு; 8-ல் குரு. எனவே பொறுமை தேவை.
பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.
கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை எடுத்தவன் முடித்தலைகள் பத்துமிகு தோளும் அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட நடத்தகல வைத்திரள்கள் வைகியநள்ளாறே.
- திருஞானசம்பந்தர்.
அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 13, 14, 15, 16 பிரதிகூல தினங்கள் : செப்டம்பர் : 12, 17, 18 அதிர்ஷ்ட எண்கள் : 1, 3
 (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் வரை)
குடும்பம் : ஜென்ம ராசியில் சனி; குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சந்திரன்; சுக ஸ்தானத்தில் ராகு; சப்தம ஸ்தானத்தில் குரு(வ); ஜீவன ஸ்தானத்தில் கேது; விரய ஸ்தானத்தில் சூரியன், புதன்; 12-ல் சூரியன், புதன்; வேலை, தொழிலில் தேக்கத்தை ஏற்படுத்தும். வருமானம் தடைபடும். செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். ஜென்மச்சனியால் உடற்சோர்வும், மனத்தளர்ச்சியும் ஏற்படும். எனவே, வேலை,தொழிலில் கவனம் செல்லாது.எடுக்கும் காரியங்கள் பாதியிலேயே நின்றுபோகும். தீய நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். பகைவர் தொல்லையும்,நெருங்கிய உறவினருடன் மனவேறுபாடும் ஏற்படும். ஊர்மாற்றம் நிகழலாம்.
உத்தியோகம் : ஏழரைச்சனியில் ஜென்மச்சனி. எனவே எந்தக் காரியமென்றாலும் அவசரப்படக்கூடாது. பொறுமையுடன் சிந்தித்து பின்னர் செயல்பட வேண்டும்.
தொழில் : தொழிலில் பங்குதாரர்கள் தொல்லை தருவார்கள். தொழில் பாதிக்கப்படாது. உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.
வியாபாரம் : விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.
கலைத்துறையினர் :கலைஞர்கள் அதிக ஆதாயம் அடைவார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் உயரும்.
அரசியல்துறையினர் : பொறுமை வேண்டும். உட்கட்சிப் பிரச்சினைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்.
மாணவமணிகள் : படிப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
விவசாயத்துறையினர் : தொழிலில் மந்தநிலை தொடரும். வருமானம் பாதிக்கப்படும். மண், மனை இவற்றால் ஆதாயமிராது.
பெண்மணிகள் :குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமை தேவை.
அறிவுரை : 1-ல் சனி; 2-ல் செவ்வாய்; 4-ல் ராகு; 10-ல் கேது; 12-ல் சூரியன். இவ்வாறு முக்கியக் கிரகங்கள் அனுகூலமில்லை. எனவே பொறுமை தேவை.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.
நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும் ஓதியரன் நாமமு முணர்த்திடுநள் ளாறே. - திருஞானசம்பந்தர்.
அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 12, 13, 14 பிரதிகூல தினங்கள் : செப்டம்பர் : 15, 16, 17, 18 அதிர்ஷ்ட எண்கள் : 2, 4
 (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் வரை)
குடும்பம் : ஜென்ம ராசியில் செவ்வாய், சுக்கிரன், சந்திரன்; தைரிய ஸ்தானத்தில் ராகு; ருண ஸ்தானத்தில் குரு(வ); பாக்கிய ஸ்தானத்தில் கேது; லாப ஸ்தானத்தில் சூரியன், புதன்; விரய ஸ்தானத்தில் சனி; லாப ஸ்தானத்தில் சூரியன், புதன்; உடல்நலன் சீர்படும். அரசாங்கத்தின் உதவியும், பெரியோர் தொடர்பும், அதனால் செய்தொழிலுக்கு ஆதாயமும் ஏற்படும். வேலை, தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு லாபம் பெருகும். பலவகையிலும் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பணவரவு கிடைக்க வழிகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்-மனைவி உறவு அனுகூலமாக இருக்கும். 12-ல் சனி நன்மையைத் தராது. செலவினங்கள் பன்மடங்கு அதிகரிக்கும்.எடுக்கும் காரியங்களில் தேக்கமும், வருமான பாதிப்பும் ஏற்படலாம். வம்பு, வழக்குகளில் சாதகமான போக்கு தென்படவில்லை.
உத்தியோகம் :பதவியில் உயர்வும்,சம்பள உயர்வும் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தொழில் :தொழில்துறையினருக்கு செலவுகள் மிகவும் அதிகரிக்கும். எனினும் தொழில் முன்னேற்றம் பாதிக்கப்படாது.உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.
வியாபாரம் : விற்பனையும், லாபமும் பெருகும்.
கலைத்துறையினர் : கலைஞர்களுக்குப் புதிதாக தயாராகும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிவரும். வருமானம் உயரும்.
