Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61
Kumudam.com, Kumudam Health - ஹெல்த் செக்-அப்

Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Kumudam Welcomes U
          Magazine
Health
ஆசிரியர் பக்கம்
ஹெல்த் கெஸ்ட்
பிரபலம் ஃபிட்னஸ்
பிரபலம் ஆஸ்பிட்டல் அனுபவங்கள்
தொடர்கள்
ஹெல்த் உணவு
ஹெல்த் ஃபுட்
ஹெல்த் செக்-அப்
ஹெல்த் நியூஸ்
ஹெல்த் லைப்ரரி
ஹெல்த் சிறுகதை
ஹெல்த் மியூசிக்
ஹெல்த் பிட்ஸ்
மற்றவை
 
 01.09.10    ஹெல்த் செக்அப்
ன்று வரை உலகில் உள்ள அனைத்து டாக்டர்களின் அடையாளமாக இருப்பது ஸ்டெதாஸ்கோப் ஆகும். மனித உடம்பில் ஏற்படும் விதவிதமான சத்தங்களை காது வழி கேட்க டாக்டர்களுக்கு பயன்படுவது ஸ்டெதாஸ்கோப். நோயைக் கண்டுபிடிக்க உதவிய முதல் அறிவியல் சாதனமான இது 18ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்து 19ம் நூற்றாண்டில் மேடம் கியூரி X-ray யை கண்டுபிடித்தார். எக்ஸ்ரே என்பது உடம்பினை ஊடுருவிச் செல்கிற ஒருவித கதிர்வீச்சாகும். அந்த கதிர்வீச்சு ‘மாஸ்டர் ஹெல்த் செக்அப்’ திட்டமாகும். சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய மருத்துவமனை ரூ.5000 ஒருவர் கட்டினால் சாகும் வரை குடும்பம் முழுவதும் ஆண்டுக்கொரு தடவை ‘மாஸ்டர் ஹெல்த் செக்அப்’ செய்து கொள்ளலாம் என்று விளம்பரம் செய்து 10,000 பேர்களை சேர்த்தது. ஆனால் அடுத்த ஆண்டே அந்த பெரிய மருத்துவமனை மூடப்பட்டு விட்டது. இது எப்படி இருக்கு?

ஒரு சென்ட்ரல் பிஸிஜியன் தனிப்பட்ட முறையில் சில நூறு ரூபாய்களை வாங்கிக் கொண்டு செய்த Total body checkup யைத்தான் பெரிய மருத்துவமனைகள் பல ஆயிரம் வாங்கிக் கொண்டு ‘மாஸ்டர் ஹெல்த் செக்அப்’ என்று வியாபாரம் பண்ணுகின்றன. பெரிய மருத்துவமனைகளில் ‘மாஸ்டர் ஹெல்த் செக்அப்’ செய்து கொள்ளப் போனால்... (வெறும் வயிற்றுடனும் நிறைய பணத்துடனும் போக வேண்டியது முக்கியம்) அழகான இங்கிலீஷ் சிந்தும் பெண் உங்கள் பெயரில் வழ வழ அட்டையில் ஒரு ஃபைல் போட்டுத் தருவார். பணம் முதலிலேயே கட்டிவிட வேண்டும். (ரூ.3500 முதல் ரூ.5000 வரை இருக்கலாம்.) ஒரு எம்.பி.பி.எஸ். மட்டுமே படித்த டாக்டர் சில தகவல்களை உங்கள் வாயினாலேயே கேட்டுப் பெற்று ‘டிக்’ அடிப்பார்.

பின்னர் இரத்தம் எடுத்து பிளட் சுகர், யூரின் சுகர், எக்ஸ்ரே, ஈ.ஸி.ஜி. இரத்த அழுத்தம் எல்லாம் பண்ணுவார்கள். பின்னர் அவர்கள் இலவசமாக(?) பிரேக் ஃபாஸ்ட் தருவார்கள். பின்னர் தனித்தனி டாக்டர்கள் கண், காது, மூக்கு, தொண்டையைப் பரிசோதிப்பார்கள். அன்றைக்கே அல்லது மறுநாள் ரிசல்ட் கிடைக்கும். இதுதான் மாஸ்டர் ஹெல்த் செக்அப். இந்த மாஸ்டர் ஹெல்த் செக்அப்பிற்கு பரிந்துரை செய்யும் மருத்துவருக்கு, தனியார் கம்பெனிகளுக்கு, தனி நபர்களுக்கு பெரிய மருத்துவமனைகள் கமிஷன் தருவதும் உண்டு.

