Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61
Kumudam.com, Kumudam Jothidam - ராசி பலன்கள்

Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Kumudam Welcomes U
          Magazine
Kumudam Jothidam
தலையங்கம்
சிறப்புக் கட்டுரை
கேள்வி பதில்
ராசி பலன்கள்
மற்றவை
 
 10.09.10    ராசி பலன்கள்

5.9.2010 முதல் 11.9.2010 வரை

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)


குடும்பம் : தைரிய ஸ்தானத்தில் கேது; சுக ஸ்தானத்தில் சந்திரன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன்; ருண ஸ்தானத்தில் சனி; சப்தம ஸ்தானத்தில் செவ்வாய்,  சுக்கிரன்; பாக்கிய ஸ்தானத்தில் ராகு; விரய ஸ்தானத்தில் குரு(வ);சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன்.மனைவியின் உடல்நலனில் கவனம் வேண்டும். அதற்காக பணம்  செலவாகும் அல்லது மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகும் அல்லது மனைவியை விட்டுப் பிரிய நேரிடும்.கெட்ட நண்பர்கள் சேர்க்கை வேதனை தரும். மனதில்  இனம் தெரியாத பயம் ஏற்படும். வீண் அலைச்சல் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. நிம்மதி குறையலாம்.

உத்தியோகம்:பதவி உயர்வும்,ஊதிய உயர்வும் கிடைக்கும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும்.



தொழில்:தொழிலதிபர்களுக்குச் செலவுகள் அதிகரித்த நிலையிலேயே இருக்கும்.என்றாலும் முன்னேற்றம் நீடிக்கும்.வருமானம் சீராக இருக்கும்.

வியாபாரம் : விற்பனை மேலோங்கும். லாபம் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் : சுக்கிரன் 7-ல். எனவே பட வாய்ப்புகள் தாமதப்படும். வருமானமும் சற்று குறையலாம்.

அரசியல்துறையினர்:மனதில் குழப்பங்கள் நீடிக்கும்.எனவே பொறுமையுடன் செயல்பட வேண்டும். வருமானமும் சற்று குறையலாம்.

மாணவமணிகள் : படிப்பில் நல்ல நாட்டம் ஏற்படும்.

விவசாயத்துறையினர்:7-ல்செவ்வாய்.தொழிலில்தேக்கநிலை தென்படலாம். வருமானம் பாதிக்கப்படலாம். மண், மனை இவற்றால் ஆதாயமிராது.

பெண்மணிகள்:குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பணியிடத்தில் மேன்மை ஏற்படும்.

அறிவுரை:உடல்நலனில் கவனம் தேவை.வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

‘ஆவியே! அமுதே’ என நினைந்துருகி
அவரவர் பணைமுலை துணையா
பாவியே னுணரா தெத்தனை பகலும்
பழுது போயொழிந்தன நாள்கள்,
தூவிசே ரன்னம் துணையொடும் புணரும்
சூழ்புனல் குடந்தையே தொழுது, என்
நாவினா லுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம். 

- பெரிய திருமொழி

அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 5, 6, 7, 11
பிரதிகூல தினங்கள் :  செப்டம்பர் : 8, 9, 10
அதிர்ஷ்ட எண்கள் : 4, 6


(கிருத்திகை 2-ம் பாதம் முதல், ரோகிணி,மிருகசீரிஷம் 2-ம் பாதம் வரை)

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் கேது; தைரிய ஸ்தானத்தில் சந்திரன்; சுக ஸ்தானத்தில் சூரியன், புதன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி; ருண ஸ்தானத்தில் செவ்வாய்,  சுக்கிரன்; அஷ்டம ஸ்தானத்தில் ராகு; லாப ஸ்தானத்தில் குரு(வ); 5-ல் சனி. பெண்கள், பிள்ளைகளால் வேதனை அனுபவிக்க நேரிடும். மனம் ஒருநிலையில் இருக்காது. தீய  எண்ணங்கள் மனதில் அலைமோதும். மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை,சச்சரவுகள் மிகுந்திருக்கும். 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது நல்லதே. மனதில்  உற்சாகம் மிகும். பகைவர் பணிந்து போவர். நோய்கள் நீங்கும். தொழிலில், உத்தியோகத்தில் விருத்தி உண்டாகும். வருமானம் பெருகும்.