அரசியல்துறையினர் : செல்வாக்கு உயரும். வருமானம் உயரும்.
மாணவமணிகள் : படிப்பில் நல்ல நாட்டம் ஏற்படும்.
விவசாயத்துறையினர் : தொழிலில் தேக்கநிலை தென்படும். ஆகவே பணவரவு பாதிக்கப்படும்.
பெண்மணிகள் :குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அறிவுரை : அதிகரித்துவரும் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள். நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார் வஞ்சம தறுத்தருள மற்றவனை வானோர் அஞ்சமுது காகியவர் கைதொழ எழுந்த நஞ்சமுது செய்தவ னிருப்பிடநள் ளாறே. - திருஞானசம்பந்தர்.
அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 15, 16, 17 பிரதிகூல தினங்கள் : செப்டம்பர் : 12, 13, 14, 18 அதிர்ஷ்ட எண்கள் : 5, 6
 (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் ராகு; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ); அஷ்டம ஸ்தானத்தில் கேது; ஜீவன ஸ்தானத்தில் சூரியன், புதன்; லாப ஸ்தானத்தில் சனி; விரய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சந்திரன்; 10-ல் சூரியன். நன்மைகளை அளிக்கவல்லது. வேலை மற்றும் தொழிலில் அபிவிருத்தியும், வருமானப் பெருக்கமும் ஏற்படும். பெண்களால் நன்மைகள் உண்டாகும்.ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நினைப்பது நிறைவேறும்.எடுக்கும் காரியங்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.புதனும் நன்மை தரும் விதத்தில் அமைந்துள்ளது.புதிய தொழில்களையும் தொடங்கலாம். கணவன்-மனைவி உறவு சுமுகமாக இருக்கும். உடல்நலனும் மேம்படும். 11-ல் சனி. வேலை, தொழில் மேம்படும்.வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை கிடைக்கும். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும். இதுவும் நல்லதே. பணவரவு பல வழிகளிலும் இருக்கும்.
உத்தியோகம் : பணியில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். நிர்வாகத்தினர்கள் பாராட்டுகளும் கிடைக்கும்.
தொழில் : புதிய பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் உயரும்.
வியாபாரம் : விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.
கலைத்துறையினர் :திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் ஆதாயம் பெறுவார்கள். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் உயரும்.
அரசியல்துறையினர் : கட்சியில் செல்வாக்கு உயரும். வருமானம் சீராக இருக்கும்.
மாணவமணிகள் : படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
விவசாயத்துறையினர் :12-ல் செவ்வாய். செலவுகள் பன்மடங்காகும். தொழிலில் நிலவிய பின்னடைவு தொடரும். வருமானம் பாதிக்கப்படும்.
பெண்மணிகள் :குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அறிவுரை : செலவினங்கள் அதிகரிக்கும்.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.
அருளா தொழிவாய் அருள்செய்து, அடியேனைப் பொருளாக்கி யுன்பொன் னடிக்கீழ் புகவைப்பாய், மருளேயின்றி உன்னை என்னெஞ்சத் திருத்தும் தெருளே தருதென் திருநாவாய் என்தேவே!
- திருவாய்மொழி.
அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 12, 13, 14, 15 பிரதிகூல தினங்கள் : செப்டம்பர் : 16, 17, 18 அதிர்ஷ்ட எண்கள் : 4, 9
 (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் வரை)
குடும்பம் : ஜென்ம ராசியில் ராகு; சுக ஸ்தானத்தில் குரு(வ); சப்தம ஸ்தானத்தில் கேது; பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன்; ஜீவன ஸ்தானத்தில் சனி; லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சந்திரன்; செவ்வாய் 11-ல். தொழிலில் முன்னேற்றமும், வருமானப் பெருக்கமும் ஏற்படும். எதிர்பாராத பணவரவு இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். புத்திரர்களால் மகிழ்ச்சி ஏற்படும். உடல்நலன் சீராக இருக்கும். தொட்டது துலங்கும்.யோக பலன்கள் நடக்கும்.லாபம் பெருகும். பெண்களால் நன்மைகள் உண்டாகும்.
உத்தியோகம் : 1-ல் ராகு; 7-ல் கேது; 9-ல் சூரியன்; 10-ல் சனி. இடமாற்றம் ஏற்படலாம். அலுவலகத்தில் சிரமங்கள் ஏற்படும். என்றாலும் செவ்வாய், சுக்கிரன் அனுகூலம். எனவே நிலைமை மேம்படும்.
தொழில் : தொழில்துறையினருக்குச் சிரமங்கள் ஏற்படும். தொழிலுக்குப் பொருளாதார உதவிகள் கிடைக்கும். வருமானம் உயரும்.
வியாபாரம் : விற்பனையும், லாபமும் பெருகும்.
