Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61 Kumudam.com, Kumudam Jothidam - சிறப்புகட்டுரை
சுமார் 50ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்த பிரபலமான பாட்டு அது!ஆம்!! ‘‘முருகன் என்றதுமே எனக்கோர் மோகம் பிறக்குதம்மா... அள்ளிக் கலந்திடவே எனக்கு ஆசையும் பெருகுதம்மா...’’ என்ற செஞ்சுருட்டி ராகப் பாடல்தான் அது!!!
முத்துக்குமரனின் மோகன எழிலில் மயங்காதவரும் உண்டோ இவ்வுலகில்? அன்னை உமையே ஒரு சமயம், திருக்கயிலையில் தன் குழந்தை முருகப் பெருமானின் பேரெழிலைக் கண்டு பெருமிதம் அடைந்ததைக் ‘‘கயிலை புராணம்’’ விவரித்துள்ளது.
‘‘முருகன்’’ என்ற சொல்லிற்கே ‘அழகன்’ என்றுதானே பொருள்!
சிக்கில் திருத்தல சிங்காரவேலனின் சிரிப்பழகில் சிக்கிச் சிந்தையை இழந்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களைச் சூரசம்ஹார தினத்தன்று அங்கு காணலாம்.
இவ்விதம் அழகிற்கு அழகு செய்யும் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி பால்மணம் மாறாத பச்சைக்குழந்தையாக, தங்கத் திருமுகத்தழகை நமக்குக் காட்டியருளும் திருக்கோயில் ஒன்று கோவையில் உள்ளது.
கோவையின் பிரசித்திபெற்ற ‘காந்தி பார்க்’ பகுதியில் உள்ளது மிகவும் சக்திவாய்ந்த ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயில். பால் வடியும் திருமுகத்தின் பொலிவில், உதடு களில் மலரும் புன்னகையில் தனது திருவுள்ளத்தைப் பறிகொடுத்த பரம முருக பக்தரான, திருமுருக கிருபானந்த வாரியாரின் அபிமானத்தலம் இது.
பழநி ஸ்ரீ முருகப்பெருமானிடம் ஆராக் காதல் கொண்ட மகான் ஸ்ரீ சாது ஸ்வாமிகள் நிர்மாணித்த அழகான இத்திருக்கோயிலில் ஸ்ரீ கிருபானந்தவாரியார் தங்கியிருந்து, பல திருப்பணிகள் செய்து, பரமானந்தப்பட்டுள்ளார்.அழகான விமானத்தைப் புனரமைத்ததும் அம்மகான்தான்.
பாலதண்டாயுதபாணியின் பால்வடியும் வதனம்!
கோவை ஸ்ரீ பாலதண்டாயுதபாணியின் தனிச்சிறப்பு, பெருமானின் பால்வடியும் திருமுகத்தின் உதடுகளில் நாம் நமது மனதைப் பறிகொடுக்கும் அந்த மோகனப் புன் னகைதான்! அந்த புன்னகையில் மிளிரும் பேரெழிலைத் தரிசிப்பதற்காகத்தான் இத்திருக்கோயிலுக்கு நாள்தோறும் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வருகின்றனர். சின்னஞ்சிறு பாலகனாகக் குறுகுறுக்கும், கருவண்டினை ஒத்த திருக்கண்களுடன், புன்னகை மலர, தண்டாயுதபாணியாக, இத்தெய்வப் பாலகன் நின்று, தரிசனம் அளிக்கும் பாங்கினைக் கண்டால், நாத்திகர்கள்கூட, ஒருகணம் மெய்மறந்து மயங்கிவிடுவார்கள். ஒரே நொடியில் நம்மை முழுமையாக ஆட்கொண்டு விடுகிறான் இந்த அழகுக்கு மரன்.
ஆம்! அழகென்றால், அப்படி ஓர் அழகு, இப்பாலமுருகனின் பேரழகு! ‘‘கண் இமைக்கும் நேரமும் கந்தனை மறவேன்’’ என்றல்லவா பாடிப் பாடித் திளைத்தனர் அடியவர் பெருமக்கள்! இக்கந்தப்பெருமானின் ரூப லாவண்யத்தைக் கண் இமைக்கும் நேரம்கூட இழப்பதற்கு நமக்கு மனம் வரவில்லை.