உத்தியோகம் :வேலையில் உள்ளவர்களுக்குச் சிரமங்கள் தோன்றக்கூடும். என்றாலும் வேலைக்குப் பாதிப்பேற்படாது. செவ்வாய் 6-ல் மாறியுள்ளதால் நிலைமை மேம்படும்.

தொழில் :தொழில் பங்குதாரர்களால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். என்றாலும் தொழிலுக்கு உதவிட முன்வருவர். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் : சுக்கிரன் துலாத்திற்கு மாறியிருக்கிறார். எனவே, ஓரிரு வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும்.

அரசியல்துறையினர் : கட்சியில் தலைவர்களிடையே செல்வாக்கு ஓங்கும். வருமானம் சீராக இருந்துவரும்.

மாணவமணிகள் : படிப்பில் நல்ல நாட்டம் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : கிரகநிலைகள் சாதகமாக உள்ளன. எனவே மண், மனை இவற்றால் ஆதாயம் ஏற்படும். தொழில் மேம்படும். வருமானம் உயரும்.

பெண்மணிகள் :குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு நிலைமையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

அறிவுரை : 8-ல் ராகு. உடல்நலனில் கவனம் தேவை.

பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ,
நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான்,
அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே.

      - திருவாய்மொழி

அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 5, 6, 10, 11
பிரதிகூல தினங்கள் :  செப்டம்பர் : 7, 8, 9
அதிர்ஷ்ட எண்கள் : 1, 3


(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் கேது; குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்; தைரிய ஸ்தானத்தில் சூரியன், புதன்; சுக ஸ்தானத்தில் சனி; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய்,  சுக்கிரன்; சப்தம ஸ்தானத்தில் ராகு; ஜீவன ஸ்தானத்தில் குரு(வ); சூரியன் தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நன்மை தரும். இதுவரை பாதியில் நின்றுபோன காரியங்கள்  நிறைவேறும். தந்தையின் உடல்நலன் மேம்படும். நான்கில் சனி நன்மையைத் தராது. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் பிரிவு ஏற்படும்.  வீடு, சொத்து, வாகனம் ஆகியவற்றால் பிரச்சினைகளும், செலவுகளும் ஏற்படும். உறவினர்களுடனான உறவுமுறை சுமுகமாக இராது. கல்வியில் தடை ஏற்படலாம்.

உத்தியோகம் : 1-ல் கேது; 4-ல் சனி. எதையும் பொறுமையுடன் செய்யவேண்டும்.

தொழில் : தொழிலதிபர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனினும் தொழில் முன்னேற்றம் நீடிக்கும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் :சுக்கிரன் சுபமாகச் சஞ்சரிக்கிறார்.வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் உயரும்.

அரசியல்துறையினர் : கட்சியில் செல்வாக்கு ஓங்கும்.வருமானம் உயரும்.

மாணவமணிகள் : சனியின் நிலை சாதகமில்லை. எனவே கூடுதல் கவனமும், எச்சரிக்கையும், கடின உழைப்பும் தேவை.

விவசாயத்துறையினர் : தொழிலில் தேக்கநிலை தென்படும். வருமானம் குறையும்.

பெண்மணிகள்:குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும். பெண்மணிகளுக்குப் பொறுமை தேவை.

அறிவுரை : செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். உடல்நலனில் கவனம் கொள்ளுங்கள்.

பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வரவும்.

தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துது மோத்தூர்
நாட்டீ ரேயருள் நல்குமே.

              - திருஞானசம்பந்தர்.

அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 8, 9, 10
பிரதிகூல தினங்கள் :  செப்டம்பர் : 5, 6, 7, 11
அதிர்ஷ்ட எண்கள் : 2, 5


(புனர்பூசம் 4-ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் சந்திரன்; குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன்; தைரிய ஸ்தானத்தில் சனி; சுக ஸ்தானத்தில் சுக்கிரன், செவ்வாய்; ருண ஸ்தானத்தில் ராகு;  பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ); தைரிய ஸ்தானத்தில் சனி. உடல்நலன் நன்றாக இருக்கும். வேலை, தொழிலில் விருத்தி உண்டாகும். குடும்பத்தில் செழிப்பும், சந்தோஜமும்  இருக்கும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். கால்நடைகள், வீடு, நிலம் போன்றவற்றால் ஆதாயம் கிடைக்கும்.பகைவர் பணிந்து போவர். சகோதர, சகோதரிகளுடன்  மனவேறுபாடுகள் ஏற்படலாம். குடும்ப ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் முன்கோபமும், எரிச்சலான பேச்சும் ஏற்படக்கூடும். எனவே பேச்சை குறைத்துக்கொள்ளுங்கள்.

உத்தியோகம் : வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

தொழில் : தொழில் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் : திரைப்பட, சின்னத்திரை கலைஞர்கள் ஆதாயம் பெறுவார்கள்.புதிதாகத் தயாராகிவரும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிவரும். வருமானம் உயரும்.

அரசியல்துறையினர் : முன்கோபம் ஏற்படக்கூடும். எனவே பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை. கட்சியில் பிரச்சினைகள் ஏற்படும். அது உங்களையும் பாதிக்கக்கூடும்.

மாணவமணிகள் : படிப்பில் நல்ல முன்னேற்றம் தென்படும்.

விவசாயத்துறையினர் : செவ்வாய் சாதகமில்லை. எனவே, தொழிலில் மந்தநிலை காணப்படும். வருமானம் பாதிக்கப்படலாம்.

பெண்மணிகள்:குடும்ப வருமானம் திருப்தி தரும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பணியில் மேன்மை உண்டாகும்.

அறிவுரை : வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

தருதுயரம் தடாயேலுன்
சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப் பொழில்சூழ்
விற்றுவக் கோட்டம்மானே
அரிசினத்தா லீன்றதாய்
அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி
அதுவேபோன் றிருந்தேனே.            - பெருமாள் திருமொழி

அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 7, 8, 9
பிரதிகூல தினங்கள் :  செப்டம்பர் : 5, 6, 10, 11
அதிர்ஷ்ட எண்கள் : 7, 9


(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் சூரியன், புதன்; குடும்ப ஸ்தானத்தில் சனி; தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு; அஷ்டம ஸ்தானத் தில் குரு(வ); லாப ஸ்தானத்தில் கேது; இரண்டாமிடத்தில் சனி சஞ்சரிக்கும்போது வருமானம் தடைபடும். செலவினங்கள் அதிகரிக்கும். முன்கோபம் ஏற்படக்கூடும். பேச்சில்  நிலையான தன்மை இராமல் இருப்பதோடு எரிச்சலான பேச்சும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் போராட்டமிருக்கும். செவ்வாய் தைரிய ஸ்தானத்திற்கு மாறியிருப்பது நல்லதே.  உடல்நோய்கள் நீங்கும். மனதில் தைரியமும் உற்சாகமும் பெருகும். தொழிலில் தடைகள் நீங்கும். வீடு, பூமி, நிலம், சொத்து, வாகனம் இவற்றால் ஏற்பட்ட பிரச்சினைகள்  நீங்கி, செலவுகளும் குறைந்துவரும்.

உத்தியோகம் :செவ்வாய் தைரிய ஸ்தானத்திற்கு மாறியிருப்பதால் நிலைமையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தொழில் :தொழிலிலும் சிரமங்கள் குறைந்துவரும்.தொழிலுக்குத் தேவைப்படும் நிதி உதவிகள் கிடைக்கும். தொழில் மேம்படும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் உயரும்.

கலைத்துறையினர் : சுக்கிரன் சுபமாகச் சஞ்சரிக்கிறார். திரைப்படக் கலைஞர்கள் நல்ல ஆதாயம் அடைவார்கள்.புதுப்பட வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் உயரும்.

அரசியல்துறையினர் : பொறுமையோடிருக்க வேண்டிய நேரம். என்றாலும் வருமானம் சீராக இருந்துவரும்.