கலைத்துறையினர் : கலைஞர்கள் ஆதாயம் பெறுவர். வருமானம் உயரும்.
அரசியல்துறையினர் :அரசியலில் உள்ளவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.உட்கட்சிக் குழப்பங்களால் உங்கள் நிலை பாதிக்கப்படும். என்றாலும் வருமானம் சீராக இருக்கும்.
மாணவமணிகள் : படிப்பில் நல்ல நாட்டம் ஏற்படும்.
விவசாயத்துறையினர் : 11-ல் செவ்வாய். நன்மைகள் அதிகரிக்கும். தொழில் மேம்படும். வருமானம் சிறக்கும்.
பெண்மணிகள் :குடும்ப வருமானம் திருப்தி தரும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மேம்பாடு உண்டாகும்.
அறிவுரை : தேவையற்ற செலவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.
பரிகாரம் : தடங்கல்கள் நீங்கி, சகல காரியங்களும் நிறைவேற கீழ்க்கண்ட பாடலை 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.
அல்ல லென்செயும் அருவினை யென்செயும் தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும் தில்லை மாநகர் சிற்றம் பலவனார்க் கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.
- திருநாவுக்கரசர்.
அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 14, 15, 16 பிரதிகூல தினங்கள் : செப்டம்பர் : 12, 13, 17, 18 அதிர்ஷ்ட எண்கள் : 1, 7
 (உத்திராடம் 2-ம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் வரை)
குடும்பம் : தைரிய ஸ்தானத்தில் குரு(வ); ருண ஸ்தானத்தில் கேது; அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன்; பாக்கிய ஸ்தானத்தில் சனி; ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சந்திரன்; விரய ஸ்தானத்தில் ராகு; 9-ல் சனி; தந்தையின் உடல்நலன் பாதிக்கப்படலாம். உங்கள் உடல்நலனிலும் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். வேலை, தொழிலில் தடைகள் ஏற்படலாம். வருமானம் குறையும். பகைவர் தொல்லைகள் அதிகரிக்கும். எட்டில் சூரியனும் நன்மை தராது. மனைவி, மக்களுடன் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். வேலை, தொழிலில் பிரச்சினைகள் ஏற்படலாம். வண்டி,வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
உத்தியோகம் :வேலையில் உள்ளவர்களுக்குச் சிரமங்கள் தோன்றும். ஆயினும் செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
தொழில் : தொழில்துறையினருக்கும் சிரமங்கள் ஏற்படக்கூடும். என்றாலும் தொழில் முன்னேற்றம் நீடிக்கும். வருமானம் உயரும்.
வியாபாரம் : விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.
கலைத்துறையினர் : செய்தொழில் சிறக்கும். கலைஞர்கள் அதிக ஆதாயம் பெறுவார்கள்.புதிதாகத் தயாராகிவரும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிவரும். வருமானம் உயரும்.
அரசியல்துறையினர் :கட்சியில் ஏற்படும் குழப்பங்களால் உங்கள் நிலையும் பாதிக்கப்படும். என்றாலும் வருமானம் பாதிக்கப்படாது.
மாணவமணிகள் : படிப்பில் நல்ல நாட்டம் ஏற்படும்.
விவசாயத்துறையினர் : தொழிலில் நல்ல மேம்பாடு இருக்கும். வருமானப் பெருக்கமும் ஏற்படும்.
பெண்மணிகள் : குடும்ப வருமானம் பெருகும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
அறிவுரை : பொறுமையும், நிதானமும் வேண்டும்.
பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வரவும்.
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே. - திருநாவுக்கரசர்.
அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 12, 13, 14, 18 பிரதிகூல தினங்கள் : செப்டம்பர் : 15, 16, 17 அதிர்ஷ்ட எண்கள் : 2, 6
 (அவிட்டம் 3-ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் வரை)
குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் குரு(வ); பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது; சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன்; அஷ்டம ஸ்தானத்தில் சனி; பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சந்திரன்; ஜீவன ஸ்தானத்தில் ராகு; ஐந்தாமிடத்தில் கேது. மனைவி, குழந்தைகளால் பெரிதும் கவலைக்குள்ளாக நேரிடும்.புத்திரர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பகைவர் தொல்லைகள் அதிகரிக்கும். வேலை, தொழிலில் சிரமம் உண்டாகும். வருமானம் குறையும். செலவுகள் அதிகரிக்கும். 7-ல் சூரியன். அலைச்சலும்,ஆரோக்கியக் குறைவும் உண்டாகும்.உடல்நலன் பாதிக்கப்படும். கணவன்-மனைவியரிடையே மனக்குழப்பங்கள் தோன்றும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும்.
உத்தியோகம் : 8-ல் சனி. எனவே பொறுமையோடிருக்க வேண்டிய நேரமிது. வேலையில் தவறுகள் நேரலாம். எனவே எச்சரிக்கை தேவை.
