Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61
Kumudam.com, Kumudam Health - ஹெல்த் கெஸ்ட்

Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Kumudam Welcomes U
          Magazine
Health
ஆசிரியர் பக்கம்
ஹெல்த் கெஸ்ட்
பிரபலம் ஃபிட்னஸ்
பிரபலம் ஆஸ்பிட்டல் அனுபவங்கள்
தொடர்கள்
ஹெல்த் உணவு
ஹெல்த் ஃபுட்
ஹெல்த் செக்-அப்
ஹெல்த் நியூஸ்
ஹெல்த் லைப்ரரி
ஹெல்த் சிறுகதை
ஹெல்த் மியூசிக்
ஹெல்த் பிட்ஸ்
மற்றவை
 
 01.09.10    ஹெல்த் கெஸ்ட்

‘வால்மீகி’ தமிழ்ப் படத்தின் மூலம் கேரளாவிலிருந்து வந்து குதித்த மற்றொரு நட்சத்திரம் தேவிகா. இவர், தற்போது நெல்லை சந்திப்பு, அழகான பொண்ணு உள்ளிட்ட நான்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை இந்த இதழ் ஹெல்த் கெஸ்ட்டாக சந்தித்து பேசினோம்.

நடிப்பதற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது?

‘‘நான் ஒரு கிளாசிகல் டான்ஸர். முறைப்படி பரதம் உள்ளிட்ட பல்வேறு நடனங்களைக் கற்றுத் தேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திவந்தேன். அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்த்த கேமிரா மேன் ஒருவர் என்னை சினிமாவுக்கு அழைத்து வந்துவிட்டார். அந்த வகையில், சிலர் சொல்வது போல இது ஒரு விபத்து என்றுதான் கூறுவேன்’’

நடிப்பதற்கு முன்பிருந்தே நீங்கள் உடலழகை பேணி வருகிறீர்களா?

‘‘அதில் என்ன சந்தேகம்? நான் ஏற்கெனவே கூறியது போல, முறைப்படி பல்வேறு நடனங்களைக் கற்றுத் தேர்ந்தவள். அந்த நடனங்களை தேவையான உடற்பயிற்சியைக் கொடுப்பதுடன், அழகைப் பேணவும் பயன்படுகிறது. ஆனாலும், நடிக்க வாய்ப்புக் கிடைத்த பிறகு முன்னிலும் அழகாக தென்பட வேண்டும் என்பதற்காக தோழிகளின் அட்வைஸ் படி ஜிம்மிற்கும் போய் சில பயிற்சிகளை செய்கிறேன்’’

ஜிம்மில் என்னமாதிரியான பயிற்சிகளை செய்கிறீர்கள்?

‘‘அங்கு மிஷின்களில் செய்யப்படும் பயிற்சிகளை  புறக்கணித்துவிட்டு, திறந்தவெளியில் செய்யப்படும் பயிற்சிகளை மட்டும் செய்கிறேன். ஜிம்முக்குப் போனாலும் கூடுமானவரை ஜாக்கிங், ஸ்கிப்பிங் போன்றவைகளையே அதிக நேரம் செய்கிறேன். கொஞ்சம் குண்டான தோன்றத்தில் இருந்த நான் இதன்மூலம், மெலிந்துபோயிருக்கிறேன் என்று தோழிகள் சொல்கிறார்கள்’’

இப்போதெல்லாம் பல பெண்கள் உடல் மெலிய மாத்திரைகள் சாப்பிடுகிறார்களே?

‘‘ஆமாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். என் அம்மா கூட இதுபோன்ற மாத்திரைகளை சாப்பிடச் சொன்னார்கள். அதனால் பக்கவிளைவுகள் வருமென்று என் நெருங்கிய தோழிகள் அட்வைஸ் செய்ததால் மாத்திரைகளை தவிர்த்துவிட்டு முறையான பயிற்சிகள் மூலம் மெலிந்து வருகிறேன். இன்னும் ஓரிரு மாதத்தில் நாலைந்து கிலோ குறைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறேன்’’

உங்கள் உணவுப் பழகத்தைப் பற்றி சொல்லுங்களேன்?