மாணவமணிகள் : படிப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

விவசாயத்துறையினர் : செவ்வாய் சுபமாகச் சஞ்சரிக்கிறார். மண், மனை இவற்றால் ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். தொழில் சிறக்கும். வருமானம் பெருகும்.

பெண்மணிகள்:குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பணியில் மேம்பாடு உண்டாகும்.

அறிவுரை : செலவினங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.

நாகமேந்து மேருவெற்பை
நாகமேந்து மண்ணினை
நாகமேந்து மாகமாக
மாகமேந்து வார்புனல்,
மாகமேந்து மங்குல்தீயொர்
வாயுவைந் தமைந்து காத்து,
ஏகமேந்தி நின்றநீர்மை
நின்கணேயி யன்றதே.                 - திருச்சந்தவிருத்தம்.

அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 6, 7, 8
பிரதிகூல தினங்கள் :  செப்டம்பர் : 5, 9, 10, 11
அதிர்ஷ்ட எண்கள் : 4, 6


(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் சனி; குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன்; சுக ஸ்தானத்தில் ராகு; சப்தம ஸ்தானத்தில் குரு(வ); ஜீவன ஸ்தானத்தில் கேது; லாப ஸ்தான த்தில் சந்திரன்; விரய ஸ்தானத்தில் சூரியன், புதன்; 1-ல் சனி. உடற்சோர்வும் மனத்தளர்ச்சியும் ஏற்படும். எனவே தொழிலில் கவனம் செல்லாமல் போகலாம்.வேலையில்  தவறுகள் ஏற்படலாம்.செய்யும் காரியங்கள் தடைபட்டு நின்று போகக்கூடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். தீய நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். இதனால் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படும்.வேலையில் புதிய பொறுப்புகளும், வேலைச்சுமையும் ஏற்படும்.

உத்தியோகம் : 1-ல் சனி. எனவே எதைச் செய்தாலும் அவசரப்படக்கூடாது. பொறுமையும், நிதானமும் வேண்டும்.

தொழில் :தொழிலில் கூட்டாளிகள் தொல்லை தருவார்கள். எனினும் தொழில் பாதிக்கப்படாது. தொழில் சீராக நடக்கும். பணவரவு பெருகும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் : திரைப்படக் கலைஞர்கள் ஆதாயம் அடைவார்கள். பணவரவு பல வழிகளிலும் கிடைக்கும். தொழிலில் விருத்தியடையும். வாய்ப்புகள் கிடைக்கும்.

அரசியல்துறையினர் : பொறுமையும், நிதானமும் அவசியம். உட்கட்சிப் பிரச்சினைகள் உங்களைப் பாதிக்கும். வருமானமும் பாதிக்கப்படும்.

மாணவமணிகள் : கல்வியில் நல்ல நாட்டமிருக்கும்.

விவசாயத்துறையினர் : தொழிலில் மந்தநிலை தொடரக்கூடும். வருமானம் பாதிக்கப்படும்.

பெண்மணிகள் :குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமை மிகவும் அவசியம்.

அறிவுரை : செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உடல்நலனில் கவனம் தேவை.

பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.

அலம்பா வெருட்டாக் கொன்று
திரியு மரக்கரை
குலம்பாழ் படுத்துக் குலவிளக்
காய்நின்ற கோன்மலை
சிலம்பார்க்க வந்து தெய்வ
மகளிர் களாடும்சீர்,
சிலம்பாறு பாயும் தென்திரு
மாலிருஞ் சோலையே.            - பெரியாழ்வார் திருமொழி.

அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 5, 6, 7, 11
பிரதிகூல தினங்கள் :  செப்டம்பர் : 8, 9, 10
அதிர்ஷ்ட எண்கள் : 3, 9


(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் செவ்வாய், சுக்கிரன்; தைரிய ஸ்தானத்தில் ராகு; ருண ஸ்தானத்தில் குரு(வ); பாக்கிய ஸ்தானத்தில் கேது; ஜீவன ஸ்தானத்தில் சந்திரன்; லாப  ஸ்தானத்தில் சூரியன், புதன்; விரய ஸ்தானத்தில் சனி;12-ல் சனி சஞ்சரிக்கும்போது பணம் அதிகம் செலவாகும். எடுக்கும் காரியங்களில் தேக்கமும், வருமானக் குறைவும்  ஏற்படும்.குடும்பத்தில் கணவன்-மனைவியரிடையே கருத்து வேறுபாடுகளும், சண்டை, சச்சரவுகளும், அதனால் பிரிவும் ஏற்படலாம். எதிலும் பற்றின்றி ஊர் திரிய நேரிடும். நீதிமன்ற விவகாரங்களில் தேக்கநிலை காணப்படும். 11-ல் சூரியன், புதன் நன்மை தரும். உடல்நலன் மேம்படும். அரசாங்கத்தின் உதவியும்,பெரியோர் ஆதரவும் கிட்டும்.  தொழிலில் முன்னேற்றம் நிலவும்.

உத்தியோகம்:பதவி உயர்வும்,ஊதிய உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தொழில் :தொழிலில் உள்ளவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம். எனினும் தொழில் மேம்படும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனை அதிகரிக்கும். லாபம் உயரும்.

கலைத்துறையினர் : வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும், வசதிகளும் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : செல்வாக்கு உயரும். கட்சியில் ஆதரவு பெருகும். வருமானம் உயரும்.

மாணவமணிகள் : படிப்பில் நல்ல நாட்டம் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : தொழிலில் தேக்கநிலை காணப்படும். எனவே வருமானம் சற்று குறையக்கூடும். மண், மனை இவற்றால் ஆதாயமிராது.

பெண்மணிகள் :குடும்ப வருமானம் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அறிவுரை :அதிகரித்துவரும் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். உடல்நலனில் கவனம் கொள்ளுங்கள்.

பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.

நம்பனே! நவின் றேத்தவல் லார்கள்
நாதனே நரசிங்கம தானாய்,
உம்பர் கோனுல கேழு மளந்தாய்
ஊழியாயினாய்! ஆழி முன்னேந்தி
கம்ப மாகரி கோள்விடுத்தானே
காரணா! கடலைக் கடைந்தானே
எம்பிரான்! என்னையா ளுடைத்தேனே!
ஏழையே னிடரைக் களையாயே!          

-  பெரியாழ்வார் திருமொழி

அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 7, 8, 9, 10
பிரதிகூல தினங்கள் :  செப்டம்பர் : 5, 6, 11
அதிர்ஷ்ட எண்கள் : 2, 5


(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் ராகு; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ); அஷ்டம ஸ்தானத்தில் கேது; பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்; ஜீவன ஸ்தானத்தில் சூரியன்,  புதன்; லாப ஸ்தானத்தில் சனி; விரய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன்; 10-ல் சூரியன். தொழிலில் விருத்தியும், வருமானப் பெருக்கமும் ஏற்படும். பெண்களால் நன்மைகள்  உண்டாகும். நினைப்பது நிறைவேறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். எடுக்கும் காரியங்கள் கைகூடும். உற்றார், உறவினர் நல்லாதரவு இருக்கும். உடல்நலன்  மேம்படும்.

உத்தியோகம் : அலுவலகத்தில் நிலைமை மேம்படும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

தொழில் : புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் மேம்படும். எனவே உற்பத்தியும், பணவரவும் அதிகரிக்கும்.

வியாபாரம் : விற்பனை மேம்படும். லாபம் உயரும்.

கலைத்துறையினர் : கலைஞர்களுக்கு ஆதாயம் தரும் வாரமிது. புதிதாக தயாராகும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிவரும். வருமானமும், வசதிகளும் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் :கட்சியில் மதிப்பும்,மரியாதையும் உயரும். பெயரும், புகழும் ஓங்கும். வருமானம் உயரும்.

மாணவமணிகள் : பாடங்களில் நல்ல நாட்டம் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : 12-ல் செவ்வாய். செலவினங்கள் அதிகரிக்கும். தொழிலில் தேக்கநிலை காணப்படும். வருமானம் குறையும்.