குழந்தை பாலதண்டாயுதபாணியின் பேரழகைத் தரிசிக்கும்போது, அன்னை பார்வதி அன்புடன் கண்களில் மையிட்டுக் கிள்ளிய கன்னத்தில் ஓடிச்சென்று முத்தமிட மனம் ஏங்குகிறது. அர்ச்சகர்கள் மட்டும் அங்கு இல்லை என்றால், ஓடிச்சென்று கட்டியணைத்துக்கொண்டு விடுவோம், கண்களாலேயே நம்மிடம் கொஞ்சிடும் இத்தெய்வக் குழந் தையை!
இப்படியும் ஒரு விளையாட்டு!
இந்நிலையில்தான்,பல மாதங்களுக்கு முன்பு பக்தர்களிடம் ஒரு திருவிளையாடலை நிகழ்த்த திருவுள்ளம் கொண்டான் போலும் அந்த பாலதண்டாயுதப் பெருமான்!! பக்தர்களுடன் விளையாடுவது அவனது திருவுள்ளத்திற்கு மிகவும் உகந்தது ஆயிற்றே!!
அப்படித்தான் அன்று ஒரு நாள்!! அழகன் பாலமுருகனைப் பாசத்துடனும், பக்தியுடனும் தரிசிக்க ஓடிவந்த பக்தர்கள், அவனது திருமுகத்தைக் கண்டு திகைத்தனர் ஒரு கணம்! உடலும், உள்ளமும் படபடத்தன அவர்களுக்கு!!
காரணம்? ஆம்! எந்தத் தெய்வீகப் புன்னகையைத் தரிசிக்கவேண்டுமென்று ஆவலுடன் ஓடி வந்தனரோ, அந்தப் புன்னகை அவன் முகத்தில் இல்லை. சற்று கோபித் துக்கொண்டிருப்பவன் போல் அவனது முகபாவம் தோன்றியது. கேட்டதை வாங்கிக் கொடுக்காவிட்டால், குழந்தைகள் தங்கள் முகத்தைச் சிணுங்கிக் கொள்ளுமே! அதே பாவனையில் தோற்றம் அளித்தான் பாலதண்டாயுதபாணி!!
குழந்தை முருகனுக்கும் கோபமா? பக்தர்கள் கண்களில் கண்ணீர் பொங்கியது. ‘‘குறையும் வைத்துவிட்டோமோ குறை ஒன்றுமில்லாத குழந்தை குமரனுக்கு?’’ - அடியவர் மனம் கலங்கியது. செய்தி பரவிற்று கோவை நகரெங்கும்! ‘‘குறைவில்லா வாழ்வினை எமக்களிக்கும் செல்லக்கண்ணே! உனக்கு என்னதான் வேண்டும் - சொல்லடா...’’ என்று கண்ணீர் விட்டு, மானஸீகமாகக் கெஞ்சினர் பல தாய்மார்கள்.
கோவையின் பிரபல வழக்கறிஞரும் பரமமுருக பக்தருமான திரு. வி. மயில்சாமி அவர்களைத் தலைவராகக் கொண்டு,ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக்குப் பல கைங்கர்யங்களைச் செய்யும் பேறு பெற்ற, ‘‘பால தண்டாயுதபாணி சுவாமி சேவா டிரஸ்ட்’’ அங்கத்தினர்கள் அனைவரும் பாலமுருகனின் திருவுள்ளக் கலக்கம் என்னவாக இருக்கும் எனக் கலங்கி சிந்தித்தனர். பக்தர்கள் மனம் வேதனைப்படும்போது வேடிக்கைப் பார்ப்பானா அந்த வடிவேலன்? மனம் இரங்கினான்.
பக்தர்கள் சிலரது கனவில் தரிசனம் அளித்தான் தவழும் குழந்தையாக! ‘‘எனக்குத் தங்கரதம் வேண்டும்’’ தன் மழலைக் குரலில் கேட்டான் குழந்தை.