‘‘காலையில் வெறும் வயிற்றில் ஏதாவது ஒரு ஜூஸ் அருந்துவது வழக்கம். அதன்பிறகு, வேகவைத்த காய்கறிகளுடன் ஒரு சப்பாத்தி சாப்பிட்டுக் கொள் வேன். மதியமும் அதுபோல் வேகவைத்த காய்கறிகளுடன் கொஞ்சூண்டு சாதம் சாப்பிடுவேன்.

கூடவே, ஒரு சூப் அருந்துவேன். பின்னர், இரவு மறுபடியும் ஒரு சப்பாத்தியுடன் ஒரு கப் பால். அவ்வளவுதான்! இதுதான் ரெகுலர் டயர்ட். வாரம் ஒருமுறை நான்வெஜ் சேர்த்துக் கொள்வதுமுண்டு’’

நீங்கள் புறக்கணிக்கும் உணவு வகைகள் எது வுமே கிடையாதா?

‘‘குழந்தைப் பருவத்திலிருந்து விரும்பி சாப்பிட்ட ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட்டை திரும்பிக்கூட இப்போதெல்லாம் பார்ப்பதில்லை. இது இரண்டும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு கேடு விளைவுக்கும் என்று கண்கூட தெரிந்ததால் தோழிகளிடமும் இதைப் புறக்கணிக்கும் படி அட்வைஸ் செய்கிறேன். உங்களுக்கும்தான்!’’

இப்போதெல்லாம் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் பலரும் ப்யூட்டி பார்லரே கதியென்று கிடக்கிறார்களே, நீங்கள் எப்படி?

‘‘உண்மையைச் சொன்னால் நான் ப்யூட்டி பார்லருக்கு முடி அலங்காரம் செய்ய மட்டும்தான் போகிறேன். மற்றபடி முகம் மற்றும் மேனி அழகிற்கு என் சொந்த கவனிப்புதான். வாரம் இருமுறை ஆயில் பாத் எடுப்பதும், குளிர்ச்சியான அதே சமயம் சுகர் போடாத பழச்சாறுகளை அவ்வப்போது அருந்துவதுமே போதுமான ப்யூட்டியே தரும்’’

இதுபற்றிதான் கேட்க நினைத்தோம், உங்களுக்குப் பிடித்த பழவகைகள் மற்றும் ஜூஸ் பற்றி சொல்லுங்கள்?

‘‘நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விரும்பி சாப்பிடுவது, தர்பூசணிபழம்தான். அத்துடன், கேரட் ஜூஸ் சாப்பிடுவது மூலம் உடலுக்குத் தேவையான பல சத்துகள் கிடைக்கும். ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் ஜூஸ்களையும் ஐஸோ சர்க்கரையோ சேர்த்துக் கொள்ளாமல் அருந்துவது ஆரோக்கியத்தைத் தரும்’’

குமுதம் ஹெல்த் வாசகர்களுக்கு நீங்கள் தரவிரும்பும் ஹெல்த் டிப்ஸ்...

‘‘சிம்பிளாக சொல்கிறேன். விரும்பிய உணவை விரும்பிய நேரத்தில் அருந்துங்கள். ஆனால் அது அளவோடு இருக்கட்டும். அத்துடன், என்னைப் போல  நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் நிச்சயம், ஓகேவா?’’ என்றபடி டான்ஸ் ரிகர்சலுக்குக் கிளம்பினார், தேவிகா.

Current Issue
01-05-2012
Previous Issue
16-04-2012
   
Previous Issues
Please give your valuable feedback on this article/programme
( Examples for tamil font
ammaa = அம்மா, kumutham = குமுதம், vaNakkam = வணக்கம், thamiz = தமிழ் )
Tamil font help    தமிழ் English
Click here for sending feedback to a friend
 
<< Back to Homepage
 

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.