பெண்மணிகள்:குடும்ப வருமானம் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு நிலைமையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

அறிவுரை : செலவினங்கள் அதிகரிக்கும்.

பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.

செந்தழலே வந்தழலைச்
செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற்
கல்லா லலராவால்,
வெந்துயர்வீட் டாவிடினும்
விற்றுவக்கோட் டம்மா, உன்
அந்தமில் சீர்க் கல்லா
லகங்குழைய மாட்டேனே.           - பெருமாள் திருமொழி.

அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 5, 6, 7
பிரதிகூல தினங்கள் :  செப்டம்பர் : 8, 9, 10, 11
அதிர்ஷ்ட எண்கள் : 1, 2


(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் ராகு; சுக ஸ்தானத்தில் குரு(வ); சப்தம ஸ்தானத்தில் கேது;அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்; பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன்; ஜீவன  ஸ்தானத்தில் சனி; லாப ஸ்தானத்தில் சுக்கிரன், செவ்வாய்; 11-ல் செவ்வாய், சுக்கிரன். தொழிலில், வேலையில் முன்னேற்றமும், வருமானப் பெருக்கமும் ஏற்படும். எதிர்பாராத  பணவரவு இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மண், மனை இவற்றால் ஆதாயம் ஏற்படும்.பிள்ளைகள் கல்வி,உடல்நலனில் சிறந்து விளங்குவார்கள். உடல்நலன் சீராகும். எடுக்கும் காரியங்கள் கைகூடும். பெண்களால் நன்மைகள் உண்டாகும்.

உத்தியோகம் : 1-ல் ராகு; 7-ல் கேது; 9-ல் சூரியன். இடமாற்றம் ஏற்படலாம்.அலுவலகத்தில் சிரமங்கள் ஏற்படக்கூடும்.என்றாலும் செவ்வாய், சுக்கிரன். சாதகமாக மாறியுள்ள தால் நிலைமை மேம்படும்.

தொழில்:தொழில் துறையினருக்கும் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனினும் செவ்வாய், சுக்கிரன் நிலை காரணமாக தொழிலுக்கு உதவிகள் கிடைக்கும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் : நல்ல வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வருமானம் உயரும். ஆயினும் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

அரசியல்துறையினர் :அரசியல்வாதிகள் பொறுமை காக்கவேண்டும். கட்சியில் ஏற்படும் பிரச்சினைகள் உங்களையும் பாதிக்கும். என்றாலும் வருமானம் பாதிக்கப்படாது.

மாணவமணிகள் : படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

விவசாயத்துறையினர் : கிரகநிலைகள் சாதகமாக உள்ளதால் நிலைமை மேம்படும். தொழில் சிறக்கும். வருமானம் உயரும்.

பெண்மணிகள்:குடும்ப வருமானம் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அறிவுரை : செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் : தடங்கல்கள் நீங்கி, சகல காரியங்களும் நிறைவேற  கீழ்க்கண்ட பாடலை 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

வெங்கண்திண் களிறடர்த்தாய்
விற்றுவக் கோட்டம்மானே,
எங்குப் போயுய் கேனுன்
னிணையடியே யடையலல்லால்
எங்கும் போய்க் கரைகாணா
தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும்
மாப்பறவை போன்றேனே.

                    - பெருமாள் திருமொழி.

அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 8, 9, 10
பிரதிகூல தினங்கள் :  செப்டம்பர் : 5, 6, 7, 11
அதிர்ஷ்ட எண்கள் : 3, 4


(உத்திராடம் 2-ம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் வரை)

குடும்பம் : தைரிய ஸ்தானத்தில் குரு(வ); ருண ஸ்தானத்தில் கேது; சப்தம ஸ்தானத்தில் சந்திரன்; அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன்; பாக்கிய ஸ்தானத்தில் சனி; ஜீவன  ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன்; விரய ஸ்தானத்தில் ராகு;சனி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நல்லதல்ல. மனக்கவலைகள் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில்  அக்கறை கொள்வது நல்லது.உங்கள் தந்தையின் உடல்நலனும் பாதிக்கப்படலாம். பகைவர் தொல்லைகள் அதிகரிக்கும். 10-ம் இடத்திற்கு செவ்வாயும், சுக்கிரனும் மாறியுள் ளனர். இது நல்லதே. வேலை மற்றும் தொழிலில் விருத்தியும், வருமானப் பெருக்கமும் ஏற்படும்.