ஆம்! தனது திருவாய் திறந்து, தந்தைக்குப் பிரணவ மந்திரத்தின் உட்பொருளைச் சொல்லி அருளிய தெய்வப் பாலகன்தான் அதே தன் திருவாய் திறந்து கேட்டரு ளினான், தங்கரதம் வேண்டுமென்று குழந்தை பாலதண்டாயுதபாணியாக.
பக்தர்கள் கேட்பதையெல்லாம் பரிவுடன் கொடுக்கும் பாலமுருகனல்லவா கேட்டுவிட்டான்! நாம் பிறவியில் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்! வழக்கறிஞர் திரு. மயில்சாமி, பண்ணாரி மாரியம்மன் சுகர்ஸ் சேர்மன், திரு. எஸ்.வி. பாலசுப்பிரமணியன், கரூர் ஸ்ரீ பாலமுருகன் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் திரு. சுதர்ஸன் செட்டியார் மற்றும் அவரது மகன் திரு. பாலமுருகன், உலக பிரசித்திபெற்ற கோவை கங்கா மருத்துவமனை அறுவைசிகிச்சை நிபுணர், டாக்டர்
திரு. ராஜசேகர் மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி சேவா டிரஸ்ட் அங்கத்தினர்கள் ஒன்றுகூடி, குழந்தை குமரப் பெருமானின் ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.
பக்தி ஒருபுறம்! திகைப்பு மறுபுறம்!! தண்டாயுதபாணி கேட்டது தங்கரதமாயிற்றே!! எளிதில் முடியுமா? மலைத்தனர் அனைவரும். தான் கேட்டதைத் தானே நிறைவேற்றிக் கொண்டான் முருகப்பெருமான் விரைவிலேயே! மக்கள் அனைவரும் வியக்கும்படி, மிக மிகக் குறுகிய காலத்தில், அழகான தங்கரதம் தயாராகிவிட்டது.
பெரியோர்கள் நிச்சயித்த நன்னாளான மார்ச் 29, 2010 திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு அற்புத சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தங்கத் தேரில், ஸ்ரீ பாலதண்டாயுதபாணி, அமர்ந்து, அற்புத தரிசனம் தந்தருளினான். அப்போதுதான், அங்கு வெள்ளமெனத் திரண்டிருந்த பக்தர்கள் ஓர் ஆச்சர்யத்தைக் கண்டு மெய்சிலிர்த் தனர்.
அதுவரை, பெருமானின் திருமுகத்திலிருந்து மறைந்திருந்த அந்தத் தெய்வீகப் புன்னகை மீண்டும் திருமுகத்தில் மலர்ந்ததைக் கண்டு ஆனந்தபரவசமடைந்தனர், அவனை அப்போது தரிசிக்கும் பேறுபெற்ற ஏராளமான பாக்கியசாலிகள்!
திருத்தேர் அழகா? அல்லது அதில் ராஜ அலங்காரத்தில் தரிசனம் அளித்த அந்த பாலமுருகன் அழகா என்று உணர்ச்சிப்பெருக்கில் திகைத்து நின்றனர் பக்தர்கள். எத் தனை கோடி பிறவியெடுப்பினும் கிடைத்திடுமோ இத்திவ்ய தரிசனம் என்று கண்ணீர் மல்க, மெய்மறந்து மனதால், பாலதண்டாயுதபாணியுடன் ஒன்றிவிட்டனர் அனைவரும்.
திரு. கண்ணப்ப ஓதுவாமூர்த்திகளின் சீரிய தலைமையில், ஓதுவாமூர்த்திகள் திருமுறை இன்னிசை பாட, பக்தர்கள் ‘‘முருகா’’, ‘‘முருகா’’ எனப் பக்தியுடன் அவன் நாமத் தைச் சொல்லி பரமானந்தத்துடன் வர, சந்நிதியை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி அன்று வலம் வந்த அழகைக் காண பல பிறவிகளில் மகத்தான புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
தமிழக மக்கள் அனைவரும் இப்பெருமானின் திவ்ய அழகை ஒருமுறையேனும் தரிசித்து,கிடைத்தற்கரிய பேரானந்தத்தைப் பெறவேண்டும்.