5000 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு ‘மாஸ்டர் ஹெல்த் செக்அப்’ என்கிற பெயரில் செய்யும் அதே பரிசோதனைகள்தான் வெறும் 250 ரூபாயில் அரசாங்க மருத்துவமனையில் செய்யப்படுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் இந்த ‘மாஸ்டர் ஹெல்த் செக்அப்’ பண்ண ஏறக்குறைய ரூ.500/ தான் ஆகும். எனவே தங்களை பரிசோதித்துக் கொள்ள விரும்புபவர்கள் பெரிய மருத்துவமனைக்குப் போய் பணத்தை வாரியிறைக்காமல், ஒரு ஜென்ட்ரல் பிஸிஜியனிடம் போய் தேவையான உடல் பரிசோதனைகள் செய்து கொள்வதே நல்லது. அல்லது அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று ரூ.250யில் ‘மாஸ்டர் ஹெல்த் செக்அப்’ செய்துகொள்வதே புத்திசாலித்தனம்.

அடுத்து ‘மாஸ்டர் ஹெல்த் செக்அப்’களில் நிகழும் குறைபாடுகளைப் பார்ப்போம்.

சிலருக்கு மாஸ்டர் ஹெல்த் செக்அப் செய்கிறபோது சிறுநீரில் உப்பு (அல்புமின்) வெளியேறலாம். அதனை அந்த நபரிடம் சொல்லாமல் மறைத்து விடுவார்கள். ஏனெனில் அந்த டிபார்ட்மெண்ட் அவர்களிடம் இல்லாததால் ‘எங்கே சொன்னால் அந்த நபர் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு போய் விடுவாரோ...’ என்று நினைத்து யூரினில் அல்புமின் நார்மல் என்று போட்டுத் தந்து விடுவார்கள். பின்னர் சில நாட்களில் அவருக்கு சிறுநீரக குறைபாடு வந்து விடும். பல வேளைகளில் மாஸ்டர் ‘ஹெல்த் செக்அப்’பிற்கு பிறகும் அந்தப் பரிசோதனைக்கு வந்த நபரை தன்னிடமே தொடர்ந்து வைத்தியம் பார்க்க வைக்கும் தந்திரமாகவும் இந்த ‘மாஸ்டர் ஹெல்த் செக்அப்’ உள்ளது.

சில மருத்துவமனைகளில் ‘மாஸ்டர் ஹெல்த் செக்அப்’பிற்கு வரும் நபர்களில் சிலருக்கு ‘Fatty Liver’  என்று வேண்டுமென்றே ரிப்போர்ட் கொடுத்து அதற்காக மறுபடியும் ஒரு எக்ஸ்ட்ரா டெஸ்ட் பண்ண வைத்து அதற்கும் தனி கட்டணம் வசூல் பண்ணி விடுவார்கள்.

E.C.G எடுக்கும்போது சிலருக்கு படபடப்பு, பயம் காரணமாக (எந்தக் குறையும் இல்லாவிட்டாலும்கூட) ரிப்போர்ட் ‘abnormal’  என்று காட்டும். உடனே அந்த ஒரு நபரின் உடல் ஆரோக்கியத்தை முழுதுமாக பரிசோதிக்கும் மருத்துவ படிப்பினை படித்தவர் பெயர்: ஜென்ட்ரல் பிஸிஜியன் எனப்படும். இதுவொரு சிறப்பு படிப்பாகும். முன்பு இந்த ஜென்ட்ரல் பிஸிஜியன்தான் குடும்ப டாக்டராகவும் இருந்தார். இந்த முறை இங்கிலாந்து முறையாகும். எந்தவொரு உடல் பாதிப்பாக இருந்தாலும் இங்குள்ளதுபோல நேரடியாக மருந்து கடைக்கோ (அ) மருத்துவமனைக்கோ போகமுடியாது. ஃபேமிலி டாக்டராக இருக்கிற ஜென்ட்ரல் பிஸிஜியன் பரிந்துரை செய்கிற மருத்துவரிடமோ, மருத்துவமனைக்கோதான் செல்ல முடியும். பெரும்பாலான மருத்துவ சிகிச்சையை இந்த ஃபேமிலி டாக்டரே செய்து விடுவார். வேறு ஏதாவது பிரத்தியேக நோயாக இருந்தால் அவர் வேறு டாக்டருக்கு பரிந்துரை செய்வார். மேலும் அந்த குடும்ப டாக்டருக்கு அந்த நபரின் உடலைப்பற்றிய அனைத்தும் தெரிந்திருப்பதால் தேவையான பரிசோதனையை மட்டும் செய்யச் சொல்வார். இதுதான் இன்றைக்கும் இங்கிலாந்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கம்.