உத்தியோகம் :வேலையில் உள்ளவர்களுக்குச் சிரமங்கள் தோன்றும். ஆயினும் செவ்வாய் 10-க்கு மாறியிருப்பதால் வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.

தொழில் :தொழில்துறையினருக்கும் பிரச்சினைகள் தோன்றக்கூடும். எனினும் தொழில் முன்னேற்றம் தொடரும். பணவரவு நல்லபடி நீடிக்கும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் நல்லபடி நீடிக்கும்.

கலைத்துறையினர் : கிரகநிலைகள் சாதகமாக மாறியுள்ளன. எனவே தொழில் மேம்படும்.தற்போது புதிதாகத் தயாராகிவரும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிவரும். வ ருமானம் உயரும்.

அரசியல்துறையினர் :அரசியல்வாதிகள் பொறுமை காக்கவேண்டும். எனினும் வருமானத்திற்குக் குறைவிராது.

மாணவமணிகள் : கல்வியில் நல்ல நாட்டம் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : செவ்வாய் 10-ல். தொழில் மேம்படும். எனவே மண், மனை இவற்றால் ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். வருமானம் உயரும்.

பெண்மணிகள்:குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

அறிவுரை : பொறுமையும், நிதானமும் வேண்டும். உடல்நலனில் கவனம் வேண்டும். செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வரவும்.

ஆழியானு மலரி னுறைவானும்
ஊழி நாடியுணரார் திரிந்துமேல்
சூழு நேட வெரியா மொருவன்சீர்
நிழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.            
  
 - திருஞானசம்பந்தர்.

அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 9, 10, 11
பிரதிகூல தினங்கள் :  செப்டம்பர் : 5, 6, 7, 8
அதிர்ஷ்ட எண்கள் : 7, 9


(அவிட்டம் 3-ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் வரை)

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் குரு(வ); பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது; ருண ஸ்தானத்தில் சந்திரன்; சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன்; அஷ்டம ஸ்தானத்தில் சனி;  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன்; லாப ஸ்தானத்தில் ராகு; 7-ல் சூரியன், புதன்; குடும்பத்தில் கணவன்-மனைவியரிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். வேலை, தொழில் காரணமாக அலைச்சலும்,ஆரோக்கியக் குறைவும் ஏற்படும். உடல்நலன் பாதிக்கப்படலாம்.குடும்பச் செலவுகளும் பன்மடங்கு அதிகரிக்கும். மனைவியின்  உடல்நலனிலும் கவனம் தேவை. பெண்களால் தொல்லைகள் உண்டாகலாம். மனதில் இனம்புரியாத பயம் தோன்றும்.

உத்தியோகம் : 8-ல் சனி. எனவே மிகுந்த எச்சரிக்கை தேவை. எதைச் செய்தாலும் பொறுமை, நிதானம் தேவை.

தொழில் : தொழிலதிபர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படும். ஆயினும் தொழில் முன்னேற்றம் தொடரும். உற்பத்தி உயரும். வருமானம் அதிகரிக்கும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.

கலைத்துறையினர்:கிரகநிலைகள் சாதகமாக இல்லை.எனவே உங்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தள்ளிப்போகலாம்.வருமானம் பாதிக்கப்படும்.

அரசியல்துறையினர்:அரசியல்வாதிகளும் பொறுமையோடிருக்க வேண்டும். என்றாலும் வருமானம் பாதிக்கப்படாது.

மாணவமணிகள் : கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

விவசாயத்துறையினர்:தொழிலில் நிலவிவரும் மந்த நிலை தொடரக்கூடும். வருமானம் பாதிக்கப்படும்.

பெண்மணிகள்:குடும்ப வருமானம் அதிகரிக்கும்.வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பணியில் மிகுந்த பொறுமை அவசியம்.