தொழில் : தொழில்துறையினருக்கு சிரமங்கள் தோன்றக்கூடும். எனினும் தொழில் முன்னேற்றம் தொடரும். உற்பத்தியும், வருமானமும் பெருகும்.
வியாபாரம் : விற்பனை பெருகும். லாபம் உயரும்.
கலைத்துறையினர் : கலைஞர்களுக்குத் தேவை பொறுமை. ஏனெனில் எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வராமல் தள்ளிப் போகலாம். வருமானம் பாதிக்கப்படலாம்.
அரசியல்துறையினர் : அரசியல்வாதிகளுக்கு பொறுமையும், நிதானமும் வேண்டும். வருமானமும் குறையக்கூடும்.
மாணவமணிகள் : படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
விவசாயத்துறையினர் : தொழிலில் இதுவரை நிலவிவந்த மந்தநிலை தொடரக்கூடும். வருமானம் குறையும்.
பெண்மணிகள் :குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமை மிகவும் அவசியம்.
அறிவுரை : 5-ல் கேது; 7-ல் சூரியன்; 8-ல் சனி; 9-ல் செவ்வாய். முக்கிய கிரகங்கள் அனுகூலம் இல்லை.எனவே மிகுந்த பொறுமையும், நிதானமும் வேண்டும்.
பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்துவாருங்கள்.
ஓத மால்கடல் பாவி யுலகெலாம் மாத ரார்வலங் கொண்மறைக் காடரைக் காதல் செய்து கருதப் படுமவர் பாத மேத்த பறையும்நம் பாவமே.
- திருநாவுக்கரசர்.
அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 12, 13, 14, 18 பிரதிகூல தினங்கள் : செப்டம்பர் : 15, 16, 17 அதிர்ஷ்ட எண்கள் : 4, 5
 (பூரட்டாதி 4-ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம் : ஜென்ம ராசியில் குரு(வ); சுக ஸ்தானத்தில் கேது; ருண ஸ்தானத்தில் சூரியன், புதன்; சப்தம ஸ்தானத்தில் சனி; அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சந்திரன்; ஜீவன ஸ்தானத்தில் ராகு; குரு, கேது, சனி, செவ்வாய், ராகு அனுகூலமாக அமையவில்லை. 8-ல் செவ்வாய். மனதில் பயமும், எந்த நேரத்தில் என்ன நேர்ந்துவிடுமோ என்ற அச்சமும் இருந்துவரும். வண்டி, வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வது அவசியம். பகைவர் தொல்லை மிகுந்திருக்கும். உடல்நலன் பாதிக்கப்படலாம்.7-ல் சனியும் நன்மையை அளிக்காது. கணவன்-மனைவியரிடையே கருத்து வேறுபாடுகளும் சில தருணங்களில் பிரிவினையும் ஏற்படலாம். வேலை, தொழிலில் பின்னடைவும், வருமான பாதிப்பும் ஏற்படும். பணக்கஷ்டமும், கடன் தொல்லையும் ஏற்படும். கெட்ட நண்பர்களின் சேர்க்கை வேதனை தரும்.பிள்ளைகளால் வேதனை உண்டாகும்.
உத்தியோகம் : வேலையில் உள்ளவர்களுக்குப் பொறுமை தேவை.
தொழில் :தொழில்துறையினருக்கும் பிரச்சினைகள் ஏற்படும். தேவைப்படும் நிதி உதவிகளும் தக்க சமயத்தில் கிடைக்காமல் தாமதப்படும்.
வியாபாரம் : விற்பனையும், லாபமும் குறையும்.
கலைத்துறையினர் : கலைஞர்கள் பொறுமை காக்கவேண்டும். எனவே வருமானம் பாதிக்கப்படும்.
அரசியல்துறையினர் : கட்சியில் பிரச்சினைகள் இருந்துவரும். உங்கள் நிலைமையிலும் பாதிப்பு ஏற்படும். வருமானம் பாதிக்கப்படும்.
மாணவமணிகள் : படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விவசாயத்துறையினர் :தொழிலில் காணப்பட்ட மந்தநிலை தொடரக்கூடும். வருமானம் குறையும்.
பெண்மணிகள் : குடும்ப வருமானம் குறையும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமை தேவை.
அறிவுரை : மனைவியின் உடல்நலனில் கவனம் தேவை.
பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.
தலைமேல் புனைந்தேன் சரணங்கள், ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க, மலைமேல்தான் நின்றென் மனத்து ளிருந்தானை நிலைபேர்க்க லாகாமை நிச்சித் திருந்தேனே.
- திருவாய்மொழி.
அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 15, 16, 17 பிரதிகூல தினங்கள் : செப்டம்பர் : 12, 13, 14, 18 அதிர்ஷ்ட எண்கள் : 3, 6 |