ஆனால் நம்நாட்டில் இந்த முறையில்லாமல் போனதாலும், குடும்ப டாக்டர் என்கிற செட்அப்பே இல்லாது ஒழிந்ததாலும் பல மருத்துவமனைகளுக்கு கொண்டாட்டமாகப் போய் விட்டது. இங்கு இந்தியாவில் ஒரு ஜென்ட்ரல் பிஸிஜியனே எல்லாமுமாக இருப்பார். அரசாங்க மருத்துவமனையில் ஜென்ட்ரல் பிஸிஜியனாக வேலை பார்த்துவிட்டு மாலையில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஸ்பெஷலிஸ்டாக இருந்து நோயாளியை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே  ஒரு ஜென்ட்ரல் பிஸிஜியனிடம் தன்னைப் பரிசோதித்துக் கொள்ள வாய்ப்பில்லாத மக்களின் நிலைமையை பயன்படுத்திக் கொண்டு... பணம் பண்ண மருத்துவமனைகள் தீட்டிய திட்டம்தான் ‘மாஸ்டர் ஹெல்த் செக்அப்’களாகும்.

1988ம் ஆண்டு இந்தியாவில் பெரிய பெரிய கார்ப்பரேட் ஹாஸ்பிடல்கள் ஆரம்பமாயின.பல கோடி ரூபாய் கடன் உதவி, N.R.I.   பணப் புழக்கத்துடன்.... உருவான இந்த பெரிய மருத்துவமனைகள் 100% கமர்ஷியல் அம்சங்களைக் கொண்டதாகும். இந்த பெரிய தனியார் மருத்துவமனைகள் அது இருக்கும் இடத்தினைச் சுற்றி இருக்கும் மக்களுக்கு மருத்துவ கட்டணத்தில் சலுகை தருவோம், ‘40% bed free for poor group’’  என்று சொல்லித்தான் அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெறுவார்கள். ஆனால் இதனை எல்லாம் இவர்கள் கடைப்பிடிப்பதே இல்லை. அதுபோல இந்த பெரிய மருத்துவமனைகள் மக்களிடம் இருந்து பணம் திரட்டி மக்களையும் ஷேர் ஹோல்டராக்கிக் கொண்டு மருத்துவமனையின் பெயருக்கு பின்னால் ‘பப்ளிக் லிமிடெட்’ என்று போட்டுக் கொண்டாலும்... பணம் போட்ட மக்களே வந்தாலும்கூட கட்டணத்தில் எந்தச் சலுகையும் செய்ய மாட்டார்கள். இது எல்லாமே வியாபார தந்திரம்தான்.

இப்படி உருவான கார்ப்பரேட் ஹாஸ்பிடல்கள் மேலும் மேலும்
சம்பாதிக்கவும், மறுபடியும், மறுபடியும் மக்களை தன்னிடம் வந்து சிகிச்சை பெறவும், புதிய, புதிய திட்டம் வகுத்தன. அப்படி பிறந்ததுதான் ஒவ்வொரு பெரிய மருத்துவமனையிலும் ‘மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட்!’ எம்.பி.ஏ. படித்தவர்களைக் கொண்டு இந்த பெரிய மருத்துவமனைகள் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்டை நடத்துவது எதைக் காட்டுகிறது? அப்பட்டமான பிஸினஸைத்தானே? ‘ஒரு மருத்துவமனையோ ஒரு டாக்டரோ விளம்பரம் செய்யக் கூடாது’ என்கிற விதிமுறையை ‘மெடிக்கல் கவுன்ஸில்’ நடைமுறையில் வைத்துள்ளது.

ஆனால் பல மருத்துவமனைகள் பெரிய பெரிய பேனர்களில், விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன.இந்த பெரிய மருத்துவமனைகளின் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் செய்த வியாபார தந்திரத்தில் ஒன்றுதான்  மக்களை மருத்துவமனையைத் தேடி ஓடி வர வைக்கும்.
Current Issue
01-05-2012
Previous Issue
16-04-2012
   
Previous Issues
Please give your valuable feedback on this article/programme
( Examples for tamil font
ammaa = அம்மா, kumutham = குமுதம், vaNakkam = வணக்கம், thamiz = தமிழ் )
Tamil font help    தமிழ் English
Click here for sending feedback to a friend
 
<< Back to Homepage
 

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.