அறிவுரை : 5-ல் கேது; 7-ல் சூரியன், புதன்; 8-ல் சனி; 9-ல் செவ்வாய் எனப் பல கிரகங்கள் அனுகூலமற்றுச் சஞ்சரிப்பதால் பொறுமை அவசியம். உடல்நலனில் கவனம்  வேண்டும்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்துவாருங்கள்.

பாம்பணைப் பள்ளிகொண்ட பரமனும்
பூம்பணைப் பொலிகின்ற புராணனும்
தாம்பணி ந்தளப் பொண்ணாத் தனித்தழல்
நாம் பணிந்தடி போற்று நள்ளாறனே

        - திருநாவுக்கரசர்.

அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 5, 6, 7, 11
பிரதிகூல தினங்கள் :  செப்டம்பர் : 8, 9, 10
அதிர்ஷ்ட எண்கள் : 2, 3


(பூரட்டாதி 4-ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் குரு(வ); சுக ஸ்தானத்தில் கேது; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன்; ருண ஸ்தானத்தில் சூரியன், புதன்; சப்தம ஸ்தானத்தில் சனி;  அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன்; ஜீவன ஸ்தானத்தில் ராகு; 7-ல் சனி. கணவன்-மனைவியரிடையே கருத்து வேற்றுமையும், பிரிவினை1யும் ஏற்படக்கூடும். வேலை,  தொழிலில் பிரச்சினைகளும்,வருமானக் குறைவும்ஏற்படும்.அதனால் பணக்கஷ்டமும், தொல்லைகளும் ஏற்படும்.கெட்ட நண்பர்களின் சேர்க்கையால் நஷ்டத்தோடு தீய  பழக்கங்களும் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் வேதனை உண்டாகும். குரு, கேது, சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் அனுகூலமற்று சஞ்சரிக்கின்றன.எனவே எதைச் செய்தாலும் பொறுமையும், நிதானமும் தேவை.

உத்தியோகம்:வேலையில் உள்ளவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பொறுமை தேவை.

தொழில்:தொழிலதிபர்களுக்கும் சிரமங்கள் தோன்றக்கூடும்.சனி பகவானின் பார்வை இந்த ராசிக்கு ஏற்படுவதால் உதவிகளும் கிடைக்காமல் போகலாம். எனவே  பொறுமை தேவை.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் சுமாராக இருக்கும்.

கலைத்துறையினர் : உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் தள்ளிப் போகலாம். எனவே வருமானம் பாதிக்கப்படும்.

அரசியல்துறையினர் :உட்கட்சிப் பூசல்களால் உங்கள் நிலையும் பாதிக்கப்படலாம். வருமானம் குறையும்.

மாணவமணிகள் : பாடுபட்டு உழைக்க வேண்டிவரும்.

விவசாயத்துறையினர் : கிரகநிலைகள் சாதமற்று இருப்பதால் தொழிலில் பின்னடைவு ஏற்படும். வருமானம் குறையும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் சீராக இருக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமை தேவை.

அறிவுரை : மனைவியின் உடல்நலனில் கவனம் தேவை. செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.

அல்ல னென்று மலர் கருளாயின
சொல்ல னென்று சொல்லாமறைச் சோதியான்
வல்ல னென்றும் வல்லார்வளம் மிக்கவர்
நல்லனென்றும் நல்லார்க்கு நள்ளாறனே.

          - திருநாவுக்கரசர்.

அனுகூல தினங்கள் : செப்டம்பர் : 8, 9, 10
பிரதிகூல தினங்கள் :  செப்டம்பர் : 5, 6, 7, 11
அதிர்ஷ்ட எண்கள் : 1, 7

Current Issue
18-05-2012
Previous Issue
11-05-2012
   
Previous Issues
Please give your valuable feedback on this article/programme
( Examples for tamil font
ammaa = அம்மா, kumutham = குமுதம், vaNakkam = வணக்கம், thamiz = தமிழ் )
Tamil font help    தமிழ் English
Click here for sending feedback to a friend
 
<< Back to Homepage
 

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.