Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61 Kumudam.com, Kumudam Health - ஹெல்த் பிட்ஸ்
செல்போனில் தினமும் பல மணிநேரம் பேசிக் கொண்டே இருந்தால்,ஞாபக சக்தி குறைந்துவிடும் என்று இங்கிலாந்து ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவோரிடம் ஆன்லைனில் ஆய்வு நடத்தினார்கள்.
அதில், தினமும் பல மணிநேரம் செல்போனில் பேசுபவர்களில் பாதி பேருக்கு தங்கள் வாழ்க்கைத் துணையின் நம்பர் கூட மறந்துவிடுகிறது. 10ல் 7 பேருக்கு நெருங்கிய நண்பரின் போன் நம்பரை சட்டென நினைவுக்குக் கொண்டு வர முடிவதில்லை.
51 சதவிகிதம் பேருக்கு பெற்றோரின் போன் நம்பர் ஞாபகத்தில் இருப்பதில்லை. தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவோரில் 10ல் 9 பேருக்கு திடீரென கேட்டால் முக்கிய நம்பர்களை உடனடியாகச் சொல்ல முடிவதில்லை. 5 முதல் 10 விநாடிகள் யோசித்தே சொல்ல முடிகிறது. இது நினைவாற்றல் குறைவதைக் காட்டுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி நிபுணர்கள் கூறுகையில்,‘‘நவீன தொழில்நுட்பங்களால் அதிக வசதிகள் ஏற்பட்டாலும் நினைவாற்றல் குறையக் காரணமாகின்றன. அவசர நேரத்தில் முக்கிய பெயர்கள், நம்பர்கள் நினைவுக்கு வராது.இதை கோல்டு பிஷ் மெமரி என்கிறோம். இதனால் அவசர,ஆபத்தான சூழ்நிலையில் குடும்பத்தினர் நண்பர்களின் நம்பர்கள் மறந்துவிடும்’’ என்றனர்.
இதற்கு முன் நடந்த ஆய்வு ஒன்றில், ‘சராசரியாக ஒவ்வொருவரும் 5 முக்கிய போன் நம்பர்கள், பாஸ் வேர்டுகள், 2 வாகன நம்பர் பிளேட்கள், 3 செக்யூரிட்டி அடையாள எண்கள், 3 வங்கிக் கணக்கு எண்களை தினசரி வாழ்க்கையில் நினைவில் சொல்கின்றனர். அதற்குமேல் மறதி ஏற்படுகிறது என்று கூறப்பட்டது.
இதைப் படித்தவுடன் செல்போன் அதிகம் பயன்படுத்துபவர்கள் இனி கொஞ்சம் உஷாராக நடந்துகொள்ளுங்கள். ஏற்கெனவே பெண்கள் ஆபரேஷன் செய்ததால் ஞாபக சக்தி குறைந்துவிடுகிறது என்பார்கள். இன்னும் செல்போனில் பேசிக்கொண்டே இருக்கும் பெண்கள் அவ்வளவுதான். நினைத்தாலே பயமாக இருக்கிறது. எனவே உஷார்.